கர்த்தர் இயேசுவின் தந்தையா?

மத்தேயு 23:8 ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். 9 உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். 10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து.

மேற்கண்ட வசனத்தின் படி தந்தை என்பவர் பூமியில் இல்லை பரலோகத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது ஏசுவுக்கு மட்டுமல்ல மாறாக அனைவர்க்கும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இயேசுவுக்கு மட்டும் என்று கூறி இருந்தால் தந்தை இல்லாமல் பிறந்த இயேசு இறைமகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது உலகில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் பொதுவான செய்தியாக சொல்லப்படுகிறது. இயேசுவை தவிர அனைவருக்கும் இவ்வுலகில் தந்தை உண்டு என்பது நிதர்சனம். 

எனவே இயேசு தந்தை என்று குறிப்பிடுவது படைத்த இறைவனை தானே தவிர தனது பயோலொஜிக்கல் தந்தையை அல்ல. எனவே இயேசு இறைமகன் அல்ல. 



[ஏனென்றால், இஸ்ரவேல் என் குமாரன், என் தலைமகன்' என்று கர்த்தர் சொல்லுகிறார்.  - [யாத்திராகமம் 4:22, தோரா]

[மேலும்,] 'நான் இஸ்ரவேலுக்குத் தகப்பன், எப்பிராயீம் என் தலைமகன்.' - 
[எரேமியா 31:9, தோரா]

[மேலும்,] நான் [சாலமோனை] என் மகனாகத் தேர்ந்தெடுத்தேன், நான் அவனுடைய தகப்பனாக இருப்பேன். - [1 நாளாகமம் 28:6, தோரா]

[மேலும்,] 'நான் [தாவீதை] முதற்பிள்ளையாக்குவேன்,'" - [சங்கீதம் 89:27, தோரா]

[மேலும் அவர்கள், "தேவதூதன்] பதிலளித்து, [எஸ்ராவிடம்], 'இது கடவுளின் மகன், அவர்கள் உலகில் ஒப்புக்கொண்டார்' என்று கூறினார் - 
[2 எஸ்ரா 2:47, தோரா]

எனவே தீர்க்க தரிசிகளை மகன் என்று அழைக்கும் வழக்கம் அம்மொழியில் இருந்து இருக்க வேண்டும் அல்லது இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக இருக்க வேண்டும். நாம் அறிந்தபடிக்கு பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியிலும் புதியஏற்பாடு அராமிக் மொழியிலும் வழங்கப்பட்டது. பிறகு அது கிரேக்கத்துக்கு, லத்தீனுக்கும் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதில் கருத்துப் பிழை ஏற்படுவது இயற்கையே. மேலும் மொழிபெயர்ப்புக்கு முன் உள்ள பதிப்பில் அரசியல் மற்றும் வேறு சில காரணங்களால் புகுத்தப்பட்ட செய்திகளை அடையாளம் காண்பது கடினமாகி விடுகிறது. எனவே எந்த வேதமும் அதன் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டு அம்மொழி வளக்கொளியாமல் இருந்தால் அதை நாம் பயன்படுத்தலாம். இல்லை என்றால் அந்த பழைய வேதம் வழிகாட்டும் புதிய வேதத்தை பின்பற்றுவதில் என்ன பிழை உள்ளது? எளிமையாக நாம்  விடயம் என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியாது. அப்படி முரண்பட்டால் அது விதிவிலக்கு என்று குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும். அல்லது அது இயேசுவுக்கு பிறகு மக்களால் புகுத்தப் பட்டு இருக்க வேண்டும்.

இப்படிபட்ட நிலைகளிலிருந்து உண்மையை பிரித்தறிய விரும்பினால் அதற்கும் இறைவன் விதியையும் வழியையும் வகுத்துள்ளான். தொல்காப்பிய முதல் நூல், வழி நூல் விதிகளும், திருமந்திரம் விளக்கும் நான்மறையும் அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். மட்டுமல்லாமல், பழைய ஏற்ப்பாட்டை முறையாக ஆராய்ந்தால் கடவுளுக்கு பிறந்த மகன் என்பது இல்லை என்பதற்கு ஆதாரமாக பல செய்திகளை பெறலாம். 

1 கருத்து:

  1. எரேமியா 4:22
    22 என் மக்கள் முட்டாள்கள், அவர்கள் என்னை அறியவில்லை; அவர்கள் முட்டாள்தனமான பிள்ளைகள், அவர்களுக்கு அறிவு இல்லை;

    பதிலளிநீக்கு