உணவளிப்பவன்

தமிழர் சமயம் 

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

பொழிப்புரை : உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே

கிறிஸ்தவம்

25 ,“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.

28 ,“உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.

31 ,“‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு

இஸ்லாம்

 “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேழும். உடனே அவர்கள் “அல்லாஹ்” எனப் பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக (அல்குர்ஆன்: 10:31)

 பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவைப் பெறும் வழியைக் காட்டித் தருவது அல்லாஹுவின் பொறுப்பாகவே உள்ளது. அதன் உறைவிடத்தையும் அதுபோய் சேருகின்ற இடத்தையும் அவன் (அல்லாஹுவே) அறிவான். எல்லாம் தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) உள்ளன. (அல்குர்ஆன்:11:06)

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் மீது (நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று) நம்பிக்கை வைக்க வேண்டிய விதத்தில் (பரிபூரணமாக) நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு இறைவன் உணவளிப்பது போன்று நீங்கள் உணவளிக்கப்படுவீர்கள்! பறவைகள் காலையில் வயிறு காலியாக (கூட்டை விட்டு) இரையைத் தேடி வெளியே செல்கின்றன. மாலையில் வயிறு நிரம்ப (கூட்டை) வந்தடைகின்றன. அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) - (நூல் : திர்மிதீ)

6 கருத்துகள்:

  1. 11:6. இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. யோபு 38:41
    41 காக்கை குஞ்சுகள் கடவுளிடம் கூக்குரலிடும்போதும், உணவின்றி அலைந்து திரிந்தாலும் அதற்கு உணவு கொடுப்பது யார்?

    பதிலளிநீக்கு
  3. லூக்கா 12:24
    24 காகங்களைக் கவனியுங்கள்: அவை விதைப்பதுமில்லை, அறுவடை செய்வதுமில்லை, அவைகளுக்குக் களஞ்சியமோ களஞ்சியமோ இல்லை; இன்னும் கடவுள் அவர்களுக்கு உணவளிக்கிறார். பறவைகளை விட நீங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள்!

    பதிலளிநீக்கு
  4. ஆதியாகமம் 9:3
    3 வாழும் மற்றும் நகரும் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கும். நான் உங்களுக்கு பச்சை செடிகளை கொடுத்தது போல், இப்போது உங்களுக்கு அனைத்தையும் தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. மத்தேயு 6:31-32
    31 அதனால், 'என்ன சாப்பிடுவோம்?' அல்லது 'நாம் என்ன குடிப்போம்?' அல்லது 'நாம் என்ன அணிவோம்?'
    32 ஏனென்றால், புறமதத்தவர்கள் இவற்றையெல்லாம் தேடி ஓடுகிறார்கள், உங்களுக்கு அவை தேவை என்பதை உங்கள் பரலோகத் தந்தை அறிந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  6. 67:21. அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.) மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர்.

    பதிலளிநீக்கு