பொய் தீர்க்கதரிசிகள்

சிவவாக்கியர் கூறும் பொய் குருக்கள்


யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னிறந்த தென்பரே

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரே

முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே

மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்

 

திருமூலர் கூறும் பொய்க் குருக்கள்


குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே

ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கிய
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே

பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே
அணிகுவார் கரன்யாசம் அங்கரனியாசம்
ஆனபின்பு கை அலம்பிக் கண் மூக்குயந்து
முணிகுவார் முண்முணென்று தொட்டுப் பின்பு
முழம் அளவு தாவத்தைக் கையில் தாங்கி
பணிகுவார் கை கூப்பி சூட்டிக் கொள்வார்
பட்டதனால் மூடி ஜெபம் பண்ணுவார் பின்
குணகுணென மந்திரத்தைக் குளறுவார்பின்
குருக்கள் என்று உலகோர்கள் மகிழுவாரே 285.  

விளக்கம்: பூஜை கிரமங்களை ஒரு சடங்காக செய்யும் ஒருவரைப் பற்றி அகத்தியர் இங்கே கூறுகிறார். இந்த மனிதர் அங்கன்யாசம் கரன்யாசம் ஆகிய தூய்மைப்படுத்திக்கொள்ளும் சடங்குகளை செய்து முழ நீள ருத்திராட்ச மாலையை அணிந்துகொண்டு முணுமுணுவென்று மந்திரத்தைச் சொல்லியவாறு தன்னை பட்டால் மறைத்துக்கொண்டு மந்திரங்களைக் கூறுவர். இவ்வாறு பூஜையை அனைவரையும் கவரும் ஒரு சடங்காகச் செய்யும் அவர்களை உலக மக்கள் பெரிய குருக்கள் என்று கூறி மகிழ்வர் என்கிறார் அகத்தியர்.

உலகோர் பிரமிக்கக் கண்ணை மூடி
ஓம் நம சிவாயமென்று தியானம் செய்வார்
கலகோரை தெட்சணை தாம்பூலம் கேள்ப்பான்
கருத்துடனே நல்முகூர்த்தம் போகுதென்பார்
அலகோரை விரதம் யார் என்று கேட்பான்
ஆராரிவார் பேர் வாரும் என்பன்
இலகோரைக் கைபிடித்து திரைக்குள் வைத்து
எழுத்தஞ்சும் அவர்க்குரைத்துப் பொருள் கேட்பாரே 286.  

பொய் குருக்களைப் பற்றி இங்கு அகத்தியர் மேலும் கூறுகிறார். கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல நமசிவய என்று முணுமுணுத்து விட்டு “இங்கே யார் விரதம் செய்யப்போகிறார்?” என்று உலகோரைப் பார்த்துக் கேட்பார். அவர்களை அருகில் அழைத்து ஒரு திரை மறைவில் நமசிவாய ஐந்தெழுத்தை அவர்க்கு மந்திர தீட்சை என்று ஓதி அவரிடம் பொருள் தருமாறு கேட்பார்.

கேட்பாரே (உலக) தாரை உடல் பொருள் ஆவித்தான்
கிருபையுடன் தந்துவிட்டால் சண்ணுவான்பின்
கேட்பானே சோமன் சோடாடு மாடு
கிருபையுடன் கொடுத்தவருக்கு வருத்திச் சொல்வான்
கேபானே பெண்டிர்க்குச் சேலை பூசல்
கிருகையிலே தவறாத புத்தி சொல்வான்
கேட்பானே வேதாந்தம் பாரா சந்தம்
கிருபையுடன் வேதம் சொல் உரைசொல்வானே 287.  

மேற்கூறிய பொய் குருக்களைப் பற்றி இப்பாடல் தொடருகிறது. அத்தைய குருக்கள் மக்களிடம் அவரது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பறிக்க முனைவான். மக்களுடன் சண்டைபிடித்து அவற்றைப் பெறுவான். மக்களிடம் தானமாக பல பொருட்களை- பாதணிகள், ஆடுமாடுகள், பெறுவான். அவர்களுக்கு பெரும் தொல்லை தந்தபிறகு அவர்களுக்கு ஐந்தெழுத்தைக் கூறுவான். பெண்களுக்காக சீலை, ஆபரணங்கள் கேட்பான். அவற்றைக் கொண்டு வந்தவர்க்கு பெரிதாக அறிவுரை கூறுவான். வேதம் வேதாந்தம் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக உபன்யாசம் செய்வான். இந்தக் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

உரை சொல்வான் பொருள் வாங்கிப் போக மட்டும்
உத்தமனே மனை விடுத்தால் மனதுள் வையான்
கரைசொல்வான் பின் ஒருக்கால் வந்தானானால்
காதலைந்து எழுத்துக்கோ நிலைதான் என்பான்
இரைதேடும் பக்ஷியைப் போல் இவ்வண்ணம் தான்
இறந்திறந்து இவன் மாண்டான் சீஷன் கூட
பரையேது சிவம் ஏது என்பான் பேயன்
பஞ்செழுத்தைக் காட்டி அவன் பலுக்குவானே 288.  

மேலே கூறிய பொய் குருக்கள் இவ்விதம் பொருள் பெறவே பல உபநியாசங்களையும் நிகழ்த்தி தனது நிலையை உயர்த்திக்கொள்ளவே முயல்வர். இரைதேடி அலையும் பறவையைப் போல எப்போதும் தனது நிலையில் முன்னேற்றம் என்ற குறியையே விடாமல் பற்றிக்கொண்டும் தானும் இறப்பர், தனது சீடரையும் இந்த முடிவை நோக்கியே அழைத்துச் செல்வார். இந்த பேய்ப் பிறவிகள் பரை என்றால் என்ன சிவம் என்றால் என்ன என்று கேட்பவர்களாக ஐந்தெழுத்து மந்திரத்தைக் காட்டி பிறரை ஏய்த்து வாழ்வர்.

பலுக்கினதால் என்ன பயன் அடிதான் முன்னே
பத்தினதும் லாபம் ஓர் லாபம் கேளு
கிலுக்கிமிகத் திரியாமல் காலந்தோறும்
கிரியையிலே நில்லென்றான் இதுவே லாபம்
குலுக்கி நீ திரியாதே அதனுள் தானே
குருமொழிதான்போகுதென்று மலைத்திடாதே
வலுத்து நீ கிரியை விட்டு யோகம் பாரு
வசப்பட்டால் ஞானத்தில் மாட்டும் தானே 289.  

மேலே கூறியபடி குலுக்கித் திரிவதால் எவ்வித பயனுமில்லை என்றும் அதனால் பெறக்கூடிய ஒரே பயன் அடி மட்டுமே என்கிறார் அகத்தியர். பொய்க்குருக்கள் மக்களை கிரியைகளை மட்டுமே செய்து கொண்டிருக்குமாறு கூறுவார். ஏனெனில் அதனால் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் ஒருவர் கிரியையுடன் நின்றுவிடக் கூடாது என்கிறார் அகத்தியர். ஒருவர் கிரியையை அடுத்து யோகத்தை மேற்கொள்ளவேண்டும். அப்போது ஞானம் தானாக ஏற்படும்.

மாட்டுவான் உலக குரு மயக்கம் செய்து
மாளமட்டும் கிரியையிலே மாளச் சொல்வான்
காட்டுவான் அந்த மொழி வேதச் சொல்லில்
கண்டு நீ மகிழாதே குருவைத் தேடு
சூட்டுவார் ஞானகுரு வந்தாரானால்
சொல்லுவார் கிரியையெல்லாம் தள்ளச் சொல்லி
பாட்டிலே இவர் அனந்தம் பாட்டுச் சொல்வார்
பசுந்த மண்ணின் தண்ணீரின் பயன் சொல்வாரே 290.  

உலக குரு பசு பதி பாசம் என்பதைப் பற்றி ஒன்றும் அறிய மாட்டார். அவர் உலக மக்களை கிரியையை மட்டும் சாகும்வரை செய்துகொண்டிருக்குமாறு கூறுவார். தனது வார்த்தைகளுக்கு வலுவேற்ற அவர் வேதவாக்கியன்களைக் காட்டுவார். அந்த வார்த்தைகளைப் பார்த்து மகிழ வேண்டாம், சரியான குருவைத் தேடு என்று அகத்தியர் புலத்தியரை/நம்மை எச்சரிக்கிறார். தேடலுக்குப் பிறகு தகுந்த ஞான குரு வாய்த்தால் அவர் கிரியையைத் தள்ளிவிட்டு யோகத்துக்குச் செல்லுமாறு கூறி பல பாடல்களைப் பாடுவார் என்கிறார் அகத்தியர். இவ்விதத்தில் அகத்தியர் தான் ஒரு ஞானகுரு என்று நமக்குக் குறிப்பால் உணர்த்துகிறாரோ என்று தோன்றுகிறது! அந்த ஞான குரு பசும் மண் தண்ணீர் ஆகியவற்றைப் பற்றிய உண்மையைக் கூறுவார் என்கிறார் அகத்தியர். தண்ணீர் என்பது ஆணின் விந்துவையும் மண் என்பது அந்த விந்து வளரும் இடமான கருப்பையையும் குறிக்கும் என்று நாம் முன்னமே பார்த்தோம்.

வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே. - அகத்தியர் பாடல் 11

கொங்கணர் சித்தர் கூறும் பொய் குரு


பூணராய்ப் பூண்பார்கள் மூலத்துள்ளே
பெண்ணாசை பொன்னாசை மண்ணினாசை
ஆணராய்க் காமியத்தைச் சுழன்று நின்றே
யாச்சரியம் வேதாந்த மனைத்தும் பார்ப்பார்
காணராய்க் கண்டுவிட்டோம் ஞானமென்பார்
கழுதைகள்தான் மெத்தவுண்டு கண்டு கொள்ளே. 
 

