உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்தமாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்சாந்துணையும் சஞ்சலமே தான் - நல்வழிவெண்பா : 28
விளக்கம் நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.இஸ்லாம்
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புஹாரி: 6446
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார். - நூல்: முஸ்லிம் 1903
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். (1 தீமொ 6:6)
உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள். (லூக் 3:14)
நீங்கள் பண ஆசை இல்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. (எபி 13 : 5).
1 தீமோத்தேயு 6:6-12
பதிலளிநீக்குTamil Bible: Easy-to-Read Version
6 தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும், என்பது உண்மை. 7 நாம் இந்த உலகத்துக்கு வரும்போது எதையும் நம்மோடு கொண்டு வரவில்லை. நாம் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை. 8 எனவே, நம்மிடம் உள்ள உணவு, ஆடை ஆகியவற்றோடு திருப்தி அடையவேண்டும். 9 மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும். 10 பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும் மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள்.
எபிரேயர் 13:5: "உங்கள் வாழ்க்கையை பண ஆசையிலிருந்து விடுவித்து, உங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியாயிருங்கள், ஏனென்றால், "நான் உன்னை ஒருபோதும் கைவிடுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
பதிலளிநீக்கு