போரில் கிடைக்கும் பொருள்

தமிழர் சமயம் 

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள் - 756)

இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும். — மு. வரதராசன்

இஸ்லாம் 

போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். - (குர்ஆன்  8:1)

59:6. மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை; எனினும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

59:7. அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

59:8. எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.

59:9. இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

59:10. அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (குர்ஆன் 59)

"போரில் கிடைத்த பொருள்களைத் திருடியவரைக் காட்டி கொடுக்காது காப்பாற்றுபவரும் திருடியவரைப் போன்றவரே'' என்று பூமான் நபி (ஸல்) புகன்றதைக் கூறுகிறார் ஸமுரதுப்னு ஜீன்துப் (ரலி) நூல் -அபூதாவூத்.

திருடியவர்களின் பொருளை எரித்துவிட்டு தண்டனை வழங்கி திருடியவருக்குப் போரில் கிடைத்த பொருள்களில் பங்கு தராமல் தடுத்து விட்டனர் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) என்று அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரலி) நூல்- அபூதாவூத்.

போரில் கிடைத்த பொருள்களைத் திருடுவதையும் பிடிபட்ட கைதிகளை உயிர் பிராணிகளைச் சித்திரவதைச் செய்வதையும் செம்மல் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை எடுத்துரைக்கிறார் அப்துல்லாஹ் இப்னு யஜீதுல் அஸ்ஸனி (ரலி) - (நூல் -புகாரி)

கிறிஸ்தவம் / யூதம் 

35 அந்நகரங்களிலிருந்த கால்நடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டோம், 36 அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்த ஆரோவேரையும் அப்பள்ளத்தாக்கின் மையத்திலிருந்த வேறொரு நகரையும் வென்றோம். (உபாகமம் 2)

 7 ஆனால் அந்நகரங்களிலிருந்த எல்லாப் பசுக்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் நமக்காக வைத்துகொண்டோம். (உபாகமம் 3)

முடிவுரை 

தனது குடிகளின் பாதுகாப்பு காரணாமாக போர் செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்கள் ஆட்சியாளருடையது அதை பங்கிட்டு கொடுக்கும் உரிமையும் அவர்களுடையது. ஆனால் இது பொது மக்களிடம் போர் தொடுப்பதை குறிப்பிடவும் இல்லை, அதை ஆதரிக்கவும் இல்லை. அதை அறிய போர் நெறிமுறை பற்றி வாசிக்கவும்.

வேதத்தில் கூட்டவும் குறைக்கவும் மனிதர்களுக்கு உரிமை இல்லை

தமிழர் சமயம்  

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடை யார். - (பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை பாடல் - 2)

விளக்கவுரைபாவத்தை வளர்க்கின்ற செய்திகளும், ஆசையை வளர்க்கும் செய்திகளும், மாற்றப்பட்ட வேறு பொருள் தரப்பட்ட செய்திகளும் கலந்து நிறைந்த நூல்கள் உள்ள இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர். 

யூதம் 

தேவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு மோசே ஜனங்களுக்குக் கூறுகிறான்

“இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது. நான் உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.  (உபாகமம் 4:1-2)

கடவுளின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நிரூபிக்கிறது; தம்மிடம் அடைக்கலம் புகுபவர்களுக்கு அவர் கேடயமாக இருக்கிறார். அவர் உங்களைக் கடிந்துகொள்ளாதபடிக்கு, நீங்கள் பொய்யராகக் காணப்படாமலிருக்க, அவருடைய வார்த்தைகளோடு சேர்த்துக்கொள்ளாதீர்கள். -  (நீதிமொழிகள் 30:5-6)

கிறிஸ்தவம் 

 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். இந்தத் தீர்க்கதரிசனச் சுருளிலிருந்து யாராவது வார்த்தைகளை எடுத்துவிட்டால், இந்தச் சுருளில் விவரிக்கப்பட்டுள்ள ஜீவ விருட்சத்திலும் பரிசுத்த நகரத்திலும் உள்ள எந்தப் பங்கையும் கடவுள் அந்த நபரிடமிருந்து எடுத்துக்கொள்வார். (வெளிப்படுத்துதல் 22:19)

குறிப்பு: வெளிப்படுத்துதல் சுவிசேஷம் நமக்கு கிடைக்கப்பட்டது புனித ஜான் மூலமாகும், அவர் இயேசு தேர்ந்தெடுத்த அவரின் நேரடி சீடர் ஆவார்.  

இஸ்லாம் 

இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். - (குர்ஆன் 2:41,42) 


இஸ்லாமிய கிறிஸ்தவம் தோன்றும் முன் இந்து கடவுள்கள் இறுதி தீர்ப்பு வழங்கிவிட்டார்களா?

1400வருடங்களுக்குமுன்னால் குரான்,முகமது,இஸ்லாம் இல்லை, 2000வருஷத்திற்கு முன்னால் இயேசு,பைபிள்,கிறிஸ்தவம் இல்லை அப்படியானால் இந்த பீடைகள் தோன்றுவதற்குமுன் வாழ்ந்த மக்களுக்கு இந்துகடவுள்கள் இறுதிதீர்ப்பு வழங்கிவிட்டார்களா? அல்லது இரண்டும் டுபாகூர்களா?

இந்து கடவுள்கள் என்கிற பிரயோகம் பிழையானது.

தெய்வம் ஒன்றுதான் என்று இந்த துணைக்கண்டத்தில் வாழ்ந்த பல்வேறு மறைநூல்களும் குருமார்களும் உறுதிபட சொல்லிச் சென்று உள்ளனர்.

அகத்தியர்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு- ஞானம் 1:1

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - ஞானம் - 1:4

அவ்வை

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - ஞானக்குறள் 124.

திருமூலர்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே - திருமந்திரம்

ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
நன்று கண்டீர் நல் நமச்சிவாயப் பழம்
தின்று கண்டேற்கு இது தித்தித்த வாறே. - 9ஆம் தந்திரம் 20:6

திருநாவுக்கரசர்

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே - தேவாரம்:2078

சிவவாக்கியர்

எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்
எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே
- (பாடல் 224)

அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - சிவவாக்கியம் 225

முனைப்பாடியார்

தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருள்கண்ணே நிற்பது அறிவு. - அறநெறிச்சாரம் பாடல் - 144

வள்ளுவர்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - குறள் - 01:07.

விளக்கம் : தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடய திருவடிகளை அன்றி மற்றவைகளை பொருந்த நினைக்கின்றவர், மனக்கவலையை மாற்ற முடியாது. தனக்கு ஒப்புவமை இல்லாத என்றால் இறைவன் ஒரே ஒருவன் என்று பொருள்.

உலகம் முழுமைக்கும் ஒருவன் தான் தெய்வம்/கடவுள்/இறைவன் என்று இந்த பாடல்கள் தெளிவாக கூறுகிறது. இப்பாடல்களை எழுதியவர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் முழுதும் சான்றோர் என்று புகழப்பட்ட மனிதர்கள் ஆவர்.

சரி ஒரே இறைவன் என்று இவர்கள் சொல்லலாம், ஆனால் வேறு சில குருமார்கள் பல தெய்வம் இருப்பதாக அல்லது ஒரே இறைவனை பல ரூபத்தில் காணலாம் என்றெல்லாம் கூறுகிறார்களே என்று கேட்டால், குரு என்பவனுக்கான வரையறைகளை தொல்காப்பியம், திருமந்திரம் உட்பட பல நூல்கள் கூறுகிறது. மேலும் பொய் குருக்களை அடையாளம் காணவும் அவைகள் சொல்லித்தருகிறது.

உண்மை குருக்களை இந்த நூல்கள் கூறும் வரையறையுடன் பொறுத்தி பார்த்து கண்டறிந்து அவர்களோடு முரண்படும் குருக்களை பொய் என்று புரிந்து புறந்தள்ளிவிடலாம். அந்த வகையில் உலக மக்களால் சிறந்த குருமார்கள் என்று அறியப்படும் வள்ளுவர், அகத்தியர், அவ்வையார், திருமூலர், நாவுக்கரசர் உட்பட அனைவரும் மேற் குறிப்பிட்ட வரையறைகளுக்கு முரணான பல தெய்வ கோட்பாடு என்பது நிச்சயம் பிழையானதாகும்.

மேலும் இறைவனை கண்டவர்கள் அன்றும் இன்றும் என்றும் எவனும் இல்லை, அவ்வாறு இருக்க அவனை எப்படி வரையவோ செதுக்கவோ முடியும்?

மேலும் உலக மறைநூல்கள் அனைத்தும் இறைவனுக்கான வரையறைகளாக சொல்லுவது என்னவென்றால்

சரி அந்த ஒரே இறைவன் தமிழில் அல்லது சமஸ்கிருதத்தில் அல்லது இந்த நிலப்பரப்புக்கு மட்டும்தான் அறம் கூறும் வேதத்தை அனுப்புவானா அல்லது எல்லா நிலப்பரப்புக்கும், எல்லா மொழிக்கும், எல்லா மக்களுக்கும் அனுப்புவானா? சிந்திக்க மிகத் தகுதியான கேள்வி, சிந்திப்போருக்கு விடை உண்டு.

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல் என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4)

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

நான்மறை என்றால் என்ன என்று அறியும் மக்களுக்கு இப்படி ஒரு கேள்வி கேட்க துணிவு வர முடியாது. இந்த பாடல்கள் எல்லாம் தமிழில் மட்டும்தான் வேதம் உண்டு என்றுகூறவில்லை.

எனவே, மிகவும் பிற்கலத்தில் வந்த வேதங்கள் (அ) சமயங்கள் பீடை என்றால், தமிழில் அகத்தியம், தொல்காப்பியம் முதல் திருமந்திரம், திருவாசகம் வரை வெவ்வேறு காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த அனைத்து தமிழ் மறைநூல்களும் பீடையா? ரிக் வேதம் 356 குருக்களால் ஒன்றன் பின் ஒன்றாக எழுதப்பட்டது, அதற்கு பிற்கலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக யஜுர் மற்றும் சாம வேதங்கள் வந்தது, அதற்கும் மிகவும் பிற்கலத்தில் தான் கீதை வந்தது, பின்னாளில் வந்ததால் கீதையை பீடை என்று சொல்வது பொருந்துமா?

இவைகளெல்லாம் இந்துமத கடவுளை பேசுகிறது ஆனால் அப்ரஹாமிய வேதங்கள் இந்து கடவுள்களை பேசவில்லை என்பது வாதமானால், 

  • ரிக் யஜுர் சம வேதங்கள் கூறும் (அக்னி, இந்திரன், சோமா, ருத்ரா, விஷ்ணு, வருணன் மற்றும் மித்ரா) கடவுளின் பெயருக்கும், அதர்வண வேத (பிரம்மா) கடவுளுக்கும் தொடர்பில்லை, 
  • இந்த வேத கடவுளுக்கும் கீதையின் (கிருஷ்ணா) கடவுளுக்கும் தொடர்பில்லை. 
  • வடமொழி வேத கடவுளின் பெயருக்கும் தமிழர் மறை நூல் கூறும் (ஈசன்,  சிவன், மால்) கடவுளின் பெயருக்கும் தொடர்பில்லை. 
பின்னாளில் வியாசர் இவ்வாறு வெவ்வேறு சமயத்தில் உள்ள இறைவனின் பெயரை தனித்தனி பாத்திரங்களாக்கி புராணம் எழுதிய பின்புதான் இவர்களுக்கு இடையே தொடர்பு உண்டானது. ஆனால் இவர்களின் தன்மைகளாக அந்தந்த வேதம் கூறிய இலக்கணங்களை எடுத்து ஆய்வு செய்தால் இவைகள் அனைத்தும் ஒரே இறைனைத்தான் குறிப்பிடுகிறது.  

  • வட மொழி சமயத்துக்கும் தமிழர் சமயத்துக்கும் இடையேயும், 
  • தமிழர் சமயங்களான சைவ சமண சமயங்களுக்கு இடையேயும் 
  • சைவ சமண சமணங்களுக்கு இசையையும் 

நடந்த மத சண்டைகள் வரலாற்றில் பதியப்படாமல் இல்லை. இன்று பீடை என்று இவர் கூறும் சமயத்துக்கும் இந்துமதத்துக்கும் உள்ள வேறுபாடு, இந்த நிலப்பரப்பில் வெவ்வேறு பெயரில் இருந்த அனைத்து மதங்களுக்கும் இடையில் அன்று இருந்தது.

வெவ்வேறு மொழியில் உள்ள அனைத்து வேதமும் ஒரே இறைவனை பற்றித்தான் பேசுகிறது என்று அறியாததால் வெவ்வேறு பண்பாட்டில் உள்ள இறைவனின் பெயரை தனித்தனி கதாபாத்த்திரமாக்கி 18 புராணங்களை வியாசர் எழுதினார். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் தத்தமது வேதத்தை ஓதி உணர்ந்து அதனுள் ஓடுங்கும் அதிர்ஷடத்தை இழந்து புராணங்களை இதிகாசங்களை வாசித்து தத்தமது வேத வழிகாட்டுதலுக்கு முரண்பட்டு போயினர்.

அதன் வெளிப்பாடுதான் வேறு சமய மக்களை இவ்வாறு இழித்துரைப்பது என்பதாகும். இதை புரிந்துகொள்ள நீண்ட வாசிப்பும் பொறுமையும் தேவை. இறைவன் அருளினால் நல்ல பண்பு உடையவர்களுக்கு அது எளிதாக புரிய வாய்ப்புண்டு.

ஜிஸியா வரி

இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு ஜக்காத் எனும் கட்டாய வரி உண்டு. மேலும் ஈத் உல் பித்ர், பல்வேறு சமயங்களில் குருபானி, வார வாரம் வெள்ளி கிழமை அன்று ஸதக்கா உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரி முறைகள் மற்றும் தான முறைகள் உண்டு.
அதே போல இஸ்லாம் அலலதவர்கள் செலுத்தும் வரிக்கு பெயர் ஜிஸியா, அவர்களுக்கு வேறு எந்த வரியும் இல்லை. ஒரு அரசு தனது மக்களை பாதுகாக்க அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வரி அவ்வளவுதான். இன்று வருமானவரி, சொத்து வரி, GST என்று மத சார்பற்ற நாட்டில் எல்லோருக்கும் இருப்பது போல.
சொல்லப்போனால் ஜிசியாதான் குறைவான பணம். முஸ்லிம்கள்தான் அதிக வரி செலுத்துவோராக இருப்பர்.


 

யூத கிறிஸ்தவர்களில் அவர்களுடைய மத அறங்களை பின்பற்றாதவர்களுக்கு இஸ்லாம் வரி விதித்தது. ஏனென்றால் இறைவனால் வழங்கப்பட்ட வேதங்கள் எல்லாம் ஒரே அறத்தைதான் போதிக்கிறது.

மேலும் இந்த ஜிஸியா வரி இந்துக்கள் செலுத்த வேண்டிய 16.6% விட குறைவு. மேலும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அதே 10% ஆகும். எனவே ஜிஸியா அடக்குமுறை வரி என்பது பிழை.


குர்ஆன் வசனம் 4:89 நியாயமா?

 ஒரு மனிதன் தன் விருப்பப்படி வேறு மதத்திற்கு மாறுவதோ இறைமறுப்பாளனாக இருப்பதோ அவரது அடிப்படை உரிமை‌யாகும். ஆனால் இஸ்லாம் மதத்தில் இவ்வாறு செய்பவர்களைக் கொல்ல வேண்டும் என்கிறது குர்ஆன் (வசனம் 4:89). இது நியாயமா?


எளிமையாக தேடி வாசிக்கும் அளவுக்கு குர்ஆன் மக்களிடமும் சென்று சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியே.

ஆனால் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தோகோடு பிற மதங்களின் / குறிப்பாக தான் வெறுக்கும் சமயத்தின் நூலை வாசித்து நேரத்தை வீணாக்குவதை விட, தான் நம்பும், விரும்பும் சமய நூலை வாசித்தாலாவது அதை ஏற்று நடக்க அவரவருக்கு உதவியாக இருக்கும்.

ஏனென்றால் வேதம் தான் அறம். தத்தமது வேதத்தை ஓதி, உணர்ந்து, பிறருக்கு சொல்லி தானும் அடங்கினால்தான் வீடு பெற முடியும் என்பது நிதர்சனம்.

சரி விடயத்துக்கு வருவோம். இப்பொழுது குர்ஆன் வசனம் 4:89 என்ன சொல்கிறது என்பதை அதன் முன் பின் வசனத்தோடு வாசித்தால் ஒருவேளை முழு பொருளை அது கொடுக்கலாம்.

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர். (குர்ஆன் 4:88)

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். (குர்ஆன் 4:89)

ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை. (குர்ஆன் 4:90)

  • முதலில், இது இஸ்லாமிய அரசுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறை, எனவே ஒரு தனி மனிதன் இதை செய்ய அனுமதி இல்லை.
  • இரண்டாவது, இந்த செய்தியை பார்த்தால் ஒருவேளை உங்களுக்கு புரியலாம். இது உள்ளுக்குள்ளே இருந்து நயவஞ்சகமாக செயல்பட்டவர்களைப் பற்றிய செய்தி. மேலும் அவர்கள் வேறு நாட்டவருடன் சேர்ந்து இவர்களுடன் போர் புரியவோ இடையூறு தரவோ திட்டமிடுபவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட சட்டம்.
  • மூன்றாவது, நபி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி வந்த பிறகும் யூதர்களும், கிறிஸ்தவர்களும், சிலையை வாங்குபவர்களும் சம உரிமையோடு அங்கே வாழத்தான் செய்தார்கள். அதற்கு ஆதாரம் உலகில் முதல் முதலில் எழுதப்பட்ட மதீனாவின் அரசியல் அமைப்பு சட்டம்.

நான்காவது, கட்டாயமாக ஒருவரை இஸ்லாத்தை ஏற்க சொல்லுவது நபிக்கே தடை செய்யப்பட்ட ஒன்று என்கிற பொழுது வேறு யார் அதை செய்ய அனுமதி உண்டு?

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

என்ன தான் அரசாகவே இருந்தாலும் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்ய சொல்வதெல்லாம் தவறு என்று யாராவது நினைத்தால்.. இந்த கட்டுப்பாடு இல்லாத சமயமே இல்லை எனலாம். ஏனென்றால் அனைத்து சமயமும், மறைநூல்களும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்துள்ளது என்று இஸ்லாம் சொல்கிறது. சரி இது உண்மையா என்று ஆய்வு செய்வோமா?

தமிழர் சமயம் - சைவம்

தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை

அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி

எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே

மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே - (திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

கிறிஸ்தவம் / யூதம்

இறைவன் கொடுத்த நெறியை பின்பற்றாத யூத மக்களுக்கு இறைவன் மோசஸ் மூலம் கொடுத்த தண்டனை என்ன?

19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். …….. 26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள். 27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான். 28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். (யாத்திராகமம் 32:26–28)

எனவே ஒரு கட்டமைப்பை ஏற்று அதன் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அந்த கட்டமைப்பு தண்டனை வழங்குகிறது. இது வேண்டும் என்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கோடு வருபவர்களையும் இந்த கட்டமைப்பை சீகுலைக்கும் எண்ணத்தோடு வருபவர்களையம் எச்சரிக்க இந்த தண்டனைகள் ஏற்படுத்த பட்டுள்ளது. இது ஏறக்குறைய நம்ம நாட்டில் உள்ள அரசியல் அமைப்பு போல, நம் நாட்டில் இருந்த IPC போல. நமது நாட்டு சட்டங்கள் சில குற்றத்துக்கு இப்படி சொல்லுகிறதே, இது நியாமா?

இயல்பாக எல்லா கட்டமைப்புக்குள்ளும் இருக்கும் ஒழுங்குகளை அடையாளம் காணாமல் ஒரே ஒரு சமயத்தை மட்டும் குறை கூறுவது என்பது நிச்சயம் அவரது நோக்கம் பிழை என்று உரக்க சொல்கிறது. ஒரு விடயத்தில் விமர்சிக்கும் முன் தனது மதத்தில் இது போன்று விதிமுறைகள் உண்டா என்று சோதித்து அறிவது அவசியம். ஆனால் ஆன்மீக சிந்தனையும், அறநூல் கல்வியும், தனது சமய நூலின் கல்வியும் , நேர்மையும் தன்னிடம் உண்டா என்று அவரவர் சொத்து கொள்ளட்டும். ஐந்தே விரிவான பதிலை கேள்வி கேட்டவர் முழுதாக வாசிப்பார் புரிந்துகொள்ள முயல்வாரா என்று கூட தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அவரவர் கர்மா அவரவர்க்கே.