இறைவன் ஒருவனே என்பதை ஏற்றால் பாவம் மன்னிக்கப்படுமா? *

தமிழர் சமயம் 

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - ஞானக்குறள் 124. 
 
கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவர் முன்பு செய்த ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் கூலியை விதிப்பான், மேலும் அவர் முன்பு செய்த ஒவ்வொரு பாவமும்  அழிக்கப்படும். அதன் பிறகு கணக்கு உண்டு; ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு வரை வெகுமதி அளிக்கப்படும். வல்லமையும் மேன்மையுமான அல்லாஹ் மன்னிக்காத வரையில் ஒவ்வொரு கெட்ட செயலும் அப்படியே பதிவு செய்யப்படும். (சுனன் அல்-நசயீ)

குறிப்பு: இஸ்லாத்தின் அப்படியே ஏக இறை கொள்கை ஆகும். 

1 கருத்து:

  1. 8 பிசாசு பின்னர் இயேசுவை மிக உயரமான ஒரு மலைச் சிகரத்திற்கு அழைத்துச் சென்று, உலகின் எல்லா நாடுகளையும் அவற்றின் மகிமைகளையும் பொருட்களையும் காட்டினான். 9 பிறகு பிசாசு இயேசுவிடம்,, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.

    10 இயேசு பிசாசை நோக்கி,, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்!

    , “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும்.
    அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’

    என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.

    11 எனவே பிசாசு இயேசுவை விட்டு விலகினான். அதன் பிறகு சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%204&version=ERV-TA

    பதிலளிநீக்கு