இஸ்லாம் சொல்வது என்ன? (சுருக்கமாக, பத்து வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்)


சுருக்கமாக எழுதுகிறேன், விரிவாக எனது உள்ளத்தில் ஓடும் விளக்கம் உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

  • இஸ்லாம் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்குமானது.
  • மனிதன் படைக்கப்பட்டவன், பரிணாம வளர்ச்சி பெற்றவன் அல்ல.
  • படைத்தவன் காப்பவன் அழிப்பவன் ஏக இறைவன் ஒருவனே.
  • அவன் மக்களுக்கு வழிகாட்ட எல்லா சமூகத்துக்கும் அவரவர் மொழியில் சான்றோரை தேர்ந்தெடுத்து மறைநூலை வழங்கி மக்களுக்கு போதிக்க  செய்தான்.
  • அந்த உபதேசத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவரை அவன் விரும்புகிறான், அல்லாதவரை வெறுக்கிறான். அவர்களை நேர்வழியில் செலுத்த அவர்களுக்கு சோதனைகளை தருகிறான்.
  • நாம் இறைவனிடம் உரையாட இறைவணக்கம், இறைவன் நம்மிடம் உரையாட வேதம்/மறைநூல்.
  • இஸ்லாம் கூறும் அறம் பெரும்பாலும் எல்லா மொழியில் உள்ள வேதங்களிலும் உள்ளவையே. அதில் சில,
    • தெய்வத்தை ஒன்று என்றே வணங்க வேண்டும் (பல தெய்வம் இல்லை)
    • தெய்வத்துக்கு ஈடு இணை கிடையாது, அவன் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல எனவே மனிதர்களை, இயற்கையை, சிலையை, பொருளாதாரத்தை வணங்க கூடாது.
    • இறைவன் சொல்வதுதான் அறம், அதற்க்கு கட்டுப்படுவதுதான் மக்களின் பிறப்பின் நோக்கம்.
    • மக்கள் செய்யும் பாவங்களின் வேர்கள் - பெருமை, பொறாமை, ஆசை, இவைகளை விட்டு விட வேண்டும்.
    • மனிதன் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்கள் - பொறுமை, அன்பு, பயபக்தி. 
    • மனிதன் பாவங்கள் செய்வதனால் இந்த உலகிலும் மறுமை உலகிலும் கேட்டை சந்திப்பான்.
    • பாவங்களை அழிக்க அதற்க்கு இணையான நனமை செய்ய வேண்டும்.
    • மனிதன் அவன் கூறும் அறத்தை பின்பற்றாததனால் தனக்கு தானே தீமை ஏற்படுத்தி கொள்கிறான். இறைவன் யாருக்கும் தீங்கை ஏற்படுத்துவதில்லை.
    • ஒரு ஆன்மா படைக்க பட்டதில் இருந்து வெவ்வேறு நிலையில் இருந்து வருகிறது, இறுதியாக செல்லும் இடம் சுவர்க்கம் அல்லது நரகம். (ஆன்மா உலகம் (50k yrs) - கருவறை 10 months - இம்மை 100 yrs - மண்ணறை 1000 yrs - விசாரணை 50k yrs - மறுமை § yrs)
  • சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம். கல்வியை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் தொழிற்கல்வியை மட்டுமல்ல, உலக வாழ்வில் சிறக்கவும் மறுமை வாழ்வில் வெற்றிபெறவும் தேவையான கல்வியையும் கற்க வலியுறுத்துகிறது.
  • இம்மை வாழ்க்கை அற்பமானது 60 முதல் 100 வருடங்கள் வரை மட்டுமே.. மறுமை வாழ்க்கை முடிவில்லாதது, நிலையானது எனவே அதில் நரகத்தில் வீழாமல் இருக்கும் வழியை தேடிக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
  • எல்லா சமய வேதங்களும் முகமது நபி அவர்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக