பின்பற்ற உங்களுக்கு ஒரு சிறந்த தலைவன் வேண்டுமா?


- உயர் குலத்தில் பிறந்து, குலத்தால் சிறப்பில்லை என்றும் நற்குணம் கொண்டவரே சிறந்தவர் என்றும் கூறும் தைரியம் கொண்ட தலைவர் வேண்டுமா?

-
தாய் மொழியை தாய்நாட்டிலே குறிப்பிட்டு சொல்லி, மொழியால் சிறப்பில்லை என்றும் இறைவனுக்கு பயந்தவனே சிறந்தவன் என்று கூறும் தைரியம் கொண்ட தலைவர் வேண்டுமா?

- பிறப்பால் செல்வந்தராக இருந்தும் கொள்கைக்காக வறுமையை தேர்ந்தெடுத்து, தனக்கென ஏதும் வைத்து கொள்ளாமல் மக்களுக்கே பகிர்ந்தளித்த வறுமைக்கு அஞ்சாத தலைவர் வேண்டுமா?

- ஒரு கண்டதிர்க்கே தலைவராய் இருந்தும், அதிகார முறைகேடு செய்யாமல்
- வாழ்நாள் முழுதும் தன் உழைப்பிலே உண்ட தலைவர்
- உண்ண தட்டு இல்லாமல் விரிப்பிலே வைத்து உண்ட தலைவர்

- தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் உண்ண உணவின்றி பொறுமை காத்த தலைவர் - இரண்டு உடுப்புக்கு மேல் வைத்திராத தலைவர்,

- இரண்டு ஆல் படுக்கும் அளவுடன், மேற்கூரை இல்லா உயரம் குறைந்த அளவே வீடு கொண்டு இருந்த தலைவர் வேண்டுமா?

- கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை மற்றும் ஒரே பாய் வைத்து உறங்கிய தாலைவர், - பாய் ஒன்றையே பகலில் படுக்கவும் இரவில் கதவாய் மறைக்கவும் செய்த தலைவர்,

- எந்த நிலையிலும் பொய் பேசாத, தீ சொல் சொல்லாத, பொறுமை நீங்காத, தீங்கு செய்தவரை மண்ணித்த, அநீதி இழைக்காத, நேர்மை தவறாத, உலக மக்கள் அனைவரையும் சமம் என்று சொல்லுவதோடு மட்டுமன்றி நடைமுறை படுத்திய தலைவன் வேண்டுமா?

- சொன்னதை அப்படியே நிறைவேற்றும் தோழர்கள் பெரும்பான்மை இருந்தும் வரம்பு மீறாமல் மாற்றார் மற்றும் சிருபான்மையினோர் வாழ்வுரிமையை காத்த தலைவர் வேண்டுமா?

- இறைவனுக்கு அஞ்சி அவனையே அன்புசெய்து அவனுக்கு முற்றிலுமாக கட்டுப்பட்ட தலைவர் வேண்டுமா?

              --- வாசியுங்கள் முகமது நபி அவர்களின் வரலாற்றை ---

இத்தனை தகுதி கொண்ட இன்னொரு தலைவன் உலகில் இல்லை என்று சொல்வது நாம் மட்டுமல்ல உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்களும் கற்று அறிந்த அறிஞர்களும்..

இவைகளில் எந்த தகுதியுமே இல்லாத சுயலாபத்திற்கு உங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களை உங்கள் role-model ஆக ஏற்றுகொள்ளாதீர்கள்...

சான்று :


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக