இணை என்றால் என்ன? இறைவனுக்கு இணை இல்லை என்பதை எப்படி புரிவது?

இறைவனுக்கு இணையாக எதையும் கருதுதல் கூடாது. ஏன்?

சான்று 1

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - (குறள் 1:7)

உரை: தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.எந்த உருவமும், படமும், எதனுடனும் ஒப்பேடுசெய்வதும் செய்ய கூடாது. வேத நூலை தீவிர எந்த வர்ணனையும் இறைவனுக்கு பொருந்தாது. ஏனென்றால் இறைவனை கண்டவர்கள் எவரும் இலர் மேலும் இணையாக ஏதும் இல்லை. 


தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமேல் ஏற்றிய இனியநற் றாயே - (திருமந்திரம் 1100)

உரை : தனக்கு ஒப்பாவார் இல்லாத தலைவனாகிய சிவபெருமானைக் காட்டி என்னை மேனிலையில் உயர்த்தியது இன்பமே நல்கும் தாயாகிய சிவம். எ.று.

“தனக்கு உவமை யில்லாதவன்” எனச் சான்றோர் புகழ்தலால் சிவபிரானைத் “தன்னிக ரில்லாத் தலைவன்” என்றும், காட்டக் காணினல்லது காணலாகாதவனாதலால், “காட்டி” என்றும் இயம்புகின்றார். காண்பதால் அடைந்த பயன் இது வென்பார், “மேல் ஏற்றிய” என்று கூறுகின்றார். மேல் - ஞானத் துறையில் உளதாகிய மேனிலை. தலைவனைக் காட்டி மேனிலையில் உயர்த்தியது சிவம் நற்றாயாய் எய்வித்த இன்பம் என்பது கருத்து. 
 

இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். - (ஏசாயா 40:25) 



நபியே சொல்லுங்கள்! அந்த அல்லாஹ் ஒருவன். احد ஒருவன். அந்த இறைவன், அந்த ஒப்பற்றவன், அந்த பேரரசன் احد ஒருவன் தான். - (குர்ஆன் 112)



இணை என்றால் என்ன? இறைவனுக்கு இணை இல்லை என்பதை எப்படி புரிவது? 

இணையற்ற, இணையில்லாத , ஈடு இணையற்ற, ஈடு இல்லாத, ஒப்பற்ற, ஒப்பில்லாத, சமமில்லாத, ஒப்பீடற்ற , நிகரற்ற, தன்னிகரற்ற,உவமையில்லாத போன்ற வார்த்தைகளின் உண்மை பொருளை மக்கள் அறிந்ததாகவும் அல்லது சரியான இடங்களில் பயன்பத்துவதாகவும் கருத முடியவில்லை. 

இந்த வார்த்தைகளை பொதுவாக பயன்படுத்தும் பொழுது, எந்த ஒன்றிலும் இணையில்லாத என்று பொருள் படும். ஏதேனும் ஒரு பண்போடு சேர்த்து பயன் படுத்தப்படும் பொழுது அந்த பண்பில் மட்டும் ஒப்பில்லாதவன் என்று பொருள். 

எ.கா1: கிரிக்கெட்டில் டோனி தன்னிகரற்ற தலைவன் 

டோனி என்ற சொல்லுக்கு ஒரு இலக்கணம் உண்டு, அவன் அடிப்படையின் இந்திய நாட்டை சார்ந்தவன், மனிதன் மற்றும் ஆண் பாலினத்தை சேர்ந்தவன். 

எனவே மேற்சொன்ன வாக்கியத்தில் உள்ள மறைமுக தகவல்கள் என்ன வென்றால்

      • டோனி ஒரு இந்தியன், மனிதன் & ஆண்
      • டோனி ஒரு கிரிக்கெட் வீரன்
      • டோனி ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைவன்
எனவே இந்த மூன்று மறைமுக தகவல்களோடு அவரது தன்னிகரற்ற தன்மை ஒப்பிடப் படுகிறது. டோனி கிரிக்கெட் விளையாட்டில் மட்டும், இந்தியாவில் அந்த பதவியை வகுத்த மற்ற தலைவர்களை விட, உலகின் இருந்த மற்றும் இருக்கும் மற்ற கிரிக்கெட் தலைவர்களை விட டோனி சிறந்தவர் என்று பொருள்.

எ.கா2: டோனி தன்னிகரற்ற தலைவன்

இந்த வாக்கியம் கூறும் மறைமுகசெய்திகள் என்ன வென்றால்

      • டோனி ஒரு இந்தியன் & மனிதன், ஆண்
      • டோனி ஒரு தலைவன் 

டோனி இந்தியாவில், உலகில் இருந்த மற்றும் இருக்கும் எந்த தலைவனும் டோனிக்கு இணை அல்ல என்று பொருள்.

எ.கா3: டோனி தன்னிகரற்றவன்

இந்த வாக்கியம் கூறும் மறைமுக தகவல்களாவன 

      • டோனி ஒரு இந்தியன், மனிதன், ஆண்  

உலகில் இருந்த மற்றும் இருக்கும் எந்த மனிதனும் டோனிக்கு இணை அல்ல என்று பொருள். டோனி என்பவர் ஒரு மனிதர், ஒரு ஆண். எனவே மனிதனிடத்தில், ஆணிடத்தில் இயல்பாக நிறைந்து இருக்கும் பண்புகளைவிட, குணங்களைவிட, திறமையைவிட மாற்றாக அல்லது அதிகமாக டோனியிடம் இருக்கும் பொழுது இந்த வார்த்தைகள் பயன்படுத்த படலாம்.

எ.கா4: இறைவன் தன்னிகரற்றவன்

இறைவன் என்ற சொல்லுக்கு ஒரு இலக்கணம் உள்ளது. இறைவன் ஆதியும் அந்தமும் அற்றவன், பிறப்பும் அற்றவன், அவனது உருவை கண்ட மனிதனோ, தேவரோ அல்லது அசுரரோ இல்லை. அவன் ஒருவனே படைத்து, காத்து அழிப்பவன்.

      • எனவே உருவ அமைப்பில், பண்பில், ஆற்றல் அளவில் இறைவனுக்கு நிகராக, ஒப்பாக, உவமையாக, எடுத்துக்காட்டாக, இணையாக வேறெந்த ஒன்றையும் நாம் கருதக்கூடாது.

முடிவுரை 

இறைவன் தன்னை பற்றி தானே சொன்ன வர்ணனைகளை கொண்டுதான் நாம் அவனை அறிந்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனோடோ, குரங்குகளோடோ, யானையோடோ,  சூரியனோடோ, பசுவுடனோ, பாம்புடனோ அல்லது நாம் அறியும், காணும் எந்த  படைப்புகளோடும் ஒப்பு நோக்க முடியாது, ஒப்பு நோக்க கூடாது.  

8 கருத்துகள்:

  1. ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு (படைப்புகளின் தன்மைகளைக் கொண்ட) உவமானம் கூற வேண்டாம், நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 16:74)

    பதிலளிநீக்கு
  2. 6:100. இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.

    6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

    6:102. அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

    http://www.tamililquran.com/qurandisp.php?start=6

    பதிலளிநீக்கு
  3. 9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

    பதிலளிநீக்கு
  4. 39:4. அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  5. “சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக! - திருக்குர்ஆன் 17:111

    அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான். - திருக்குர்ஆன் 25:2



    பதிலளிநீக்கு
  6. உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

    திருக்குர்ஆன் 16:71

    பதிலளிநீக்கு
  7. அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

    திருக்குர்ஆன் 10:18

    பதிலளிநீக்கு
  8. உபாகமம் 33:26
    மோசே தேவனைப் புகழுகிறான்
    “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை! தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2033%3A26&version=ERV-TA

    பதிலளிநீக்கு