இஸ்லாமியர்கள் சொல்லும் இன்ஜீலும் கிருஸ்துவர்கள் சொல்லும் பைபிளும் ஒன்றா? வேறு வேறா?

இரண்டும் வேறு வேறு. எப்படி?

இஸ்லாம் சொல்லக்கூடிய இஞ்சீல் என்பது கர்த்தர் தந்து தூதரான இயேசு அவர்களுக்கு தேவதூதர் கேப்ரியல் மூலம் வழங்கிய கட்டளைகள் ஆகும். எனவே அது இயேசுவுக்கு முன் இருந்த தீர்க்கதரிசிகள் எழுதிய நூலின் அமைப்பில் இருக்க வேண்டும் அதாவது அந்த கருத்துகளோடு முரண்பட கூடாது அல்லது இயேசு மக்களுக்கு உபதேசித்ததை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் அது இயேசுவின் சீடர்களால் தொகுக்க பட்டு இருக்க வெண்டும். ஏன் என்றால் இயேசுவின் உபதேசங்களை தொகுக்கும் அறிவும் உரிமையும் அவர்களுக்குத்தான் இருக்க முடியும்.

இன்று மக்கள் கையில் வைத்து இருக்கும் புதிய ஏற்பாடு பைபில்கள் இயேசு அவர்களின் மறைவுக்கு பிறகு சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு சில அரசியல் முக்கியஸ்தர்களை கொண்டு உருவானது. மேலும் அதில் இயேசுவின் நான்கு நேரடி சீடர்களின் சுவிசேசங்கள் மட்டுமே உள்ளது மற்றவை இயேசுவை நேரடியாக கண்டிராத இயேசுவின் கருத்துக்கு முரணான கருத்துக்களை சொன்னவர்கள் எழுதிய கடித போக்குவரத்து ஆகும்.

எனவே புதிய ஏற்பாட்டை இரண்டாக பிரித்து அதில் நேரடி சீடர்களின் சுவிசேசங்கள் பழைய ஏற்ப்பாட்டுக்கு முரன்படமல் இருப்பதை காணலாம். ஆனால் இயேசுவின் காலத்துக்கு சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு வந்த அவரின் சீடர் அல்லாத புதியவர்கள் பைபிளில் சேர்த்த கருத்துகளுக்கு பழைய ஏற்பாடு முரண்படுவதையும் காணலாம்.


உதாரணமாக,
  • தேவன் ஒருவரே என்று பழைய ஏற்பாடும், இயேசுவும் கூறுகிற பொழுது தேவன் மூவர் என்று புதிய ஏற்படு கூறுவதை நீங்கள் காணலாம்.
  • அதேபோல விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்பது ஆப்ரஹாம் சந்ததிக்கும் கர்த்தருக்கும் உள்ள முறிக்க படாத ஒப்பந்தம் ஆகும். அதற்கு கட்டப்படுவது ஆபரஹமின் சந்ததி ஒவ்வொருவரின் மீதும் கடமை என்று பழைய ஏற்ப்பட்டிலும், கடவுளுக்கு கட்டுபடாதவர் விருத்தசேதனம் செய்ய தேவை இல்லை, கடவுளுக்கு கட்டுபடுவதுதான் பிரதானம் என்று பவுல் புதிய ஏற்ப்பாட்டில் குழப்பி இருப்பதையும் காணலாம். இதன் மூலம் விருத்த சேதனம் செய்வதே கடவுளின் கட்டளைக்கு கட்டுபடுவதுதான் என்கிற நேரடி புரிதலை குழப்பி மக்களை திசை திருப்புவதை இவர்கள் வெற்றிகறமாக செய்து முடித்து உள்ளனர்.
  • விக்கிரக ஆராதனை கூடாது என்று பழைய ஏற்ப்பாட்டில் கூறப்பட்டு உள்ளதை அறியும் நாம், புதிய ஏற்பாட்டை பின்பற்றுவதாக கூறும் கத்தோலிக்கர்கள் விக்கிரக ஆராதனையில் திளைத்து இருப்பது நாமறிந்ததே!

இவ்வாறு பழைய ஏற்பாடு, இயேசு-வின் வார்த்தை, மற்றும் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சீடர்கள் கூறிய கருத்துகளுக்கும், பின்னாளில் வந்த நபர்கள் புதிய ஏற்பாட்டில் கூறி உள்ள கருத்துகளுக்கும் முரண்பாடுகள் இருப்பது வெளிப்படை. அதாவது இயேசுவின் கருத்தோடு பவுல் உள்ளிட்ட புதியவர்கள் முரண்படுகிறார்கள். அதாவது கர்த்தரின் வேதங்களுக்கு இவர்களின் கருத்து முரண்படுகிறது. அதாவது இஸ்லாம் கூறும் இஞ்சீலுக்கு இன்று நாம் அறிந்த பைபிள்கள் முரண்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக