முத்தொழில் செய்வோன் - படைத்தல் காத்தல் அழித்தல்

தமிழர் சமயம் 

சிவனே முத்தொழிலையும் செய்பவன் - அழிப்பவன் மட்டுமல்ல

நின்றனன் மூன்றினுள் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)

பொருள்: நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு இறைவன் ஏற்பாடு அல்ல.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

பொழிப்புரை : உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே.

இஸ்லாம்  

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான் - (அல்குர்ஆன் 39:62) 

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள் - (அல்குர்ஆன் 35:3) 
 
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; உங்களை மீண்டும் உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். 
(அல்குர்ஆன் 2:28)

வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை  (குர்ஆன் 9:116)

கிறிஸ்தவம் / யூதம் 

தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். அவர் அன்றைக்குத் தமது படைப்பு வேலைகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டதால் அந்த நாள் சிறப்புக்குரியதாயிற்று. - ஆதியாகமம் 2:3

 25 ,“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது. (மத்தேயு 6)

அழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் நெருங்கிவிட்டது. அது சர்வவல்லவரிடமிருந்து அழிவாக வரும்.  (ஏசாயா 13:6)

முடிவுரை  

படைக்கவும், காக்கவும், அழிக்கவும் வெவேறு கடவுள்கள் அல்ல. அனைத்தையும் செய்ய இருக்கும் ஒரே இறைவன் சக்திபெற்றவன்.   

5 கருத்துகள்:

  1. 39:38. வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”

    பதிலளிநீக்கு
  2. 40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.

    பதிலளிநீக்கு
  3. பண்டாய நான்மறை = பண்டு + ஆய + நான் + மறை
    பண்டு = பழமை
    ஆய = ஆயம் = ரகசியம்
    நான் = நான்கு
    மறை = மறை நூல்
    பழமை உடைய இரகசியமான நான்கு மறைகள் என்பது சம்ஸ்கிருத நூல்கள் அல்ல.

    அதர்வண வேதம் பின்னாளில் சேர்க்கப்பட்டது - எனவே அது பண்டாய நான்மறையில் வர வாய்ப்பில்லை!
    நான்மறை என்பது உலகில் உள்ள அனைத்து வேதங்களியும் குறிக்கும்.

    பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
    கண்டாரு மில்லைக் கடையேனைத் தொண்டாகக்
    கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
    உண்டாமோ கைம்மா றுரை.

    பொழிப்புரை :
    நெஞ்சே! பழமையாகிய நான்கு வேதங்களும் பக்கத்தில் அணுகமாட்டா; திருமால் பிரமன் என்போரும் கண்டறி யார்; அப்படிப்பட்ட கோகழி எம்கோமான் கடையேனைத் தொண்டு கொண்டதற்கு நாம் செய்யும் கைம்மாறு உளதோ?

    குறிப்புரை :
    பண்டையதாய பொருளை, `பண்டு` என்றார், `அவன் பால் அணுகா` எனவும், `அவனைக் கண்டார் இல்லை` எனவும், செய்யுட்கண் முன்வரற்பாலனவாய சுட்டுப் பெயர்கள் வருவிக்க. ``கண்டாரும்`` என்ற உம்மை, இழிவு சிறப்பு. ``இல்லை`` என்றதன் பின், `அங்ஙனமாக` என்பது வருவிக்க.

    https://www.facebook.com/permalink.php?story_fbid=1197195423624814&id=621228547888174&locale=hi_IN

    பதிலளிநீக்கு
  4. முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38

    கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல். நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’

    பதிலளிநீக்கு
  5. முக்கோல் பகவர் என்பவர்கள் ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள். கலித்தொகை 126

    முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38

    கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல். நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.

    பதிலளிநீக்கு