தமிழர் சமயம்
“கள்ளும் கண்ணியும் கையுறைகாநிலைக்கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய்” - அகநானூறு 156
என்று பாடுகின்றார். காதலில் இருக்கும் தலைவியை கண்டு அவள் தாய் நீர்த்துணைக்கு அருகில் நிலை பெற்றிருக்கும் கடவுளுக்கு மகளின் இந்த நிலைக்குத் தெய்வ குற்றம் எனக் கருதி கள்ளும் காந்தள் பூக்களால் ஆன கண்ணியும் நிலையான கொம்புகளையும் தொங்கும் காதுகளையும் உடைய வெள்ளாட்டுக் கிடாயும் உட்பட எல்லாம் கையுறையாகப் படைத்துப் பலியிட்டுப் போற்றினாள் என்று ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார்.
இதற்கு முந்தைய பதிவில் “வேலன் விளையாட்டு அயர்தல்” என்று பார்த்திருந்தோம். குறிஞ்சி நிலத்தில் மகளானவள் காதல் பித்து பிடித்திருந்தால் வேலன் என்பவன் அதாவது முருகனைப் பூசிக்கும் பூசாரி வேல் கொண்டு “வேலன் வெறியாட்டு” நிகழ்த்தி அந்தப் பெண்ணின் மனநிலையை மாற்றுவானாம். அதே போன்று மருத நிலத்திலும் அந்த நில மக்கள் நீர் துறைக்கண் உள்ள கடவுளுக்குப் பலியிட்டுப் போற்றி வணங்குவார்கள்.
வேலன் விளையாட்டு
வேலன் பூக்களும் புகையுமிட்டு முருகனை வாழ்த்தி ஆடிப்பாடி வழிபாடு நிகழ்த்துவான். திருமுருகாற்றுப்படையில் “வேலன் வெறியாட்டு” விரித்துக் காணப்படுகின்றது.
” சிறு தினை மலரோடு விரைஇயை மறியறுத்துவாராணக் கொடியொடு வழிபட நிறீஇ”
என்று வரும் பாடலில் சிறு தினையோடு ஆடு அறுத்துப் படைத்துக் கோழிக் கொடியுடன் மலர்கள் பரப்பியும் விழா எடுக்கப்பட்டது என்கிறது. ஆட்டுக்கிடாய் அறுத்து தினையுடன் அல்லது சோற்றுடன் கலந்து படைக்கப்படும். இது “முருகையர்தல் அல்லது முருகாற்றுப் படுத்துதல்” என்று அழைக்கப்படும். எளியோரின் தெய்வமாய் நின்று முருகன் தினையையும் ஆட்டையும் ஏற்றுத் தமிழரோடு நின்ற காலம் போய் இன்று வேறு நிலை வந்து விடக் காரணம் ஆரியர் வருகையே என்பது இங்கு புலப்படுகின்றது.
கிறிஸ்தவம்
23,“எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால், 24 உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். - (மத்தேயு 5)
19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. (மத்தேயு 23:19)
இதில் இயேசு விலங்குகளை பலியிடும் வழிபாட்டு முறையானது மக்களிடம் நன்முறையில் நடந்து கொண்டால்தான் பிரயோஜனம் எனும் கருத்தில் கூறுகிறார்.
வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள். (மத்தேயு 12:7)
நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார். (மத்தேயு 9:13)
விலங்குகளை பலியிடும் முறை ஏறக்குறைய கிறிஸ்தவத்தில் இல்லாமல் போனதற்கு இந்த இரண்டு வசனங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் அது நேரடியாக பலியிடுவதை தடுக்கவேண்டும் என்று கூறவில்லை. அதற்கான குறியீடும் அந்த வசனத்தில் உளள்து. மேலும் அவர் மோசஸின் சட்டத்தை முழுமைப்படுத்தவே வந்தார்.
அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜன பந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? - (1கொரிந்தியர் 10:20-22)
யூதம்
எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது. “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். (யாத்திராகமம் 20:23-24)
குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்! - (உபாகமம் 17:1)
சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளை விட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார். - (நீதிமொழிகள் 21:3)
இஸ்லாம்
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!”. (அத்தியாயம் 108 ஸுரத்துல் கவ்ஸர் – 2வது வசனம்)
குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ் 37)
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். (குர்ஆன் 2:67)
(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். (குர்ஆன் 2:71)
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (திருக்குர் ஆன் 2:173)
கிறிஸ்தவம்
பதிலளிநீக்குகுறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்! - (உபாகமம் 17:1)
அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜன பந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? - (1கொரிந்தியர் 10:20-22)
சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளை விட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார். - (நீதிமொழிகள் 21:3)
இஸ்லாம்
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். (குர்ஆன் 2:67)
(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். (குர்ஆன் 2:71)
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (திருக்குர் ஆன் 2:173)
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (குஆன் 22:37)
சங்ககால வெறியாட்டு நிகழ்வில் ஆட்டினைப் பலியிடும் பழக்கம் இருந்துள்ளமைக்கு
பதிலளிநீக்கு“மறிக் குரல் அறுத்து”(குறு.263) என்ற பாடல் வரியும்,
“பலி கொடுத்து””(அகம்.22) என்ற பாடல் வரியும்
நடுகல் வழிபாட்டூ மரபில் பலியிடும் பழக்கம் பின்பற்றப் பட்டுள்ளமைக்கு
“ோப்பிக் கள்ளொடூ துரூஉப் பலி கொடுக்கும்”(அகம்.35) என்ற பாடல் வரியும்
காக்கைக்கு ஊன் படைக்கும் பழக்கம் நடைமுறையிலிருந்தமைக்கு
“பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென்”(ஜஐங்குறு.391) என்ற பாடல் வரியும்,
“செஞ்சோற்ற பலி மாந்திய கருங்காக்கை””(பொருந.183)
என்ற பாடல் வரியும் சான்றுகளாகின்றன. இதன்வழி பலியிடூதலும் அதன் ஊனும் சங்கத் தமிழர்களின் உணவு முறைகளோடு நெருங்கியுள்ள தொடர்பினை அறியலாம்.
https://marainoolkal.blogspot.com/2024/08/blog-post_30.html