இந்த காலத்தில் வட்டிக்கு விடுவதும், வாங்குவதும் பாவம் என்றால் இந்த உலகமே இயங்குமா?

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். எனவே நம்மை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கும் வட்டியை நம்மால் விட இயலவில்லை என்பது நமக்கு மனமில்லை என்பதையே காட்டுகிறது. இதை தெளிவாக புரிந்து கொள்ள வட்டியைப் பற்றி சில அடிப்படைகளை புரிந்துகொள்வோம்.

வட்டிக்கு பணம் எதற்காக வாங்க வேண்டும்?

  • மருத்துவ செலவுக்கு
  • படிப்பு செலவுக்கு
  • திருமண செலவுக்கு
  • ஒரு தொழில் தொடங்க
  • வீடு வாங்க

போன்ற நியாயமான காரணங்களுக்காக வாங்கப்படுகிறது.

இன்று EMI என்கிற பெயரில் சின்ன சின்ன பொருட்கள் வாங்க, கார் வாங்க, சுற்றுலா போக என அல்ப காரணங்களுக்காக வாங்கப் படுவதெல்லாம் அவரவர் சுய கட்டுப்பாடின்மையால் நிகழ்கிறது. எனவே அவைகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம்.

சமகால பொருளாதார கட்டமைப்பில் அனைத்துக்குமே மாற்று வழி உண்டு.

  • மருத்துவ செலவு - அரசு மருத்துவமனை, அரசின் காப்பீட்டுத்திட்டம்
  • கல்வி - அரசு பள்ளி, பல தொண்டு நிறுவனங்கள், தனிமனிதர்கள் என கல்விக்கு உதவுபர்கள் உண்டு.

கல்வியும், மருத்துவமும் 99 சதவிகிதம் இலவசமாக அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்து முடிக்க முடியும்.

  • திருமணம் - கோவிலில், பதிவு அலுவலகங்களில், வீட்டில் - ஆக மொத்தம் எளிமையாக நடத்தலாம். திருமணம் என்பது ஒரு இனிய வாழ்க்கை துவக்கத்திற்காக என்ற நிலை மாறி, சமூகத்தில் பெருமைக்காக, கௌரவத்துக்காக என்று மாற்றப்பட்டு விட்டது. பெருமைக்காக ஆடம்பர திருமணம் செய்வோர் வட்டியில் சிக்கி சீரழிய வேண்டியவர்களே.
  • தொழில் தொடங்க - அடிப்படையில் தொழில் தொடங்க சிறிய அளவில் முதலீடு தேவை என்றால் சிறிது காலம் வேலை செய்து சேமித்து அதில் தொடங்கவேண்டும். பெரிய அளவு என்றால், நமது சேமிப்புடன் முதலீட்டாளர்களை அல்லது பங்குதாரர்களை தேடவேண்டும்.
  • வீடு வாங்க - வீட்டின் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அறிந்தால் நாம் வீட்டிற்க்காக EMI வாங்குவதை நிறுத்திவிடுவவோம். Demand தான் இடத்தின் விலையை நிர்ணயிக்கிறது. Demand எப்படி உருவாகிறது, வாங்கும் மக்களின் எண்ணக்கை கூடியதால். வாங்கும் மக்களின் எண்ணிக்கை எப்படி கூடியது? எல்லோரிடமும் பணம் உள்ளதா? இல்லை. பிறகு எப்படி வாங்குகிறார்கள்? EMI வசதி இருப்பதால். இப்போ சொல்லுங்க ஒரு வீடு வாங்க கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? கடன் வாங்கியாவது வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணத்தாலும் EMI பழக்கத்தாலும் வந்தது.

எனவே சமகால பொருளாதார கட்டமைப்பில் நிச்சயம் நாம் வட்டி இல்லாமல் வாழ முடியும். அதற்கு நீங்க அடிப்படையில் சில நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் மேலும் சில கெட்ட பண்புகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நமது பண்புகள்தான் நாம் செயல்பட காரணமாக உள்ளது. வட்டி செயல்பாட்டின் 

தவிர்க்க வேண்டிய கெட்ட பண்புகள்

  • பெருமை
  • பொறாமை
  • பேராசை
  • தேவையை பெருக்கி கொள்ளுதல் & தேவையற்ற செலவு

வளர்க்க வேண்டிய நல்ல பண்புகள்

  • பொறுமை
  • கருணை
  • தானம்
  • அறக் கல்வி & ஆன்மிகம்

இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததை போல தோன்றலாம் ஆனால் இவைகள் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தவைகள்.

  • பெருமை - அவனைவிட நான் சற்றும் குறைந்தவனல்ல - அவன் அப்படி grand ஆ செய்தான் நான் இன்னும் அதைவிட ஆடம்பரமான செய்யணும் என்கிற எண்ணம் பெருமையின் விளைவு.
  • பொறாமை - இது நமது உள்ளதை சிதைத்து நம்மை இன்னும் கீழ் நிலைக்கு செல்லும் என்பது அடிப்படை. பொறாமை யின் விளைவை குறள் முதல் குர்ஆன் வரை பேசுகிறது. அது எதார்த்தத்தில் நிகழ்கிறது.
  • பேராசை - பேராசை படவேண்டும் என்று இன்று பல influencers, சினிமா, பேச்சாளர்கள் பேசுகிறார்கள். வானமளவு ஆசைப்படு அப்பொழுதுதான் பட்டத்தின் அளவாவது அடைய முடியும் என்பதெல்லாம் அவர்களின் தத்துவம். இது இலக்குத் தெளிவில்லாதவர்களின் கருத்து. தனது தேவை என்ன? தனது ஆற்றல் என்ன? அதை அடையும் அற வழி என்ன என்பதை அறியாத மூடர்களின் கருத்து. இலக்கை பெரிதாக வைத்து அதை அடைய என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதன் விளைவை யோசித்து பாருங்கள். நிகழ்கால உதாரணமாக அதானி அம்பானியை எடுத்து கொள்ளுங்கள்.
  • தேவையை பெருக்கி கொள்ளுதல் & தேவையற்ற செலவு - ஒரு ஜோடி அலல்து இரண்டு ஜோடி செருப்புக்கு 10 அல்லது 20 ஜோடி செருப்பு வைத்து இருப்பது எப்படிப்பட்ட தேவை. 300 முதல் 1000 ருபாய் வரை செலவு செய்து இருக்க வேண்டிய இடத்தில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செருப்புக்கு செலவு செய்யும் மக்கள் இன்று அதிகம். இது தேவையற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
  • பொறுமை - இந்த பண்பை வளர்த்து கொண்டால் வட்டியை தவிர்க்கும் வழியை தேடி அதை அடைய ஏற்படும் முயற்சியில் ஏற்படும் முயற்சியில் வரும் இடர்களை பொறுத்துக்கொண்டு இலக்கை அடையலாம்.
  • கருணை - கருணையை வளர்த்துக்கொண்டால் வட்டி எப்படி சமுதாயத்தை அழிக்கிறது என்கிற அடிப்படை புரிதல் வட்டி வாங்கவோ கொடுக்கவோ அனுமதிக்காது.
  • தானம் - செல்வம் கிடைக்கும் போதே தானம் செய்யவேண்டும் என்று குறள், மந்திரம், நாலடியார் உட்பட பல தமிழ் மறைகள் கூறுகிறது. அவ்வாறே பைபிள் மற்றும் குர்ஆன் உட்பட பல சமய நூல்கள் கூறுகிறது. அதிலும் இஸ்லாம் 2.5% ஏழை வரி (ஜக்காத்து) என்ற கட்டாய வரியை விதித்து உள்ளது. சமீபத்தில் உலகில் உள்ள 3000 பில்லினியர்கள் 2% வரி செலுத்தினாலே உலகம் ஏழ்மையிலிருந்தும் வறுமையிலிருந்து நீங்கிவிடும் என்று சில நாடுகள் (காணொளியில்) கூறி வருகின்றன. எனவே தானம் பெருக பெருக வட்டி அற்றுப்போகும். 


  • அறக்கல்வி & ஆன்மிகம் - மேற் சொன்ன அடிப்படைகள் எல்லாம் எந்த பொருளாதார நூல்களிலும் கிடையாது. இவைகள் பற்றிய ஆழமான புரிதல் ஏற்பட உண்மையான கல்வியான அறநூல்களையும் சமய நூல்களையும் கற்க வேண்டும்.
சரி சமய நூல்கள் வட்டியை தடுத்தும் வட்டியின் அடிப்படையில் உலகம் இயங்கும் முறையினை யார் ஏற்படுத்தியது?

யூதர்களின் வட்டி திட்டம்


மேலும் வாசிக்க

  1. வட்டி
  2. ஏன் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் கந்துவட்டி கொடுமை இல்லை?
இறுதியாக, வட்டியால் உலகம் இயங்கவில்லை, நமது தீய பண்புகளால் வட்டி இயங்குகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக