இயேசு வருவதை முன்கூட்டியே எந்த சித்தரும் சொன்னதில்லை.. அது தேவையும் இல்லை. ஏனென்றால் இயேசு யூதர்களுக்கு மட்டும் வந்ததவர்.
அதற்கு இயேசு, "நான் இஸ்ரேலின் காணாமல் போன ஆடுகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டேன்" என்று பதிலளித்தார். (மத்தேயு 15:24)
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)
ஆனால் முகமது தான் உலகம் முழுமைக்கும் வந்த தூதராக கூறினார்.
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 34:28)
மேலும் அவர் வருவதை முன்னமே உலக வேதங்கள் கூறுவதாக குர்ஆன் கூறுகிறது.
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை [முகம்மதை] அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - (குர்ஆன் 2 :146)
உலகில் உள்ள வேதங்களை போல, தமிழர் வேதமும் அவரின் வருகையை பேசுகிறது.
பகவர்க்கு ஏதாகிலும் பண்பு இலர்ஆகிப்
புகுமத்தராய் நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஓத்து நின்ற ஊழி தோறூழி
அகமத்தராகி நின்று ஆய்ந்து ஓழிந்தாரே - (திருமந்திரம் பாடல் - 1865)
பதவுரை
பகவர்-க்கு - (பகவன், பகவர்) மனிதர்க்கு, அடியார்க்கு
ஏதாகிலும் - எது ஆகினாலும்
பற்று இலர் ஆகி - விருப்பு வெறுப்பு இன்றி
புகுமத்தர்-ஆய் - அதிக உற்சாகம் உள்ளவன்
நின்று - நின்று
பூசனை- அன்றாட இறை வணக்கம்
செய்யும் - செய்யக்கூடிய
முகமத் - ஓடு - முகமத் உடன்
ஒத்து - சேர்ந்து, இணங்கி
நின்று - நின்று
ஊழி தோறூழி-ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவர்
அகமத் - தராகி - அகமத் தராகி
நின்று - நின்று
ஆய்ந்து - தெரிந்தெடு, களைந்து எடு, ஆராய்; நுட்பமாய்ப் பார்
ஒழிந்தாரே - நீக்கினார்
விளக்கம்: அடியார் அவர்க்கு எது ஆகினாலும் விருப்பு வெறுப்பின்றி அதிக ஈடுபாட்டோடு நின்று அன்றாட இறை வணக்கம் செய்யக்கூடிய முகமத் உடன் சேர்ந்து நின்று ஊழி தோறூழி செய்து அகமத் தராகி நின்று ஆய்ந்து நீக்கினார்.
குறிப்பு: மேற்சொன்ன பாடல்கள் முழுவதும் முகமது நபி அவர்களை பற்றிய தீர்க்க தரிசனமாகும். இதில் பயன்படுத்திய வார்த்தை முகத்தை பற்றியும் அகத்தை பற்றியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்னும் பெயரல்ல என்போர் சிலர். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொகாப்பியத்தின் சொற்களுக்கான புணர்ச்சி விதிப்படி, முகம்+அது+ஓடு = முகமதோடு என்றும் அகம்+அது+ராகி = அகமதராகி = என்றுதான் இடம்பெற முடியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்று இடம்பெறாது. முகமத்+ஓடு=முகமத்தோடு என்றும் அகமத்+தராகி=அகமத்தராகி என்பதே சரியான பகுப்பு. எனவே இது தெளிவாக முகமது நபியை பற்றிய முன்னறிவுப்புதான் என்று கூறலாம்.
ஆனால் தமிழர்கள் ஏன் அவரை வாசிப்பதோ பின்பற்றுவதோ இல்லை?
- ஒரு சமயத்துக்கு வேதம் தான் அடிப்படை என்று அறியாதார் பலர் அதாவது வேதமல்லாமல் ஒரு சமயம் தோன்றவோ நிலைக்கவோ முடியாது என்ற அடிப்படையை அறியாதார் பலர்.
- தமிழில் வேதம் இருப்பதை அறியாதார் பலர்
- சமஸ்கிருத வேதத்தை ஏற்றோர் பலர்
- அறிந்தவர்கள் கூட அதற்கு பார்ப்பனர்களின் பொழிப்புறையை வாசிகின்றனர் அதாவது தமிழ் வேதத்துக்கு சமஸ்கிருத வேதத்தை மட்டுமே வேதம் என்று நம்புவோரின் பொழிப்புரையை அல்லது புராணங்களை நம்புவோரின் பொழிப்புரையை வசிக்கின்றனர். அவர் எப்படி சரியான பொழிப்புரை கொடுப்பார் அல்லது கொடுக்க முடியும்?
- நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது என்ற அறிவு இல்லாமல் சமஸ்கிருத வேதங்களை நால் வேதம் என்று கருதுவோர்.
- வேற்று மொழியில் உள்ள வேதத்தை அதாவது அரபியில் உள்ள வேதத்தை தனதாக ஏற்க மறுப்பது. அடிப்படையில் அவ்வாறு ஏற்க்க தேவை இல்லை ஆனால் அவரவர் மொழியில் உள்ள வேதத்தில் தான் அடுத்த குருவை அறியும் வழிகாட்டுதல் உண்டு. அதை கற்காததும் ஏற்க்காததும் இந்த நிலையில் தான் மனிதனை விடும். குறிப்பு: இது சமஸ்கிருதத்தில் உள்ள வேதத்துக்கு பொருந்தாது என்பதை நான்மறை தத்துவத்தை திருமந்திரத்தில் வாசித்தால் புரியலாம்.
- எவ்வித ஆன்மீக அக்கறையும் இல்லாமல் அதாவது சரி பிழை எதையும் பற்றி கவலைப்படாமல் தற்காலிக நன்மை, பொருளாதாரம், பெருமை ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செயல்கள் செய்யப்படுகிறது.
- உதாரணமாக, வேதம் என்பது வாழ்வில் சோதனை ஏற்படும், நன்மை தீமை இரண்டும் மனிதனுக்கு ஏற்படும், எந்த துன்பத்திலும் நன்மையே செய்ய வேண்டும், நிலையாமை வாழ்க்கையின் அடிப்படை, அன்றாட வாழ்வில் இது இது சரி, இதெல்லாம் பிழை என்று வரையறுத்தி கூறுவதுடன் பல எதார்த்தங்களை சத்தியத்தை பேசும் ஆனால் ஜோதிடம் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டுமா? வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்கவேண்டுமா இதை இதை செய்யுங்கள் என்று கூறும். எனவே இறைவன் மனிதனுக்கு கொடுத்த வலிகட்டுதல்களான வேதத்தை விட்டு ஜோதிடத்தை நம்புவது எளிமையாக உள்ளது. இவர்கள் நம்பும் ஜோதிடம் 100இல் ஒரு முறை நடந்தால் கூட, அதைத்தான் நம்புகிறார்கள். அதே போல தமது மொழியில் உள்ள வேதத்தை விட்டு இதிகாச புராணங்களை நம்புகிறார்கள்.
- தற்காலத்தில் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் ஆன்மீகத்தை மக்கள் ஏற்று நடக்கின்றனர். இரண்டும் அடிப்படையிலே முரனானது. எனவே அவர்களது ஆன்மீகம் ஏற்க்கதகுந்தது அல்ல என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கின்றனர்.
சுருக்கமாக மக்கள் உண்மையை புரிந்துகொள்வதை தடுக்க என்னவெல்லாம் வழிகள் உள்ளதோ அத்தனையும் மக்கள்மீது ஒரு யுத்தம் போல தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்த உண்மைகளை ஆய்ந்து தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் எழுதும் நம்க்கு வரும் விமர்சனங்களும் வசைச்சொல்லும் ஒன்று இரண்டு அல்ல. ஆனால் இதை ஏற்ப்பதில் யாருக்கும் கட்டாயம் இல்லை. விருப்பமிருந்தால் வாசித்து பயன் பெறட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக