தமிழர் சமயம்
வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம் - (உலக நீதி 12)
பொருள்: வீறு ஆன - பெருமையுடையனவாகிய, தெய்வத்தை - தெய்வத்தை இகழவேண்டாம் - இகழாதே.
இஸ்லாம்
“அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.” (குர்ஆன் 6:108)
தேவனைக் கேலிச்செய்பவர்கள் ஞானத்தைத் தேடலாம். ஆனால் அவர்கள் அதனைக் கண்டடையமாட்டார்கள். தேவனை நம்புகிறவர்கள் உண்மையான ஞானமுடையவர்கள். அவர்களுக்கு அறிவு எளிதாக வரும். - நீதிமொழிகள் 14:6
பதிலளிநீக்குhttps://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2014&version=ERV-TA
நீதிமொழிகள் 2111 தேவனைக் கேலிச் செய்கிறவனைத் தண்டித்துவிடு.
பதிலளிநீக்கு4826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
பதிலளிநீக்குவல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான் ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான்
அவன் காலத்தை ஏசுகிறான் நானே காலம் (படைத்தவன்)
என் கையிலேயே அதிகாரம் உள்ளது
நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நூல் ஸஹீஹ் புகாரி
3193. ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
பதிலளிநீக்குஉயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்:
ஆதமின் மகன் என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ‘நான் அவனை ஆரம்பமாகப் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டு வர முடியாது’ என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
https://athayionlineuniversity.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-59-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/
21. சிவநிந்தை
பதிலளிநீக்கு509. தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வாரம ராபதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையிற் கீழது வாகுமே.1
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவு உறார் அமரா பதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழின்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே
(ப. இ.) திருவடி யுணர்வுடையார் நல் உள்ளத்தினுள்ளே சிறந்து விளங்கும் சிவபெருமானை விண்ணவர் முதலியோர் தொழுது அவன் திருவருளைப் பெறுவர். எளியனென் ...வாகுமே - திருவடியுணர்விலாக் கீழோர் சிவபெருமானை மூவரொடும் ஒருவனாக எளிமையாக எண்ணிப் புறக்கணிக்கின்றனர். அதனால் அவர்கள் பிறவித்துன்பத்தில் உழல்கின்றனர். அவர்கள் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோலாகின்றது.
(அ. சி.) கீழது - கிழிபட்டது.
https://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=230