சட்டை முனியார் கூறும் பொய் குருக்கள்


உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
பரந்துநின்ற திரோதாயி வலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
மாட்டார்கள் அறுசமய மாடு தானே
மாறான பெண்ணாசை விட்டேன் னென்பார்
மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
சதாசிவனால் முடியாது, மற்றோ ரேது ?
கூறான விந்துவிடக் கோப மோகங்
குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே

பதஞ்சலியார் கூறும் பொய் குரு


கருதினர் சிலபேர்கள் குருத்தான்வந்து
காட்டுவா ரென்று சொல்லிச் சூஸ்திரத்தை
யுரிவியே கிழித்தெறிந்து வீண்வாய்ப்பேசி
யுழன்றுதவிப் பார்களிதி லநந்தம்பேர்கள்
மருகினர் சிலபேர்கள் வாதவித்தை
வந்தவர்போற் சொல்லியவர் பிழைப்போமென்று
முருகினார் யோகதண்டங் காஷாயங்கள்
யோகநிஷ்டை பெற்றவர்போ லுருக்கொள்வாரே

கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
குரடமிட்டு நடைநடப்பர் குகையிற்கப்பால்
விள்ளுவார் வாதமொடு யோகம்ஞானம்
வேதாந்ததீதமுமே விசாரித்தோர்போல்
துள்ளுவாருபதேசம் செய்வோமென்பார்
சூதமணிகட்டுகிறேன தொழில்பாரென்பார்
தள்ளுவார்பொருளாச நமக்கேனென்பார்
சவர்க்காரம் குருமுடிக்கில் தனமென்பாரே

தனமென்ன வாலைமனேன்மணிதா னென்பார்
சாராயம்பூசிக்கத் தண்ணீரென்பார்
கனமென்ன காந்தசத்துக் கிண்ணம்பண்ணிக்
கற்பமென்று பெண்ணாசை கடந்தோமென்பார்
மனமென்ன வாய்ப்புரட்டால் கைப்புரட்டால்
வாதவித்தை போற்காட்டி மயக்கஞ்செய்வார்
தினமிந்தப்படிதான யுலகத்துள்ளே
சீவனங்கள் செய்வார்கள் சிலபேராமே

காகபுஜண்டர் கூறும் பொய் குரு


பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவிபணம்
பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !

கருவூரார் சித்தர் கூறும் பொய் குரு


புகலுவார் வேதமெல்லாம் வந்த தென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவுங் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோ மென்றே ;
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமான மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே.
பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார் :

ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம்வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுரூட்டாய் நினைவுதப்ப பேசு வானே.

பேச்சென்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப் பேசிப்
பின்னுமுன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதுங் காணார்
நிர்மூட ரனேகவித சாலங் கற்றே

ஆச்சென்றா லதனாலே வருவ தேது ?
ஆத்தாளைப் பூசித்தோ னவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா நரகிற் றள்ளும் :
மோசமது போகாதே முக்கால் பாரே ! 
 

 பாம்பாட்டி சித்தர் கூறும் பொய் குரு


பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே !

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே :
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே !
கொண்ட கோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் ;
கூத்தாடிக்கூத் தாடியே நீ ஆடு பாம்பே

வள்ளுவர்கூறும் போலித் துறவிகள்

அக்காலத்தில் தவம் செய்யும் துறவிகளில் சிலர், தலைமயிரை நீளமாக வளர்த்துச் சடையாகப் பின்னி, முடியாகக் கொண்டிருந்தனர். சிலர் தலை மயிரைப் போக்கி மொட்டையாக இருந்தனர். இத்தகைய புற வேஷம் கொண்டு வாழ்ந்த துறவிகளுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கும் இருந்தது. மன்னனும், வலிமையும் செல்வாக்கும் பெற்றிருந்த அவர்களைக் கண்டு அஞ்சினான். பல பேரரசுகளின் வீழ்ச்சிக்குத் துறவிகளே காரணமாக இருந்தனர். வள்ளுவர் இத்தகையப் போலித் துறவறத்தை, போலித் துறவிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்.

உலகில் உள்ளோர், பழித்துச் சொல்லக் கூடிய தவறுகளைச் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே தவம் செய்யும் துறவிகளும், உயர்ந்தோரும் செய்யும் செயல். இதை விட்டு விட்டு, வீணாகச் சடை வளர்த்தலும், மொட்டை அடித்தலும் ஆகிய புறச் சடங்குகள் எதற்கு? என்று வினவுகிறார் வள்ளுவர்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். (குறள் எண்: 280)

 (மழித்தல் = மொட்டையடித்தல்; நீட்டல் = முடியை நீளமாக வளர்ப்பது)

உள்ளம் பக்குவப்படாத வரையில், பிறருக்குத் தீங்கு செய்வது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வரையில், புற வேஷங்கள் எவையும் பயன்படா என்கிறார் வள்ளுவர்.

இன்றைக்கும், அறிவியலில் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்திலும், புறவேஷதாரர்கள் சமயம் சார்ந்த துறவிகள் போன்று பொய்க்கோலம் பூண்டு வாழ்ந்து வருகின்றனர். புறத்திலே மாண்பு கொண்ட தோற்றமும், அகத்திலே மாசு கொண்ட எண்ணமும் உடைய இவர்களைப் போன்றோர் வள்ளுவர் காலத்திலும் வாழ்ந்தனர். இப்போலித்துறவிகளை அடையாளம் காட்டவே, வள்ளுவர், மேற்குறிப்பிட்ட கருத்துகளைக் கூறினார்.  
 

அறநெறிச்சாரம் கூறும் பொய் குருக்கள் 


பாசண்டி மூடம் பாடல் - 63 
 
தோல்காவி சீரைத் துணிகீழ் விழஉடுத்தல்
கோல்காக் கரகம் குடைசெருப்பு - வேலொடு
பல்என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப்படும்.

விளக்கவுரை தோலையும், காவியாடையையும், மரவுரியையும் துணியையும், கீழே விழும்படி உடுத்திக்கொள்ளலும் தண்டையும், காவடியையும், கமண்டலத்தையும், குடையையும், செருப்பையும், வேலையும், பல்லையும் எலும்பையும் தாங்குதல் ஆகியவை புறச் சமயங்களின் அறயாமையாகப் பொய்வரால் கூறப்படும்.

பயன் அற்ற வெளிக்கோலம் பாடல் - 64

ஆவரணம் இன்றி அடுவாளும் ஆனைதேர்
மாஅரணம் இன்றி மலைவானும் - தாஇல்
கழுதை இலண்டம் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டி யார்க்கு.

விளக்கவுரை கேடயம் இல்லாது பகைவரைக் கொல்கின்ற வாளும், யானைப்படையும், தேர்ப்படையும், குதிரைப்படையும், அரணும் இல்லாமல் போர்செய்யும் வீரன் செயலும், குற்றம் இல்லாத கழுதையின் மீது ஏறிச் சென்றும் சுமையைத் தன் தலையில் தாங்கிச் செல்பவள் செயலும் போல் போலித் துறவியர்க்கு அவர் மேற்கொண்டுள்ள வேடமும் பயன் அற்றதாகும்.
 

இயேசு கூறும் போலி போதகர்கள் 

இருந்தாலும், பூர்வ காலத்தில் மக்கள் மத்தியில் போலித் தீர்க்கதரிசிகளும் வந்தார்கள், அப்படியே உங்கள் மத்தியிலும் போலிப் போதகர்கள் வருவார்கள். அழிவை ஏற்படுத்துகிற மதப்பிரிவுகளை அவர்கள் தந்திரமாக உண்டாக்குவார்கள். அதோடு, தங்களை விலைகொடுத்து வாங்கியb உரிமையாளரை ஒதுக்கிவிட்டு, சீக்கிரத்தில் தங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்வார்கள். 2 பேதுரு 2:1-2

23 ,“அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். 24 கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். 25 ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன். 26 ,“‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்’, என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். 27 மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும். 28 கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும். (மத்தேயு 24:23-28
 

எரேமியா கூறும் பொய் தீர்க்கதரிசி  

“‘கர்த்தர் எங்கே?’ என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை, சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை, இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுது கொண்டார்கள்.” - (எரேமியா 2:8)  

மோசஸ் கூறும் பொய் தீர்க்கதரிசி  

உபாகமம் 13 பொய்த் தீர்க்கதரிசிகள்

1 “ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவன் ஒருவன் உங்களிடம் வந்து, ஒரு அடையாளத்தையோ அல்லது ஒரு அற்புதத்தையோ காட்டுவதாகச் சொல்லுவான். 

2 அவன் சொன்னபடி அந்த அடையாளமோ, அற்புதமோ, உண்மையிலேயே நடந்திடலாம். நீங்கள் அறிந்திராத அந்நிய தெய்வங்களைச் சேவிப்போம் என்று அவன் உங்களிடம் சொல்வான். 

3 அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார். 

4 உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்! 

5 அதுமட்டுமின்றி, நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவனைக் கொல்ல வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களைத் திசை திருப்பப் பேசினான்.  

 

ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான குழப்பவாதிகள் தோன்றாதவரை மறுமைநாள் வராது, அவர்களில் ஒவ்வொரு வரும் தம்மை “அல்லாஹ்வின் ரசூல்” என்று வாதிடுவர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூர்கள் : புகாரீ 3609, திர்மிதி 2144

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “தூதுத்துவம் (ரிசாலத்) நபித்துவமும் (நுபுவ்வத்) முற்றுப்பெற்றுவிட்டன. (நானே இறுதித் தூதர் ஆவேன்) எனக்குப் பின் எந்த ரசூலும் இல்லை எந்த நபியும் இல்லை” என்று கூறினார்கள். நூல் : திர்மிதி 2198

நபியே! கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனை விட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப் படாமலிருக்க தனக்கும் வஹீ வந்தது என்று கூறுபவனை விட அல்லது அல்லாஹ் இறக்கியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவனை விட அநியாயக்காரன் யார்?  குர்ஆன்: 6:93

32 கருத்துகள்:

  1. பாசண்டி மூடம் பாடல் - 63

    தோல்காவி சீரைத் துணிகீழ் விழஉடுத்தல்
    கோல்காக் கரகம் குடைசெருப்பு - வேலொடு
    பல்என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
    நல்லவரால் நாட்டப்படும்.

    விளக்கவுரை தோலையும், காவியாடையையும், மரவுரியையும் துணியையும், கீழே விழும்படி உடுத்திக்கொள்ளலும் தண்டையும், காவடியையும், கமண்டலத்தையும், குடையையும், செருப்பையும், வேலையும், பல்லையும் எலும்பையும் தாங்குதல் ஆகியவை புறச் சமயங்களின் அறயாமையாகப் பொ¢யவரால் கூறப்படும்.

    பயன் அற்ற வெளிக்கோலம் பாடல் - 64

    ஆவரணம் இன்றி அடுவாளும் ஆனைதேர்
    மாஅரணம் இன்றி மலைவானும் - தாஇல்
    கழுதை இலண்டம் சுமந்தானும் போலப்
    பழுதாகும் பாசண்டி யார்க்கு.

    விளக்கவுரை கேடயம் இல்லாது பகைவரைக் கொல்கின்ற வாளும், யானைப்படையும், தேர்ப்படையும், குதிரைப்படையும், அரணும் இல்லாமல் போர்செய்யும் வீரன் செயலும், குற்றம் இல்லாத கழுதையின் மீது ஏறிச் சென்றும் சுமையைத் தன் தலையில் தாங்கிச் செல்பவள் செயலும் போல் போலித் துறவியர்க்கு அவர் மேற்கொண்டுள்ள வேடமும் பயன் அற்றதாகும்.

    பதிலளிநீக்கு
  2. ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி

    பாடல் எண் : 1
    உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன்
    கணுவின்றி வேதா கமநெறி காணான்
    பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
    அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே .

    பாடல் எண் : 2
    மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
    பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
    சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
    அந்தகர் ஆவார் அசற்குரு வாமே .

    பாடல் எண் : 3
    ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
    காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
    ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன்
    கோமான் அலன்அசத் தாகுங் குரவனே .

    பாடல் எண் : 4
    கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
    தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்
    நற்பால் அரசுக்கும் நாட்டிற்கும் கேடாகும்
    முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே .

    பாடல் எண் : 5
    குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
    மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
    குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
    குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே .

    http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10734&padhi=%20&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

    பதிலளிநீக்கு
  3. ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி - 18 பாடல்கள்

    பாடல் எண் : 1
    தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
    தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
    தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
    தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே .

    பொழிப்புரை:
    சற்குருவே தன்னையடைந்த மாணாக்கர்க்குத் திரு வருளை வழங்கிக் காக்கும் பதியாவான். அவனையடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தை யாலும், திருவடி சூட்டலாலும் தன்னை யடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்துவிடுவான்.

    பாடல் எண் : 2
    தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
    தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
    தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
    தவிரவைத் தான்பிற வித்துயர் தானே .

    பொழிப்புரை:
    (சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும் ஒன்பான் கோள்களின் தீங்கு நீங்கவும் யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.


    பாடல் எண் : 3
    கறுத்த இரும்பே கனகம தானால்
    மறித்திரும் பாகா வகையது போலக்
    குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
    மறித்துப் பிறவியில் வந்தணு கானே .

    பாடல் எண் : 4
    பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
    நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்
    ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப்
    பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே .

    பொழிப்புரை:
    உலகப்பற்றை ஒழித்து வீடுபேற்றில் விருப்பம் கொண்டு தன்னையும், தலைவனாகிய சிவனையும் ஆசிரியர் அருள் மொழியைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுமாற்றால் தனது அறி யாமையைப் போக்கித் தன்னை அடைந்தவரது அறியாமையையும் முற்றப்போக்க வல்லவனே குற்றம் அற்ற உண்மை ஞான குரு ஆவான். அவ்வாறன்றி, அனுபவ ஞானம் இன்றி, நூலறிவு மாத்திரையால் செய்யும் ஆரவாரத்தில் மயங்கித் தானும் அதனையே செய்பவன் உண்மை ஞான குரு ஆகான்.

    பாடல் எண் : 5
    நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற
    நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே
    ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற
    நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே .

    பொழிப்புரை:
    நித்தியனாகிய சிவன் நின்மலன் ஆகலின், அவன் மலம் நீங்கித் தன்பால் மெய்யன்பு செலுத்துவோரது அறிவிலே விளங்கி நின்று அம்மெய்யன்பினை மேலும் மேலும் பெருக்க வல்லவ னாவன். ஆகையால், மலம் நீங்கிச் சுத்தான்மாவாய் நிற்கின்றவனே தன்னை அடைந்த மாணவக் கூட்டத்தாரது உண்மை நிலையை உணர்ந்து, அவர்களில் பாசப் பற்று அறும் பக்குவத்தை எய்தி னோர்க்கே ஞானத்தை உணர்த்துவன். ஆதலால் அவனே நிலைபெற்ற சற்குரு ஆவன்.

    பாடல் எண் : 6
    பரிசன வேதி பரிசித்த எல்லாம்
    வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
    குருபரி சித்த குவலயம் எல்லாம்
    திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே .

    பாடல் எண் : 7
    தானே எனநின்ற சற்குரு சந்நிதி
    தானே எனநின்ற தன்மை வெளிப்படின்
    தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல்
    ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே .

    பொழிப்புரை:
    `யான் சிவனே` என மாணாக்கற்கு அறிவுறுத்து கின்ற அந்தக் குருவின் சந்நிதியில் அவன் சிவனே ஆன தன்மை எவ்வாற்றா லேனும் மாணாக்கனுக்கு இனிது புலப்படுமாயின், அவனது மனித உடம்பைச் சிவனது அருள் திருமேனியாகவே உணர்ந்து, தான் அவனால் சிவமாந் தன்மையைப் பெறல் வேண்டும். (பின்னர் வேறு நினைத்தல் கூடாது.) இதனை உன் உள்ளத்திற்குள்ளே ஆராய்ந்து கொள்க.

    பதிலளிநீக்கு
  4. பாடல் எண் : 8
    வரும்வழி போம்வழி மாயா வழியே
    கருவழி கண்டவர் காணா வழியைப்
    பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
    குருவழி யேசென்று கூடலும் ஆமே .

    பொழிப்புரை:
    பிறப்பும், இறப்பும் ஆகிய மாயையின் வேறு பாடுகளே `பிறவி நெறி` எனப்படும். அதனையே கண்டு அவ்வழியே உழல்பவர் கண்டறியாத பெருவழியாக எங்கள் நந்தி பெருமான் தம்மை யடைந்தவர்க்குக் காட்டியருள்கின்ற வீட்டு நெறியை அவரைப்போலும் சற்குரு காட்டும் வழியிலே சென்று பிறரும் பெறுதல் கூடும்.

    பாடல் எண் : 9
    குருஎன் பவன்வேத ஆகமம் கூறும்
    பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித்
    தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி
    வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே .

    பொழிப்புரை:
    `குரு` என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் வேதாகமங்களால் சொல்லப்படுகின்ற பேரின்பத்தை நுகர்பவனாய், சிவோகம் பாவனை தவிர வேறு பாவனை எதுவும் இன்றிப் பக்குவம் வாய்ந்த உயிரை மிகவாய் உள்ள பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்கும் தலைவன் ஆவான்.

    பாடல் எண் : 10
    சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
    சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
    சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
    அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே .

    பொழிப்புரை:
    சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவன் தன் மாணாக்கர்க்கு ஒரு வார்த்தையைச் சொல்வானாயின் அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச்செய்து, ஏனை எல்லாப் பொருளும் சிவ வியா பகத்தை விட்டு வேறு நில்லாமையைப் புலப்படுத்தி, சுத்தம், அசுத்தம் என்னும் இருவகைப் போகங்களும் அல்லாத வேறு ஒரு தனிப் போக மாகிய பரபோகத்தை விளைத்து நிற்கும் வார்த்தையாய் இருக்கும்.

    பாடல் எண் : 11
    உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
    பற்றறும் நாதன் அடியில் பணிதலால்
    சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
    தற்பரம் மேவுவோர் சாதக ராமே .

    பொழிப்புரை:
    பக்குவம் இன்மையால் உயிர் பாச ஞானத்தையே உண்மை ஞானமாகக் கருதி நிற்றலால் அனாதியே அதனைப் பற்றிய ஐம்மலங்களும் அதனை விட்டு நீங்காது அதனைப் பற்றியே நிற்கும். பக்குவம் வந்தபொழுது பாச ஞானத்தை வெறுத்துப் பதியாகிய சிவனை நோக்கி நின்று அவனைப் பல முறையால் வணங்குதலால் முன் கூறிய ஐம்மலங்களும் அற்றொழியும். ஆகவே, தம்மைக் கட்டி யுள்ள பாசக் கூட்டத்தால் தாம் சிவனை விட்டு நீங்கியிருக்கும் நிலையை முத்துரிய நிலைகளால் முறையே போக்கிச் சிவனை அடைய முயல்பவரே சற்குருவின் அருள்வழி நிற்கும் சாதகர் ஆவார்.

    பாடல் எண் : 12
    எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம்
    வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச்
    சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே
    செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே

    பொழிப்புரை:
    ஞானம் வரும்பொழுது ஆன்ம இயல்பு உள்ளவாறு விளங்கப்பெற்று, ஐந்து மலங்களும் சத்தியடங்கி நிற்க அவற்றைக் கடந்து மோனம் உடையராய் நிலைபெயராத வீட்டு நிலையை அடைதல் எளிதாகும். அந்நிலை சிவானந்தமே. ஞானியர் எல்லாரும் அதனைப் பெறவல்லவராவர்.

    பாடல் எண் : 13
    ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
    தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
    ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
    மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே .

    பொழிப்புரை:
    இழிவான பிறப்பு நிலையில் அதன் இழிவு தோன் றாதவாறு மறைத்து மீள மீள அதிலே நின்ற கருவிக் கூட்டத்தின் இயல்பை உணர்த்தி, அதனின்றும் பிரித்து உயிர் தனது இயல்பினைத் தான் உணருமாறு செய்து அவ்வுணர்விலே சிறிது காலம் நின்று தாமதிக்கச் செய்தலும், பின்பு இறைவன் இயல்பை உணர்த்தி உயிருணர்வினின்றும் பிரித்து இறை உணர்விலே நிலைத்திருக்கச் செய்தலும், பின் இறையின்பத்திலே தோய்ந்து பேச்சற்றிருக்கச் செய்தலும் ஆய இவையெல்லாம் முத்தான்மாவாய் நின்ற சற்குருவின் செய்கைகளாய் விளங்கும்.

    பதிலளிநீக்கு
  5. பாடல் எண் : 14
    அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
    சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச்
    சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச்
    சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே .

    பொழிப்புரை:
    சிவன் தனது கருணை காரணமாகச் செய்யும் முத் தொழில்களாகிய விளையாட்டு நிகழும் இடம் சடமாய மாயை யினிடத்திலாம். ஆயினும் அவ்விளையாட்டிற்குப் பயன் அறிவுடைப் பொருளாகிய உயிரை, `சித்து இவை, அசித்து இவை` என்பதை அறியச் செய்து மும்மலங்களைத் துடைத்துத் தூய்மையுறப் பண்ணி வேறு இரு தொழில்களால் மெய்ப்பொருளை அடையச் செய்தலேயாகும்.




    இப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக

    பாடல் எண் : 15
    ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம்
    பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
    நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
    தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே .

    பொழிப்புரை:
    உலகீர், எங்கள் சிவபெருமான் `தனக்கு வேறாய் விலகி நிற்கும் பொருள் எதுவும் இல்லை` என்று அறிந்து தன்பால் செலுத் தப்படும் அன்பிலே விளங்கி நிற்பவன். அத்தகைய அன்பர்க்கு அவன் அனைத்துப் பொருளின் உண்மைகளையும் தெளிவாக உணரக் காட்டி னான். ஆதலால் நீங்கள் `அவனது வியாபகத்தைக் கடந்து அவனின் வேறாக யாதொரு பொருளும் இல்லை` என உணர்ந்து உடம்பில் உள்ள பொழுதும் அவனை எவ்வகையிலேனும் உணர்ந்து போற்றுங்கள்.

    பாடல் எண் : 16
    மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
    ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது
    பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள்
    ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே .

    பொழிப்புரை:
    மாணிக்க மணிகளைக் கோத்த ஒரு வடத்தைத் தூங்கவிட்டது போல உடம்பினுள்ளே ஒன்றின்மேல் ஒன்றாய் அமைந்து ஒளிவிட்டு விளங்கும் ஏழு மண்டலங்கள் உள்ளன, அங் கெல்லாம் அவற்றுக்கு மேல் உள்ள மாற்றுயர்ந்த பொன் போல்வ தொரு நற்பொருளினின்றும் ஓர் அமுதம் ஊற்றெடுத்துப் பாய்கின்றது. அதனையறிந்து போற்றிக்கொண்டு உண்டவர்களே பிறப்பற்றிருக் கின்றார்கள். அதனை அறியாதவரெல்லாம் விலங்கொடொத்து உணவை உண்டு வயிறு வளர்ப்பதற்காகவே வாழ்கின்றனா.

    பாடல் எண் : 17
    அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க
    இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே
    அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே
    இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே .

    பொழிப்புரை:
    சத்தோடு கூடியவழிச் சத்தாம் தன்மையும், அசத்தோடு கூடியவழி அசத்தாம் தன்மையும் உடைத்தாதல் பற்றி, `சதசத்து` எனப் பெயர் பெற்ற உயிரை அநாதியில் சத்தோடு சேராது நீங்கச் செய்து, அசத்தோடு சேர்த்த ஆணவ மலத்தொடர்பு இப்பெத்த காலத்தில் அற்றொழிதற் பொருட்டு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இருமாயைகளைச் செயற்படுத்தி, உயிரையும் அச்செயற் பாட்டிற்கு உள்ளாக்கியவனும், பின் என்றும் திரிபின்றி ஒருபடித்தாய் நிற்பதாகிய உண்மையை உணர்த்தி, அவ்வுயிரை உய்யக் கொள்கின்ற வனும் இறைவனேயன்றிப் பிறர் இல்லை.

    பாடல் எண் : 18
    ஏறு நெறியே மலத்தை யிரித்தலால்
    ஈறில் உரையால் இருளை அறுத்தலால்
    மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக்
    கூறு பரனே குருவாம் இயம்பிலே .

    பொழிப்புரை:
    சத்திநிபாதம் படிமுறையால் நாளும் நாளும் மிகுந்து வரும் வகையால் ஆணவத்தைச் சிறிது சிறிதாக முறையே நீக்கி வருதலாலும், முடிவில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும் உப தேச மொழியால் அவ்வாணவங் காரணமாக இருந்து வந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தருதலாலும், பின்னும் பண்டை வாசனையால் பாச உணர்வு தோன்றுமாயின் அதனைத் தோன்றும் பொழுதே பசையின்றி உலர்ந்து கெடும்படி வாட்டி விடுதலாலும், ஆராய்ந்து சொல்லுமிடத்து எல்லா முதன்மையும் உடையவனாக உண்மை நூல்களில் கூறப்படுகின்ற இறைவனே உயிர்கட்கு வீடுபேறு கிடைக்கும்படி குருவாய் வருபவனாவான்.

    http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10735&padhi=%20&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

    பதிலளிநீக்கு
  6. வணங்கத் தகாதார்

    41. மிச்சை இலிங்கியர்நூல், தெய்வம், அவாவினோடு
    அச்சம், உலகத்தோடு ஆறு

    * பொய்க்காட்சியுடைய தவத்தர், நூல், தெய்வங்களை வணங்குதலும், அவாவினாலும், அச்சத்தாலும், உலக வழக்காலும் வணங்குதலும் ஆறு அவிநயம் ஆகும்.
    https://marainoolkal.blogspot.com/2022/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  7. அவிநய நீக்கம்

    42. இவ்வாறும் நீக்கி வணங்கார்; அவிநயம்
    எவ்வாறும் நீங்கல் அரிது.

    * இவ்வாறு குற்றம்பட்ட வணக்கத்தை மனத்தால் களைந்து நீக்காதாரிடம் அவிநயம் வேறு எவ்வாற்றானும் நீங்குதல் அருமையாகும்.

    பதிலளிநீக்கு
  8. எரேமியா 23:16

    சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் : “வீண் நம்பிக்கைகளால் உங்களை நிரப்பி, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்காதீர்கள். அவர்கள் தங்கள் சொந்த மனதின் தரிசனங்களைப் பேசுகிறார்கள், கர்த்தருடைய வாயிலிருந்து அல்ல

    பதிலளிநீக்கு
  9. 2 தெசலோனிக்கேயர் 2:9

    அக்கிரமக்காரனின் வருகை சாத்தானின் சகல வல்லமையினாலும் பொய்யான அடையாளங்களினாலும் அதிசயங்களினாலும்

    பதிலளிநீக்கு
  10. வெளிப்படுத்துதல் 2:20

    ஆனால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டு, என் வேலையாட்களுக்கு பாலியல் ஒழுக்கக்கேட்டைச் செய்யவும், விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை உண்பதற்கும் போதித்து, மயக்குகிற யேசபேல் என்ற பெண்ணை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று உனக்கு விரோதமாகச் சொல்லுகிறேன்

    டைட்டஸ் 1:11

    கற்பிக்கக்கூடாதவற்றை வெட்கக்கேடான ஆதாயத்துக்காகக் கற்பிப்பதன் மூலம் முழு குடும்பத்தையும் கலங்கடிப்பதால் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்

    2 பீட்டர் 1:19

    மேலும் எங்களிடம் இன்னும் உறுதியான ஒன்று உள்ளது, தீர்க்கதரிசன வார்த்தைகள், இருண்ட இடத்தில் பிரகாசிக்கும் விளக்கைப் பற்றி நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது, அது நாள் விடிந்து, உங்கள் இதயங்களில் விடிவெள்ளி நட்சத்திரம் உதிக்கும் வரை

    உபாகமம் 18:20

    ஆனால் நான் கட்டளையிடாத ஒரு வார்த்தையை என் பெயரால் பேசுவதாகக் கருதும் தீர்க்கதரிசியோ, மற்ற தெய்வங்களின் பெயரில் பேசுகிறாரோ, அதே தீர்க்கதரிசி மரணமடைவார்

    மத்தேயு 7:21-23

    “என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்லுகிற எவனும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான், மாறாக பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். அந்நாளில் பலர் என்னிடம், 'ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, உமது பெயரால் பேய்களைத் துரத்தி, உமது பெயரில் பல வல்லமைகளைச் செய்தோம் அல்லவா?' பின்னர் நான் அவர்களிடம், 'நான் உங்களை ஒருபோதும் அறிந்ததில்லை; அக்கிரமக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்

    1 தீமோத்தேயு 6:4
    தவறான போதகன் தற்பெருமையை உடையவன். அவனுக்கு எதுவும் புரியாது. வாக்குவாதங்களின் மேல் ஒரு நோய் கொண்ட உற்சாகத்தை உடையவனாக இருக்கிறான். அது பொறாமையையும், சண்டையையும், அவதூறுகளையும், பொல்லாத ஐயங்களையும் உண்டாக்குகின்றன.

    தீத்து 1:7
    ஒரு மூப்பர் தேவனுடைய பணியைக் கவனிக்கும் கடமையை உடையவர். எனவே, அவருக்குத் தவறு செய்தோம் என்ற குற்ற உணர்வு இருக்கக் கூடாது. தற்பெருமையும், சுயநலமும், முன் கோபமும் இல்லாதவராக இருக்கவேண்டும். அவர் குடிகாரனாக இருக்கக் கூடாது. சண்டைப் பிரியனாக இருக்கக் கூடாது. பிறரை ஏமாற்றிச் செல்வம் சேர்ப்பவராகவும் இருக்கக்கூடாது.

    மத்தேயு 24:24பயனுள்ளதா? ஆம் இல்லை
    ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் வழிதவறச் செய்யும்படி பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

    எசேக்கியேல் 7:24
    நான் மற்ற நாடுகளில் உள்ள கெட்ட ஜனங்களை அழைத்து வருவேன். அக்கெட்ட ஜனங்கள் இஸ்ரவேலில் உள்ள அனைத்து வீடுகளையும் அபகரித்துக்கொள்வார்கள். நான் உங்களது பலம் வாய்ந்த ஜனங்கள் பெருமைப்படுவதை நிறுத்துவேன். வெளிநாடுகளிலுள்ள அந்த ஜனங்கள் நீங்கள் தொழுகை செய்யும் இடங்களை எல்லாம் அபகரிப்பார்கள்

    எரேமியா 2:8
    “‘கர்த்தர் எங்கே?’ என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை, சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை, இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டார்கள்.”

    : 2பேதுரு: 1:20-21 வசனங்களாகும்:

    “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுய தோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்”

    பதிலளிநீக்கு


  11. பொய்த் தீர்க்கதரிசிகளை அறிவது எப்படி
    20 “ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். 21 ‘கர்த்தர் சொல்லாத சிலவற்றை இந்தத் தீர்க்கதரிசிக் கூறுகிறான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?’ என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், 22 கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+18&version=ERV-TA

    எசேக்கியேல் 22:28

    “தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரிப்பதில்லை. அவர்கள் உண்மையை மூடினார்கள். அவர்கள் சுவர் கட்டத்தெரியாத வேலைக்காரர்களைப் போன்றவர்கள். அவர்கள் துவாரங்களில் சாந்தை மட்டும் பூசுகிறவர்கள். அவர்கள் பொய்களை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள மந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்களை மட்டும் சொல்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு பேசவில்லை!

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%2022&version=ERV-TA

    நான் எப்படி ஒரு கள்ளப்போதகரை / கள்ளத்தீக்கத்தரிசியை அடையாளம் கண்டு கொள்வது?https://www.gotquestions.org/Tamil/Tamil-false-teacher.html

    மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். https://tamilchristiansongs.in/tamil/jeremiah-27-16/

    Jeremiah 27:14
    நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். https://tamilchristiansongs.in/tamil/jeremiah-27-14/

    Jeremiah 23:26
    எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். https://tamilchristiansongs.in/tamil/jeremiah-23-26/

    பதிலளிநீக்கு
  12. பொய்த் தீர்க்கதரிசிகள்
    13 “ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவன் ஒருவன் உங்களிடம் வந்து, ஒரு அடையாளத்தையோ அல்லது ஒரு அற்புதத்தையோ காட்டுவதாகச் சொல்லுவான். 2 அவன் சொன்னபடி அந்த அடையாளமோ, அற்புதமோ, உண்மையிலேயே நடந்திடலாம். நீங்கள் அறிந்திராத அந்நிய தெய்வங்களைச் சேவிப்போம் என்று அவன் உங்களிடம் சொல்வான். 3 அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார். 4 உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்! 5 அதுமட்டுமின்றி, நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவனைக் கொல்ல வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களைத் திசை திருப்பப் பேசினான். உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழும்படி கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து உங்களை வெளியே இழுக்க அந்த ஆள் முயற்சித்தான். எனவே நீங்கள் அவனைக் கொன்று அந்தத் தீமையை உங்களிடமிருந்து வெளியேற்றுங்கள். https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+13&version=ERV-TA

    https://tamilchristiansongs.in/tamil/hashtag/bible/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

    மத்தேயு 7
    மக்களின் செயல்களைக் கவனியுங்கள்
    15 ,“போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். 16 அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை. 17 அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும். 18 அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது. 19 நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும். 20 போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.

    21 ,“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். 22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%207&version=ERV-TA

    மத்தேயு 7
    மக்களின் செயல்களைக் கவனியுங்கள்
    15 ,“போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். 16 அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை. 17 அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும். 18 அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது. 19 நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும். 20 போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.

    பதிலளிநீக்கு

  13. 21 ,“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். 22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%207&version=ERV-TA

    எரேமியா 8
    Tamil Bible: Easy-to-Read Version
    8 கர்த்தர் சொல்லுகிறதாவது: “அந்தக் காலத்தில் மனிதர்கள் யூதாவின் அரசர்கள் மற்றும் முக்கிய ஆள்வோர்களின் எலும்புகளை அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஆசாரியர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். எருசலேமின் அனைத்து ஜனங்களின் எலும்புகளையும், அவர்களின் கல்லறைகளிலிருந்து அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். 2 அவர்கள் அந்த எலும்புகளை தரையின் மீது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு அடியில் பரப்பி வைப்பார்கள். எருசலேம் ஜனங்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை நேசித்து, பின்தொடர்ந்து, குறி கேட்டு தொழுதுகொண்டனர். எவரும் அந்த எலும்புகளைச் சேகரித்து மீண்டும் அடக்கம் செய்யமாட்டார்கள். எனவே, அந்த ஜனங்களின் எலும்புகள், பூமியின் மேல் எருவைப் போன்று எறியப்படும்.

    3 “யூதாவின் பொல்லாத ஜனங்களை நான் கட்டாயப்படுத்தி அவர்களது வீட்டை விட்டும் நாட்டை விட்டும் போகும்படிச் செய்வேன். ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். போரில் கொல்லப்படாத யூதா ஜனங்களில் சிலர் தாம் கொல்லப்பட விரும்புவார்கள்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
  14. ஏசாயா 44:25
    பொய்த் தீர்க்கதரிசிகள் பொய் சொல்கிறார்கள். ஆனால் கர்த்தர் அவர்களின் தீர்க்கதரிசனங்கள் போலியானவை என்று காட்டுகிறார். கர்த்தர் மந்திரவேலை செய்பவர்களை முட்டாளாக்குகிறார். கர்த்தர் ஞானிகளைக் குழப்புகிறார். அவர்கள் தமக்கு மிகுதியாகத் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், கர்த்தர் அவர்களை முட்டாளாக்குகின்றார்.

    எரேமியா 14:14
    பிறகு, கர்த்தர் என்னிடம், “எரேமியா, அந்தத் தீர்க்கதரிசிகள் எனது நாமத்தால் பொய்களைப் பரப்புகிறார்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. நான் அவர்களுக்குக் கட்டளைக் கொடுக்கவோ அவர்களோடு பேசவோ இல்லை. அந்தத் தீர்க்கதரிசிகள், பொய்ச் சாட்சிகளையும், பயனற்ற மந்திரங்களையும், சொந்த ஆசைகளையும் பரப்பியிருக்கிறார்கள்.

    எரேமியா 14:15
    எனவே, நான் இதைத்தான் என் நாமத்தால் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்களைப்பற்றிக் கூறுவது, அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. அந்தத் தீர்க்கதரிசிகள் சொன்னார்கள், ‘இந்த நாட்டைப் பகைவர்கள் எவரும் வாளால் தாக்கமாட்டார்கள், இந்த நாட்டில் எப்பொழுதும் பசி இருக்காது.’ அத்தீர்க்கதரிசிகள் பசியால் மரிப்பார்கள். பகைவரின் வாள் அவர்களைக் கொல்லும்.

    எரேமியா 23:25
    “என் நாமத்தில் பொய்யைப் பிரசங்கம் செய்யும் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது. எனக்கு ஒரு கனவு வந்தது’ என்றார்கள். அவர்கள் இவற்றைச் சொல்வதை நான் கேட்டேன்.

    எரேமியா 27:16
    பிறகு, நான் (எரேமியா) ஆசாரியர்களிடமும் அனைத்து ஜனங்களிடமும் சொன்னேன். “கர்த்தர் சொல்கிறார்: அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பலப் பொருட்களை எடுத்தனர். அப்பொருட்கள் மீண்டும் விரைவில் திரும்பக் கொண்டுவரப்படும்.’ அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேளாதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

    எரேமியா 37:19
    சிதேக்கியா அரசனே, உனது தீர்க்கதரிசிகள் இப்பொழுது எங்கே? அந்தத் தீர்க்கதரிசிகள் உன்னிடம் பொய்யைச் சொன்னார்கள். அவர்கள், ‘பாபிலோன் அரசன் உன்னையோ இந்த யூதா தேசத்தையோ தாக்கமாட்டான்’ என்றார்கள்.

    புலம்பல் 2:14
    உனது தீர்க்கதரிசிகள் உனக்காகத் தரிசனம் கண்டார்கள். ஆனால் அவர்களது தரிசனங்கள் எல்லாம் பயனற்றவைகளாயின. அவர்கள் உனது பாவங்களுக்கு எதிராகப் பேசவில்லை. அவர்கள் காரியங்களைச் சரிபண்ண முயற்சி செய்யவில்லை. அவர்கள் உனக்கு செய்திகளைப் பிரசங்கித்தனர். ஆனால் அவை உன்னை ஏமாற்றும் செய்திகள்.

    புலம்பல் 4:13
    எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் செய்த பாவத்தால் இது நிகழ்ந்தது. எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் செய்த தீயச்செயல்களால் இது நிகழ்ந்தது. எருசலேம் நகரில் அந்த ஜனங்கள் இரத்தம் வடித்துக்கொண்டிருந்தார்கள். நல்ல ஜனங்களின் இரத்தத்தை அவர்கள் சிந்திக்கொண்டிருந்தார்கள்.

    எசேக்கியேல் 13:10
    “மீண்டும் மீண்டும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் என் ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். சமாதானம் இருக்கிறது என்று தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். ஆனால் அங்கே சமாதானம் இல்லை. ஜனங்களுக்கு சுவரை நிர்மாணித்து போர் செய்ய தயாராகிட அவசியம் இருந்தது. ஆனால் அவர்கள் உடைந்த சுவரின் மேல் ஒரு மெல்லிய பூச்சை மட்டுமே பூசினார்கள்.

    எசேக்கியேல் 13:17
    தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அப்பெண் தீர்க்கதரிசிகள் எனக்காகப் பேசுவதில்லை. அவர்கள் விரும்புவதையே சொல்லுகிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நீ எனக்காக அவர்களிடம் பேச வேண்டும்.

