ஜிஹாத்

 இஸ்லாம் என்ற அமைதி மார்க்கத்தில் தீவிரவாதிற்கு இடம் இல்லை என்றால் ஸலாஃபி ஜிகாதிசம் (போரின் மூலம் உலகம் முழுவதையும் இஸ்லாமிய அரசின் கீழ் கொண்டுவருவது) என்ற (தாலிபான், அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களின்) கொள்கையை சவூதி அரேபியா ஆதரிப்பது ஏன்?

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸலஃபி, ஜிஹாதி போன்ற வார்த்தைகளுக்கு உரிய பொருளை முதலில் அறிவோம்.

ஸலஃப்?

ஸலஃபி (அ) ஸலஃபிசம்?

அதாவது நபியின் வழிகாட்டுதல் மற்றும் குர்ஆனின் கொள்கைகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் போகும் பொழுது அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று முகமது நபி சொல்லி சென்ற வழிகாட்டுதல் தான் இந்த ஸலஃபியிசம் ஆகும்.

நபி அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அதற்கடுத்த தலைமுறையினர், பிறகு அதற்கடுத்த தலைமுறையினர் (புகாரி)

மேலும் அன்னிஸா 115 அத்தியாயத்தில் கூறுகிறான்:

இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்கு தெளிவான தன் பின்னர் எவர் தூதருக்கு மாறு செய்து, முஃமின்களின் வழியல்லாத (வேறு) வழியை பின்பற்றுவாரோ அவரை நாம் அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பி விடுவோம். அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.

இவ்வசனத்தில் அல்லாஹ், நேர்வழியை பற்றி கூறும் போது இரண்டு விஷயங்களை கூறுகிறான்.

1 – தூதரின் வழி
2 – முஃமின்களின் வழி

முஃமின்களின் வழிக்கு மாற்றமாக செல்வதும் ஒருவரை வழிகேட்டின் பக்கம் கொண்டு சென்று நரகத்தில் தள்ளும் என்கிறான்.

சுருங்க சொன்னால், முகமது நபி அவர்களின் போதனையை அப்படியே பின்பற்றிய மக்களை சண்ட்ரோர்களாக எடுத்துகொண்டு வாழ்வது ஆகும்.

சரி ஜிஹாத் அல்லது போர் பற்றி அந்த சலஃப்களின் பார்வையும் நடைமுறையும் எப்படி இருந்தது? அதற்கான வரலாற்று ஆதாரங்கள் என்ன என்று ஆய்வு செய்வோம்.

ஜிஹாத்?

இது புனிதப்போர் ("Holy War") எனவும் பரவலாக மொழிப்பெயர்க்கப்படுகின்றது. இது சர்ச்சைக்குரிய மொழிப்பெயர்ப்பாகும். பெரும்பான்மையான இஸ்லாமியர்களும், அறிஞர்களும் 'புனித போர்' என்ற மொழியாக்கத்தை ஏற்பதில்லை. மொழியியலாளரான பெர்னார்டு லீவிஸ் (Bernard Lewis) ஜிஹாத் என்பது ஆயுதப் போராட்டம் என்ற பொருளிலேயே பலராலும் புரிந்து கொள்ளப்படுவதாக குறிப்பிடுகிறார்.

உதாரணமாக,

உழைத்தல் என்ற பொருளில் குரான் வசனங்கள் 9:79, 29:6, 29:69 ஆகியவற்றில் ஜிகாத் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாராளமாக செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு (9:79)

வற்புறுத்துதல் என்ற பொருளில் ஜிகாத், குரான் வசனங்கள் 29:8, 31:15 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.[38]

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். (29:8)

ஜிகாத் என்பதற்கு உறுதி என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 5:53, 6:109, 16:38, 24:53, 35:42-43 ஆகியவை ஆகும். இந்த வசனங்களில் 'உறுதி' என்பதை குறிக்க ஜஹத என்ற ஜிகாத் கிளைச் சொல் இடம்பெற்றுள்ளது.

ஜிகாத் என்பதற்கு 'நன்மையை உபதேசம் செய்தல்' என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 22:78, 25:52, 9:73 ஆகியவை ஆகும்.

குரானைப் போல, நபிமொழி தொகுப்புகளான ஹதீஸ்களிலும் ஜிகாத் பல்வேறு அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளது.

'தன்னுடைய உள்ளத்தை எதிர்த்து போராடுவதே ஜிகாத் (உள்ளக ஆன்மீக போராட்டம்)' என்று முஹம்மது நபி கூறியதாக நஸயி நூலில் வரும் ஹதீஸ் பதிவு செய்கிறது.

தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். - (திரிமிதி 1546)

பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் (புனித யாத்திரை) செய்வதே ஜிஹாத் என்ற பொருளிலும் ஹதீஸ்களில் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளது.

நபி அவர்கள், "சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்" என்றார்கள். நபி அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை என்று முஹம்மது நபியின் மனைவி ஆயிஷா அறிவிக்கிறார் - (புகாரி 1529)

முஹம்மது நபி கூறியதாக அபூதாவுத் மற்றும் அஹ்மத் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாதில் சிறந்தது எது?" என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள், "அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்" என்று பதிலளித்தார்கள். - (அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப், நூல்: அஹ்மத் 18074)

சரி ஜிஹாத் என்பது போரை குறிப்பிடவில்லையா? குறிப்பிட்டுள்ளது, ஆனால் அதற்கென்று உள்ள வரையறையும் சூழ்நிலையும் இந்த கேள்வியில் குறிப்பிட்டது போல் அல்ல.

  • அநீதி இழைக்கப்படும் சூழலிலும்,
  • பலகீனமான ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் பொருட்டும் ஆயுத போராட்டம் நடத்தப்படலாம் என்று குரான் கூறுகின்றது.
  • மேலும், உடன்படிக்கைகள் முறிக்கப்படும் போதும்,
  • சொந்த நிலத்தை விட்டு மக்கள் வெளியேற்றப்படும் சூழலிலும் ஆயுத போராட்டத்தை நடத்திக்கொள்ள குரான் அனுமதிக்கின்றது.

எப்படியான சூழல்களில் ஆயுதப்போராட்டம் நடத்தப்படக்கூடாது என்பதற்கும் குரானில் வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன.

  • மதத்தை பரப்ப போர் செய்யக்கூடாது என்றும்,
  • போரை முதலில் துவக்கக்கூடாது என்றும்,
  • சமாதானம் செய்துக்கொள்ள விரும்புபவர்களுடனும்,
  • விலகிக்கொள்ள விரும்புபவர்களுடனும் சண்டையிட கூடாது

என்றும் குரான் விதிமுறைகளை வகுத்துள்ளது.

மேலும் போர் விதிமுறைகளையும் வகுத்துள்ளது, அவ்வாறுதான் சலஃப்கள் நடந்து கொண்டார்கள் என்பதற்கு வரலாற்றில் பல ஆதாரம் உண்டு. போரில் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றாத இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இல்லவே இல்லையா? இது அந்த ஆட்சியாளரின் பிழை. மதம் அவ்வாறு போதித்தால் மதத்தின் பிழை, மத வழிகாட்டுதல் படி ஆட்சியாளர்கள் நடக்காமல் தவறு செய்தால் அது ஆட்சியாளர்களின் பிழை. இருக்கலாம், ஆனால் அது இஸ்லாம் அல்ல. இன்றைய தமிழ் ஆட்சியாளர்கள் தமிழ் அறப்படியா நடந்து கொள்கிறார்கள்? அதே போலத்தான் கிறிஸ்தவம், யூதம், பௌத்தம், இந்து என எல்லா மத ஆட்சியாளர்களும்.

இது இன்றைய தமிழ் ஆட்சியாளர்கள், கிறிஸ்தவ, யூத, பௌத்த இந்து ஆட்சியாளர்கள் என எல்லா ஆட்சியாளர்களும் பொருந்தும்.

எனவே ஜிஹாத் என்றால் போரின் மூலம் உலகை இஸ்லாமிய ஆட்சிக்கு கீழ் கொண்டு வருவது என்பது அநீதியான விளக்கம் ஆகும்.

சரி, சவூதி அல்கொய்தாவை ஆதரிக்கிறதா? நிச்சயமாக இல்லை என்பதற்கு இணையத்தில் பல ஆதாரங்கள் உண்டு.

சவூதி தலிபான்களை ஆதரிக்கிறதா? நிச்சயமாக இல்லை.

இன்று தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானத்தின் ஆட்சியாளர்கள் ஆவர். அந்த அடிப்படையில் அவர்களுடன் ராஜ்ய உறவை மற்ற நாடுகள் பேனவெண்டிய நிலை உள்ளது. இதை ஐக்கிய நாடுகளின் சபையே எர்க்கும் பொழுது சவூதி ஏற்க கூடாதா?

உதாரணமாக குஜராத் கலவரம் காரணமாக மோடியை அமெரிக்காவுக்குள் நுழைய தடை செய்து வைத்து இருந்தது பிறகு பிரதமரானதும் இதே காரணத்துக்காக அந்த தடையை அமெரிக்கா நீக்கியது என்பதை நாம் அறிவோம்.

எனவே இந்த கேள்வியில் உள்ள ஒவ்வொன்றும் பொய் அல்லது அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.

வெறுப்பை விதைக்காமல் அன்பை விதைப்போம், எதிர்காலம் வசந்தத்தை அறுவடை செய்யட்டும்.

இந்த தலைப்பில் மேலும் அறிய வாசிக்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக