வேதத்தில் கூட்டவும் குறைக்கவும் மனிதர்களுக்கு உரிமை இல்லை

தமிழர் சமயம்  

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடை யார். - (பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை பாடல் - 2)

விளக்கவுரைபாவத்தை வளர்க்கின்ற செய்திகளும், ஆசையை வளர்க்கும் செய்திகளும், மாற்றப்பட்ட வேறு பொருள் தரப்பட்ட செய்திகளும் கலந்து நிறைந்த நூல்கள் உள்ள இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர். 

யூதம் 

தேவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு மோசே ஜனங்களுக்குக் கூறுகிறான்

“இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது. நான் உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.  (உபாகமம் 4:1-2)

கடவுளின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நிரூபிக்கிறது; தம்மிடம் அடைக்கலம் புகுபவர்களுக்கு அவர் கேடயமாக இருக்கிறார். அவர் உங்களைக் கடிந்துகொள்ளாதபடிக்கு, நீங்கள் பொய்யராகக் காணப்படாமலிருக்க, அவருடைய வார்த்தைகளோடு சேர்த்துக்கொள்ளாதீர்கள். -  (நீதிமொழிகள் 30:5-6)

கிறிஸ்தவம் 

 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். இந்தத் தீர்க்கதரிசனச் சுருளிலிருந்து யாராவது வார்த்தைகளை எடுத்துவிட்டால், இந்தச் சுருளில் விவரிக்கப்பட்டுள்ள ஜீவ விருட்சத்திலும் பரிசுத்த நகரத்திலும் உள்ள எந்தப் பங்கையும் கடவுள் அந்த நபரிடமிருந்து எடுத்துக்கொள்வார். (வெளிப்படுத்துதல் 22:19)

குறிப்பு: வெளிப்படுத்துதல் சுவிசேஷம் நமக்கு கிடைக்கப்பட்டது புனித ஜான் மூலமாகும், அவர் இயேசு தேர்ந்தெடுத்த அவரின் நேரடி சீடர் ஆவார்.  

இஸ்லாம் 

இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். - (குர்ஆன் 2:41,42) 


4 கருத்துகள்:

  1. அருள்மறை வேதங்கள் மனித வாக்குகள் அல்ல. படைத்த இரட்சகனின் பரிசுத்தக் கருத்துக்கள் என்பதற்கும் மனிதர்களின் உளறலைப்போல் முன்னுக்குப் பின் முரணாகத் திகழாமல் முரண்பாடற்று விளங்குவதும் அருள்மறைக் குர்ஆன் அல்லாஹ்வினால் தான் அருளப்பட்டது என்பதற்கு அருமையான சான்றுகளாகும். அல்லாஹ்வே வேத நூலாகிய அருள்மறைக் குர்ஆனை அருளி அதனைப் பிற வேதங்கள் மனிதக் கரங்களால் மனோஇச்சைக்கு ஆளாகி மாசுபடுத்தப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டதைப் போல எவிவித மாற்றங்களுக்கும் ஆளாகாமல் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறான் என்பதை வல்லோன் அல்லாஹ் வான்மறையில் கூறுவதைப் பாருங்கள்:

    அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82).

    நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(15:9).


    பிற வேதங்கள் அது அருளப்பட்ட மூல மொழியில் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறு இல்லாமல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு வேதவசனங்களை நீக்கியும் மனித கருத்துக்களைச் சேர்த்து இடைச்செருகல் செய்தும் கூட்டியும் குறைத்தும் மாசுபடுத்தப்பட்டு முரண்பாடுகளின் சிகரத்தில் இருப்பதை நம்மால் காணமுடியும். ஏனவே வல்ல அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனை பிற வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாக அருளினான்.

    (நபியே) முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் (அல்லாஹ்) உம்மீது இறக்கியருளினான். இவ்வேதம் இதற்கு முன்னுள்ள (வேதங்கள்) அனைத்தையும் உண்மைப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. (3:3).

    https://www.islamkalvi.com/religions/sindanai.htm

    பதிலளிநீக்கு
  2. குர்ஆனில் பிற்கால இடைச்செருகல்கள் இருப்பதை நிரூபிக்க ஐரோப்பிய அறிஞர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

    என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் பேராசிரியர் நோல்டேக்; 9வது பதிப்பு, குர்ஆனின் கீழ்

    https://lightofislam-in.translate.goog/the-holy-quran-the-sacred-scripture-of-islam/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc

    பதிலளிநீக்கு
  3. வேத வசனங்களை மனிதர்கள் எழுதலாமா?

    தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)

    பைபிளில் மாற்றம் செய்ய மனிதருக்கு உரிமை உண்டா?

    அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர்உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய் - (நீதிமொழிகள் 30:6)

    பதிலளிநீக்கு
  4. மத்தேயு 22:29
    அதற்கு இயேசு,, “வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் உங்களுக்குப் புரியவில்லை. மேலும் தேவனின் வல்லமையைக்குறித்து உங்களுக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு