தற்கொலை

தமிழர் சமயம்

மூவகை மூடமும் எட்டு மயங்களும்

தோவகைஇல் காச்சியார்க்கு இல். (அருங்கலச்செப்பு 29)

பொருள்: குற்றமற்ற நற்காட்சியாளரிடம் மூவகை மூடங்கள் எண்வகை மயக்கங்களும் இருப்பதில்லை.

வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறாடல் இன்ன
உரைப்பின் உலக மயக்கு. - (அருங்கலச்செப்பு 30)

பதவுரை 

வரைப்பாய்தல் - மலையுச்சியிலிருந்து கீழ்விழுகை

தீப்புகுதல் - எரியில்வீழ்ந்து உயிர் விடுதல்

ஆறாடல் - ஆற்றில் விழுந்து உயிர் விடுதல் 

இன்ன உரைப்பின் - இது போல வேறு ஒன்றை சொன்னாலும் 

உலக மயக்கு - உலகத்தின் மயக்கம் ஆகும் 

பொருள்: அனைத்துவகை தற்கொலைகளும் உலகம் உங்களை மயக்கியதால் ஏற்படுவதாகும்

இஸ்லாம் 

"உங்களை நீங்களே கொல்லாதீர்கள், நிச்சயமாக கடவுள் உங்கள் மீது மிக்க கருணையாளர்." -  (குர்ஆன் 4:29)

'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி (தடைசெய்து) விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி-1364.)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி - 5778)

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை. (நூல்: முஸ்லிம் 1779) 

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) - நூல்: புகாரி 5671, 6351) 

கிறிஸ்தவம் 

தற்கொலை பற்றிய கிறிஸ்தவக் கருத்துக்கள் மீது அதிக விவாதங்கள் நடந்துள்ளன, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தற்கொலை பாவம் என்றும் தெய்வ நிந்தனைச் செயல் என்றும் நம்பினர் - விக்கி 

என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். - (சங்கீதம் 31:15)

“நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை. நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!”. - (யோபு 1:21) 

யூதமதம்  

தற்கொலைக்கு எதிரான தடை டிராக்டேட் பாவா காமா 91b இல் உள்ள தாளமுத் குறிப்பிடப்பட்டுள்ளது. Semahot (Evel Rabbati) 2:1–5 தற்கொலை பற்றிய பிற்கால யூத சட்டத்தின் அடிப்படையாக செயல்படுகிறது, ஆதியாகமம் ரப்பா 34:13, இது ஆதியாகமம் 9:5 ஐ அடிப்படையாகக் கொண்ட பைபிள் தடையை அடிப்படையாகக் கொண்டது: "உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்."  

"... தற்கொலை செய்துகொள்பவர்களும், அவ்வாறு செய்ய மற்றவர்களுக்கு உதவுபவர்களும் ஏராளமான உள்நோக்கங்களால் செயல்படுகிறார்கள். இவற்றில் சில காரணங்கள் உன்னதமானவை அல்ல, எடுத்துக்காட்டாக, குழந்தைகளின் ஆசைகள் அம்மா அல்லது அப்பா அனுப்பப்படுவதைப் பார்க்க வேண்டும். 'வீணில்லாத' சுகாதாரப் பராமரிப்பிற்காக அவர்களின் பரம்பரையை வீணடிக்க வேண்டாம், அல்லது இறுதி நோயுற்றவர்களுக்கு முடிந்தவரை குறைந்த பணத்தை செலவழிக்க காப்பீட்டு நிறுவனங்களின் விருப்பம்."

கடுமையான வலிக்கு சரியான பதில் தற்கொலை அல்ல, ஆனால் சிறந்த வலி கட்டுப்பாடு மற்றும் அதிக வலி மருந்து என்று கட்டுரை கூறுகிறது . பல மருத்துவர்கள், போதுமான வலி மருந்துகளை வழங்க மறுப்பதன் மூலம் இத்தகைய நோயாளிகளை வேண்டுமென்றே வலியில் வைத்திருக்கிறார்கள்: சிலர் அறியாமையால்; மற்றவர்கள் சாத்தியமான போதைப் பழக்கத்தைத் தவிர்க்க; மற்றவை ஸ்டோயிசத்தின் தவறான உணர்விலிருந்து . இத்தகைய பகுத்தறிவு வடிவங்கள் "வினோதமானவை" மற்றும் கொடூரமானவை என்று பழமைவாத யூத மதம் கருதுகிறது, இன்றைய மருந்துகளால் மக்கள் நிரந்தர சித்திரவதைக்கு எந்த காரணமும் இல்லை. 

