முத்தமிழ்

தொல்காப்பியர் தாமியற்றிய தொல்காப்பியத்துள் பொருளதிகாரச் செய்யுளியலிலும் மரபியலிலும் முறையே தமிழ்மொழியை 
  • வாய்மொழி (நூற்பா.71), 
  • தொல்மொழி (நூ.230), 
  • உயர்மொழி (நூ.163), 
  • தோன்றுமொழி (நூ.165), 
  • புலன்மொழி (நூ.233), 
  • நுணங்குமொழி (நூ.100) 
என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் "முத்தமிழ்" என்கிற பதத்தை எங்குமே பயன்படுத்தியது இல்லை. முத்தமிழ் என்றால் இயல், இசை மற்றும் நாடகம் என்று கூறப்படுகிறது. இந்த விளக்கங்களும் வர்ணனைகளும் பிற்கால அறிஞர்களால், குறிப்பாக சொன்னால் கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. பொதுவாக நூல்களை வகைப்படுத்த இப்பிரிவுகள் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் தொல்காப்பியர் முதல் மற்றும் வழி என்று நூல்களை வகைப் படுத்துகிறாரரே ஒழிய இவ்வாறு அல்ல.

எனவே இது எங்கிருந்து தோன்றி இருக்க கூடும் என்று நூல்களை ஆய்வு செய்யும் பொழுது பின்வரும் ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகிறது.

மூலம் 1: 

 முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் - தேவாரம்

குறிப்பு: தேவாரப் பாடல்கள் மூவர் தமிழ் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டன.. தேவாரப் பதிகங்கள் தமிழ்மாலை என ஆசிரியர்களாலேயே அறிவிக்கப்பட்டன

மூலம் 2: 

 மூவர் தமிழும் (தேவாரம்) - நல்வழி பாடல் 40 

மூலம் 3: 

சங்கத் தமிழ் மூன்றுந் தா - ஔவையார் எழுதிய விநாயகர் அகவல்

குறிப்பு: இவர் நாம் அறிந்த சங்ககால புலவர் அல்ல, 14ம் நூற்றாண்டை சார்ந்த பிற்கல சமய புலவர்.  

மூலம் 4: 

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் (பரிபாடல் : திர : 4)

எனவே சங்ககாலத்தில் இப்பதம் பயன்படுத்தப் பட்ட  இடம் எதுவும், இயல் இசை நாடகத்தை குறிக்கவில்லை. பிற்கலத்தில் சங்ககால புலவர்களின் பெயரில் தோன்றிய புலவர்களின் பாடல்களிலேயே இது காணப்படுகிறது. எனவே இது உள்நோக்கம் உடையதாக இருக்கலாம். சமீப காலத்தில் அடிப்படை ஆதாரம் இல்லா இவ்விளக்கம் பரவலாக நம்பப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. முத்தமிழ் என்பது ஒருவேளை தேவாரத்தை குறிப்பிடலாம் அல்லது முதுமையான தமிழ் [தொல்மொழி (நூ.230)] என்பதை முத்தமிழ் என்று குறிப்பிட்டு இருக்கலாம்.

மேலும் முத்தமிழ் என்பது நான்மறையோடு சமமாக பயன்படுத்தப் படுவதால் நான்மறையின் வரையறைக்கும் அது கூறும் அறத்துக்கும் முரண் பட்ட விளக்கத்தை யாரும் தர முடியாது. அவ்வகையில் நான்மறைகள் இசையையும் கூத்தையும் பிழை என்கிறது. எனவே முத்தமிழ் என்பது நிச்சயமாக இயல் இசை நாடகத்தை குறிப்பிடவில்லை. தமிழர் என்று பெருமை கொள்வதாக இருந்தால் அதன் அறத்தை பின்பற்றுவதில் தான் அதன் உண்மை தன்மை இருக்கிறது. அறமற்றதாக கூறப்படும் இசையும் கூத்தும் தமிழர் பண்பாட்டில் நுழைத்ததும் அதை வளர்த்தெடுத்ததும் யார்? எப்படி? ஏன்? எனபனவெல்லாம் ஆய்வாளர்களின் சிந்தனைக்கு விடப்படுகிறது. 

குறிப்பு: மேலும் ஆதாரங்கள் கிடைத்தால் கீழே பதிவு செய்யுங்கள் நன்றி. 

3 கருத்துகள்:

  1. 1.1 தமிழ் நாடகம்
    தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி. நாடகத்தை
    முத்தமிழ் வடிவங்களுள் ஒன்றாகக் காட்சிப்படுத்திய மொழி.
    இயல், இசை, நாடகம் என்னும் தமிழரின் முத்தமிழ்க் கோட்பாடு
    வாழ்வியலோடு இயைந்து விளங்குவதாகும். முத்தமிழ் குறித்த
    பாடல் ஒன்று அதன் கூறுகளின் இயல்புகளைச் சுருக்கமாகக்
    கூறுவதை நாம் பார்ப்போமா!
    உள்ளத்தால் பொருளியல்பை
    உணர்த்தும் மொழி, இயல் என்பர் ; உணர்ச்சி வேக
    வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய
    ஓசைநலம் விளங்க இன்பம்
    கொள்ளச் செய் உரைத் திறத்தாற்
    குலவு மொழி இசை என்பர் ; குறித்த செய்கை
    விள்ளத்தால் அதுவாகப் பயிற்று மொழி
    நாடகமா விரிப்ப ராலோ
    (க. வெள்ளைவாரணனார், சிறப்புப்பாயிரம்,
    யாழ்நூல் (விபுலானந்த அடிகள்)

    எனும் பாடல் முத்தமிழ்க் கோட்பாட்டினைக் குறிப்பிட்டு
    விளக்குகிறது.


    முத்தமிழ்


    உள்ளக்கருத்தினை உணர்த்தும் மொழி இயல்; இன்பம்
    கொள்ளத்தக்க வகையில் இசையும் மொழி இசை ; உடலின்
    இயக்கத்தில் விளக்கமுறும் மொழி நாடகம் என்பவையாகும்.

    முத்தமிழ்க் கோட்பாடு குறித்த சிந்தனையைப் பழந்தமிழ்
    இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன. இவ்வகையில் பரிபாடலில்
    இடம் பெறும் ‘தமிழ் மும்மை’ என்ற சொல் முத்தமிழ்
    தொடர்பான சிந்தனையின் முதல் வெளிப்பாடு எனலாம்.

    இதனை
    தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
    (பரிபாடல் : திர : 4)

    என்னும் பாடல் வரி மூலம் அறியலாம்.

    எனவே, முத்தமிழ்க் கூறுகளில் ஒன்றான நாடகம், தமிழில்
    தொன்மையான ஒன்று என்பதை அறிந்து கொள்ளலாம்.

    1.1.1 நாடகம் - அறிமுகம்
    இவ்வகையில் பெருமை வாய்ந்த முத்தமிழ் வடிவங்களில்
    நாடகம் குறிப்பிடத்தக்கதாகும். ‘நாடகம்’ என்ற தனிச்சொல்லைக்
    காலத்தால் முந்தைய தொல்காப்பியம் எனும் இலக்கணநூல்
    முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது. இதை இச்சொல்லின்
    அறிமுகமாகவும் கருத இயலும்.
    ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல் சான்ற புலனெறி வழக்கம்’
    (தொல் : அகத் : 53)

    மேற்குறிப்பிட்ட சூத்திரத்தில் ‘நாடகம்’ என்னும் குறிப்பு இடம்
    பெற்றுள்ளது. இவ்வடிகளில் பயின்று வரும் நாடக வழக்கு எனும்
    அடிச்சொல் அக்காலத்தைய நாடகக் கலை வடிவத்தின் மரபினை
    உணர்த்துகிறது.

    நாடக வழக்கு


    நாடக வழக்கு என்பது உலகியல் வழக்கு என்னும் இயல்பு
    நிலைக்கு மாறானது. நாடக வழக்கு என்பது புனைந்துரை
    வகையைச் சார்ந்தது. உலகியல் வழக்கு என்பது உண்மை
    நிலையின் அடிப்படையில் அமைந்தது. இவற்றுள், நாடக வழக்கு
    என்பது சுவைபட வருவன எல்லாவற்றையும் ஓரிடத்து வந்ததாகத்
    தொகுத்து, கற்பனை கலந்து கூறும் முறையினைச் சுட்டுவதாகும்.


