இதற்கு நெருக்கமான பொருள் கொண்ட பாடல்…
அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - சிவவாக்கியம் 224
பொ-ரை: தானாக அரியுமாகி சிவனுமாகி இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்கி அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே அல்லவா?. ஒன்றை இரண்டாக்கி விரித்து வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! அறிவோடு பாருங்கள் இங்கும், அங்கும், எங்குமே தெய்வம் ஒன்றே!
தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. - தேவாரம் 67
பொ-ரை: ஒளிவடிவினனாய்,உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால் வழிபடப்படுபவனாய், அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய், பூவின்கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய், மலைகளாகவும் ஐம் பூதங்களாகவும் விளங்குகின்றவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
அரியும் சிவனும் ஒன்று. ஆனால் திருமாலும் அரியும் வேறு வேறு.
மகாபாரதத்தின் ஹரிவம்ச பர்வா (2.125 பகுதி) இவ்வாறு கூறுகிறது:
பதிலளிநீக்குருத்ரனுக்கு (சிவன்) நெருப்பின் ஆன்மாவும், விஷ்ணுவுக்கு சோம (அமிர்தம், சந்திரன்) ஆன்மாவும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிலையான மற்றும் அசையும் உயிரினங்கள் உட்பட அனைத்து உலகமும் நெருப்பு மற்றும் சோமாவின் (சிவன் மற்றும் விஷ்ணு) இணைந்த ஆத்மாக்களைக் கொண்டுள்ளது. ருத்ரனின் (சிவன்) அதிபதி விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் அதிபதி சிவன் (ருத்ரா) ஆவார். ஒரே இறைவன் உலகில் எப்போதும் இரண்டு வடிவங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். ஷங்கரர் (சிவன்) இல்லாமல் விஷ்ணு இருப்பதில்லை, கேசவன் (விஷ்ணு) இல்லாமல் சிவன் இல்லை. எனவே, ருத்ரா (சிவன்) மற்றும் உபேந்திரா (விஷ்ணு) நீண்ட காலத்திற்கு முன்பே ஒற்றுமையை அடைந்துள்ளனர்.
Harivamsa Parva of Mahabharat (2.125 section) says this:
Remember that Rudra (Shiva) has the soul of fire and ViShNu has the soul of soma (nectar, moon). All the world including the fixed and movable beings have the combined souls of fire and soma (Shiva and ViShNu). The supreme lord of Rudra (Shiva) is ViShNu and the supreme lord of ViShNu is Shiva (Rudra). The same lord is moving in the world always in two forms. ViShNu does not exist without ShaNkara (Shiva) and Shiva does not exist without Keshava (ViShNu). Hence, Rudra (Shiva) and Upendra (ViShNu) have attained oneness, since long before.
https://hinduism.stackexchange.com/questions/237/how-were-the-trimurti-born?noredirect=1&lq=1