போர் நெறி


ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம்.

போர் தொடர்பான சட்டங்களுள் ஒன்றாக, எப்போது போர் செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இஸ்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லிம்கள் போர் செய்ய வேண்டும் எனில் முதலில் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசு, அரசாங்கம் இருக்க வேண்டும். அந்த அரசு நியமித்த படைத் தலைவரின் தலைமையில் முஸ்லிம்கள் அணிதிரண்டு ஒரு படையாக இருந்து போர் செய்ய வேண்டும். இவ்வாறு இல்லாமல், முஸ்லிம்கள் தங்களது சுய முடிவின் அடிப்படையில் தனியாகவோ, குழுக்களாகவோ, கூட்டங்களாகவோ, இயக்கங்களாகவோ இருந்து முடிவெடுத்து கொண்டு போர் செய்யப் புறப்பட்டுச் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

போருக்கு வருவோருடன் மட்டுமே போர்

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.
(திருக்குர்ஆன் 9:13)

பாதிக்கப்படும் போது போர்

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? (திருக்குர்ஆன் 4:75)

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன் (திருக்குர்ஆன் 22:39, 40)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில், தங்களை உயந்த குலம் என்று கருதும் மக்கள், பிற குலத்தைச் சேர்ந்த மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்; அவர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். அடுத்தவர்கள் தங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீட்பதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அட்டூழியம் செய்பவர்களுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இறங்கினார்கள். உண்மைக்கும் உரிமைக்கும் உழைத்தார்கள்.
இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை ம
இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சமாதானத்தை ஏற்க வேண்டும்

(போரிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது. (திருக்குர்ஆன் 2:192, 193)

அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 8:61)

கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை

இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:256)

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99)

"(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 109; 1-6)

போரில் வரம்பு மீறக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)

"பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' (புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா)

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: புரைதா (ரலி), (நூல்: முஸ்லிம்.)

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரது அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள்  தடை செய்தார்கள். (நூல்: புஹாரி 2474)

இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள். (நூல்: முஸ்லிம் 3566)

போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். (நூல்: முஸ்லிம் 3700)

அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு அறவே கிடையாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப்பயணமாகவே பார்த்தனர். 

நபி (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற ஒட்டகங்களை அழைத்து வருகின்றார்கள். அவர்களது எண்ணிக்கை 700 பேர் என அஹ்மத் 18152வது ஹதீஸிலும், 1400 பேர் என புகாரி 4153வது ஹதீஸிலும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மக்காவாசிகளை மிரட்டும்படியாக இருந்தது.

தோழர்களுடனான நபி (ஸல்) அவர்களது வருகை மண்ணில் புழுதியைக் கிளப்பியது போன்று மக்களிடம் போர்ப் பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. அந்தப் பீதியைப் போக்கும் விதமாக தமது பயணத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகள் அறுத்து விட்டனர். கிராஷையும் கொலை செய்ய முனைந்தனர். அங்கிருந்த பல்வேறு கிளையினர் அவர்களைத் தடுத்து விட்டனர். முடிவில் நபி (ஸல்) அவர்களிடமே அவர் திரும்ப வந்துவிட்டார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மான் (ரலி) அவர்களை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்தார். "நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகின்றார்கள்.

உஸ்மான் (ரலி) புறப்பட்டு அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, நபி (ஸல்) அவர்கள் தன்னை அனுப்பி வைத்த செய்தியையும் அவர்களிடம் தெரிவித்தார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளித்தார். குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்ப விடாமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொண்டனர். (நூல்: முஸ்னத் அஹ்மத் 18152)

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வரலாற்றுப் பதிவாகும். இஸ்லாமிய மார்க்கம் சாந்தி, சமாதான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 

கிறிஸ்தவம் 


நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்! நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும். அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும். (சங்கீதம் 45:4)

11 கருத்துகள்:

  1. பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
    தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
    இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
    அணங்கருந் துப்பின் அரா. - நாலடியார் - 25.அறிவுடைமை 241

    வருத்தத்தைச் செய்யும் மிக்க வலிமையுடைய பாம்பு, திங்கள் இளம்பிறைச் சந்திரனாக இருக்கும் பொழுது, அதனை விழுங்கச் செல்லாது. அதுபோல, வெல்லும் தகுதியுடையோர், பகைவர் மெலிந்திருக்கும் சமயம் பார்த்து, அவர்தம் மெலிவுக்குத் தாமே வெட்கம் அடைந்து, அவருடன் போர் செய்யப் புறப்படமாட்டார்கள். (பகைவர் தளர்ந்திருக்கும்போது அவரை வெல்ல நினையாது அவரது நிலைகண்டு இரங்குதல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).
    http://www.diamondtamil.com/education/sangam_literature/patinenkilkanakku/nalatiyar/nalatiyar25.html#.YxdRquxBwfE

    பதிலளிநீக்கு
  2. நீதிமொழிகள் 24:6
    6 போரை நடத்துவதற்கு உங்களுக்கு நிச்சயமாக வழிகாட்டுதல் தேவை, பல ஆலோசகர்களால் வெற்றி பெறப்படும்.

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும். உபாகமம் 20:4

    பதிலளிநீக்கு
  4. வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் (உலக நீதி 36)

    பொருள்:கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே

    பதிலளிநீக்கு
  5. தும்பை tumbai
    தும்பைத் திணை நெய்தல் திணையின் புறம். தன் வலிமையை நிலைநாட்டும் பொருட்டு போரில் அயலரசனை அழித்தல் தும்பை
    (துப்பு < > தும்பை) (12)
    அம்பும், வேலும் பாய்தல்
    உயிரிழந்த உடல் நிலத்தில் விழாமல் போர்களத்தில் நிற்கும் அருநிலை
    என இது இருவகைச் சிறப்பினை கொண்டது. (13)
    தானை நிலை
    யானை நிலை
    குதிரை நிலை
    தார்நிலை (வேல் வீரர்கள் வேந்தனைக் கொல்ல மொய்த்தவழி, தார்ப்படையில் முன்னேறிய ஒருவன் மீண்டு வந்து போரிட்டுக் காத்தல்)
    போரில் இரண்டு தலைவர்களும் மாண்டது
    முன்னேறிய எதிரிப்படையை அழித்த பின்னர் கடைசியாகத் தீக்கும் கூழைப் படையைத் தனி ஒருவன் தடுத்துப் போரிடும் எருமை நிலை
    எதிரிப் படையை ஊடுருவிச் செல்லும் பாழி நிலை
    களிற்றைக் கொன்றபோது தானும் பட்டது
    களிற்றோடு பட்ட வேந்தனை, அட்ட வேந்தன் தன் வாளைச் சுழற்றிக்கொண்டு போர்க்களத்தில் ஆடும் வாள்-அமலை
    போரிட்ட இரண்டு வேந்தரும் அவர் சுற்றமும் ஒருங்கு மாய்ந்த ஒழியாத் தொகைநிலை
    தன் வேந்தன் வீழ்ந்த நிலையில் தனி ஒருவன் மண்டிப் போரிட்ட இசைநிலை
    நூழில் - ஒருவன் வாள் வீச்சுக்கு அஞ்சி பல படையினர் உடைதல்
    என்று தும்பைத் திணை 12 துறைகள் கொண்டது. 14

    தொல்காப்பியம்
    தும்பைதானே நெய்தலது புறனே \ மைந்து பொருளாக வந்த வேந்தனைச் \ சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. 12 \
    கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் \ சென்ற உயிரின் நின்ற யாக்கை \ இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு \ இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே. 13
    தானை யானை குதிரை என்ற \ நோனார் உட்கும் மூ வகை நிலையும் \ வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் \ தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும் \ இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் \ ஒருவன் ஒருவனை உடை படை புக்கு \ கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து \ பாழி கொள்ளும் ஏமத்தானும் \ களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு \ பட்ட வேந்தனை அட்ட வேந்தன் \ வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து \ இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும் \ ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும் \ செருவகத்து இறைவன் வீழ்ந்தென சினைஇ \ ஒருவன் மண்டிய நல் இசை நிலையும் \ பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் \ ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்படப் \ புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. 14

    பதிலளிநீக்கு
  6. போர்: ஒரு அரசு நடவடிக்கை
    இஸ்லாத்தில், போர் என்பது தனிநபரின் தனிச்சிறப்பு அல்ல, மாறாக ஒரு நிறுவப்பட்ட அரசாங்கத்தின் உரிமை. நிறுவப்பட்ட அரசாங்கம் மட்டுமே போரை அறிவிக்க முடியும். இப்பிரச்சினையில் தனிப்பட்ட நடவடிக்கையை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஒரு பொதுவான கொள்கையாக, குர்ஆன் நமக்குக் கூறுகிறது, ஆபத்து அல்லது வெளிப்புற தாக்குதலை எதிர்கொண்டாலும், மக்கள் தங்கள் ஆட்சியாளர்களைக் குறிப்பிட வேண்டும் மற்றும் அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும். (திருக்குர்ஆன் 4:83)

    இஸ்லாத்தில் அனைத்து செயல்களுக்கும் நிபந்தனைகள் உள்ளன. போர்களும் இந்தக் கொள்கைகளுக்கு உட்பட்டவை, அவற்றில் ஒன்று, அரசால் ஒரு போர் (தற்காப்புக்காக) அறிவிக்கப்பட்டால், போராளிகளைத் தாக்குவது மட்டுமே இலக்கு. போராளிகள் அல்லாதவர்களை குறிவைப்பது சட்டவிரோதமானது. நம்மைத் தாக்குபவர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமே குர்ஆன் அனுமதிக்கிறது. (திருக்குர்ஆன் 60:8)

    அநீதி இழைக்கப்பட்டதால் தாக்கப்படுபவர்களுக்கு ஆயுதம் ஏந்துவதற்கு இதன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.
    குர்ஆன் 22:39

    மற்றொரு இடத்தில் குர்ஆன் போர் செய்ய அனுமதி அளிக்கிறது: அவர்கள்தான் உங்களை முதலில் தாக்கினார்கள்.
    குர்ஆன் 9:13

    ஒவ்வொரு முறையும் அவர்கள் போரின் நெருப்பை மூட்டும்போது, ​​கடவுள் அதை அணைக்கிறார்.
    குர்ஆன் 5:64

    நல்லிணக்கம் சிறந்தது.
    குர்ஆன் 4:128

    மேலும் அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீங்களும் அதில் சாய்ந்து, கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். நிச்சயமாக, அவன்தான் அனைத்தையும் செவியேற்பவன், அறிந்தவன். அவர்கள் உங்களை ஏமாற்ற நினைத்தால், நிச்சயமாக அல்லாஹ்வே உங்களுக்குப் போதுமானவன்.
    குரான் 8:61-62

    கடவுள் அமைதியின் இல்லத்திற்கு அழைக்கிறார்.
    குர்ஆன் 10:25

    https://spiritofislam-co-in.translate.goog/spiritnew/index.php/peace-in-islam?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc

    பதிலளிநீக்கு
  7. உபாகமம் 20
    புதிய சர்வதேச பதிப்பு
    போருக்குச் செல்கிறது
    20 நீ உன் சத்துருக்களுக்கு எதிராகப் போரிடும்போது, ​​குதிரைகளையும் இரதங்களையும் உன்னுடையதைவிடப் பெரிய படையையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாதே , உன்னை எகிப்திலிருந்து அழைத்து வந்த உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருப்பார். 2 நீங்கள் போருக்குச் செல்லும்போது, ​​ஆசாரியன் முன்னால் வந்து படையிடம் பேச வேண்டும். 3 அவன் சொல்வான்: “இஸ்ரவேலே, கேள்: இன்று நீ உன் எதிரிகளோடு போருக்குப் போகிறாய். மயக்கம் அல்லது பயம் வேண்டாம் ; அவர்களால் பீதியடைய வேண்டாம் அல்லது பயப்பட வேண்டாம். 4 உன் கடவுளாகிய ஆண்டவரே , உனக்காகப் போரிட்டு , உன் பகைவர்களோடு உனக்கு வெற்றியைக் கொடுப்பவர். ”

    5 அதிகாரிகள் இராணுவத்திடம், “யாராவது புதிய வீட்டைக் கட்டி, இன்னும் அதில் வசிக்கத் தொடங்கவில்லையா ? அவர் வீட்டிற்கு செல்லட்டும், அல்லது அவர் போரில் இறந்துவிடலாம், வேறு யாராவது அதில் வாழ ஆரம்பிக்கலாம். 6 யாராவது ஒரு திராட்சைத் தோட்டத்தை நட்டு , அதை அனுபவிக்கத் தொடங்கவில்லையா? அவர் வீட்டிற்கு செல்லட்டும், அல்லது அவர் போரில் இறந்துவிடுவார், வேறு யாராவது அதை அனுபவிக்கலாம். 7 யாரேனும் ஒரு பெண்ணிடம் அடகுவைத்து, அவளை மணந்து கொள்ளவில்லையா? அவன் வீட்டுக்குப் போகட்டும், இல்லையேல் அவன் போரில் இறந்து வேறு யாராவது அவளை மணந்து கொள்ளலாம். ” 8 அப்போது அதிகாரிகள், “யாராவது பயப்படுகிறார்களா அல்லது மயக்கமடைந்திருக்கிறார்களா? அவனுடைய சக வீரர்களும் மனமுடைந்து போகாதபடி அவன் வீட்டுக்குப் போகட்டும்.” 9 அதிகாரிகள் படையோடு பேசி முடித்தபின், அவர்கள் தலைமை அதிகாரிகளை நியமிப்பார்கள்.

    10 ஒரு நகரத்தைத் தாக்க நீங்கள் அணிவகுத்துச் செல்லும்போது, ​​அதன் ஜனங்களுக்குச் சமாதானம் சொல்லுங்கள். 11 அவர்கள் தங்கள் வாயில்களை ஏற்றுக்கொண்டு திறந்தால், அதில் உள்ள மக்கள் அனைவரும் கட்டாய உழைப்புக்கு ஆளாவார்கள் , உங்களுக்காக வேலை செய்வார்கள். 12 அவர்கள் சமாதானம் செய்ய மறுத்து, உங்களைப் போரில் ஈடுபடுத்தினால், அந்த நகரத்தை முற்றுகையிடுங்கள். 13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, ​​அதிலுள்ள எல்லா மனுஷரையும் வாளுக்குக் கொன்றுவிடு. 14 நகரத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் மற்றும் எல்லாவற்றையும் நீங்கள் கொள்ளையடித்துக்கொள்ளலாம் . உங்கள் எதிரிகளிடமிருந்து உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் கொள்ளையைப் பயன்படுத்தலாம் . 15 உங்களை விட்டுத் தொலைவில் இருக்கும், அருகிலுள்ள தேசங்களுக்குச் சொந்தமில்லாத எல்லா நகரங்களையும் இப்படித்தான் நடத்த வேண்டும் .

    16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள் . 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள் .

    19 நீங்கள் ஒரு நகரத்தை நீண்ட காலமாக முற்றுகையிட்டு, அதைக் கைப்பற்றுவதற்கு எதிராகப் போரிட்டால், அதன் மரங்களை கோடரியால் வைத்து அழிக்காதீர்கள், ஏனென்றால் நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். அவற்றை வெட்ட வேண்டாம். நீங்கள் அவர்களை முற்றுகையிட வேண்டும் என்று மரங்கள் மக்கள்? [ b ] 20 இருப்பினும், பழ மரங்கள் அல்ல என்று உங்களுக்குத் தெரிந்த மரங்களை நீங்கள் வெட்டி , உங்களுடன் போரிட்டுள்ள நகரம் விழும் வரை முற்றுகைப் பணிகளைக் கட்ட அவற்றைப் பயன்படுத்தலாம்.

    https://www.biblegateway.com/passage/?search=Deuteronomy%2020&version=NIV

    பதிலளிநீக்கு
  8. உபாகமம் 20:14
    ஆனால் நீங்கள் அங்குள்ள பெண்கள், குழந்தைகள், மாடுகள் ஆகியவற்றைக் கொல்லாமல் உங்களுக்காக அந்நகரிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்து அனுபவிப்பீர்களாக. இந்த எல்லாப் பொருட்களையும், நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகவே இவற்றையெல்லாம் கொடுத்துள்ளார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2020%3A14&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  9. போரில் கைதான பெண்கள்
    10 “நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு எதிராகச் சண்டையிடும்போது, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் அவர்களைத் தோல்வியடையச் செய்யும்போது, நீங்கள் அந்தப் பகைவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம். 11 அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12 அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அவள் தன் தலையை மொட்டையடித்து தன் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். 13 அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள். 14 அவளோடு வாழ்வது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றால், அவன் அவளை விவாகரத்து செய்து, அவள் இஷ்டம்போல் அவளை வாழ அனுமதித்து விடவேண்டும். நீங்கள் அவளை விற்க முடியாது. நீங்கள் அவளை அடிமையாக நடத்தவும் கூடாது. ஏனென்றால் உங்களில் ஒருவன் அவளோடு ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டாயிற்று.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2021&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  10. உனது வகைக்குரிய {க்ஷத்திரியனுக்குரிய} (நிர்ணயிக்கப்பட்ட) கடமைகளில் கண்களை வீசும் {கருத்தில் கொள்ளும்} நீ, கலங்குவது தகாது. ஏனெனில், நல்ல முறையில் போரிடுவதைக் காட்டிலும் ஒரு க்ஷத்திரியனுக்குச் சிறந்தது {சிறந்த கடமை} வேறு எதுவும் கிடையாது. 2:31

    ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சொர்க்கத்தின் திறந்த கதவு ஒன்றைப் போலத் தானாக வந்த இத்தகு போரைப் பெறுபவர்களான அந்த க்ஷத்திரியர்கள் மகிழ்கின்றனர். 2:32

    ஆனால், இதுபோன்ற ஓர் அறப்போரில் {தர்ம்யம் ஸங்க்ராமம்} நீ போரிடவில்லையெனில், உனது வகைக்கான கடமைகளைக் {ஸ்வதர்மத்தைக்} கைவிடுவது, {வீரன் என்ற} புகழைக் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் பாவத்தையே நீ ஈட்டுவாய். 2:33

    https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-026.html

    பதிலளிநீக்கு
  11. பெரும் தேர்வீரர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாக நீ போரிலிருந்து விலகியதாகக் கருதுவார்கள். (இதுவரை) உன்னை மிக உயர்வாக மதித்தவர்களால் நீ சிறுமையாக {முக்கியமற்றவனாக} எண்ணப்படுவாய். 2:35

    உனது எதிரிகள், உன் ஆற்றலை அவதூறாகப் பேசி, சொல்லக்கூடாத வார்த்தைகள் பலவற்றைச் சொல்வார்கள். அதைவிட வலி மிகுந்தது வேறு என்ன இருக்க முடியும்? 2:36

    கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய்; வென்றாலோ பூமியை அனுபவிப்பாய். எனவே, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, போரிடத் தீர்மானித்து எழுவாயாக. 2:37

    இன்பம், வலி {துன்பம்}, ஆதாயம் {இலாபம்}, இழப்பு {நஷ்டம்}, வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் சமமாகக் கருதி போரின் காரணமாகப் போரிட்டால் பாவம் உனதாகாது. 2:38

    உனக்குச் சொல்லப்பட்ட இந்த அறிவு {ஞானம்}, சாங்கியத்தில் [6] {சாங்கிய தத்துவத்தில்} உள்ளது (கற்பிக்கப்படுகிறது). யோகத்தை ({கர்ம} யோக தத்துவத்தில்) (கற்பிக்கப்பட்ட அறிவை) இப்போது கேட்பாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த அறிவை அடைந்தால், செயல்களின் கட்டுகளில் {கர்மபந்தங்களில்} இருந்து நீ விடுபடுவாய். 2:39

    [6] அறிவை அறிவால் அறியும் ஆத்மஞானம். இந்தப் பகுதியின் இந்தச் சுலோகம் வரை சாங்கிய யோகமே விளக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு 40 மற்றும் 48ம் சுலோகத்தில் கர்ம யோகம் விளக்கப்படுகிறது. 48 முதல் 53 வரை பக்தி யோகம் விளக்கப்படுகிறது. 55 முதல் 72 வரை தியான யோகம் விளக்கப்படுகிறது.

    இதில் (இந்த யோக தத்துவத்தில் {கர்மயோகத்தில்) ஆரம்ப முயற்சி கூட வீணாகாது. இதில் எந்தக் குற்றங்களும் இல்லை. இந்த {கர்மயோக} பக்தியின் சிறியது (வடிவம்) {சிறு முன்னேற்றம்} கூடப் பெரும் அச்சத்தில் இருந்து {ஒருவனை} விடுவிக்கும். 2:40

    பதிலளிநீக்கு