தமிழ் அல்லாத மொழிகளிலும் மறைநூல்கள் உண்டு என்று தமிழர் பண்பாடு கூறுகிறதா?

 கீழ் கண்ட தொல்காப்பிய நூல் விதியானது நூல் என்றாலே மறைநூல் அல்லது வேதம் என்கிறது.

அதிலும் தொடந்து ஒன்றன் பின் ஒன்றாக வரக்கூடியதை வழிநூல் என்கிறது.

அந்த வழிநூலிலும் மொழிபெயர்ப்பு நூல் உண்டு என்கிறது. அதாவது பிற மொழி வேதத்தை தமிழுக்கு மொழிபெயர்த்தால் அதுவும் வேதமாக கருதப்படும் என்று பொருள்.

ஆனால் இங்கே நோக்கத் தகுந்த மிக முக்கியமான விடயம் என்னவென்றல்,

  1. மொழி பெயர்க்கப்படும் அனைத்த்தும் வேதம் அல்ல. ஏனென்றால் முனைவன் (அ) குரு என்றால் யார் என்ற இலக்கணமும் அனைத்து மறை நூல்களிலும் உண்டு. பொய் குரு யார் என்ற இலக்கணமும் உண்டு. எனவே மொழிபெயர்ப்பை செய்பவர் அந்த இலக்கணத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  2. அது முதல் நூலின் இலக்கணத்துக்கு முரண் படக்கூடாது. அதாவது மொழி பெயர்ப்பு நூலும் கூட மனிதனின் அனுபவத்தில் விளைந்ததாக இருக்க கூடாது.
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)

கருத்து: முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதல் நூல் ஆகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641)

பேராசிரியர் உரை: என்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு. அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

கருத்து: வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும். - விக்கி

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642&643)

பேராசிரியர் உரை: முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், பிற மொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு.

கருத்துதொல்காப்பியம் வழிநூலை

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • மவேற்று மொழி நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்

என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும்.

முடிவுரை:

எனவே தமிழ் அல்லாத மொழிகளில் வேதம் இருப்பதை தமிழர் பண்பாடு ஏற்கிறது.

அது மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து மொழி வேதங்களையும் நான்மறை என்று தமிழர் சமயங்கள் அழைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக