அகத்தியர் என்பவர் தமிழுக்கு இலக்கணம் எழுதிய முனைவன். ஆனால் அந்நூல் இன்று கிடைக்கப் பெறவில்லை. அகத்தியர் என்ற பெயரில் வரலாற்றில் பலர் காணப்படுகின்றனர். அதோடு அவர்கள் வெவ்வேறு இனத்தையும் தத்துவத்தையும் கொண்டவர்களாக இருந்து உள்ளனர்.
வாசி: அகத்தியர்
அகத்தியரின் பெயரில் பொய்யாக நூல்கள் எழுதப்பட்டதற்க்கான் ஆதாரம்?
வாசி: அகத்தியர் 100
எனவே அகத்தியர் பெயரில் உள்ள நூல்கள் அனைத்தும் நாம் அறிந்த தமிழுக்கு உரை செய்த அகத்தியர் எழுதியதல்ல. எனவே பொய் அகத்தியர்கள் எழுதிய நூல்களில் பொருள் குற்றம் இருக்கலாம் அல்லது நூலின் நோக்கமே பிழையாக இருக்கலாம் என்று அறிதல் நலம்.
ஒருவேளை அகத்தியரின் உண்மை நூல் ஒன்றை நாம் கண்டறிந்தால் அதோடு மற்ற நூல்கள் முரண்படுகிறதா என்ற கோணத்திலும், தொல்காப்பியரின் முதல் நூல் வழினூல் விதியை அடிப்படையாக கொண்ட ஆராய்ந்தால் பொய் நூல்களை கண்டறிய முடியும்.
நடுவுநில்லாது இவ்வுலகஞ் சரிந்துகெடுகின்றது எம்பெருமான் என்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீபோய்முடுகிய வையத்து முன்னிர் என்றானே.அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்அங்கி உதயஞ்செய் மேல் பாலவனொடுமங்கி உதய வடபால் தவமுனிஎங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. (இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம், பாடல் எண் : 2)
பொழிப்புரை:`புறத்தும் அகத்தும் சுடர் விட்டுளன் எங்கள் சோதி` (தி.3 ப.54 பா.5) என்றபடி, புறத்தும், அகத்தும் தீயை உண்டாக்கி வளர்க்கின்ற, மேற்றிசைக்கண் ஞானாக்கினியாய் விளங்கிய அகத்திய முனிவர் தென்றிசையிலும், தவம் உடையவரே காணத்தக்காராக அரிதில் விளங்குகின்ற தவக் கோலத்தை உடைய முனிவனாகிய சிவபெருமான் வடதிசையிலும் வீற்றிருந்து உலகமுழுவதையும் விளக்குகின்ற ஒளியாய்த் திகழ்கின்றார்கள்.
மனுதர்மம் கூட அகத்தியர் பற்றி பேசுகிறது.
22. Beasts and birds recommended (for consumption) may be slain by Brahmanas for sacrifices, and in order to feed those whom they are bound to maintain; for Agastya did this of old.
22. (நுகர்வதற்கு) பரிந்துரைக்கப்பட்ட மிருகங்கள் மற்றும் பறவைகள் பிராமணர்களால் பலிகளுக்காகவும், தாங்கள் பராமரிக்க வேண்டியவர்களுக்கு உணவளிப்பதற்காகவும் கொல்லப்படலாம்; அகஸ்தியர் இதை பழங்காலத்திலிருந்தே செய்தார். மனுதர்மம்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅதங்கோட்டாசான் தமிழ் மன்றம்:
தமிழறிஞர் அதங்கோட்டாசானை நினைவு கூரும் வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் மன்றம் அவர் பெயரில் சீரிய முறையில் இயங்கி வருகிறது.
தொல்காப்பியர்:
தொன்மைக்(முந்தைய) காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக்குடும்பத்தினைச் சுருக்கமாக குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது பழமொழி ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்தத காப்பியருள், இந்நூல் ஆசிரியனும் ஒருவன். எனவே, தொல்காப்பியன் எனப்பட்டான். இன்று மரியாதைக் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப் படுகிறார்.தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என திரு. கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார். தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என Tamil Studies என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஜயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார். வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார். "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஜந்நூறு ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும் கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது. இப் பழந்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வு, தமிழ் மொழியுடன் தொடர்புடையது. தமிழ் மொழி ஆய்வு, சிந்துவெளி நாகரிக ஆய்வுடனும் தெற்கிலிருந்து மறைந்த குமரிக் கண்ட ஆய்வுடனும் தொடர்புகொண்டது. இன்றைய அகழாய்வுகளும், கல்வெட்டு ஆய்வுகளும் மேற்சுட்டிய பழந்தமிழ் நூல்கள் கிறித்தவ ஊழிக்கு முற்பட்டனவே என நிறுவுமாறு சான்றுகள் மிகப்பல கிடைத்து வருகின்றன. இதனால், இம் முடிவில் தொடர் ஆய்விலேயே இருந்த பேரறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன், தினமலர் கிருஷ்ணமூர்த்தி, ஆர். நாகசாமி போன்றவர்களும் தமிழ் மொழியியல் மரபுவழி அறிஞர்களும் இன்று கிறித்தவ ஊழிக்கு முற்பட்ட காலம் என்பதை ஏற்கின்றனர். இந்நிலையில், தொல்காப்பியர் காலம் கிறித்துவுக்குப் பிற்பட்டது என்பார் கூற்று, சான்றற்றது என விட்டுவிடத்தக்கதாகிறது. கிறித்துவுக்கு முற்பட்டது என்ற முடிவிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
க.வெள்ளை வாரணர் கி.மு. 5320
மறைமலையடிகள் கி.மு. 3500
கா.சுப்பிரமணிய பிள்ளை கி.மு. 2000
ச.சோ.பாரதியார் கி.மு. 1000
க.நெடுஞ்செழியன் கி.மு. 1400
மா.கந்தசாமி கி.மு.1400
கே.கே.பிள்ளை கி.மு. 400
மு.வரதராசனார் கி.மு. 500
ஞா.தேவநேயப் பாவாணர் கி.மு.700
சி.இலக்குவனார் கி.மு.700
இரா.இளங்குமரன் கி.மு.700
பதிலளிநீக்குதொல்காப்பியர் காலத்தின் ஆய்வில் கீழ் எல்லையாக கி.மு.7-ஆம் நூற்றாண்டைக் கொள்ளுதல் தகும். தொல்காப்பியம் என்ற இலக்கிய வரலாற்று "உரைநடைத் தொல்காப்பிய' நூலில் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), க.வெள்ளை வாரணர், தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது. சங்கப் பாடல்களுக்கு முற்பட்டது என்பதைப் பல சான்றுகளால் நிறுவியுள்ளார். சி.இலக்குவனார், தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் முற்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் தந்துள்ளார். இவையும் இவை போன்ற செய்திகள் எளிதில் மறுக்கக்கூடியதே.
பாணர், பொருநர் போன்றவர்களின் ஆற்றுப்படைப் பாடல்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஆனால், அவர்களின் பாடலுக்கு இலக்கிய வடிவம் தந்து, புலவர்கள் அவர்கள் பாடலைப்போல பாடியவையே பத்துப்பாட்டில் உள்ளன. தொல்காப்பியர் செய்யுள் வடிவமான பாவகைகளைக் கூறும் விளக்கம் அனைத்தும், அவர் தமக்கு முந்தியவற்றைக் கண்டு கூற முற்படுவதை உணர்த்துகின்றன. பிற்கால யாப்பிலக்கண நூல்களைப்போல வரையறைப்படுத்திக் கூறவில்லை. இலக்கணம் கூறும் முறை தொடக்க காலத்தைக் காட்டுகிறது. இதனால் முதற்கண் சங்கப் பாடல்களின் காலத்தை ஒரு முடிவு செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும். சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்ட காலம் கி.மு. 5, 4-ஆம் நூற்றாண்டுகள் என்பதை, நடுநிலையாளர் அனைவரும் ஒப்புவர் என்பது இயற்கையே.
தொல்காப்பியர் காலம்:
சங்கப் பாடல்களின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்பதை அதன் மேல் எல்லையாகக் கருதலாம். தொல்காப்பியம் அச் சங்கப் பாடல்களுக்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டிருக்க வேண்டும் என்பதும் முன்பே குறிக்கப்பட்டது. இங்கு காட்டப்பட்டுள்ள சான்றுகளின் படியும் சான்றோர் பலரது ஆய்வுகளின் படியும் உற்று நோக்கினால், தொல்காப்பியர் காலம் கி.மு.7-ஆம் நூற்றாண்டுக்கும் 8-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது எனல் பொருந்துவதாகும். அதனால் கி.மு. 31, திருவள்ளுவர் காலம் என முடிவு செய்யப்பட்டதுபோல கி.மு. 711 தொல்காப்பியர் காலம் என முடிவு செய்யலாம். தொல்காப்பியர் காலம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. எனினும் திருவள்ளுவர் காலம் பற்றி ஒரு முடிவு செய்ததும் திருவள்ளுவர் திருவுருவம் பற்றிய கருத்துப் போலவும் தொல்காப்பியர் திருவுருவம் பற்றி (கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் போன்ற வடிவம்) ஒரு கருத்துடன் முடிவுசெய்தலும் திருவள்ளுவர் நாள் போல, தொல்காப்பியர் நாள் ஒன்றைக் குறிப்பது அச்சான்றோரை-தமிழ்ப் புலவோரில் முதற்குடி மகனெனப் போற்றத் தகுந்த பெருமையுடையவரை ஆண்டுதோறும் நினைந்து கொண்டாட வாய்ப்பாகும்.
அகத்தியம்
பதிலளிநீக்குhttps://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#:~:text=%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.