    எசேக்கியேல் 22:28
    “தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரிப்பதில்லை. அவர்கள் உண்மையை மூடினார்கள். அவர்கள் சுவர் கட்டத்தெரியாத வேலைக்காரர்களைப் போன்றவர்கள். அவர்கள் துவாரங்களில் சாந்தை மட்டும் பூசுகிறவர்கள். அவர்கள் பொய்களை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள மந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்களை மட்டும் சொல்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு பேசவில்லை!

    மீகா 3:5
    பொய்த் தீர்க்கதரிசிகள்
    சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி இதனைச் சொல்கிறார். “இந்தத் தீர்க்கதரிசிகள் வயிற்றுக்காக உழைக்கிறவர்கள். உணவு கொடுக்கும் ஜனங்களுக்குச் சமாதானம் வரும் என்று உறுதி கூறுவார்கள். ஆனால் உணவு கொடுக்காதவர்களிடத்தில் அவர்களுக்கு எதிராக போர் வரும் என்று உறுதி கூறுவார்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஆமோஸ் 3
    Tamil Bible: Easy-to-Read Version
    இஸ்ரவேலுக்கான எச்சரிக்கை
    3 இஸ்ரவேல் ஜனங்களே, இந்தச் செய்தியைக் கவனியுங்கள். இஸ்ரவேலே உங்களைபற்றி கர்த்தர் இவற்றைக் கூறினார். இந்த செய்தி நான் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த எல்லாக் குடும்பங்களையும் (இஸ்ரவேல்) பற்றியது. 2 “பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.”

    இஸ்ரவேலின் தண்டனைக்கான காரணம்
    3 இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய
    ஒரே வழியில் நடக்க முடியாது.
    4 காட்டிலுள்ள சிங்கம்,
    ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும்.
    ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால்,
    அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்.
    5 கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால்
    ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது.
    கண்ணி மூடினால்
    அது பறவையைப் பிடிக்கும்.
    6 எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால்,
    ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள்.
    நகரத்திற்கு துன்பம் வந்தால்,
    அதற்கு கர்த்தர் காரணமாவார்.

    7 எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். 8 ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.

    9-10 நீங்கள் அஸ்தோத்தின் கோபுரங்களுக்கும், எகிப்துக்கும் போய் இச்செய்தியைக் கூறுங்கள். “சமாரியாவின் மலைகளுக்கு வாருங்கள். நீங்கள் அங்கே பெருங்குழப்பத்தைக் காண்பீர்கள். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரியாக வாழ்வது எப்படி என்று தெரியாது. அந்த ஜனங்கள் மற்ற ஜனங்களிடம் கொடூரமாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பொருட்களை எடுத்துத் தங்கள் கோபுரங்களில் ஒளித்து வைத்தார்கள். அவர்கள் போரில் எடுத்தப் பொருட்களால் அவர்களது கருவூலங்கள் நிறைந்திருக்கின்றன.”

    11 எனவே கர்த்தர் சொல்கிறார்: “ஒரு பகைவன் அந்த நாட்டிற்கு வருவான். அந்தப் பகைவன் உன் பலத்தை எடுத்துப்போடுவான். நீ உயர்ந்த கோபுரங்களில் ஒளித்து வைத்த பொருட்களை அவன் எடுப்பான்.”

    12 கர்த்தர் கூறுகிறார்,

    “ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம்.
    மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம்.
    ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான்.
    அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள்
    அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும்.
    அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.
    சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ
    அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.”

    13 என் ஆண்டவரும், சர்வ வல்லமையுள்ள தேவனுமாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார் “யாக்கோபின் குடும்பத்தை (இஸ்ரவேல்) எச்சரிக்கை செய். 14 இஸ்ரவேல் பாவம் செய்தது. நான் அவர்களைத் தங்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் பெத்தேலில் உள்ள பலிபீடங்களையும் அழிப்பேன். பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு தரையில் கிடக்கும். 15 நான் மழைக்கால வீட்டைக் கோடைகால வீட்டோடு அழிப்பேன். தந்தத்தால் ஆன வீடுகள் அழிக்கப்படும். பல வீடுகள் அழிக்கப்படும்” என்று கர்த்தர் கூறுகிறார்

    பதிலளிநீக்கு
  16. எசேக்கியேல் 13

    13 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, நீ எனக்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளிடம் பேச வேண்டும். அத்தீர்க்கதரிசிகள் உண்மையில் எனக்காகப் பேசவில்லை, அவர்கள் தாம் சொல்ல விரும்புவதையே சொல்கிறார்கள். எனவே நீ அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் இவற்றைப் பேசு, ‘கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தியைக் கேளுங்கள்! 3 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். மூடத் தீர்க்கதரிசிகளே, உங்களுக்குத் தீயவை ஏற்படும். நீங்கள் உங்களது சொந்த ஆவிகளைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் உண்மையில் எவற்றைத் தரிசிக்கிறீர்களோ அவற்றை ஜனங்களிடம் கூறுவதில்லை.
    ...
    16 “இஸ்ரவேலில் உள்ள பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு இவை எல்லாம் ஏற்படும். அத்தீர்க்கதரிசிகள் எருசலேம் ஜனங்களிடம் பேசுகிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் சமாதானம் உண்டென்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

    17 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அப்பெண் தீர்க்கதரிசிகள் எனக்காகப் பேசுவதில்லை. அவர்கள் விரும்புவதையே சொல்லுகிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நீ எனக்காக அவர்களிடம் பேச வேண்டும். 18 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: பெண்களாகிய உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நீங்கள், ஜனங்கள் தம் கையில் அணிந்துகொள்ளத் தாயத்துகளைச் செய்கிறீர்கள். ஜனங்கள், தம் தலையில் அணிந்துக்கொள்ள சிறப்பான முக்காட்டுச் சேலைகளை உண்டாக்குகிறீர்கள். ஜனங்களது வாழ்வை அடக்கி ஆள மந்திரசக்தி இவற்றில் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களது வாழ்வுக்காக அந்த ஜனங்களை நீங்கள் வேட்டையாடுகிறீர்கள்! 19 நான் முக்கியமானவனில்லை என்று ஜனங்களை நினைக்கும்படிச் செய்கிறீர்கள். சில பிடி வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் அவர்களை எனக்கு எதிராக நீங்கள் திருப்புகிறீர்கள். நீங்கள் என் ஜனங்களிடம் பொய் கூறுகிறீர்கள். அவர்கள் பொய்களைக் கேட்க விரும்புகிறார்கள். வாழவேண்டிய ஜனங்களைக் கொல்லுகிறீர்கள். மரிக்கவேண்டிய ஜனங்களை வாழவைக்கிறீர்கள். 20 எனவே கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நீங்கள் துணியையும் தாயத்துக்களையும் ஜனங்களை வலைக்குட்படுத்த உருவாக்குகிறீர்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை விடுவிப்பேன். அவர்கள் கைகளிலிருந்து அத்தாயத்துகளைப் பிய்த்து எறிவேன். ஜனங்கள் உங்களிடமிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்கள் வலையிலிருந்து பறக்கும் பறவைகளைப்போன்று இருப்பார்கள்! 21 நான் உங்கள் முக்காட்டுச் சேலைகளைக் கிழித்து உங்கள் வல்லமையிலிருந்து என் ஜனங்களைக் காப்பேன். அந்த ஜனங்கள் உங்கள் வலைகளிலிருந்து தப்புவார்கள். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    22 “‘தீர்க்கதரிசிகளாகிய நீங்கள் பொய்களைச் சொல்கிறீர்கள். உங்களது பொய்கள் நல்ல ஜனங்களைப் புண்படுத்துகின்றன. அந்த நல்ல ஜனங்கள் புண்படுவதை நான் விரும்புவதில்லை. நீங்கள் கெட்ட ஜனங்களை ஆதரிக்கிறீர்கள், உற்சாகப்படுத்துகிறீர்கள். அவர்களின் வாழ்வை மாற்றும்படி நீங்கள் அவர்களிடம் சொல்வதில்லை. அவர்களின் வாழ்வைக் காப்பாற்ற நீங்கள் முயல்வதில்லை! 23 எனவே இனி நீங்கள் பயனற்ற தரிசனங்களைக் காண்பதில்லை. இனிமேல் நீங்கள் எவ்வித மந்திரமும் செய்யப் போவதில்லை. நான் எனது ஜனங்களை உங்களது சக்திகளிலிருந்து காப்பாற்றுவேன். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.’”
    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%2013&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  17. மீகா 3:7
    தீர்க்கதரிசிகள் வெட்கப்படுகிறார்கள். திர் காலத்தை குறித்து சொல்கிறவர்கள் அவமானப்படுகிறார்கள். அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் தேவன் அவர்களோடு பேசமாட்டார்.”

    சகரியா 13:2
    இனி கள்ளத் தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள்
    சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில் நான் பூமியிலுள்ள அனைத்து விக்கிரகங்களையும் நீக்குவேன். ஜனங்கள் அவற்றின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திருக்கமாட்டார்கள். நான் பூமியிலிருந்து கள்ளத்தீர்க்கதரிசிகளையும், சுத்தமற்ற ஆவிகளையும் நீக்குவேன்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%2013%3A2&version=ERV-TA

    மத்தேயு 24:11
    பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  18. Jeremiah 23:26
    எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். https://tamilchristiansongs.in/tamil/jeremiah-23-26/

    Jeremiah 27:14
    நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். https://tamilchristiansongs.in/tamil/jeremiah-27-14/

    மத்தேயு 7:21-23

    “என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்லுகிற எவனும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான், மாறாக பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். அந்நாளில் பலர் என்னிடம், 'ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, உமது பெயரால் பேய்களைத் துரத்தி, உமது பெயரில் பல வல்லமைகளைச் செய்தோம் அல்லவா?' பின்னர் நான் அவர்களிடம், 'நான் உங்களை ஒருபோதும் அறிந்ததில்லை; அக்கிரமக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்

    தீத்து 1:7
    ஒரு மூப்பர் தேவனுடைய பணியைக் கவனிக்கும் கடமையை உடையவர். எனவே, அவருக்குத் தவறு செய்தோம் என்ற குற்ற உணர்வு இருக்கக் கூடாது. தற்பெருமையும், சுயநலமும், முன் கோபமும் இல்லாதவராக இருக்கவேண்டும். அவர் குடிகாரனாக இருக்கக் கூடாது. சண்டைப் பிரியனாக இருக்கக் கூடாது. பிறரை ஏமாற்றிச் செல்வம் சேர்ப்பவராகவும் இருக்கக்கூடாது.

    உபாகமம் 18:20

    ஆனால் நான் கட்டளையிடாத ஒரு வார்த்தையை என் பெயரால் பேசுவதாகக் கருதும் தீர்க்கதரிசியோ, மற்ற தெய்வங்களின் பெயரில் பேசுகிறாரோ, அதே தீர்க்கதரிசி மரணமடைவார்

    மத்தேயு 24:24பயனுள்ளதா? ஆம் இல்லை
    ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் வழிதவறச் செய்யும்படி பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

    எசேக்கியேல் 22:28

    “தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரிப்பதில்லை. அவர்கள் உண்மையை மூடினார்கள். அவர்கள் சுவர் கட்டத்தெரியாத வேலைக்காரர்களைப் போன்றவர்கள். அவர்கள் துவாரங்களில் சாந்தை மட்டும் பூசுகிறவர்கள். அவர்கள் பொய்களை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள மந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்களை மட்டும் சொல்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு பேசவில்லை!

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%2022&version=ERV-TA

    எசேக்கியேல் 7:24
    நான் மற்ற நாடுகளில் உள்ள கெட்ட ஜனங்களை அழைத்து வருவேன். அக்கெட்ட ஜனங்கள் இஸ்ரவேலில் உள்ள அனைத்து வீடுகளையும் அபகரித்துக்கொள்வார்கள். நான் உங்களது பலம் வாய்ந்த ஜனங்கள் பெருமைப்படுவதை நிறுத்துவேன். வெளிநாடுகளிலுள்ள அந்த ஜனங்கள் நீங்கள் தொழுகை செய்யும் இடங்களை எல்லாம் அபகரிப்பார்கள்

    பதிலளிநீக்கு
  19. 2 பேதுரு 2:10
    குறிப்பாக பாவங்களால் நிறைந்து ஊழல்கள் மலிந்த வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கர்த்தரின் அதிகாரத்தை மீறுகிறவர்களுக்கும் இத்தண்டனை கிடைக்கும். போலிப்போதகர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார்கள். மட்டுமன்றி, தங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வார்கள். மகிமை மிக்க தேவதூதர்களைக் குறித்துத் தீயவற்றைப் பேசுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  20. 2 பேதுரு 2:11
    இந்தப் போலிப் போதகர்களைக் காட்டிலும் தேவதூதர்கள் வலிமையும் ஆற்றலும் மிக்கவர்கள். ஆனால் தேவதூதர்களும்கூட கர்த்தரின் முன்னிலையில் இந்தப் போலிப் போதகர்களைப் பற்றிக் குற்றம் சாட்டும்போது அவமானப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை.

    பதிலளிநீக்கு
  21. பொய்

    உலகநீதி 205

    வீரியமாய்ச் செய்வனெனல் அற்பரையே
    துதித்தல்பொய்யை வியந்து கொள்ளல்
    சீரியரை இகழ்தல்பிறர் மீதொருவன்
    சொலும்பழியைச் செவியிற் கோடல்.

    உலகில், பொய் சொல்லல். பொய்சொல்ல நினைத்தல், பிறரைப் பொய் சொல்லப் பழக்குதல், ஒன்றைச் செய்வேன் எனக் கூறிச் செய்யாதொழிதல், முடியாச் செயலை முடிப்பேன் எனல், கீழோரைப் புகழ்தல், பொய்யைப் பாராட்டல், மேலோரை இகழ்தல், பழிச்சொற்களைக் கேட்டல்.

    https://www.tamilvu.org/slet/l7100/l7100pd1.jsp?bookid=139&pno=101

    பதிலளிநீக்கு
  22. பொய் தீர்க்கதரிசிகள்

    • சிதேக்கியா: ஆகாபையும் யோசபாத்தையும் ராமோத்-கிலேயாத்துக்கு எதிராகப் போரிட ஊக்குவித்த நானூறு கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு கெனானாவின் மகன் சிதேக்கியா தலைவராக இருந்ததாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் ஆகாபை மரணத்திற்கு இழுக்கும் நோக்கத்திற்காக கடவுளால் அனுப்பப்பட்ட பொய்யான ஆவியைக் கொண்டிருந்தனர் ( 1 இராஜாக்கள் 22:1-12 ).

    • ஹனானியா: பாபிலோனிய சிறையிருப்புக்கு முந்தைய ஆண்டுகள் நம்பிக்கையற்ற யூதர்களுக்கு பயமுறுத்தும் காலங்களாக இருந்தன, மேலும் எரேமியா பாபிலோனியர்களுக்கு அடிபணியவும், அவர்களை நாடுகடத்தலில் இருந்து திரும்பக் கடவுளை நம்பும்படியும் தொடர்ந்து அவர்களிடம் கூறியது உதவவில்லை. ஹனனியா போன்ற தீர்க்கதரிசிகள் எரேமியாவின் தீர்க்கதரிசனங்களுக்கு பகிரங்கமாக முரண்பட்டனர் மற்றும் கடவுள் தம் மக்கள் மீது கோபமாக இருப்பதை மறுத்தார் ( எரேமியா 28 ).

    • ஆகாப் மற்றும் சிதேக்கியா: பாபிலோனிய நாடுகடத்தப்பட்டவர்களுக்கு எழுதிய கடிதத்தில், எரேமியா அவர்கள் யூதாவுக்கு வாக்களிக்கப்பட்ட திரும்பி வருவதை ஊக்குவித்தார் மற்றும் எருசலேமில் தங்கியிருந்தவர்களுக்கு பெரும் கஷ்டங்களை முன்னறிவித்தார். கடவுளின் பெயரில் பொய்யாக தீர்க்கதரிசனம் கூறிய கோலாயாவின் மகன் ஆகாப் மற்றும் மசேயாவின் மகன் சிதேக்கியா ஆகியோரை அவர் குறிப்பாகக் கண்டித்தார் ( எரேமியா 29:15-23 ).

    • செமயாஹா மற்றும் நோடியா: ஜெருசலேமில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களிடம் அர்தக்செர்க்ஸ் நகரச் சுவரை மீண்டும் கட்டலாம் என்று கூறியிருந்த போதிலும், அவர்களது அண்டை வீட்டுக்காரர்கள் அவர்களின் முயற்சிகளை எதிர்த்து அவர்களை அச்சுறுத்தினர். நெகேமியா பாபிலோனிலிருந்து பொருட்களையும், சுவரைக் கட்டி முடிக்க உந்துதலுடனும் வந்தார். செமையா நெகேமியாவை கோவிலில் மறைத்து வைக்க முயன்றார். நோதியாவும் மற்ற தீர்க்கதரிசிகளும் என்ன செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நெகேமியா கடவுளை நம்பினார் மற்றும் அவர்களின் பொறிகளில் சிக்கவில்லை ( நெகேமியா 6:9-14 ).

    • சைமன் மந்திரவாதி: சுவிசேஷம் வந்தபோது சைமன் சமாரியாவில் மந்திரவாதியாக இருந்தான். சைமன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தார், ஆனால் அவர் அப்போஸ்தலர்களின் அதிகாரத்தில் ஒரு பங்கையும் விரும்பினார். பேதுருவால் கண்டிக்கப்பட்ட பிறகு, தனக்காக ஜெபிக்கும்படி அப்போஸ்தலர்களிடம் கேட்டார் ( அப்போஸ்தலர் 8:9-24 ).

    • எலிமாஸ் (அக்கா பார்-ஜீசஸ்): பர்னபாஸும் பவுலும் சைப்ரஸில் யூத பொய்யான தீர்க்கதரிசி எலிமாஸை சந்தித்தனர். எலிமாஸ், பவுல் மற்றும் பர்னபாஸின் செய்தியிலிருந்து அதிபரைத் திசைதிருப்ப முயன்றார், ஆனால் பவுல் அவரை குருட்டுத்தன்மையால் சபித்தார், மேலும் அவர் நம்பினார் ( அப்போஸ்தலர் 13:4-12 ).

    • அதிர்ஷ்டம் சொல்லும் பெண்: பவுலும் சீலாவும் பிலிப்பியில் லிடியாவுடன் தங்கியிருந்தபோது, ​​கணிப்பு ஆவி பிடித்த ஒரு அடிமைப் பெண் அவர்களைச் சந்தித்தாள். இளம் அடிமைப் பெண் பல நாட்கள் அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்கள் யார் என்பதை அறிவித்தார். பால் அவளுடைய தேவையற்ற தீர்க்கதரிசனங்களால் சோர்வடைந்து, இறுதியாக ஆவி அவளை விட்டு வெளியேறும்படி கூறினார். அதைச் செய்தது, மேலும் அவர்களின் அதிர்ஷ்டம் சொல்லும் தொழிலை அழித்ததற்காகப் பெண்ணின் உரிமையாளர்கள் பால் மற்றும் சீலாஸை சிறையில் தள்ளினார்கள் ( அப்போஸ்தலர் 16:16-24 ).

    • யேசபேல்: தியத்தீராவில் உள்ள தேவாலயத்தை இயேசு கண்டித்ததில், "தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்ளும் அந்த பெண் யேசபேலை" அவர்கள் ஏற்றுக்கொண்டதையும், கடவுளுடைய மக்களை பாலியல் ஒழுக்கக்கேடு மற்றும் உருவ வழிபாட்டிற்கு இட்டுச் சென்றதையும் அவர் கண்டனம் செய்தார் ( வெளிப்படுத்துதல் 2:20-23 ).

    • பொய்யான தீர்க்கதரிசி: யூதா மற்றும் இஸ்ரவேலின் ராஜாக்களில் பலருக்கு கடவுளின் வழிகாட்டுதலை வழங்கிய குறிப்பிட்ட தீர்க்கதரிசிகள் இருந்ததைப் போலவே, கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்து ஒரு தவறான தீர்க்கதரிசியைப் பெறுவார் . அந்திக்கிறிஸ்துவை வழிபட உலகை வசீகரிப்பதே அவனது வேலையாக இருக்கும், மேலும் அவனால் உலகை வழிதவறச் செய்ய விரிவான அற்புதங்களைச் செய்ய முடியும் ( வெளிப்படுத்துதல் 13:11-15 ; 16:13 ; 19:20 ; 20:10 ).

    https://www.gotquestions.org/prophets-in-the-Bible.html

    பதிலளிநீக்கு
  23. ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி

    ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை

    ஞானிகளாலே நரபதி சோதித்து

    ஞானம் உண்டாக்குதல் நலம்ஆகும் நாட்டிற்கே (திருமந்.242)

    மெய்யறிவே இல்லாத ஏமாற்றுக்காரர்கள், சடையும் தாடியும் அணியும் ஆடையுமாக வேடமிட்டு, ஞானிகள்போல நடிக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே ஞானிகள்தாமா என்று உண்மையான ஞானிகளைவிட்டு அரசாங்கம் பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு சோதித்து, ஒன்று அந்தப் பொய் ஞானிகளுக்கு உண்மை ஞானத்தை உண்டாக்க வேண்டும்; அல்லது அந்தப் பொய் ஞானிகளை நம்புகிற ஏமாளிகளுக்குப் போலிக் குருவின் பொய் வேடம் பற்றிய ஞானத்தை உண்டாக்க வேண்டும். இதைச் செய்தால் நாட்டுக்கு நல்லது என்கிறார் திருமூலர்.

    https://yarl.com/forum3/topic/201535-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  24. அவா உடையார் ஆசிரியர் ஆகார் பாடல் - 53

    மாடமும் மண் ஈடும் கண்டுஅடக்கம் இல்லாரைக்
    கூடி வழிபடும் கோளமை - ஆடுஅரங்கின்
    நோவக மாய் நின்றான்ஓர் கூத்தனை ஊர்வேண்டிச்
    சேவகமாய் நின்றது உடைத்து.

    விளக்கவுரை சிறிய வீட்டையும் பெரிய மாளிகைகளையும் பார்த்து அடங்காத ஆசை உடையவரைத் தலைப்பட்டு ஆசிரியர் எனக் கருதி வழிபடும் தன்மை, அமைக்கப்பட்ட நடன சாலையில் வருத்தம் உடையவனாய் நிற்பவனான கூத்தன் நடிக்க, அவன் கொண்ட அரச கோலத்தைக் கண்டு மயங்கி, அவனை ஊரார் தம்மை ஆள்க என்று சொல்லிப் பணி செய்து நிற்பதைப் போன்றதாகும் https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  25. 1 ஜான் 4:1

    பிரியமானவர்களே, எல்லா ஆவிகளையும் நம்பாதீர்கள், ஆனால் ஆவிகள் கடவுளிடமிருந்து வந்ததா என்று சோதிக்கவும், ஏனென்றால் பல பொய்யான தீர்க்கதரிசிகள் உலகத்திற்கு வந்திருக்கிறார்கள்

    https://www.openbible.info/topics/bad_friends

    பதிலளிநீக்கு
  26. மத்தேயு 7:மக்களின் செயல்களைக் கவனியுங்கள்

    15 ,“போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். 16 அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை. 17 அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும். 18 அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது. 19 நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும். 20 போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.

    21 ,“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். 22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%207&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  27. ஞானக்குறள் 152.

    வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
    ஆக்கிய நூலினு மில்.

    வாக்கு வல்லமை உடையோராலும், பெயர் புகழுக்கு ஆசைப் படுபவராலும், ஐயம் முதலியவை நீங்காது மயங்கிக் கொண்டிருக்கும் மதத்தை யுடையோராலும் எழுதப்பட்ட நூல்களாலும் முத்தி கிடையாது.

    பதிலளிநீக்கு
  28. உபாகமம் 13:1-18

    "ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவு காண்பவர் உங்களிடையே தோன்றி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையோ அல்லது அதிசயத்தையோ கொடுத்தால், அவர் உங்களுக்குச் சொல்லும் அறிகுறி அல்லது அதிசயம் நிறைவேறும், மேலும் அவர் 'பிற தெய்வங்களைப் பின்பற்றுவோம்' என்று சொன்னால். அவர்களுக்குப் பணிவிடை செய்வோம்' என்று தெரியாது, அந்த தீர்க்கதரிசியின் வார்த்தைகளையோ அல்லது கனவு காண்பவரின் வார்த்தைகளையோ நீங்கள் கேட்காதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நேசிக்கிறீர்களா என்பதை அறிய உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி , அவருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தீர்க்கதரிசி அல்லது கனவு காண்பவர் கொல்லப்படுவார், ஏனென்றால் அவர் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யக் கற்றுக்கொடுத்தார் , அவர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டு வந்து, உங்களை வழியை விட்டு வெளியேறும்படி உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டார். அதில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நடக்கக் கட்டளையிட்டார். எனவே, உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  29. மத்தேயு 7:21-23 ESV / 276 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    “என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்லுகிற எவனும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான், மாறாக பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். அந்நாளில் பலர் என்னிடம், 'ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, உமது பெயரால் பேய்களைத் துரத்தி, உமது பெயரால் பல வல்லமைகளைச் செய்தோம் அல்லவா?' பின்னர் நான் அவர்களிடம், 'நான் உங்களை ஒருபோதும் அறிந்ததில்லை; அக்கிரமக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.

    பதிலளிநீக்கு
  30. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.; ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ப் பிரவேசியாமல் வேறு வழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

    யோவான் 10:1

    கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்!; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

    மத்தேயு 7:15

    https://www.onlinepj.in/index.php/books/islamic-tamil-books/iyesu-siluvaiyil-araiyapada-villai

    பதிலளிநீக்கு
  31. இவர்கள் கூறுவது உண்மையானால் நாட்டில் உள்ள எல்லா குருடர்களுக்கும் பார்வை வழங்கிக் காட்டட்டும். குருடனைப் போல் நடிக்க வைத்து அவனுக்கு பார்வை வந்தது போல் நடிக்கச் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். மதத்தைப் பரப்புவதற்காகப் பொய் சொல்லலாம் என்று வேதப் புத்தகத்திலேயே எழுதி வைத்துக் கொண்டவர்கள் இவர்கள்.

    அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?முதலாம் கொரிந்தியர்-9:7

    உலகில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆள் பிடிக்கலாம் என்பதை வேதத்திலேயே எழுதி வைத்துக் கொண்டவர்கள் இவர்கள் மட்டுமே.

    இது குறித்தும் இயேசு எச்சரிக்கை செய்துள்ளார்.

    அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:11

    பதிலளிநீக்கு
  32. சித்தர் சிவவாக்கியம் -541

    நீரினில் குமிழியொத்த நிலையிலாத காயமென்று
    ஊரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர்
    சீரினிற் உனக்கு ஞான சித்தி செய்வேன் பாரென
    நேரினிற் பிறர் பொருளை நீளவுங் கைப்பற்றுவர்.

    நீர்மேல் நிற்கும் குமிழியைப் போன்றது நிலையில்லாத உடம்பு இது என்று ஞானம் பேசி, தாங்களே அவதாரமாக வந்த உண்மையான குருவென்று ஊர் முழுவது பறையடித்து பிரச்சாரம் செய்து உண்மைப்பொருள் அறியாத உதாரியாய் திரியும் போலிக் குருவானவர் ஊரிலுள்ளோரை எல்லாம் அழைத்து ஞானம் பெற என்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில் உங்களுக்கு ஞான சித்தியை நானே கொடுப்பேன் என அழைப்பு விடுத்து ஒவ்வொரு படியாக உபதேசம் பெறவேண்டும் எனக் கூறி அதற்கு நிகராக பிறர் பொருளை கட்டணம் என்று கட்டாயமாக வசூல் செய்து வாழ்நாள் முழுதும் நெடுக கைப்பற்றுவார்கள். இவர்களை கண்டு ஏமாறாதீர்கள்.

    ***************************************************
    சித்தர் சிவவாக்கியம் -542
    காவியுஞ் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
    தாவுருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள்
    தேவியை அலைய விட்டுத் தேசமெங்குஞ் சுற்றியே
    பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.

    காவி ஆடை, சடாமுடி, கமண்டலம், மான் தோல் ஆசனம், கழுத்திலும் உடம்பிலும் உருத்திராட்சம் யோகத்தண்டு இவைகளைக் கொண்டு சாமியார் வேடம் போட்ட சோம்பேறி மாடுகளான மனிதர்கள், தங்கள் மனைவியை தவிக்கும்படி அலையவிட்டு விட்டு தேசமெங்கும் சுற்றி பிச்சை எடுப்பார்கள். அதனால் பாவியாகி சோற்றுக்காக வீடெல்லாம் சென்று அம்மா தாயே பசி என்று கேட்டு அலைவார்கள்.

    ****************************************************
    சித்தர் சிவவாக்கியம் -543
    முத்தி சேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
    சத்தியங்கள் சொல்லி அங்கும் சாமி வேடம் பூண்டவர்
    நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
    பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ் நரகில் வீழ்வரே.
    .
    ஜீவன் முக்தி அடைவதற்குள்ள சித்தியை இங்கு முன்னதாக உடனே நான் தருவேன் பாருங்கள் என்று சத்தியங்கள் சொல்லி சாமி வேடம் பூண்டவர், நித்தியம் தன் வயிறு வளர்க்க பல நீதிக் கதைகளையும் சொல்லி ஞானப் பொருளறியாமல் ஞானம் பேசிப் பேசியே குருபக்தியை எடுத்துரைத்து பணத்தை பறிப்பார்கள். யோக ஞானத்தை விலை வைத்து விற்பதால் இவர்கள் பாழும் நரகத்தில் விழுவார்கள்.

    பதிலளிநீக்கு