    1.1.2 தொல்காப்பியர் காலத்து நாடகக்கலை
    நாடகம் குறித்த முதற் குறிப்பினைத் தந்து நிற்கும்
    தொல்காப்பியர். நாடக வடிவங்களைக் கூத்து, ஆடல் (ஆட்டம்)
    என்ற இருவகைகளில் அறியத் தருகிறார்.

    வள்ளிக் கூத்து, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை,
    வெறியாடல், காந்தள், அமலைக் கூத்து, துடிநிலை, சுழல் நிலைக்
    கூத்து, பிள்ளையாட்டு முதலியன தொல்காப்பியர் காலத்து
    நடத்துகலை (performing art) வடிவங்களாகும்.

    மேலும், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நாடகச் சுவைகள்
    பற்றிய குறிப்புகளையும் தருகின்றது.
    ‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
    உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
    நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’
    (தொல் : மெய்ப் : 27)

    என்னும் தொல்காப்பியச் சூத்திரம் நாடகத்தைச்
    சுவைப்பதற்கான அடிப்படையாக விளங்குபவை கண்களும்,
    செவிகளுமே என்கிறது. ஆம்... ! நாடகம் மட்டுமே கண்ணால்
    காண்பதற்கும், காதால் கேட்பதற்குமான காட்சிக் கலையாக
    விளங்குகிறது. இக்குறிப்பானது நாடகச் சுவைஞர் அல்லது
    பார்வையாளர் நோக்கில் மிக முக்கியமான செய்தியாகும்.

    மேற்குறிப்பிடப்பெற்றுள்ள செய்திகள் வழி, தொல்காப்பியர்
    காலத்தில் நாடகக்கலை செம்மையுற்று விளங்கிய நிலையை
    அறிய முடிகின்றது.

    1.1.3 சங்ககாலத்து நாடகக் கலை
    சங்ககால இலக்கியங்கள் நாடகம் குறித்த பல செய்திகளைத்
    தருகின்றன. இவ்வகைச் செய்திகள் தமிழ் நாடக வரலாற்றின்
    தொடக்க நிலைச் செய்திகளுக்கான தெளிவான
    சான்றாதாரங்களாகவும் அமைந்துள்ளன. எனவே இக்காலக்கட்டம்
    மிக முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது. இவற்றை நாம்
    அறிவதற்கு உதவுவனவாகப் பல இலக்கியங்களும் அவற்றிற்கான
    உரையாசிரியர் குறிப்புக்களும் காணக் கிடைக்கின்றன.

    இலக்கியங்கள்


    நாடகத்துக்கான செய்திக்களஞ்சியமாக விளங்குகின்ற சங்க
    இலக்கியங்கள் எவை என நாம் முதலில் அறிவோம்.
    பத்துப்பாட்டு, அகநானுறு, புறநானூறு, பதிற்றுப்பத்து,
    குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல்,
    கலித்தொகை போன்றனவே குறிப்பிடத்தக்க சங்க இலக்கிய
    நூல்களாகும்.

    சங்கம் மருவிய காலக்கட்ட இலக்கியங்களாக, திருக்குறள்,
    சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்கள்
    நாடகம் தொடர்பான செய்திகளைத் தருகின்றன.

    https://www.tamilvu.org/courses/diploma/a061/a0614/html/a06141l1.htm

    பதிலளிநீக்கு
  2. "முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
    எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
    நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
    அத்தகு சோதியது விரும்பாரன்றே "
    -ஆசான் திருமூலர்-

    "வடிக்குறும் தமிழ்க்கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே"- 875

    “மெய்யடியார் சபை நடுவே எந்தை உனைப்பாடி மகிழ்ந்தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய்" ( 4802)

    பதிலளிநீக்கு
  3. 'முத்தமிழ் கற்று முயங்கு மெய்ஞ் ஞானிக்குச்
    சத்தங்கள் ஏதுக்கடி? - குதம்பாய்!
    சத்தங்கள் ஏதுக்கடி?'
    - ஆசான் குதம்பைச்சித்தர

    பதிலளிநீக்கு