"நான்மறை" நாம் அறியாத சொல் அல்ல. அவ்வப்பொழுது ஆங்காங்கே ஆத்திகம் பற்றிய உரையாடல்களில் நாம் செவியுறும் வார்த்தை தான். உதாரணமாக,
தேவர் குறளும் திருநான்மறை முடிவும்மூவர் தமிழும் முனிமொழியும்- கோவைதிருவா சகமும் திருமூலர் சொல்லும்ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)
(பதவுரை)தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும்,திரு நான்மறை முடிவும் -மேலான நான்கு மறை நூல்களின் கருத்தும்,மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழும்,முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய,கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும்,திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும்,ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. (இது இவைகளெல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்கிற பொருளையும் தரும்)ஆனால் பொதுவாக "நான்மறை" என்பது என்னவாகவெல்லாம் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்.1) தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர்.
2) நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!
3) நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே! : ‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116) ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்று சுட்டப்பட்டது ஆரிய நான்கு வேதங்களாக இருத்தல் இயலாது.
4) தமிழர்களின் நான்மறை வேதம் திருக்குறள்: திருக்குறளை திருவள்ளுவர் பத்து பத்து பாடல்களை அதிகாரமாக பிரித்தாரே தவிர அதனை மூன்று பாலாக திருவள்ளுவர் பிரிக்கவில்லை. 133 அதிகாரங்களை மூன்று பாலாக பிரிக்காமல், நான்கு பாலாக மாற்றி அம்மைத்தல் வேண்டும். அதாவது அறம், பொருள், இன்பம், என்ற தலைப்பின் கீழ் வரையறுத்து இருப்பதை. மீள்வரையறை செய்து அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்கு பாலில் வடிவமைக்க வேண்டும். அதுவே தமிழர்களின் நான்மறை வேத வடிவின் ஒத்ததாக இருக்கும்.
5) நான்மறை படைத்தது தமிழரே! : உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.இன்னும் வேறு சில கருத்துக்கள் கூட இருக்கலாம். மேலே குறிப்பிட குறிப்புகளில் சில உண்மை இருந்தாலும் அவர்களின் இறுதி முடிவில் உண்மை இல்லை எனபது திண்ணம். ஏனென்றால் அவர்களின் முடிவானது ஒரு பகுதி தகவல்களையும், யூகங்களையும் கொண்டு அமைந்துள்ளது. அவைகள் உண்மை அல்ல என்பதற்கான விளக்கங்கள் பின்வருமாறு.
நான்மறை என்பது ஆரிய வேதங்கள் அல்ல. ஏன்?
- அதர்வணம் பிற்கலத்தில் வேதங்களில் இணைக்கப் பட்டது.
- ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்றுகுறிப்பிட்டது ஆரிய வேதங்களை அல்ல என்கிற தகவலும்,
- மற்ற மூன்று வேதங்களின் மதத்திற்கு மாறாக, அதர்வவேதம் வேறு ஒரு 'பிரபலமான மதத்தை' பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறப்படுகிற தகவலும்,
- அதர்வ வேதா என்ற பெயர், "அதர்வாணர்களின் வேதம்" என்பதற்காகவே என்று லாரி பாட்டன் கூறுகிற தகவலும்,
- அதன் சொந்த வசனம் 10.7.20-ன் படி, நூலின் மிகப் பழமையான பெயர், வேத அறிஞர்களான "அதர்வன்" மற்றும் "ஆங்கிரஸ்" ஆகியவற்றின் கலவையான அதர்வங்கிரசாகும் என்கிற தகவலும்,
- ஆரம்பகால பௌத்த நிகாயா நூல்கள், அதர்வவேதத்தை நான்காவது வேதமாக அங்கீகரிக்கவில்லை, மேலும் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
- பண்டைய சம்ஸ்கிருத பாரம்பரியம் ஆரம்பத்தில் மூன்று வேதங்களை மட்டுமே அங்கீகரித்தது என்கிற தகவலும்,
- ரிக்வேதம், தைத்திரிய பிராமணத்தின் 3.12.9.1 வசனம், ஐதரேய பிராமணத்தின் 5.32-33 வசனம் மற்றும் பிற வேத கால நூல்கள் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
- ரிக்வேதம், சாமவேதம் அல்லது யஜுர்வேதத்தை கடைபிடிக்கும் ஆசாரியர்களுடன் ஒப்பிடுகையில், அதர்வவேதத்தை கடைப்பிடிக்கும் புரோகிதர்கள் பிராமணர்களின் மிகக் குறைந்த அடுக்குகளாகக் கருதப்பட்டனர். ஒடிசாவில் அதர்வவேத குருமார்களுக்கு எதிரான களங்கம் நவீன காலம் வரை தொடர்கிறது என்கிற தகவலும்
மேலும் ஒரு ஆதாரம் மனுதர்மசாஸ்திரம் ஆகும்.
But from fire, wind, and the sun he drew forth the threefold eternal Veda, called Rik, Yagus, and Saman, for the due performance of the sacrifice. (Law of Manu Ch.1:V.23)
பொருள்: ஆனால் நெருப்பு, காற்று மற்றும் சூரியன் ஆகியவற்றிலிருந்து அவர் யாகத்தின் சரியான செயல்பாட்டிற்காக ரிக், யாகஸ், சமன் என்று அழைக்கப்படும் மூன்று நித்திய வேதங்களை உருவாக்கினார்.
எனவே நான்மறை என்பதை நிச்சயம் சம்ஸ்கிருத வேதங்களை குறிக்கவில்லை என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
நான்மறை என்பது தமிழர் மறைகள் மட்டுமோ, அல்லது திருக்குறள் மட்டுமோ அல்ல.
ஏனென்றால் மற்றவர்களை போலல்லாமல் மறைநூல்கள் என்றால் என்ன? என்கிற வரையறையும், நான்மறை என்றால் என்ன? என்கிற வரையறையும் நமது மறைநூல்களில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பகுதி தகவல்களையும், யூகங்களையும் விட சில ஆதாரப்பூர்வமான தரவுகள் உண்மைக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும்.
நான்மறை என்பது உண்மையில் எதை குறிக்கிறது?
நான் மறை என்பதை அறியும் முன்னர், மறைநூலின் வரையறையினை அறிதல் அடுத்த அடி எடுத்து வைப்பதில் நமக்கு தெளிவை தரும். அதை அறியாதவர்கள் இக்கட்டுரை-யை வாசித்தல் நலம்.
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்நந்தி அருளாலே மூலனை நாடினோம்நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டுநால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக எனநால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
இந்த திருமந்திர பாடல்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால்,
- நந்தி தேவர்களினத்தை சேர்ந்தவர் - மாடு அல்ல
- அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்
- அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நதிகள் உள்ளனர்.
- (திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி.
- மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர்
- நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது (தொடர் ஆய்வுகள் தேவைப்படும் இது தனிப்பெரும் தலைப்பு)
- மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்)
- வடக்கு (பதஞ்சலி) - ஆரிய வேத பொருள்
- தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc)
- கிழக்கு (வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc)
மொழிகளை, மதங்களை வகைப்படுத்தும் முறைமை உலக நடைமுறையில் வேறொன்றாக இருந்தாலும் இறைவனின் முறைமை இதுவாக உள்ளது. நான்மறை என்பது உலகம் முழுமைக்கானது என்றால் உலகம் முழுதும் உள்ள மறைநூல்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பது அறமல்ல. உலகில் உள்ள அனைத்து சமய, மொழி, நில, இன மக்களின் வேதங்களும் சேர்ந்ததுதான் நான்மறையே தவிர, சம்ஸ்கிருத மறைகள் மட்டுமோ அல்லது தமிழர் நூல்கள் மட்டுமோ நான்மறை அல்ல.
நான்மறைக்கும் ஒரே இறைவன்
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே. - (தேவாரம் 3320)
பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி மறைநூல்களை ஓதுபவர்களை நன்னெறிக்கு ஊக்குவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்கும், அனைவருக்கும் ஆசிரியனானவனின் திருநாமம் ‘நமச்சிவாய’ ஆகும்.
குறிப்பு: நான்மறை என்பது திசைக்கு ஒரு மறை எனவே அனைத்து மொழி சமய மறை நூல்களையும் இது குறிக்கும்.
நாலுவேத ஞானமும் ஒன்றே
நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்றறிவிரோ?நாலு சாமமாகியே நவின்ற ஞானபோதம்ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. (திருமந்திரம் 411)
சொற்பொருள்: சாமம் - கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்; நவின்ற - சொன்ன; போதம் - அறிவு; ஆலம் - ஆகாயம்; கண்டன் - தலைவன்; அயன் - படைப்பவன்; மால் - அருகன்; சால - மிக மிக; உன்னி - தியானத்திற்குரிய பொருள்; தரித்த - அடைந்த;
பொருள்: நான்கு வேதங்களும் அதன் நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்று அறிவீர்களா?. நாலு வகையாக ஓதப்படும் ஞான போதனைகள், ஆகாயத்தில் இருக்கும் தலைவனாகிய இறைவன் படைப்பவனுமாய், அருகனுமாய் தியானத்திற்குரிய பொருளாக நெஞ்சுக்குள்ளே அடைந்த சிவன் ஆகும்.
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவேகாலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்களே, இந்த நூல்களும் அதை அடிபப்டையாக கொண்ட இந்த கட்டுரையும் கூறும் கூற்று எல்லாம் உண்மை என்று எந்த அடிப்படையில் ஏற்பது? என்ற கேள்வி தோன்றுவது இயற்கை தான்.
இதை மீண்டும் சில நூல் ஆதாரம் மற்றும் வரலாற்று ஆதாரம் கொண்டு ஆய்வு செய்வோம்.
- நான்கு வேதமும் ஒன்று தான் - அதாவது இவற்றின் போதனைகள் ஒன்றே
- ஒரே கடவுள் மூலம் நான்கு திசைகளுக்கு நான்கு தேவர்கள் மூலம் வழங்கப்பட்ட ஒரே மூல நூலின் வகைகளே நான்மறை ஆகும்
- ஒரே வேதம் நான்காக பிரிவதற்கு முன் மக்கள் ஒரே மொழியை பேசி இருக்க வேண்டும் அல்லது ஒரே சமுதாயமாக வாழ்ந்து இருக்க வேண்டும்.
- ஒரே இடத்திலிருந்து நான்கு நாதர்கள் அதாவது குருமார்கள் நான்கு திசைக்கு பிரிந்து சென்று இருக்க வேண்டும், அவர்களுக்கு நான்கு நந்திகள் மூலம் ஒரே இறைவன் ஒரே மூல நூலின் பகுதிகளை உபதேசமாக கொடுத்து இருக்க வேண்டும்.
முதல் இரண்டு கருத்துக்கு ஏற்கனவே ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
மூன்றாவது கருத்தான "மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்: என்பதற்கு உள்ள ஆதாரம் என்ன?
கிறிஸ்தவம் / யூதம்
வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். (ஆதியகமம் 11:1-2)
இஸ்லாம்
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 30:22)
தமிழர் சமயம்
தமிழ் சமயங்களை பொறுத்தவரையில் மொழியே ஓர் ஆதாரமாகும். உலகில் உள்ள மொழிகளில் மிக பழமையானது தமிழ் என்பதும், உலக மொழிகளில் உள்ள சொற்களின் வேர்ச்சொல்லை தேடினால் அது தமிழில் முடிவதை தமிழ் சொல்லியல் அறிஞர்கள் பலர் விளக்கி வருவதை காணலாம். உதாரணமாக,
- மா.சோ.விக்டர்
- கு. அரசேந்திரன்
- அருளியார்
ஆகியோர் சமகாலத்தில் உள்ளோர் ஆவர்.
ஆனால் மனிதர்கள் ஒரே மொழி பேசியதற்கு நான்மறைக்கும் என்ன தொடர்பு? உண்டு! எப்படி?
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட திருமந்திர பாடல்களில் உள்ள நான்கு திசைகளை கணக்கெடுத்து கொண்டால், நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு நந்தி (மனிதருக்கு வேதம் உபதேசம் செய்யும் தேவர் இனத்தை சேர்ந்த ஆசிரியர்) என்று சொல்லப்படுகிறது. இதில் நான்கு திசையை குறிப்பிடும் பொழுது எந்த இடத்தில் இருந்து அந்த திசைகளை கணக்கெடுத்து கொள்வது? என்ற கேள்வி எழுகிறது.
அக்காலத்தில் வெள்ளப் பேரழிவுக்கு பிறகு மனிதர்கள் தங்கி, அவர்களின் நாகரிகம் ஓங்கி வளர்ந்து, பிறகு உலகெல்லாம் பரவியது என்று பைபிள் சொல்கிறது. அது இன்று ஆய்வாளர்களால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மெசபட்டோமியா அல்லது சிந்துசமவெளி நாகரிகம் என்று சொல்லப்படும் இடமாயிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் வெள்ளப் பிரளயத்துக்கு பிறகு மக்கள் சமவெளி பிரதேசத்தில் தங்கினார்கள் என்று பைபிள் கூறுகிறது.
பின்னாளில் மேற்கு திசையின் சமய பாரம்பரியமான ஆபிரகாமிய மதங்களின் முன்னோடியான ஆப்ரஹாம் மெசபட்டோமியாவிலிருந்து இன்றைய சிரியாவுக்கு குடி பெயர்ந்தார். இதைப்பற்றி யூதர்களின் பூர்வீகம் என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் விளக்கி உள்ளோம்.
அதே போல அகத்தியர் வடக்கிலிருந்து தெற்கிற்கு நடுநிலையை நிலைநிறுத்த வந்தவர் என்பதை நாம் அறிவோம். இந்த செய்தி புராண கற்பனை கதை இல்லை, ஏனென்றால் இதை திருமந்திரம் எனும் நூல் சொல்லுகிறது. ஆனால் "இவ்வுலகம் சரிந்து" என்கிற சொல்லாடலை "இவ்வுலக நிலம் சரிந்தது" என்று பொருள்படும் விதமாக புராணம் எழுதி அதை திரைப்படமாக எடுத்த அறிவு ஜீவிகள் நிறைந்த நிலம் இது. நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து என்பதற்கு, "இவ்வுலக அறம் மங்கி" இருந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். காரணம் அறம் கூறும் முனைவர் இந்த நிலப்பகுதிக்கு இல்லாமல் இருந்து இருக்கவில்லை என்பது மறைமுக செய்தி ஆகும்.
நடுவுநில்லாது இவ்வுலகஞ் சரிந்துகெடுகின்றது எம்பெருமான் என்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீபோய்முடுகிய வையத்து முன்னிர் என்றானே.
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்அங்கி உதயஞ்செய் மேல் பாலவனொடுமங்கி உதய வடபால் தவமுனிஎங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. (இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம், பாடல் எண் : 2)
மேலும் அகத்தியர் எழுதிய அகத்தியம் எனும் நூல் தான் முதல் நூல் என்பது தொல்காப்பியம் அதன் வழிநூல் என்பதையும் நாம் அறிவோம்.
மனிதர்கள் ஆரம்பத்தில் ஒரே மொழி தான் பேசினார்கள் என்ற செய்தியும், பின்னாளில் மொழிகள் பிரிந்த பொழுது திசைக்கு ஒரு மொழியாகவும், ஒவ்வொரு மொழிக்கு ஒரு நந்தியும் இருந்ததை திருமந்திர நூலில் உள்ள குரு பாரம்பரியம் அத்தியாயம் மூலம் உணரமுடிகிறது. பின்னாளில் ஒவ்வொரு திசையிலும் உள்ள மொழிகள் திரிந்து, பல மொழிகளாக பிரிந்தது அவைகளை மொழிக் குடும்பமாக உருவெடுத்தது என்பதை மொழிகளின் வரலாறுகள் கூறுகிறது.
இந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு பார்த்தலும் தொல்காப்பிய முதல் நூல் தத்துவத்தை பார்த்தாலும், ஒரு மொழிக்கு ஒரு முதல் நூல் மட்டும்தான் இருக்க முடியும், மற்றவைகள் எல்லாம் வழி நூல்கள் ஆகும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு நந்தி ஒரு முதல் நூலை மட்டுமே போதிப்பார், அவர் பின்னாளில் போதித்த அனைத்தும் வழி நூல்களாகும். மொழிகள் பிரிந்து திரியும் பொழுதும் அந்த மொழியில் உள்ள மறை நூல் என்பது வழிநூல் மட்டுமே, முதல் நூல் ஆகாது. அந்தவகையில் பார்த்தல் மேற்க்கத்திய சமய பாரம்பரியத்துக்கு எப்படி ஆப்ரஹாம் முன்னோடியோ அதேபோல தெற்கின் சமய பாரம்பரியத்துக்கு அகத்தியர் முன்னோடி ஆவார், அதோடு அவர் தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் எழுதியமையால் அதாவது முதல்நூல் எழுதியமையால் பழமையான மொழிகளில் தமிழ் இடம் பெற்று உள்ளது.
சம்ஸ்கிருதம், சீனம் (Mandarin), ஆகியவற்றுக்கும் மெசபட்டோமியாவில் பேசப்பட்ட மொழிகளான சுமேரியன், பாபிலோனியன் மற்றும் அசிரியன் (ஒன்றாக சில நேரங்களில் 'அக்காடியன்' என்று அழைக்கப்படுகிறது), அமோரிட், மற்றும் அராமிக் ஆகிய மொழிகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அதே நேரத்தில் மெசபட்டோமியாவில் பேசப்பட்ட சுமேரியன் மொழிக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள், மேலும் ஹீப்ரு, அராமிக், மற்றும் அரபிக் மொழிகளுக்கும் அக்காடியன் மொழிக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நமது இந்த கட்டுரையில் வடக்கு (சமஸ்கிருத மொழி குடும்பம்) மற்றும் கிழக்கு (சீன மொழிக் குடும்பம்) பற்றிய ஆய்வுகள் இன்னும் செய்யப்படவேண்டி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த கோணத்தில் மொழி பற்றிய ஆய்வும், சமயங்கள் பற்றிய ஆய்வும் தொடங்கப்படும் பொழுது காலக்கோட்டில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
"யாது ஊரே யாவரும் கேளீர்" என்கிற வரிகள் மொழிப் பெருமைக்கானது அல்ல. அதை நிதர்சனமாக ஏற்று தமிழர் அறத்தை மொழியுடன் சுருக்கிக் கொள்ளாமல் இருப்பது அறிவுடைமை.
முடிவாக,
- நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் குறிக்கும்.
- அவைகள் அனைத்தும் வழங்கிய இறைவன் ஒன்று,
- அவைகள் பேசும் அறம் ஒன்று,
- அவைகளுக்குள் ஒரு தொடர்பு உண்டு,
- அதை ஆய்ந்து, அறிந்து, கற்று, ஏற்று, வழிப்பட்டு பிறருக்கு கூறுவது நம் கடமை ஆகும்.
3320. காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
பதிலளிநீக்குஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. 1
1. பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர்
பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக்
கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக
விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின்
திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.
கு-ரை: காதல் - அன்பு. மல்கி - மிக்கு. ஓதுதல் -
சொல்லுதல். இங்கே செபித்தல் என்னும் பொருளில் வந்தது
https://www.tamilvu.org/slet/l1100/l1100pag.jsp?book_id=20&pno=412
மாயோன் மேய காடு உறை உலகமும்
பதிலளிநீக்குசேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே - தொல்காப்பியம் 5
தொல்காப்பியம் கூறும் இந்த முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் ஆகிய நான் வகை நிலமும், மாயோன், சேயோன், வருணன் மற்றும் வேந்தன் ஆகிய நான்கு பெயர்களும்
திருமந்திரம் கூறும்
"நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு"
என்பதோடு ஒரு தொடர்ப்பு இருப்பது போல தெரிகிறது.
தொல்காப்பியம் கூறும் ஆழ்வாரும், திருமந்திரம் கூறும் நால்வரும் வழிநடத்த வந்தவர்கள்.
நான்கு நந்திகள் : நான்கு தேவ தூதர்கள்
சிவயோகமாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர் : மாயோன், சேயோன், வருணன், வேந்தன்
நாதன் (ஆசிரியன்) : மேய (மேய்க்கிற, வழிநடத்துகிற )
நால் திசை : முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் (அன்று திசைகளின் நிலை இதுவாக இருந்து இருக்கலாம்)
பெயர்கள் மாறுவதில் ஆச்சரியம் இல்லை, முன்னுள்ள பெயர்களின் கருத்து மருவும் பொழுது அப்பொருள் குறிக்காது வேறு பெயரோடு குறிப்பிடப்படுவது இறைவனுக்கும் பொருந்தும்.
முதலில் தெய்வம் என்று தொல்காப்பியத்தில் அறியப்பட்டது பிற்கலத்தில் சிவம் என்று அறியப்பட்டது.
elloh என்று ஆரம்பத்தில் அறியப்பட்டது இறுதியில் அல்லாஹ் என்று அறிய படுகிறது.
இது நான்கு தெய்வங்களை குறிக்க வாய்ப்பில்லை - அது தமிழரின் உலகின் அனைத்து மறைநூலும் எதிரானது. https://araneriislam.blogspot.com/2017/06/11-14.html
பதிலளிநீக்குமறைகள் நான்கு என்று அங்காணே பார்த்தோம் ஆனால் கலித்தொகையில் முதல் வர,
பதிலளிநீக்கு"ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து"
என்று வருகிறது.
இது நால்வகையை குறிக்கவில்லை மாறாக ஒரு வகையில் உள்ள பல வழிநூல்களையும் அதன் முதல் நூலையும் குறிக்கிறது.
http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kalithokai/kalithokai_1.html
ஆதியில் மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள் என்று பைபிள் கூறுகிறது, தமிழ்தான் மூத்தமொழி என்று சான்றுகள் பல வெளிவந்து கொண்டிருக்கிறது. அத அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரே மொழி பேசிய பொழுது திணையின் அடிப்படையிலும், மொழிகள் கிளைக்க துவங்கிய பிறகு மொழியின் அடிப்படையிலும் தேவதூதர்கள் அனுப்பப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய கருத்து இது
பதிலளிநீக்குஅறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
பதிலளிநீக்குபெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
இறை புரிந்து வாழ்தல் இயல்பு. - ஏலாதி கடவுள் வாழ்த்து
பொருள்: ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள் ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின், பாதம் சேவகம் செய்யும் நான்கு நந்திகளும், முறையாக வழங்கி பெறப்படும் நான்மறைகளை விரும்பி வழிபடுவானேயானால் மண்ணுலகினின்றும் நீங்கி தேவர்களுக்கு தலைமைபூண்டு இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்
(இ-ள்.) அறுநால்வர் - ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள்
ஆய்புகழ் - ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின்,
சேவடி - பாதம் சேவகம் செய்யும்
ஆற்றப்பெறு நால்வர் - நான்கு நந்திகளும்,
பேணிவழங்கி - முறையாக வழங்கி,
பெறும் நால் மறை - பெறப்படும் நான்மறைகளை,
புரிந்து - விரும்பி,
வாழுமேல் - வழிபடுவானேயானால்,
மண் ஒழிந்து - மண்ணுலகினின்றும் நீங்கி,
விண்ணோர்க்கு -தேவர்களுக்கு,
இறை புரிந்து - தலைமைபூண்டு,
வாழ்தல்இயல்பு - இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்.
குறிப்பு: நால்நந்திகள் தரும் நான்மறைகளை வழிபடும் (பின்பற்றும்) ஒருவன் வானுலகத்துக்கு தலைவனான இயல்பு. எனவே ஏலாதியும் இயற்க்கை வழிபாட்டை கூறவில்லை.
ஏலாதி
பதிலளிநீக்குநூல்
சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு. 1
நிறைந்த பூவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரந்த புகழ், செல்வம், மேன்மையாகக் கொள்ளுஞ் சொல், வீரத்தில் அசையாது நின்ற நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறியிலொழுகுவோரது இலக்கணம்,
ஏலாதி 75 Elati 75
பதிலளிநீக்குஅறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி, மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின் மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே ஆசாரியனது அமைவு. 75
அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவின்
மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன தமைவு. 75
ஆறு வகையான சமயத்தவர் நூல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
அவற்றின் உணர்வுகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
அவற்றில் வரும் குற்றங்களை நீக்க வேண்டும்.
தம் உணர்வுக்கு மாறாக விளங்கும் கருத்துகளையும் நீக்க வேண்டும்.
குற்றங்களை நீக்கும்போது ஒழுக்க நெறியில் மேம்பட்ட பெரியவனாக விளங்க வேண்டும்.
தம் கருத்துக்கு மறுதலைச் சொல் இருக்குமானால் மாற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
இது ஆசாரியன் நடந்துகொள்ள வேண்டிய அமைதி இலக்கணம் ஆகும்.
அறு சமயம் : - உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பட்டாசாரியம்.
அருங்கலச்செப்பு
பதிலளிநீக்குஎட்டு மதங்கள்
பிறப்புக் குலம்வலி செல்வம் வனப்புச்
சிறப்புத் தவமுணர்வோடு எட்டு. 34
மதத்தின் விளைவு
இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம். 35
https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html
இந்து புராணங்கள் 18யும் எழுதியவர் ஒரே ஒரு நபர் - வியாசர். எனவே அது உண்மையாக நடந்த வரலாறு அல்ல.
பதிலளிநீக்குஅவர் எழுதிய சிவபுராணம் நமது திருமந்திர பாடல்களை மூலமாக வைத்து பொருள் புரியாமல் அல்லது வேண்டுமென்றே பொருள் திரித்து எழுதப்பட்டது.
சத்தி, ஆலகால கண்டன் போன்ற வார்த்தைகள் திருமந்திரத்தில் தான் உண்டு. அதன் உண்மை பொருளும் அவர் பயன்படுத்தும் பொருளும் நேர் முரண்.
"அறியும் சிவனும் ஒன்னு" என்பதை புரிவதில் உள்ள சிக்கல் இந்த புராணங்களால் ஏற்பட்டது. உதாரணமாக, "கருணாநிதியும் கலைஞரும் ஒன்னு" என்றால் ஒரு உடலுக்கு இரு பெயர்கள் என்று புரிகிறமாதிரி நாம் "அறியும் சிவனும் ஒன்னு" என்பதை புரிந்து கொள்வதில்லை. மாறாக "நீயும் நானும் ஒன்னு" என்று பண்பை குறிப்பிட்டு உவமையாக சொல்வதை போல புரிகிரோம். ஏனென்றால் அறி என்பதன் இலக்கணமும் சிவன் என்பதன் விளக்கமும் வெவ்வேறாக நமது சிந்தைகளில் படிய இந்த புராணங்கள் மிக முக்கிய காரணம். மேலும் சிவ மரபு தமிழுக்கு சொந்தமானது எனவேதான் சிவ ஆகமங்கள் தமிழிலும் விஷ்ணு ஆகமங்கள் வேறு மொழியிலும் உள்ளது. ஒரே இறைவனை பேசும் இருவேறு மொழிகளின் நூல்களை ஒன்றிணைக்க முயன்றதன் விளைவு இந்த புராணங்கள், இந்த புராணங்களின் விளைவு ஒரே இறைவனை மூன்று பாத்திரங்களாக ஆக்கி ஒருவருக்கொருவர் உருவினர்களாக்கி இப்படி நான்மறைகள் கூறும் ஒரே தெய்வ கோட்பாட்டை உடைத்து இந்த 18 புராணங்கள்.
தமிழர் வேதமான தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள், சித்தர்கள் பாடல்களும் புராணங்கள் உதவி இல்லாமல் புரிந்து கொள்ள முயற்சி செய்யப் படும்பொழுது, ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள உண்மை பொருளை கொண்டு பாடல்களுக்கு உரை எழுத முயலும் பொழுது, உலகிலுள்ள நான்மறைகளோடு அது ஒத்துப் போகும் என்பதில் மாற்றுக் கருத்து எதுமில்லை.
1 கொரிந்தியர் 12:28
பதிலளிநீக்கு28 தேவன் சபையில் சிலரை அமைத்தார்: முதலில் அப்போஸ்தலர்கள், இரண்டாவது தீர்க்கதரிசிகள், மூன்றாவது போதகர்கள், பிறகு அற்புதம் செய்பவர்கள், பிறகு குணமளிக்கும் பரிசுகள், உதவிகள், அரசாங்கங்கள் மற்றும் பல்வேறு வகையான மொழிகள்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%205%3A12&version=ERV-TA
பதிலளிநீக்குமூல னுரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூல னுரைசெய்த முந்நூறு மந்திரம்
மூல னுரைசெய்த முப்ப துபதேசம்
மூல னுரைசெய்த மூன்றும் ஒன்றாமே.
-திருமந்திரம் 3046-
ஆசான் திருமூலர் அருளிச்செய்த மூவாயிரந் தமிழ்பாடல்களும், முந்நூறு மந்திரப்பாடல்களும், முப்பது உபதேசப்பாடல்களும் ஆகிய மூன்று வகைப்பாடல்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாம
நால்வர் வாக்குத் தேவர் வாக்கு. - பழமொழி
பதிலளிநீக்குநால்வர் கூடினால் தேவர் சபை.
பதிலளிநீக்கு(தேவர் வாக்கு.)
உலகில் உள்ள எல்லோருக்கும் வேதம் வழங்கப் பட்டதை கூறும் சமயம் இஸ்லாம் மற்றும் சைவம் மட்டுமே.. நான்மறை என்று திருமந்திரம் கூறுவதும், உலகில் உள்ள அனைவருக்கும் வேதம் வழங்கப் பட்டதை குர்ஆன் கூறுவதையும் பொருத்தி பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குபுறநானூறு - 2. போரும் சோறும்!
பதிலளிநீக்குபாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு 5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச், 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!
நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும்-திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ. உன் கடலிலே தோன்றிய ஞாயிறு உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ. இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா?தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில் இருபாலாருக்கும் பெருஞ்சோறு கொடுத்தவன் நீ. பால் புளித்தாலும், பகல் இருளானாலும், நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் வாழ்வாயாக.இமயம் பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலைகொள்வதாகுக.
நாஅல் வேத நெறி திரியினும்: நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும்
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru2.html
தேவாரம் 69.
பதிலளிநீக்குவிரித்தானை நால்வர்க்கு
வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப்
பொருளுருவாம்புண்ணியனை
தரித்தானைக் கங்கைநீர்
தாழ்சடைமேன் மதின்மூன்றும்
எரித்தானை யெம்மானை
யென்மனத்தே வைத்தேனே.
8
8. பொ-ரை: சனகர் முதலிய நால்வருக்கு வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில்விரித்து உரைத்தவனாய், வேதங்களால் பரம்பொருளாக விரும்பப்பட்டவனாய், சொற்களும், சந்தியால் ஆகிய தொடர்களும் அவற்றின் பொருளுமாக உள்ள நல்வினை வடிவினனாய், தாழ்ந்த சடைமுடி மீது கங்கை நீரை ஏற்றவனாய், மும்மதில்களையும் எரித்தவனாய் உள்ள எம்பெருமானை என் மனத்தே வைத்தேனே.
கு-ரை: நால்வர்(அகத்தியர் முதலோர் சநகாதியர்)க்கு வெவ்வேறு வேதங்கள் விரித்தவனை. ‘வெவ்வேறு’ என்பது வேதங்கட்கும், விரித்தற்கும் பொது. புரித்தல் - விரும்பச் செய்தல். பிரிதல் என்பதன் மரூஉவாயின் பதங்களைப் பிரித்தல் என்றாகும். சந்தி - புணர்ச்சி. பதப்பொருளும், தொடர்ப்பொருளும் கொள்க. சொல்லுருவாதலும் பொருளுருவாதலும் மேல் உள்ளதிருப்பாட லிலும் உணர்த்தப்பட்டன. புண்ணியன்:- ‘புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே’ (சித்தியார்.) ‘புண்ணியம்(-சிவபூசை) செய் வார்க்குப் பூவுண்டு நீருண்டு’ (தி.10திருமந்திரம்). தாழ் (-தொங்கிய) சடைமேல் கங்கைநீர் தரித்தானை (-தாங்கியவனை). திரிபுரம் எரித்தவனை.
https://www.tamilvu.org/slet/l4140/l4140wpn1.jsp?song_no=69&book_id=112
தேவாரம் 68.
பதிலளிநீக்குநல்லானை நல்லான
நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கண்
மனத்துறையு மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த
பொருளானைத் துகளேதும்
இல்லானை யெம்மானை
யென்மனத்தே வைத்தேனே.
7
7. பொ-ரை: பெரியவனாய், மேம்பட்ட நான்மறைகளும் ஆறு அங்கங்களும் வல்லவனாய், தன்னை உள்ளவாறு உணரவல்லார்களுடைய உள்ளத்தில் தங்கும் வலியவனாய், வேத வடிவினனாய், வேதத்தில் நிறைந்திருக்கும் பரம்பொருளாய், இயல்பாகவே களங்கம் ஏதும் இல்லாதவனாய், எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
கு-ரை: நல்லானை- சிவனை. மங்களம். நலம். ‘குறைவிலா மங்கலகுணத்தன்’(காஞ்சிப்புராணம்) நல்லான - நலத்தன ஆகிய, ஈண்டுநல் என்னும் முதனிலை நன்மையன என்னும் பொருட்டு. நான்மறை:- எழுத்ததிகாரத்துப் பாயிரத்தின் உரைக்கண் நச்சினார்க்கினியர் எழுதியவற்றைக் காண்க.
வல்லானை - அறிவிற்கறிவாய் நின்றுணர்த்தவல்லவனை. வல்லார்கள் - அங்ஙனம் உணர வல்லவர்களுடைய. மைந்தனை - வலிமையுடையவனை. சொல்லானை - சொல்லுருவாகிய தனது ஆற்றலாய்த் தோன்றுவானை. பொருளானை - பொருளுருவாகிய தன்னை. துகள் ஏதும் இல்லானை- இயல்பாகவே துகளின் நீங்கிய உணர் வினனை. ‘துகள் அறுபோதம்’ பசுத்துவம் நீங்கிய ஆன்மாக்களுக்கு உளதாவது (ஆகந்துகம்). துகளின்மை பதியின் இயல்பு (சகசம், சுவபாவிகம்). எம் மகனை - எம் இறைவனை. ‘எம்மான்’ மரூஉ.
https://www.tamilvu.org/slet/l4140/l4140uri.jsp?song_no=68&book_id=112&head_id=62&sub_id=1918
தேவாரம் பாடல் எண் :1129
பதிலளிநீக்குதேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்;
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நால்மறை ஓதும் ஆரூரரே.
https://www.tamilvu.org/library/l4150/html/l4150inx.htm
21. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.
பதிலளிநீக்குhttps://www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-tamil-translation/soora-6
எட்டுத் திசைகளும் தாமே போலும்,
பதிலளிநீக்குதேவாரம்
6. 089 திருஇன்னம்பர் திருத்தாண்டகம்
பாடல் எண் : 8
மட்டு மலியும் சடையார் போலும்,
மாதைஓர் பாகம் உடையார் போலும்,
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்,
காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்,
நட்டம் பயின்றுஆடும் நம்பர் போலும்,
ஞாலம்எரி நீர்வெளிகால் ஆனார் போலும்,
எட்டுத் திசைகளும் தாமே போலும்,
இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
https://kuganarul.blogspot.com/2018/06/blog-post_159.html
நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
பதிலளிநீக்குசெம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.
விளக்கம்: நம்பிக்கைக்கு உரியவனும் முதற்பொருளாக விளங்குபவனும் நான்கு வேதங்களாலும் ஒதப்படுபவனும் தங்கத்தின் ஜொலிப்பு போல உள்ளே விளங்கும் சோதியும் ஆன சிவபெருமான் மீது அன்பு செலுத்தி ஆசைகளை அடக்கி மனதை சுழுமுனை வழியாக உச்சியில் ஏறுமாறு செய்து தலை உச்சியுள்ள சகஸ்ரதளத்தில் தியானித்திருந்தால் அங்கு இருக்கும் சிவபெருமானைக் வணங்கி அவனுடன் கலந்து இருக்கலாம்.
https://kvnthirumoolar.com/song-626/
பண்டாய நான்மறை = பண்டு + ஆய + நான் + மறை
பதிலளிநீக்குபண்டு = பழமை
ஆய = ஆயம் = ரகசியம்
நான் = நான்கு
மறை = மறை நூல்
பழமை உடைய இரகசியமான நான்கு மறைகள் என்பது சம்ஸ்கிருத நூல்கள் அல்ல.
அதர்வண வேதம் பின்னாளில் சேர்க்கப்பட்டது - எனவே அது பண்டாய நான்மறையில் வர வாய்ப்பில்லை!
நான்மறை என்பது உலகில் உள்ள அனைத்து வேதங்களியும் குறிக்கும்.
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லைக் கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை.
பொழிப்புரை :
நெஞ்சே! பழமையாகிய நான்கு வேதங்களும் பக்கத்தில் அணுகமாட்டா; திருமால் பிரமன் என்போரும் கண்டறி யார்; அப்படிப்பட்ட கோகழி எம்கோமான் கடையேனைத் தொண்டு கொண்டதற்கு நாம் செய்யும் கைம்மாறு உளதோ?
குறிப்புரை :
பண்டையதாய பொருளை, `பண்டு` என்றார், `அவன் பால் அணுகா` எனவும், `அவனைக் கண்டார் இல்லை` எனவும், செய்யுட்கண் முன்வரற்பாலனவாய சுட்டுப் பெயர்கள் வருவிக்க. ``கண்டாரும்`` என்ற உம்மை, இழிவு சிறப்பு. ``இல்லை`` என்றதன் பின், `அங்ஙனமாக` என்பது வருவிக்க.
https://www.facebook.com/permalink.php?story_fbid=1197195423624814&id=621228547888174&locale=hi_IN
2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
பதிலளிநீக்கு2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
பதிலளிநீக்கு‘நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
பதிலளிநீக்குவாய்மொழிப் புலவீர் கேண்மீன் சிறந்தது
காதல் காமம் காமத்து சிறந்தது
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலின் சிறந்தது கற்பே அதுதான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல்
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து உவக்கும் சுணங்கறை அதுவே
கேள் அணங்குற மகனைக் கிளந்துள சுணங்கறை
சுணங்கறைப் பயனும் ஊடலுல் உள்ளதுவே
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திரார்’ (பரி.9:12-25)
ஏனோக் நோவாவின் வெள்ளத்திற்குமுன்ஒரு பைபிள் நபர் மற்றும்தேசபக்தர்ஜாரெட்டின்மகன்மெத்தூசலாவின்தந்தை.ஹீப்ரு பைபிளில் ஆன்டிலுவியன்சேர்ந்தவர்.
பதிலளிநீக்குகிழக்கு மரபுவழி மற்றும் ஓரியண்டல் மரபுவழியில் , அவர் ஒரு புனிதராக போற்றப்படுகிறார் .
https://en.wikipedia.org/wiki/Enoch
4000 ஆண்டுகால பழமையான சவுதி நகரம்
பதிலளிநீக்குhttps://www.maalaimalar.com/news/world/4000-year-old-city-discovered-in-saudi-arabia-745259?fbclid=IwY2xjawGXQSxleHRuA2FlbQIxMQABHasER6yW28V2FmeNhTkM19XpeWZ5KAlE4vzryhNhuTdIljqRdDWwUrx_Qw_aem_xcXEpB0t4BicDpKZOec4iQ&sfnsn=wiwspwa