தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (1:1:07)
விளக்கவுரை தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.
குர்ஆன்
யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124)
நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க!அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன' - (குர்ஆன் 13:28)
பைபிள்
உங்கள் நினைப்பூட்டுதல்கள்தான் எனக்கு நிலையான சொத்து. அவைதான் என் இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. - (சங்கீதம் 119:111)
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன். (சங்கீதம் 70:4)
“தன்னைப் பிரியப்படுத்துபவனுக்கு, கடவுள் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் தருகிறார்..." - (பிரசங்கி 2:26)
தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும் பாவிகளைப்போன்று வாழாமலும் தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும் இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். - (சங்கீதம்1)
ஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை. (கீதை 4.40)
முடிவுரை
பயபக்தியுடன் படைத்த அந்த ஆதிநாதனை வணங்கி வழிபடுவதால் மட்டும்தான் உலக வாழ்வின் பிரதான நோக்கமான அமைதி கிட்டும். அது அல்லாமல் செல்வம், கேளிக்கை, மது, மாது பிள்ளைச்செல்வம் போன்ற எதுவும் நிம்மதிக்கு வழிவகுக்காது.
வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி மற்றவற்றுள்
பதிலளிநீக்குவீழ்நாள் இடர்மூப்பு மெய்கொள்ளும் - வாழ்நாளுள்
பல்நோய் கவற்றப் பரிந்து குறைஎன்னை
அன்னோ அளித்துஇவ் வுலகு. - அறநெறிசாரம் பாடல் - 127
விளக்கவுரை ஆயுள் காலத்தில் பாதியைத் தூக்கத்தில் கழித்து, மறு பாதியில் தளரும் காலத்தில் துன்பத்துக்குக் காரணமான முதுமையை உடம்பு அடையும். உறக்கமும் முதுமையும் போக எஞ்சிய வாழ்நாளில், பல துன்பங்கள் வருத்த, வணங்கிவழிபடாது வாழ்நாள் வீணாயிற்றே என்று வருத்தப்படுவதனால் என்ன பயன்?
யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124)
பதிலளிநீக்குமுத்திநெறியை அடையும் வழி
பதிலளிநீக்குஉருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொருவுஇல் தலைமகனோடு இன்ன - ஒருவாது
கண்டு கருதிக் கயக்குஅறத் தேர்ந்தபின்
கொண்டுவீடு ஏற்க அறம். பாடல் - 50
விளக்கவுரை வடிவும் நல்ல ஒழுக்கமும் உரைக்கப்படும் நூலும் அந்த நூலில் கூறப்படும் பொருளும் ஒப்பு அற்ற இறைவனும் ஆகிய இவற்றை நீங்காமல் ஆராய்ந்து சிந்தித்துக் கலக்கம் இல்லாமல் உணர்ந்த பின்பு அறத்தை மேற்கொண்டு முத்தியை அடைதற்கு முயற்சி செய்க.
யோவான் 14:27: "சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுப்பது போல் நான் உங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்கள் இதயங்கள் கலங்க வேண்டாம், அவர்கள் பயப்பட வேண்டாம்." -
பதிலளிநீக்குபிலிப்பியர் 4:6: “எதைக் குறித்தும் கவலைப்படாதிருங்கள்;
சங்கீதம் 70:4
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
சங்கீதம் 89:15
தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
சங்கீதம் 94:19: "என் இருதயத்தின் கவலைகள் அதிகமாக இருக்கும்போது, உமது ஆறுதல்கள் என் ஆத்துமாவை உற்சாகப்படுத்துகின்றன."
1 பேதுரு 5:7: "உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மீது போடுங்கள், ஏனென்றால் அவர் உங்களைக் கவனித்துக்கொள்கிறார்."
‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள்.” (33:41)
பதிலளிநீக்கு‘மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.” (33:42)
‘உமது இரட்சகனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வீராக!”
(76:25)
‘நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும், நம்பிக்கையாளர்களான ஆண்களும், நம்பிக்கையாளர்களான பெண்களும், அடிபணிந்து வழிபடும் ஆண்களும், அடிபணிந்து வழிபடும் பெண்களும், உண்மையாளர்களான ஆண்களும், உண்மையாளர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறு மையாளர்களான பெண்களும், உள்ளச்சமுடைய ஆண்களும், உள்ளச்சமுடைய பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் நோன்பு நோற்கும் பெண்களும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், காத்துக் கொள்ளும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரும் ஆண்களும், நினைவுகூரும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.” (33:35)
“அவர்களின் உள்ளங்களில் (சந்தேகம் எனும்) நோய் உள்ளது. எனவே, அல்லாஹ் அவர்களுக்கு நோயை அதிகப்படுத்தி விட்டான்” என்கிறான். (அல்பகரா: 10)
பதிலளிநீக்குஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை. (கீதை 4.40)
மத்தேயு 21:21, மாற்கு 11:23
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், என்று இயேசு பதிலளித்தார். 'உனக்கு நம்பிக்கை இருந்தால், சந்தேகப்படாமல் இருந்தால், அத்தி மரத்திற்கு மட்டும் இதைச் செய்ய முடியாது, ஆனால் நீ இந்த மலையை நோக்கி, "எழுந்து கடலில் எறி" என்று சொன்னால், அது நடக்கும்.
ரோமர் 14:23
ஆனால், கள் மீது சந்தேகம் கொண்ட எவரும் உண்ணும் செயலில் கூட கண்டிக்கப்படுவார்கள், ஏனெனில் அது நம்பிக்கையிலிருந்து தோன்றவில்லை. விசுவாசத்தில் இல்லாதது பாவம்.
யாக்கோபு 1:6
ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் கேட்க வேண்டும், எந்த சந்தேகமும் இல்லை கள். கள் ஐயமடைபவன் , காற்று வீசும் கடல் அலையைப் போன்றவன் .
சங்கீதம் 148
பதிலளிநீக்குTamil Bible: Easy-to-Read Version
148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது சேனைகள் [a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
5 கர்த்தருடைய நாமத்தைத் துதி.
ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
6 இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
7 பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
8 தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
9 மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார்.
தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
அவர் நாமத்தை என்றென்றும்
மகிமைப்படுத்துங்கள்!
பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20148&version=ERV-TA
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பதிலளிநீக்குமனக்கவலை மாற்றல் அரிது (அதிகாரம்: கடவுள் வாழ்த்து குறள் எண்:7)
பொழிப்பு: தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
இக்குறள் நாம் சிந்திக்க மறந்த அல்லது தவறாக புரிந்துகொண்ட சில முக்கிய உண்மைகளை உள்ளடக்கியயுள்ளது.
தனக்கு உவமை இல்லாத : உவமை என்றால், கேட்பவர் காணாத ஒன்றை கேட்டு விளங்கிக்கொள்ள, விளக்குபவரும் கேட்பவரும் பரஸ்பரம் அறிந்த ஒன்றை ஒப்புமை படுத்தி விளங்க வைக்க முயல்வது ஆகும். தனக்கு உவமை இல்லாதவன் என்பதன் பொருள், உருவிலும், அளவிலும், தன்மையிலும், பண்பிலும், வலிமையிலும் மேலும் அவனின் வேறு எந்த கூறுகளோடும் மனிதனால் காணமுடிந்த அல்லது கற்பனையில் உருவான எந்த ஒன்றோடும் ஒப்பிட முடியாதவன் என்று பொருள். எழுதிய வள்ளுவன் உட்பட வாசிக்கும் யாரும் அவனை கண்டதில்லை என்பதும் இதனுள் அடக்கம்.
அவன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் : எனவே தனக்கு உவமை இல்லாத ஒருவன் இருக்கிறான் அவனது தாள் சேராதவர்கள் (அ) சரணடையாதவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் யாரென்றால்
1) தனக்கு உவமை இல்லாதவனுடன் வேறொன்றையும் வணங்குபவர்கள், இதன் மூலம் அவனுக்கு தங்கள் வணங்குபவர்கள் இணை என்று மறைமுகமாக உணர்த்தி "தனக்கு உண்மை இல்லாதவன்" என்ற பண்பை மறுக்க கூடியவர்களும்,
2) அவனையன்றி உவமை சொல்லப்படமுடியுமான
(சூரியன், காடு, மலை, மழை மற்றும் நட்சத்திரம் போன்ற இயற்கையானவைகள்,
கல், செம்பு, ஏனைய உலோகங்கள் மற்றும் மண்ணில் தயாரிக்க பட்ட சிலைகள்,
முன்னோர்கள், தாய்தந்தை, சித்தர்கள், தூதர்கள் போன்ற பிரசுவிக்கப்பட்ட மனிதர்கள்,
வரையபட்ட அல்லது பின்னப்பட்ட உருவங்கள்,
பணம், பொருட்கள், தங்கம் போன்ற செல்வங்கள்,
பாம்பு, எலி, பசு, சேவல், புலி, யானை போன்ற விலங்குகள்,
மேலும் மனிதனால் கண்களால் காணமுடிந்த அல்லது கற்பனையிலோ தோன்றிய ஒன்று) - வைகளை சரணண்டைபவர்களும்,
3) அப்படி ஒருவன் இல்லை என்று மறுக்க கூடியவர்களும் ஆவர்.
மனக்கவலை மாற்றல் அரிது : இத்தகையோரின் மனதில் தோன்றும் கவலையை அகற்றுதல் என்பது அரிது.
ஏனென்றால்,
அவன்தான் உவமை சொல்லப்படமுடியுமான அனைத்தையும் படைத்தான், அவன்தான் உணவும், நிம்மதியும், வலிமையையும், ஞானமும் தருகிறான், அவன்தான் நோயை குணப்படுத்துகிறான், அவனிடமே அனைத்து சக்தியும் இருக்கிறது என்கிறபொழுது, அவனை அன்றி அவனால் படைக்கைபட்டவைகளிடம் சரணடையும் பொழுதும், அவனை மறுக்கும்போழுதும் மனக்கவலை தீருமா? தீராது.!
திருமூலர் கூறும் இறைவன்தான் அவன், இயேசு கூறும் இறைவன்தான் அவன், நாலடியாரும் வள்ளுவரும் கூறும் சிவவக்கியரும் கூறும் இறைவன்தானவன். மற்றவைகள் திரிக்கபட்டதால் அந்த தனக்கு உவமை இல்லாதானை "அல்லாஹ்" என்கிறோம்.
சான்று : http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0007.aspx
{கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்} [ஸூரது யூனுஸ் 62].
பதிலளிநீக்குஎனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கின்றேன் எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (2: 152)
பதிலளிநீக்குஅல்லாஹுவை அதிகமாக நினைவுக்கூரக்கூடிய ஆண்கள்-பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப்பபையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான் (32: 35)
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
பதிலளிநீக்குவாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே. - (மூன்றாம் தந்திரம் - 8. தியானம், பாடல் எண் : 7)
பொழிப்புரை: ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.
வெண்பா : 15
பதிலளிநீக்குசிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்
விளக்கம்:
சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்
பத்தியுடைமை
பதிலளிநீக்குபத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூலமது. 91
பத்தியோடு உள்ளத்தில் ஆர்வம் கொண்டு அரனை நோக்கினால் அது முத்திக்கு வேர்.
பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால். 92
பலமுறை சிவன் மீது நேசம் வைத்துச் சிவ நினைவோடு பாடுதல், ஆடுதல் பத்தி.
அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. 93
சிவன் மீதுள்ள அன்பால் அழுதல், கூச்சலிடுதல், தன்னை ஆளும் பெருமானை தன் எரும்பெல்லாம் உருகும்படி நினைத்தல் ஆகியவை பத்தி.
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத் தேடு. 94
பூ போட்டுப் பூசனை செய்து, புகழ்ந்து பாடி, மனம் நிறைவோடு, நேசம் கொண்டு ஈசனைத் தேடு.
கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி. 95
மனக்கண்ணால் பார்த்து, உள்ளத்தில் ஊறும் காதலால் உற்று நோக்கினால், ஈசன் ஒளி நம்மை உண்டு ஆள்கொள்ளும்.
நல்லானப் பூசித்து நாதனென வுருகில்
நில்லதோ வீச னிலை. 96
நல்லவனுக்குப் பூசை செய்து ‘நாதன்’ என எண்ணி உள்ளம் உருகினால், ஈசன் நம்மிடம் நிலைகொள்வான்.
அடியார்க் கடியராயன் புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல். 97
அடியவர்களுக்கு அடியவராய் அவர்மீது அன்பு கொண்டு உருகி, உள்ளம் படிந்து, அவரோடு உள்ளம் ஒன்றியிருக்கும்படிப் பார்த்துக்கொள்.
ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீ நினைந்துகொள 98
எல்லா உயிர்களையும் ஈசன் எனக் கருதி, நேசத்தோடு பழகவேண்டும்.
மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று. 99
உடம்பில் உள்ள மயிர்க் கால்கள் வேர்க்கும்படி விதிர்விதிர்த்து பொய்ம்மைக் கோலம் ஆகும்படி ஈசனைப் போற்று.
செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல். 100
உள்ள உறுதியோடும் அடக்கத்தோடும் செவ்விய முறையில் அரனை அறிந்துகொள்ள வேண்டும்.
13 “கொஞ்சம்கூட உண்மை இல்லாத வார்த்தைகளை நீங்கள் எனக்கு எதிராகப் பேசினீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
பதிலளிநீக்குஆனால், “உங்களுக்கு எதிராக அப்படியென்ன பேசினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
14 “‘கடவுளுக்குச் சேவை செய்வதால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறீர்கள்.
அதோடு, ‘பரலோகப் படைகளின் யெகோவா கொடுத்த பொறுப்புகளைச் செய்ததாலும் அவருக்குமுன் மனம் வருந்தி நடந்ததாலும் என்ன பலனைக் கண்டோம்?
15 அகங்காரம்* பிடித்தவர்கள்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். அக்கிரமம் செய்கிறவர்கள்தான் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். அவர்கள் துணிச்சலோடு கடவுளைச் சோதித்துப் பார்த்தாலும் தப்பித்துக்கொள்கிறார்கள்’t என்று சொல்கிறீர்கள்.”
16 அப்போது, யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். யெகோவா அதைக் கவனித்துக் கேட்டார். யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவருடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களுக்காக*u ஒரு நினைவுப் புத்தகம் அவருக்குமுன் எழுதப்பட்டது.
17 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “அவர்களை என்னுடைய விசேஷ சொத்தாக்குவேன்.w அந்த நாளில் அவர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.x கீழ்ப்படிந்து நடக்கிற ஒரு மகனுக்கு அப்பா கரிசனை காட்டுவது போல நான் அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்.y
18 அப்போது, நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள்.”
https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/3/#v39003006
ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பதிலளிநீக்குஅவ்வகத்து ளானந்த மாம். ஞானக்குறள் 104
உள்ளத்தில் நிறைந்திருக்கும், கலந்திருக்கும் ஈசனைத் தேடிக் கண்டு அவனருள் பெற்றுவிட்டால் அந்த உள்ளம் என்றும் ஆனந்தத்தில் நிலைத்திருக்கும்.
பண் :
பதிலளிநீக்குபாடல் எண் : 1
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
பொழிப்புரை :
உலகப் பொருள்கள் மேற்பரந்து செல்லுதலை யொழிந்து இறைவனது திருவடிக்கீழே சென்று ஒடுங்கி நிலைப்பெற்ற உயர்ந்தோரதுஉள்ளங்கள் யாதொன்றற்கும் அஞ்சுதல் இல்லை ; அவர்கள்பால் கூற்றுவன் செல்லுதலும் இல்லை; எல்லாப் பற்றுக்களை யும் முற்றும் விடுத்த அவர்கட்கு வரக்கடவொரு துன்பமும் இல்லை; இரவு பகல் முதலிய கால வேறுபாடுகள் இல்லை; உலகத்தில் விளைவ தொரு பயனும் இல்லை.
குறிப்புரை :
`உலகப் பற்றினின்றும் மீட்ட உள்ளத்தைப் பின் இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிலைநிற்கச் செய்யும் முயற்சியே தவம்` என்பதனை, ``பற்றுவிட்டார்க்கு`` எனவும், ``ஒடுங்கி நிலை பெற்றஉள்ளம்`` எனவும் உடம்பொடு புணர்த்து, உணர்த்தினார். இதனானே மேலையதிகாரத்தோடு இதற்கு உளதாய இயைபு இனிது விளங்கும். உள்ளத்தைப் பற்றுக்களினின்றும் மீட்டு இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிற்கச்செய்யும் முயற்சி, தோன்றி நிகழும் காலத்தே `தவம்` எனவும், இனிது முற்றிய காலத்தே `ஞானம்` எனவும் நிற்கும். தவநிலையையே சிவநூல்கள், `சரியை, கிரியை, யோகம்` என மூன்றாகவும், `சிவ தன்மம், சிவ யோகம்` என ஓராற்றல் இரண்டாக வும் பகுத்துக்கூறுதல் வெளிப்படை. அவற்றின் இயல்பையெல்லாம் நாயனார் முன்னைத்தந்திரத்தில் இனிது விளங்க அருளிச் செய்தார். இங்கு அவை சிவகுருவைத் தலைப்பட வேண்டினார்க்கு இன்றி யமையாச் சிறப்பின் ஆதலையே குறிக்கின்றார்.
``நடுங்குவது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. ``இராப் பகல்`` என்றது உபலக்கணம். `நடுக்கமும், நமனும் இல்லாமை ஒடுங்கி நிலைபெற்றமையால்` என்பதும், `இடும்பை முதலியன இல்லாமை பற்று விட்டமையால்` என்பதும் குறிப்பால் தோன்ற வைத்தவாறு உணர்க.
இவற்றை, ``சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ... ...
... ... உடையார் ஒருவர் தமர்நாம்;
அஞ்சுவ தியாதொன்று மில்லை;
அஞ்ச வருவதும் இல்லை`` 3
``வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்
மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்
தண்கடலும்
மீனம் படிலென் இருசுடர் வீழிலென்
வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட
உத்தமர்க்கே`` l
``நாமர்க்குங் குடியல்லோம்; நமனை யஞ்சோம்``8 என்றாற் போலும் அனுபவமொழிகளான் அறிக. இம்மந்திரத்தின் ஈற்றடி.
`படும்பழி பாவம் பயமில்லை தானே` எனவும், `கடும்பசி யில்லை கற்றுணர்ந்தார்க்கே` எனவும் பாடம் வேறு வேறாகவும் ஓதப் படுகின்றது.
இதனால், `தவமாவது இது` என்பதும் அதன் பயனும் கூறப்பட்டன.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10
பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6918
பதிலளிநீக்குஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் யார்தாம் தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்குப் பொருள் அதுவன்று. (அது இணைவைப்பையே குறிக்கிறது.) நிச்சயமாக இணைவைப்பதே மிகப் பெரும் அநியாயமாகும் என்று (அறிஞர்) லுக்மான் கூறியதை(க் குர்ஆனில் 31:33 வது வசனத்தில்) நீங்கள் செவியுறவில்லையா?
https://islamkalvi.com/?p=118315