இறைவனை நோக்கி முதலில் நாம் செல்லவேண்டும்.

தமிழர் சமயம் 


வருந்தி அழைத்தால் வருவான் 
 
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்கள்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே (திருமந்திரம் 30
 
விளக்கம் வானத்திலிருந்து பெய்யும் மழை வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் பொதுவாக பெய்கிறது. அதுபோல இறைவனின் அருள் வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் இறையருள் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு இறைவனை நாடிச் செல்ல சிலர் தயங்குவார்கள். ஆனால் எவ்வாறு கன்று தன் பசியை பசுவை நோக்கிக் கதறித் தெரிவிக்கின்றதோ அதுபோலவே எனக்கு வழிகாட்டும் குருவான நந்தி தேவரை நான் அழைப்பது அந்த இறைவனைப் பற்றிய ஞானம் பெறக் கருதியே. 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (குறள் - 10)

மணக்குடவர் உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார். பிரவிப் பெருங்கடலை நீந்தும் முயற்சி முதலில் நம்முடையதாக இருக்க வேண்டும், அதன் விளைவு இறைவனை அடைவதாம். 

இஸ்லாம் 

 ''என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் தனக்குள் என்னை நினைவு கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி). நூல் : (புகாரி 7405)

கிறிஸ்தவம் 

 கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” - (யாக்கோபு 4:8)

5 கருத்துகள்:

  1. அவர்கள் தங்களுடைய மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் 16:50)

    பதிலளிநீக்கு
  2. வருந்தி அழைத்தால் வருவான் - பிழையான விளக்கங்கள்

    வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
    தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்கள்
    ஆன்நின்று அழைக்கும் அதுபோல்என் நந்தியை
    நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே (திருமந்திரம் 30)

    வானத்திலிருந்து பெய்யும் மழை வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் பொதுவாக பெய்கிறது. அதுபோல இறைவனின் அருள் வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் இறையருள் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு இறைவனை நாடிச் செல்ல சிலர் தயங்குவார்கள் எவ்வாறு கன்று தன் பசியை தாய்ப்பசுவை நோக்கிக் கதறித் தெரிவிக்கின்றதோ அதுபோலவே குருவான எம்பெருமான் சதாசிவமூர்த்தியை நான் வேண்டி அழைப்பது எமது ஞானப் பசியை அவர் தீர்க்கவேண்டும் என்கிற வேண்டுதலால்தான்.
    https://kvnthirumoolar.com/song-30/

    வறண்ட நிலத்துக்கு வான் மழை அவசியம். அதை வாவென்று அழைத்தால் வாராது. மழை பொழிய மேகம் கருக்க வேண்டும். இறையருளும் அப்படித்தான். ஆண்டவன் தானே வலிய வந்து அருள் புரிவான் என்று நம்பி இருப்பார், அவன் அருளைப் பெற முயலுவதில் தயக்கம் காட்டுவர். ஆண்டவன் தானே வலிய வந்தும் அருள் செய்வான்.எப்போது? யார் யாருக்கெல்லாம்? பசிக்கும் பால் வேண்டிக் கன்று தாய்ப்பசுவை அம்மா என்று அழைக்குமே, அது போலப் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆண்டவன் அருளைப் பெற அவனை நாடினால் - அவனும் அப்படிப்பட்டவர்க்கு வலிய வந்து உதவுவான். நானும் என் இறைவனை இந்தப் பரிபக்குவ ஞானம் பெறவே, "வா... வந்தருள் செய்!" என்று வருந்தி அழைக்கிறேன். ஆன்- பசு. நந்தி - சிவப் பரம்பொருள்
    https://santhosam-upf.blogspot.com/2012/03/

    வானத்திலிருந்து தானே மழை பெய்வது போல இறைவனும் தானே வந்து அருள் செய்யட்டும் என்று தயங்கி சிலர் அழைக்க மாட்டார். கன்று தன் தாய்ப் பசுவை அழைப்பது போல் நான் என் சிவபெருமானை அழைக்கிறேன், ஞானம் பெறுவதற்காகவே.
    https://vidyaarthini.com/2019/12/18/thirumanthira-gnanam/


    பதிலளிநீக்கு
  3. நீதிமொழிகள் 14:2
    சரியான வழியில் வாழ்கிறவர்கள் கர்த்தரை மதிக்கிறார்கள். ஆனால் நேர்மையாக இல்லாதவன் கர்த்தரை வெறுக்கிறான்.

    பதிலளிநீக்கு
  4. பாடல் எண் : 12
    நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
    சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
    தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
    கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே .



    இப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க

    மூடுக | திறக்க
    பொழிப்புரை:
    சிவபெருமான், தன்னை நினைத்தால், நினைப்பவரைத் தானும் நினைப்பான். (நினைத்து, அவரை மேன்மேல் உயரச் செய்வான்) அதனால், சுனைக்குள்ளே மலர்ந்த ஒரு தாமரை மலரின்மேல் எழுகின்ற சோதிபோல இருதய கமலத்திலே ஒளிவடிவாய் விளங்கும் அப்பெருமானை `அடைதல்` என்பது மனத்தால் அடைதலேயாதலின் அவ்வாறு அவனை முதிர்ந்த அன்பால் அடைந்தவர், உலகியலில் எத்துணைச் சிறுமையராய் இருப்பினும், உயர்ந்தோரினும் உயர்ந்தோரேயாவர்.

    http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10902&padhi=%20&startLimit=12&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

    பதிலளிநீக்கு
  5. யாக்கோபு 4:8 தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    9 சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள்.

    10 தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81+4%3A1-10&version=ERV-TA

    பதிலளிநீக்கு