சூரிய சந்திரனை வணங்கலாமா?

முகமது நபி, 'குரைஷி' என்ற பழங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர். குரைஷிகள் வழிபட்ட 'ஹுபால்' என்ற சந்திரக் கடவுள் 'அல்லாஹ்' என்று மாற்றப்பட்டது, எப்படி? பிறைச்சந்திரக் குறியீட்டுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் என்ன தொடர்பு? Quora 

முகமது நபி, 'குரைஷி' என்ற பழங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர்.

ஆம் முகமது நபி குறைஷி வம்சத்தை சார்ந்தவர். பழங்குடி என்பதை என்ன அர்த்தத்தில் இங்கே குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. குறைஷிகள் என்போர் ஏறக்குறைய பிராமின் போல அரேபிய சமூகத்தில் இருந்தவர்கள். அத்தனை ஏற்றத்தாழ்வையும் அதிலிருந்து வந்த முகமது நபி உடைத்து எறிந்தார்.

 குரைஷிகள் வழிபட்ட 'ஹுபால்' என்ற சந்திரக் கடவுள் 'அல்லாஹ்' என்று மாற்றப்பட்டது, எப்படி? 

முகமது நபிக்கே தெரியாத விஷயம் இது!

அரேபியர்கள் நீங்கள் குறிப்பிட்டது மட்டுமல்ல, சிலைகள் உட்பட பலவற்றை வாணங்கியவர்கள்.

ஹுபால் என்பது அல்லாஹ் என்று மாற்றப்பட்டதாக கூறுவது பச்சைப் பொய். அல்லாஹ் என்பது தெய்வம் என்கிற வார்த்தைக்கு இணையானது. அரபிக் பைபிள் அல்லது அரபிக் தோரா (யூதர்களின் புனித நூல் - பழைய ஏற்படு என்று பைபிளில் இடம் பெற்று இருக்கும் நூல்) இவற்றை எடுத்து பார்த்தாலும், தெய்வத்துக்கு அல்லாஹ் என்றுதான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இயேசு பேசிய அராமிக் மொழியில் இறைவனை அல்லாஹ் என்றுதான் அழைத்தார் என்று பல கையெழுத்து பிரதி பைபிளின் மூலம் கண்டறியப்பட்ட செய்திகள் வெளிவந்தது.

அல்லாஹ் என்கிற பெயர் பல ஆயிரம் ஆண்டு காலமாக அரேபியாவில் புழக்கத்தில் உள்ள சொல்.

'வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். அப்படியாயின் 'எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்? - (திருக்குர்ஆன் 29:61)

'வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா' என்று நீர் கேட்பீராக! - (திருக்குர்ஆன் 10:31)

'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக - (திருக்குர்ஆன் 23:84,85)

'ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா;?' என்று கேட்பீராக! - (திருக்குர்ஆன் 23:86,87)

'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக! - (திருக்குர்ஆன் 23:88,89)

'வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. - (திருக்குர்ஆன் 29:63)

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள். - (திருக்குர்ஆன் 31:25)

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!' என்று கேட்பீராக! 'அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன்) 39:38

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்' எனக் கூறுவார்கள். - (திருக்குர்ஆன் 43:9)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? - (திருக்குர்ஆன் 43:87)

மக்கத்துக் மக்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். - (திருக்குர்ஆன் 39:3)

கிறிஸ்தவ யூத இஸ்லாமிய சமயத்தில் மட்டுமல்ல தமிழர் சமயத்திலும் இறைவனின் அப்பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?... (பரிபாடல் 60)

பொருள்: ...அல்லா அவுணர்க்கும் (அசுரர்க்கும்/ஜின்களுக்கும்) நீதான் முதலானவன். எனவே இவர் எதிரி இவர் நம்மவர் என்று உனது வழி முறையை அறிந்தவர் பிரித்து பார்ப்பாரோ? 

குறிப்பு: "அல்லா" என்பது பெயரில்லை, "அல்ல" என்பது "இல்லை" என்பதன் மாற்றுப் பிரயோகம் என்போர் இலக்கணம் அறியாதோர் என்றே கருதுகிறேன்.  ஏனென்றால் இது தெளிவாக ஒருவனைச் சுட்டி பேசும் வாசகம் என்பது வெளிப்படை. மேலும் "அல்லா" வேறு "அல்லாஹ்" வேறு என்று பிரித்து கூற விரும்பும் மக்களுக்கும் அது பிழையான வாதம் என்று பதிய விரும்புகிறேன். "ஹ" எழுத்தின் ஒளிப்பு முறை தமிழ் அல்ல. எனவே "அல்லாஹ்"வை சரியான தமிழ் இலக்கணப்படி கூறுவதாக இருந்தால் "அல்லா" என்றே கூற முடியும்.  

இது போன்ற வேறு பல செய்திகளை பேராசிரியர் மா.சோவிக்டரின் "தமிழர் சமயம் இசுலாம்"  நூலிலிருந்து பெறலாம்.

சூரிய சந்திர நட்சத்திரங்களை வணங்குவதை தடுப்பது இஸ்லாம் மட்டுமல்ல 

அதாவது, அவர்கள் பொய் தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். - (உபாகமம் 17:3)

ஈரொளிய திங்களே யியங்கிநின்றது தப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிய படலமுங் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பத மேகநாத பாதமே. - (திருமந்திரம் 292)

பொருள்: மாதம் இருமுறை சந்திரன் ஒளியுடன் இயங்கி நின்றது அப்புறம். திங்களுக்கு ஒளி தரும் மூலமாக பேரொளி ஞாயிறு இருப்பதாய் எல்லோருக்கும் தெரியாது. அது போல அறிவு மயக்கம் எனும் இருளை (கார்) போக்கி ஒளி உண்டாகும் அத்தியாயத்தை (படலம்) கடந்த பிறகுஅந்த அறிவு மயக்கத்தை போக்கும் பேரொளியான வழியாகிய ஏக இறைவனின் பாதம் பணிவோம்.

குறிப்பு: ஏக இறைவனை பணிவதை இந்த பாடல் சொல்கிறது.

சந்திரன் ஒரு காலம் அளக்கும் கருவி


கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ நீச நிடமது தானே - [திருமந்திரம் 868]

அவனே பொழுது விடியச் செய்பவன்; அமைதிபெற அவனே இரவையும்; காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். - [திருக்குர்ஆன் 6:96]

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். அவைகளுக்கு பல நிலையங்களை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். - [திருக்குர்ஆன் 10:5]

பின்பு கடவுள், “பகலையும் இரவையும் தனித்தனியாகப் பிரிப்பதற்கு வானத்தில் ஒளிச்சுடர்கள் தெரியட்டும். பருவ காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறித்துக் காட்டுகிற அடையாளங்களாக அவை இருக்கட்டும் - [பைபிள் - ஆதியாகமம் 1:4]

சந்திரன் ஆண்டுகளை வடிவமைக்கிறது. - [Rig Veda]

முடிவுரை 

சூரியனும் சந்திரனும் இறைவனால் படைக்கப் பட்டவைகள், அவைகள் ஒளிதரவும், நாட்களை அளக்கவும் பயன்படும் சாதனங்களே தவிர வணங்க தகுதி படைத்தவைகள் அல்ல.

மேலுலகம் ஏழு

தமிழர் சமயம் 

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.  - (திருமந்திரம் பாடல் எண் : 24)

பொழிப்புரை முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.   (திருமந்திரம் பாடல் எண் : 5) 
 
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.  (திருமந்திரம் பாடல் 6) 
 
மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே. (திருமந்திரம் பாடல் எண் 5)
 
குறிப்புரை : நில அண்டப் பகுதி மூவேழாவன, கீழுலகம் ஏழு, நிலப்பரப்பின் தீவுகள் ஏழு, மேலுலகம் ஏழு 

இந்து மதம் 

மேல் லோகங்கள்:
  1. சத்ய லோகம் (பிரம்மலோகம்)
  2. தப-லோக
  3. ஜன-லோக
  4. மஹர்-லோகம்
  5. ஸ்வர்-லோக (ஸ்வர்க-லோக)
  6. புலவர்-லோகம்
  7. பூ-லோக

கீழ் லோகங்கள்  

  1. அதல-லோக
  2. விட்டல-லோக
  3. சுதல-லோக
  4. தலதாலா-லோக
  5. மஹாதல-லோக
  6. ரசதல-லோக
  7. பாதாள-லோக

கிறிஸ்தவம் 

புதிய ஏற்பாடு ஏழு வானங்கள் பற்றிய கருத்தை குறிப்பிடவில்லை. இருப்பினும், மூன்றாம் வானத்தைப் பற்றிய ஒரு வெளிப்படையான குறிப்பு கொரிந்தியர்களுக்கான இரண்டாவது நிருபத்தில் தோன்றுகிறது , இது கிபி 55 இல் மாசிடோனியாவில் எழுதப்பட்டது . இது பின்வரும் மாய அனுபவத்தை விவரிக்கிறது: 

2 கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும். —  (2 கொரிந்தியர் 12.2) 

 

யூத மதம் 

தாளமுத் பிரபஞ்சத்தின் மேல் பகுதி ஏழு வானங்களால் ஆனது என்று பரிந்துரைக்கப்படுகிறது ( ஹீப்ரு: ஷமாயிம் ) :

  1. விலோன் (திரை), - ( ஏசா 40:22 )
  2. ராக்கியா (வானம்), - ( ஆதி 1:17 )
  3. ஷெஹாகிம் (ஆகாயம்), - ( சங். 78:23 , மிடர். தெஹ். முதல் பிஎஸ். xix. 7)
  4. செபுல் , - ( ஏசா 63:15 , 1 கிங்ஸ் 8:13 )
  5. மாயோன் , - ( உபா 26:15 , சங் 42:9 )
  6. மச்சோன் (இன்ஸ்டிட்யூட்), - ( 1 கிங்ஸ் 8:39 , டியூட் 28:12 )
  7. அரபோத் (ערבות), ஓபனிம் , செராஃபிம் மற்றும் ஹையோத் மற்றும் கடவுளின் சிம்மாசனம் அமைந்துள்ள ஏழாவது ஹெவன் . 

இஸ்லாம் 

குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் ஏழு சமவாத் (سماوات) இருப்பதை அடிக்கடி குறிப்பிடுகின்றன , இது 'சொர்க்கம், வானம், வானக் கோளம்' என்று பொருள்படும் சம' (سماء) என்பதன் பன்மை, மற்றும் ஹீப்ரு ஷமாயிம் (שמים ) உடன் இணைகிறது.

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா ? 71: 15

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். 2:29

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 17 :44

அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு அடுக்குகளை கொண்ட வானத்தை திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை 23:17

ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக. 23:86

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும். 41 :12

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. 65:12

உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம் 78:12 

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு பிர்தௌஸ் எனும் சுவனச் சோலைகள் விருந்தாக (பேருபகாரமாக) உண்டு. அவர்கள் அதைவிட்டும் நகர்த்தப்படமாட்டார்கள். அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்கஹ்ப்: 107,108).

(முஹம்மதாகிய) அவர், அவரை (ஜிப்ரீலை மிஃராஜின்போது) ஸித்ரத்துல் முன்தஹாவில் நிச்சயமாகக் கண்டார். அந்த இடத்தில்தான் ஜன்னத்துல் மஃவா இருக்கின்றது. (அந்நஜ்ம். 13-15).

அவ்வேழு வானத்தில் இரண்டின் பெயர் குறிப்பிடப் பட்டுளள்து  

உலகம் எத்தனை நாளில் படைக்கப் பட்டது?

தமிழர் சமயம்

ஆறு விரிந்தனன் 
எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம், கடவுள் வாழ்த்து
 
பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து ஏழாவது வானம் சென்றான். 

உம்பர்: வானம்  

இஸ்லாம் 

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் (ஏழு வனத்திற்கு மேலுள்ள) அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - (திருக்குர்ஆன் 7:54)

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை (ஏழாவது வானத்தில் உள்ள) அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (குர்ஆன் 10:3)

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிகளிடத்தில் உங்களை உங்கள் குடும்பத்தினர் நபியவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள், என்னை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து நபியவர்களுக்கு திருமணம் செய்து வைத்தான் என்று ஆனந்தத்துடன் கூறக்கூடியவராக இருந்தார்கள் என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்: புஹாரி 7420).

கிறிஸ்தவம் 

(ஆறுநாட்களில்) பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது. தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார். - (ஆதியாகமம் 2:1-2
யூதம் 

 தேவன் தாம் உண்டாக்கியதையெல்லாம் பார்த்தார், இதோ, அது மிகவும் நன்றாக இருந்தது, மாலையும் விடியும் ஆனது, ஆறாம் நாள். இப்போது வானமும் பூமியும் முழுமையடைந்தன; தேவன் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் செய்து முடித்தார்; கடவுள் ஏழாம் நாளை ஆசீர்வதித்தார், அவர் அதை பரிசுத்தப்படுத்தினார், ஏனென்றால் அவர் கடவுள் உருவாக்கிய அனைத்து வேலைகளிலிருந்தும் விலகிவிட்டார். (ஆதியாகமம் 1:31 & 2:1-2)


தமிழர் தெய்வம் - சிவன் யார்?

தமிழர் பண்பாட்டில் தொல்காப்பியம் முதல் அனைத்து மறைநூல்களும் கடவுள் என்னும் கருப்பொருளை பேசாமல் இருந்ததில்லை. தமிழுலகில் இறுதியில் வந்த சைவ சமயம், "சிவன்" என்கிற பெயரில் இறைவனை குறிப்பிட்டது. சைவ சமய மறைநூல்கள் கூறும் சிவன் யார்? இன்று நாம் கருதும் சிவன் யார்? என்று இந்த கட்டுரையில் பார்ப்போம். 

சிவன் என்று கருதும் பொழுது, அவன் 
  • பார்வதியின் கணவன் 
  • முருகன் & கணேசனின் அப்பன் 
  • பிரம்மா, விஷ்ணுவின் உறவினன் 
  • சுடுகாட்டில் நடனமாடுபவன் - ஆதி பறையன் 
  • கறுப்பானவன், நீலமானவன் 
  • ஆதி யோகி
  • சித்தர் அல்லது தீர்க்கதரிசி 
  • ஆஜானுபாகுவான உருவம் கொண்டவன் 
  • லிங்கம் அவனது  குறியீடு 
  • அவன் அழிக்கும் வேலையை மட்டும் செய்பவன் 

போன்ற ஆதாரமற்ற பல கருத்துருவாக்கங்கள் திருமந்திர உரைகள், புராணங்கள், சிலைகள், நாவல்கள், நாடகங்கள் திரைப்படங்கள், இசைப் பாடல்கள் போன்ற ஊடகங்கள் மூலம் நமது அறிவில் திணிக்கப்பட்டுள்ளது 

ஆனால் கடவுளை பற்றி கடவுளே சொன்ன நூல்கள் மறைநூல்கள் ஆகும், அதில் ஒன்றான திருமந்திரம், சிவனின் வரைவிலக்கணமாக கூறுவது,
  • சிவன் தனித்தவன் - ஈடு இணையற்றவன் 
  • மனிதனல்ல, ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல 
  • யாரும் படைக்காமல், உருவாக்காமல், பெற்றெடுக்காமல், தானாய் உள்ளவன்  
  • அநாதி - மனைவி மக்கள் உறவினர் கிடையாது 
  • தனக்கே உரிய உருவுடன் வானத்தில் உள்ளான் 
  • உலகில் யாரும் கண்டதில்லை, அவனை கற்பனை செய்யவும் வரையறுக்கவும் முடியாது 
  • லிங்கத்திலும் கோயிலிலும் இல்லை 
  • அடியார்களின் உள்ளத்தில் குடிகொண்டுள்ளான்  
  • ஆதியும் அந்தமும் அற்றவன், படைப்புகளின் ஆதியும் அந்தமுமாய் இருப்பவன் 
  • பிறப்புமில்லை இறப்புமில்லை 
  • அவனே படைத்தவன், காப்பவன், அழிப்பவன் (முத்தொழில் செய்வோன்)

சிவன் ஒருவனே கடவுள்  


ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)

சிவன் ஈடு இணையற்றவன்

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)

அவன் தானாக தோன்றியவன்


ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1) 
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி - (திருமந்திரம் - 126)

பொருள்: அவன் தானாக உருவான ஒருவன்

ஆதியும் அந்தமும் 

ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

 பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை  

அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் - (திருமந்திரம் - 1927)

பொருள்: படைப்புகளின் தொடக்கமும் முடிவுமானவன்

சிவன் சொர்கத்தில் உள்ளான்


ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1) 
 
பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான். 

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது 

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ 
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915) 
 
பொருள்: கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது. உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன். 

பதவுரைபுரை - ஒத்திரு, போன்றிரு; திரை - அலை; புரி - மிகுந்திரு; சடை - படர்ந்த, விரிந்த; 

குறிப்பு: உரையே செய்ய முடியாத பொழுது வரைந்தும் செதுக்கியும் சிவனுக்கு உருவம் கொடுத்தவரின் நிலையை சிந்தித்தால் பரிதாபமாக உள்ளது. அதைவிட பரிதாபத்துக்கு உரியவர்கள் சிவனை புராணக் கதைகளில் திணித்து அவனுக்கு சற்றும் பொருத்தமில்லாத கதாபாத்திரத்தையும் குணங்களையும் கற்பனை செய்ததுடன் அதுதான் உண்மை சிவன் என்று மக்கள் மத்தியில் நிலைபெறச் செய்தவர்கள். 

சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.

குறிப்பு: ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்பதே அவன் தாய் தந்தை, மனைவி, மக்களை பெறாதவன் என்பதற்கு போதுமானதல்லவா?

சிவனே முத்தொழிலையும் செய்பவன்

நின்றனன் மூன்றினுள் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)

பொருள்: நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு இறைவன் ஏற்பாடு அல்ல.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

பொழிப்புரை : உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே.

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
 - சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற 
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள் - ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்   
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று - நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று 
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே 

பதவுரை: சோதித்த பேரொளி - படைத்து காத்து அழித்து சோதிக்கும் பேரொளியான தெய்வம்; கண் - அருள், பெருமை, ஆதர்கள் - அறிவில்லாதவர்கள்; பேதி - பிரி;  

பொழிப்புரை: சோதித்த பேரொளி மூன்று ஐந்து என கூறும் அறிவில்லாதவர்கள் ஆதி நாதன் அருளை அறிவதில்லை, நீதி செய்பவன் சிவன், பெருமாள், பிரம்மன் என்று பிரித்து உளறிக் கொண்டு உள்ளனர்.  

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14) 

குறிப்பு: சிவன் அழிக்கும் தெய்வம், பிரம்மன் படைக்கும் தெய்வம், விஷ்ணு காக்கும் தெய்வம் என்ற முக்கடவுள் கொள்கையை இப்பாடல்கள் மறுக்கிறது. முத்தொழிலையும் செய்யும் அறிவும் ஆற்றலும் ஒரே தெய்வத்துக்கு உள்ளது. 

சிவன் லிங்கத்தில் இல்லை 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் 
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் 
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. 
- (திருமந்திரம் - 7ம் தந்திரம் - 11 சிவபூசை 1)

பதவுரை 
உள்ளம் - மனம், எண்ணம், இதயம் 
பெரும் கோவில் - பெரிய + கோ + இல்லம் = மிகப் பெரிய "இறைவனின் இல்லம்"
ஊனுடம்பு - சதை நிறைந்த உடல் 
ஆலயம் -  தங்குமிடம்,  நகரம் (பிங்.) 
வள்ளல் -  வண்-மை, திறம்  
பிரானார்க்கு - தலைவர்க்கு 
வாய் கோபுரவாசல் - ஆலயத்துக்குள் செல்ல வகை செய்யும் கோபுர வாசல், அது போல உள்ளத்தில் உள்ளன வாய் வாசல் சொல்லும்  
தெள்ளத் தெளிந்தார்க்கு - ஞானம் பெற்றோர்க்கு - தெள்ளிய அறிவுடையவர்க்கு 
சீவன் - உயிர் (பிங்.), ஆத்மா 
சிவஇலிங்கம் -  மக்கள் கூறும் சிவலிங்கம் (அது உயிரில் உள்ளது, கல்லில் இல்லை) - லிங்கம் என்பதன் பொருள் "அடையாளக் குறி" (பிங்.) 
கள்ளப் புலனைந்தும் கள்ளத்தனம் செய்ய பயன்படும் அதே ஐந்து புலன்கள்
காளா - காளம் என்றால் இருட்டு, காளா என்றால் இருட்டு இல்லாத
மணிவிளக்கே -  மணி+விளக்கு - மணி (முத்து,பவளம் உள்ளிட்ட ஒளிதரும் மணிகள்) ஒளியுடையதாயினும் சூரியன் முதலிய பிறிதொரு ஒளிப்பொருளின் முன்பே ஒளிதரும் மேலும் இந்த மணிகள் அழியாமல் நீடித்து நிற்க கூடியவை. விளக்கோ இருளைப் போக்க கூடியது.  

பொருள்: ஆலயம் என்பது இதுவரை நீங்கள் வெறும் சதை என்று எண்ணியிருந்த உடம்பு ஆகும். உள்ளமே கருவறை எனப்படும் கோயில். ஆலயத்தில் உள்ளன அறிய கோபுர வாசல் வழி செல்லுதல் வேண்டும் அது வாய் எனும் வாசல் ஆகும். இறைவனின் அடையாளக் குறி எது என்றால் உங்கள் ஆத்மா தான், லிங்கம் இல்லை. தீமை செய்ய தூண்டும் அதே ஐந்து புலன்கள்தான் (வாய், கண், மெய், செவி, மூக்கு) இருள் போக்கும் அழியா ஒளிதரும் விளக்கு.  

குறிப்பு: கற்சிலையோ லிங்கமோ சிவன் அல்ல என்று ஆணித்தரமாக கூறிய இந்த பாடலை ஆலையம் கட்டும் முறையாக திரித்து எழுதி இருப்பது அறிவீனம் அல்லது நயவஞ்சகம்.  

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல் பாடல் ஆகுமோ? - (சிவவாக்கியம் 35)


சிவனின் மறுபெயர் அரி


அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - (சிவவாக்கியம் 224)

பொழிப்புரை தானாக அறியுமாகி சிவனுமாகி இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்கி அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே அல்லவா?. ஒன்றை இரண்டாக்கி விரித்து வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! அறிவோடு பாருங்கள் இங்கும், அங்கும், எங்குமே தெய்வம் ஒன்றே! 
 

அரியும் சிவனும் ஒன்னுதான், ஆனால் படத்தில் உள்ள இந்த சிவனும் அரியும் கடவுள் இல்லை. இவைகள் மேற்சொன்ன வரையறைகளுக்கு முரணான மனிதனின் கற்பனை கதாப்பாத்திரங்கள். 

சிவனுக்கு மனைவி, மக்கள் உண்டா?  

சிவன் என்பவன் சக்தி என்கிற மனைவியோடு இருப்பவன் என்கிற கருத்தை "சத்தி" என்கிற வார்த்தை பிரயோகத்தை கொண்டு இவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் சத்தி என்பதன் பொருளாக திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332)

பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரைசத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி; 

குறிப்பு: சிவனின் மனைவி சக்தியை பெற ஒருசில சமயத்தை சேர்ந்தவர்கள் மதுபானம் குடித்தார்கள் என்பது எவ்வாறு பொருளுடையதாகும். எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ பெண்ணோ தெய்வமோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். மட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், அவனால் ஏற்படுத்தப்படாத சமயத்தை (சிவன் சொல்லாத பொருளில் கையாண்டால் அது சிவ சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம். 

மேலும் சிவனின் பாலின வரையறையும் சத்தி என்ற சொல்லின் வரையறையும் அவனுக்கு பிள்ளைகள் இல்லை என்று கூறுவதை நாம் உணரவேண்டும். 

முடிவுரை   

மறைநூல்கள் மாறலாம், கடவுளின் பெயர் மாறலாம், ஆனால் கடவுளின் இலக்கணம் மாறாது. கடவுள், சொர்க நரகம் போன்ற மனித புலன்களுக்கு எட்டாத தகவல்களை நம் கடவுளிடமிருந்தே பெறவேண்டும். நாமாக கற்பனை செய்ய முடியாது.  சிவனின் இலக்கணமாக தமிழர் சமய மறைநூல் திருமந்திரம் கூறுவது இதுதான். இந்த வரையறையை தாண்டி நாம் கற்பனை செய்யும் உருவம் சிவனாக இருக்க முடியாது என்று திருமந்திரம் கூறுகிறது. 
 
மேலும் "அரியும் சிவனும் ஒன்னு" என்ற வாசகத்தை மக்கள் எப்படி புரிகிறார்கள் என்று தெரிய வில்லை. ஒருவேளை ஒன்னுக்குள்ள ஒன்னு, அல்லது உறவினர்கள் என்கிற அமைப்பில் புரிகிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இதன் பொருள் சிவனும் அரியும் ஒருவனையே குறிக்கிறது என்பதாகும். இதை புரிந்தால் நான் உங்களுக்கு தைரியமாக அதைவிட கனமான உண்மையைச் சொல்லுகிறேன். அரியும், சிவனும், அல்லாஹ்வும், கர்த்தரும் ஒருவரையே குறிக்கிறது. அப்பெயர்களும், அதன் மறைநூல்களும், அதன் சமயங்களும், அவற்றின் அடியார்களும் பிரிந்து பிளந்து இருக்கும் காரணத்தை கற்று தெளிவதுதான் கல்வி என்று நம்புகிறேன். 

வேத வியாசர் என்ற தனி நபரால் சிவ புராணம், விஷ்ணு புராணம் உட்பட 18 புராணங்கள் எழுதப் பட்டுள்ளது. இந்த புராணங்கள் முழுவதும் கற்பனையாக எழுத முடியாது, அப்படி எழுதினால் அது சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே இவைகளின் மூலத்தை ஆய்வு செய்தால், திருமந்திரம் உட்பட பல நூல்களுக்கான பொருள்களை திரித்து எழுதியதாக உள்ளது. பின்னாளில் இந்த புராணங்களை மெய்ப்படுத்த அந்த நூல்களில் இடைச் சொறுகளும் செய்யப்பட்டுள்ளது. பிறகு மறை நூல்களுக்கு இந்த பொய் புராணத்தை கொண்டு விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது.

திருமந்திரத்தை வாசித்து புரிந்துகொள்வதாக இருந்தால், புராணங்களை கொண்டுபுரிந்து கொள்ள முயல்வதை விடுத்து, உலகில் உள்ள நான்மறைகளில் உள்ள பொருளோடு இணைத்து இதை வாசித்தால் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். இது எனது வழிமுறை அல்ல, மாறாக தொல்காப்பியம் கூறும் முதல்நூல் வழிநூல் வழிமுறை, திருமந்திரம் கூறும் குரு பாரம்பரியம் கூறும் வழிமுறை ஆகும்.

உதாரணமாக, திருமந்திரத்தின் அனைத்து பாடல்களையும் திருமூலரின் கோணத்திலேயே வாசித்தல் கூடாது. சிலபாடல்களை சிவனின் கோணத்திலிருந்து வாசித்தல் வேண்டும், சில நேரங்களில் நந்தியின் கோணத்திலிருந்து வாசித்தல் வேண்டும். ஏனென்றால் திருமந்திரம் என்பது சிவன் நந்திக்கு உபதேசித்து, நந்தி திருமூலருக்கு உபதேசித்து, திருமூலர் மக்களுக்கு உபதேசித்தது. இந்த அமைப்பில் தான் உலக வேதங்கள் அனைத்தும் அமைந்து உள்ளது. 

தெய்வம்: அரி, சிவன், கர்த்தர், அல்லாஹ்
வானவர்: நந்தி, கேபிரியேல், ஜிபிரியேல்
நாதர்: திருமூலர், இயேசு, மோசஸ், முகமது

சிவனும் அல்லாஹ்வும் ஒருவனா? முரனென்று கருத வேண்டியதில்லை.

காரணங்கள்:

1)  தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி – (திருவாசகம் 170) : "என் நாட்டவர்க்கும் இறைவன்" என்பதில் அரபு தேசம் விடுபடுவதில்லை.

2) மட்டுமல்லாமல், மேலே பட்டியலிட்ட பண்புகளோடு உள்ள ஒருவனைத்தான் அரேபியர்கள் அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். (இன்று அறியப்படும் உருவமும் லிங்க குறியிடும் சிவனை குறிப்பவைகள் அல்ல என்று மேலே நிறுவப்பட்டுள்ளது)

 மேலும் ஆழமான ஆய்வுக்கு வாசிக்க வாய்மை