இறைவனை எவரும் கண்டதில்லை என்பதும் அவன் நிகரற்றவன் எனபதும் அவன் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்பதற்கான போதுமான தகவல் ஆகும். இருந்த போதிலும் சிவன், அல்லாஹ், கர்த்தார் போன்ற இறைவனுக்கான வெவ்வேறு மாதத்தில் உள்ள பெயர்களை அவன் இவன் என்று அழைப்பதால், இறைவன் ஆண் என்ற கருத்து நிலவுகிறது.
எனவே நேரடியான மாறைநூல் ஆதாரமோ அல்லது அந்தந்த சமய வல்லுனர்களின் ஆய்வு கருத்தும் இங்கே பதிலாக கோர்க்கப்படுகிறது.
தமிழர் சமயம்பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவேஉயர்திணை மருங்கின் பால்பி ரிந் திசைக்கும். - (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 1:4)
உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும்.
குறிப்பு: ஆணினம் மற்றும் பெண்ணினம் என்ன திணை என்று இந்த பாடல் விளக்க வில்லை, மாறாக உடல் உறுப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் இருக்க கூடிய மற்றும் உடல் உறுப்பால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் இருக்க கூடிய மனித பிறப்புகளின் தினை பற்றியும் இந்த நான்கிலும் அடங்காத தெய்வத்தின் திணை என்ன என்று விளக்கும் பாடல் இது. இறைவன் உயர் திணையை சார்ந்தவன் ஆனால் ஆணுமல்ல பெண்ணுமல்ல இடைப்பட்டவனுமல்ல என்பதே இதன் விளக்கம்.
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)
பொழிப்புரை: இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.
பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகிவிண்ணாகி நிற்கும் வியப்பு. - (ஞானக்குறள் 155.)
பெண்-ஆண்-அலி என்னும் பெயர் இல்லாததாகி, அறிவு உடலாய்(சிதாகாய) வியக்கும்படி நிற்கும் அவன் தான் சிவன்.
எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இறைவனை எப்படி அழைக்கிறோம் என்பதை விட இறைவன் தன்னைப் பற்றி எப்படி அழைக்க சொல்கிறான் என்பதுதான் முக்கியம்!
112:1 "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!112:2 அல்லாஹ் தேவைகளற்றவன்.112:3 (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.112:4 அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் போது 'ஹு' 'ஹுவ' என அவன் இவன் என்று குறிப்பிடுவதால் நாங்களும் அப்படியே அழைக்கிறோம் !
மேலும் ஆணா? பெண்ணா? என்றால் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கத் தேவையற்றவன் ! எந்த மனித பலவீனமும் இல்லாத எல்லையற்ற ஆற்றல் அவன்!
அல்லாஹ் என்னும் அரபுச் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ! அதற்கு பன்மையும் கிடையாது!
கர்த்தருக்கு பாலினம் இல்லை என்று ஆரம்பகால கிறிஸ்த்தவர்கள் நம்பி வந்ததாக பல நூல்கள் வெளிவந்துள்ளன.
கத்தோலிக்க திருச்சபையின் கேடசிசம், புத்தகம் 239, கடவுள் "தந்தை" என்று அழைக்கப்படுகிறார், அதே நேரத்தில் மனிதனுக்கான அவரது அன்பு தாய்மையாகவும் சித்தரிக்கப்படலாம். இருப்பினும், கடவுள் இறுதியில் பாலினத்தின் மனிதக் கருத்தை மீறுகிறார், மேலும் "ஆணோ பெண்ணோ அல்ல: அது கடவுள். - Gender of God - Wikipedia
உண்மையில், யாத்திராகமம் 3 இல் மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் தனிப்பட்ட பெயர், யாவே, பெண் மற்றும் ஆண் இலக்கண முடிவுகளின் குறிப்பிடத்தக்க கலவையாகும். எபிரேய மொழியில் கடவுளின் பெயரின் முதல் பகுதி, "யா" என்பது பெண்பால், மற்றும் கடைசி பகுதி, "வே" ஆண்பால். யாத்திராகமம் 3 இன் வெளிச்சத்தில், பெண்ணிய இறையியலாளர் மேரி டேலி, “‘கடவுள்’ என்பது ஏன் பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்? ஏன் ஒரு வினைச்சொல் இல்லை - எல்லாவற்றிலும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் மாறும்." - What the early church thought about God's gender
முடிவுரை
தெய்வம் ஆணுமல்ல பெண்ணுமல்ல ஆனால் உயர்திணை பால் என்று அறிய முடிகிறது. தெய்வத்தை அவன் அவள் என்று கூறுவதற்கான காரணம், அது இது என்று அஃறிணையாக அழைக்க கூடாது என்ற அவாவாக இருக்கலாம்.
உயர்திணையிலும் பால் காட்டாதவை
பதிலளிநீக்குஅவனுக்குக் காலம் ஆயிற்று
உலகம் பசித்தது
உயிர் போயிற்று
உடம்பு நன்றாக இருக்கிறது
இவனுக்குத் தெய்வம் நன்று (பால் வரை தெய்வம் = ஊழ்)
இவ்வினை நன்று
இவனைப் பூதம் புடைத்தது (நிலம், நீர் ... 5)
ஞாயிறு எழுந்தது
திங்கள் எழுந்தது
சொல் நன்று
உலகம் என்பது உலகில் உள்ளவர்களையும்
உடம்பு என்பது உடம்பினை உடையவரையும்
உணர்த்துவன
இவை 10-ம் என உயர்திணையில் பால் காட்டாமல் வரும்.
நூற்பா மூலம்
காலம் உலகம் உயிரே உடம்பே
பால் வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்
ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
பால் பிரிந்து இசையா உயர்திணை மேன. 58
தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 1 கிளவி ஆக்கம் (சொல்லை மொழி ஆக்கல்)
https://vaiyan.blogspot.com/2018/05/tolkappiyam-verse-and-notes-208.html
இறைவனை "அவன்" என்று சொல்லுகிறார்களே, அது மரியாதை குறைவில்லையா?
பதிலளிநீக்கு"அவன்" என்கிற விகுதிச்சொல் மரியாதையை குறைவு என்று எந்த இலக்கண நூலில் உள்ளது?
அதற்குமுன், இறைவன் ஆண்பாலைச் சார்ந்தவன் என்று எந்த மறைநூல் சொல்கிறது?
https://ta.quora.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/answers/392158672?prompt_topic_bio=1
"அல்லாஹ்" ஆணா?
பதிலளிநீக்குதூத்துக்குடி சகோதரர் பர்னபாஸ், அவர்களின் கேள்வி:
அல்லாஹ் என்ற வார்த்தைக்கு ஆண்பாலும் பெண்பாலும் கிடையாது என்றால், திருக்குர்ஆன் ஏன் அல்லாஹுவை பற்றி பேசும் போது, ஆண் பாலாகவே பேசுகிறது?
பதில்:
அல்லாஹ்" என்ற வார்த்தையின் அறிமுகம்:
படைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது.. இவ்வார்தையின் உண்மைப்பொருள் ‘வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தையின் சிறப்பு என்னவென்றால், இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது என்பதே. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
"அல்லாஹ்" என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய சொல் என்று நினைத்து விட வேண்டாம். "இறைவன்" அல்லது "கடவுள்" என்கிற தமிழ் சொல் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ, அதே போல் "அல்லாஹ்" என்கிற சொல்லும் எல்லோருக்கும் பொதுவானதுதான். அரபு மொழி பேசும் கிறிஸ்துவர்களும், யூதர்களும் கூட தங்கள் தாய் மொழியான அரபியில், இறைவனை "அல்லாஹ்" என்றுதான் அழைப்பார்கள்.
இதை புரிந்து கொள்ள அரபிக் பைபிளை புரட்டினால் போதும். ஆதியாகமம் 1:1 அரபியில் கீழே:
في البدء خلق الله السموات والارض
الله enbadhu thaan "அல்லாஹ்".
அடுத்ததாக உங்கள் கேள்விக்கு இன்னும் தெளிவான விடை அறிய, அரபு மொழி இலக்கணம் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். "அல்லாஹ்" என்பது ஒரு அரபி வார்த்தை என்பதை அறிந்தோம். ஆங்கிலத்தில் மூன்று பாலினங்கள் உள்ளன, ஆண்(Masculine), பெண் (Feminine), ஆண், பெண் அல்லாத பொதுவானது (Neutral Gender). இதனை குறிக்க he, she, it போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். ஆண், பெண் வகையில் சேராதவைகளை "it" என்ற வார்த்தையால் குறிப்பிடுவார்கள்.
அரபு மொழியில், இரண்டே இரண்டு பாலினங்கள் தான் உள்ளன. ஆண்(Masculine) மற்றும் பெண் (Feminine). எந்த வார்த்தையாக இருந்தாலும் சரி, அது ஒன்று ஆண் பாலினமாகவோ, அல்லது பெண் பாலினமாகவோ தான் பயன்படுத்தப்படும்.
அரபு இலக்கணத்தில், ஒரு வார்தையை பெண் பாலினத்தில் சொல்ல சில விதிகள் உள்ளன. இது அரபு மொழிக்கே பொதுவான விதி. அவை:
1) இயற்கையிலேயே அந்த வார்த்தை பெண் பாலினத்தை குறிக்கக் கூடியதாக இருத்தல். உதாரணம்: தாய். அரபு மொழியில் "உம்முன்" என்ற தாயை குறிக்கும் சொல், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.
பதிலளிநீக்கு2) "இருமையை" குறிக்கும் சொற்கள் பெண் பாலினத்தில் சொல்லப்படும். உதாரணம்: இரண்டு கண்கள். அரபு மொழியில் "ஐனைன்" என்ற இரண்டு கண்களை குறிக்கும் சொல், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.
3) வார்த்தை "தா" என்ற அரபி எழுத்து கொண்டு முடிந்தால், அந்த வார்த்தை பெண் பாலினத்தில் சொல்லப்படும். உதாரணம்: அரபியில் மின்விசிறியை குறிக்கக் கூடிய "மிர்வதுன்." என்ற சொல் "தா" என்ற அரபி எழுத்து கொண்டு முடிவதால், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.
4) "பெரிய அலிப்" எழுத்து ஒரு வார்த்தையின் இறுதியில் வருதல். இந்த வார்த்தைகளும் பெண் பாலினத்தில் சொல்லப்படும்.
இப்போது அல்லாஹ் என்கிற சொல், மேலே கூறிய விதிகளுக்கு கட்டுப்பட்டால்தான், பெண் பாலினத்தில் சொல்ல இயலும்.
அல்லாஹ் என்கிற சொல் இயற்கையிலேயே பெண் பாலினத்தை குறிக்கக் கூடியதாக இல்லை.
அல்லாஹ் என்கிற சொல் இருமையை குறிக்காது. மாறாக அது ஒருமைக்குரிய சொல்.
அல்லாஹ் என்கிற சொல் "தா" என்ற அரபி எழுத்து கொண்டு முடியவில்லை.
அல்லாஹ் என்கிற சொல் "பெரிய அலிப்" என்ற எழுத்து கொண்டு முடியவில்லை.
எனவே, அல்லாஹ் என்கிற சொல் பெண் பாலினத்திற்குரிய எந்த விதிக்கும் கட்டுப்படவில்லை. அரபு மொழியில், இரண்டே இரண்டு பாலினங்கள் மட்டும் உள்ள காரணத்தினால், பெண் பாலில் சொல்ல முடியாத சொல்லை, ஆண் பாலில்தான் சொல்ல முடியும்.
ஆகவே, அல்லாஹ் என்கிற சொல் ஆண் பாலில் பயன்படுத்தப்படுகிறது. திருக்குர்ஆன் அரபு மொழியில் அருள்ளப்பட்டதால், மொழிபெயர்க்கும் போது, அரபியில் உள்ளபடி ஆண் பாலிலேயே மொழிபெயர்த்துள்ளனர். எனவே தான், திருக்குர்ஆனில் இறைவனை குறிப்பிடும் போது "அவன்" என்ற ஆண் பால் பதம் பயன்படுத்தப்பட்டும்.
அரபிக் பைபிளின் ஆதியாகமம் 1:31 வசனத்தை வாசித்தாலும் இந்த விதி குறித்து அறிய முடியும்.
ورأى الله كل ما عمله فاذا هو حسن جدا (ஆதியாகமம் 1:31) (http://www.arabicbible.com/ot-text/79-genesis/167-genesis-1.html)
மேலே உள்ள அரபு பைபிள் வசனத்தில் الله (அல்லாஹ்) என்கிற வார்த்தை இடம் பெறுவதை நீங்கள் காணலாம். அல்லாஹ் செய்த செயல் என்பதை குறிக்க عمله (அமலுஹு) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுள்ளது. "عمله" என்ற வார்த்தைக்கு, "அவன் செய்த செயல்" என்று பொருள். அவன் என்ற பொருளை தரக் கூடிய ه (ஹு) என்ற சொல் பயன்படுத்தி இருப்பதை நீங்கள் காணலாம். இதை பெண் பாலில் சொல்லவேண்டும் என்றால், அமலுஹா என்று சொல்ல வேண்டும். அல்லாஹ் என்கிற சொல் ஆண் பாலில் தான் சொல்ல முடியும் என்பதால் அமலுஹு (அவன் செய்த செயல்) என்று ஆண் பாலில் சொல்லப்பட்டுள்ளது.
நன்றி:www.invitetogod.com
அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (குர்ஆன் 6:101)
பதிலளிநீக்கு