தமிழர் சமயம்
யாயு ஞாயும் யாரா கியரோஎந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்யானு நீயு மெவ்வழி யறிதும்செம்புலப் பெயனீர் போலஅன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே (குறுந்.40)
என்னும் இப்பாடலில் தாய் வழியிலும் முறை இல்லை, தந்தை வழி முறையும் இல்லை. நாம் இருவரும் காதலால் மணந்தோம் என்று தலைவன் கூறுகிறான். இக்கூற்றிலிருந்து கணவன் மனைவியாக வாழ்வதற்கு அக்கால வழக்கப்படித் தாய், தந்தை உறவு அடிப்படையானது என்பது உணரப்படுகின்றது.
அக மணம் புற மணம் இரண்டும் அனுமதிக்கப் பட்டுளள்து. அதிலும் தாய் தந்தை இரண்டு வழியிலும் திருமணம் நடைபெற்று வந்துள்ளது. இதில் சின்னம்மா வீட்டில் அல்லது சித்தப்பா வீட்டில் பெண்ணெக்க கூடாது போன்ற எந்த விலக்கும் இல்லை. வேறு எந்த நூலும், பாடலும் இவ்விதி விலக்கை பேசவும் இல்லை.
இந்து மதம் *
இதிலும் இந்து மாதத்தில் வழக்கம் போல பல்வேறு கருத்து நிலவுகிறது.
முதல் கருத்து: சித்தப்பா குழந்தையை தவிர வேறு யாரைவேண்டுமானாலும் மணம் முடிக்கலாம்.
- உங்கள் அப்பாவின் சகோதரரின் (சித்தப்பா) குழந்தைகள்.
- உங்கள் அப்பாவின் சகோதரியின் (அத்தை) குழந்தைகள்
- உங்கள் அம்மாவின் சகோதரரின் (மாமா) குழந்தைகள்.
- உங்கள் அம்மாவின் சகோதரியின் (சின்னம்மா) குழந்தைகள்.
இப்போது (1) திருமணம் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்களுக்கு ஒரே கோத்திரம் அல்லது சபிண்டா உள்ளது. இது இந்தியாவில் எங்கும் பின்பற்றப்படவில்லை.
திருமணம் (2,3 மற்றும் 4) இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக தெற்கில் நடைமுறையில் உள்ளது மற்றும் இந்து மதத்திற்கு எதிரானது அல்ல. உதாரணங்களை மகாபாரதத்தில் காணலாம்.
இரண்டாம் கருத்து: அத்தை மகளையோ, மாமன் மகளையோ திருமணம் செய்வது சாஸ்திர விரோதம்.
முதல் கருத்துக்கு அக்கினி புராண வசனம் ஆதாரமாக உள்ளது. இரண்டாம் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை.
இதற்க்கு காரணமாக கூறப்படுவது, "இந்துக்களிடையே குறுக்கு உறவினரின் (மணவழிச் சகோதரசகோதரி) திருமணம் ஒரு நிறுவப்பட்ட பழக்கமாக இருந்தது."
யார் குறுக்கு உறவினர்கள் இல்லை?
உங்கள் தாய் —-> உங்கள் தாயின் சகோதரிகள் உங்கள் இளைய அல்லது மூத்த தாய் என்று அழைக்கப்படுகிறார்கள்
உங்கள் தந்தை —-> உங்கள் தந்தையின் சகோதரர்கள் உங்கள் இளைய அல்லது மூத்த தந்தை என்று அழைக்கப்படுகிறார்கள்
அவர்களின் குழந்தைகள் உங்கள் சகோதர சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள், பொதுவாக திருமணம் சாத்தியமில்லை.
அடுத்து, குறுக்கு உறவினர்கள் யார்?
உங்கள் தாய் —-> உங்கள் தாயின் சகோதரர் மாமா என்று அழைக்கப்படுகிறார் (அதாவது குறுக்கு மாமா மட்டுமே மாமா சரியானவர்)
உங்கள் தந்தை —→ உங்கள் தந்தையின் சகோதரி அத்தை என்று அழைக்கப்படுகிறார்
அவர்களின் குழந்தைகள் உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என்று அழைக்கப்படுவதில்லை, அவர்கள் உங்கள் குறுக்கு உறவினர்கள், அத்தகைய உறவினர்களுக்கு இடையே திருமணம் அனுமதிக்கப்படுகிறது.
மூன்றாம் கறுத்தது: இரத்த பந்த திருமணமே கூடாது.
ஒரே கோத்திரத்தில் இருந்து அல்லது அதே முனிவரின் வரிசையில் பிறந்தவரை தேர்வு செய்யக்கூடாது. ஏழுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்தும் தந்தைவழிப் பக்கத்திலிருந்தும் தாய்வழிப் பக்கத்திலிருந்தும் ஒருவர் தேர்வு செய்யலாம். - (அக்னி புராணம், அத்தியாயம் 154)
இதன்படி இரத்த பந்த திருமணமே கூடாது.
இஸ்லாம்
யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்பதை குர்ஆன் கண்டிப்புடன் கூறுகிறது.
‘‘(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள் மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள் மேலும் உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், உங்கள் பால்குடி சகோதரிகள், உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்வி கள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத்தண்டுகளில் இருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவியராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.)’’ (திருக்குர்ஆன் 3:23)
- தாய்
- மகள்கள்
- சகோதரிகள்
- தந்தையின் சகோதரிகள்
- தாயின் சகோதரிகள்
- சகோதரனின் புதல்விகள்
- சகோதரியின் புதல்விகள் – இவர்கள் ரத்த பந்த உறவின் மூலம் தடை செய்யப்பட்ட 7 பிரிவினர் ஆவர்.
இதைபோல
- மனைவியின் தாய்
- மனைவியின் பிறிதொரு கணவனுக்கு (முன்னாள் கணவனுக்கு) பிறந்த மகள்
- மகனின் மனைவி (மருமகள்)
- தந்தையின் மனைவி– இவர்கள் திருமண உறவின் மூலம் தடுக்கப்பட்ட 4 பிரிவினர் ஆவர்.
மேலும் பாலூட்டிய அன்னியப்பெண்ணும், பெற்றெடுத்த தாயும் ஒரே தரத்தைப் பெறுகின்றனர்.
ரத்தபந்த உறவின் மூலம் தாயின் வழித்தோன்றலில் யாரெல்லாம் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களாக ஆவார்களோ அவர்கள் அனைவரும் பால்குடி உறவின் மூலம் தடுக்கப்பட்டவர்களாக மாறுவர். எனவே அந்த 7 தரப்பினர் பால்குடி உறவின் மூலமும் திருமணம் புரிய தடை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் ஒரு பெண்ணுடன் அவளுடைய சகோதரியையோ, அவளுடைய தாயின் சகோதரியையோ, அவளுடைய தந்தையின் சகோதரியையோ ஒரு சேர மணமுடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
நிச்சயமாக (இரத்த) உறவுகளில் ஒரு ஆணிற்கு அனைவருமே ஹராமகின்றனர். நான்கு பேரை தவிர:
- சாச்சா (பெரிய தந்தை, சிறிய தந்தை மகள்)
- மாமன் மகள்
- மாமி மகள்
- சாச்சி மகள் (பெரியம்மா, சின்னம்மாவின் மகள்)
இவர்கள் நான்கு நபர்களும் உறவுகளில் திருமணம் செய்ய அனுமதிக்க பட்டவர்கள்.
இந்த நான்குபேரை நபிகளாருக்கு ஹலாலாக்கி இறங்கிய வசனம்:
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); (சூரா அஹ்சாப் 33:50)
பதிலளிநீக்குதிருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் இரு வகையினர் :
1.எப்போதும் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤبدا ):
எத்தருணத்திலும் ஒரு ஆணாகிறவன் இவர்களை திருமணம் செய்வது கூடாது .
நிகழ் காலத்தில் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤقتا):
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை காரணமாக ஆண்கள் இவ்வகையின பெண்களை திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது . அந்த சூழலோ அல்லது ஒரு திருமண உறவு முறியும் பட்சத்தில் திருமணம் செய்ய ஹலாலாகுவாள் .
இவ்விருவகையின பெண்களைப்பற்றி விரிவாக பார்ப்போம்
1 .எப்போதும் ஹராமாக்கப் பட்டவர்கள் :
1 ).உறவுவின் (காரணமாக ) ஹராமாக்கபட்டவர்கள் (ஏழு நபர்கள் )
(1) தாய்மார்கள் : ஒரு ஆணை பெற்றேடுத்ததின் வகையில் தாய்வழி உறவும், தந்தை வழி உறவும் ஹராம், அதாவது தாய் , தாயுடைய தாய் (பாட்டி), தந்தையுடைய தாய் (பாட்டி ) என முன் செல்லும் சந்ததி ஹராமாகும் .
(2) மகள்கள் : ஒரு ஆண் பெற்றெடுத்ததின் முறையில் ஹராமாகக்கபடுவாள் .மேலும் மகளின் மகள் என அவளின் கீழ் வரும் சந்ததியும் ஹராமாக்க படுவர்.
(3) சகோதரிகள் : எப்போதும் சரி சகோதரிகள் ஹரமாகபடுவார்கள்.
(4) மாமி : இவர்கள் தந்தையின் சகோதரிகள் மேலும் அவர்களின் மேல் உள்ள சந்ததி (மாமியின் தாய்) , இதில் தந்தையின் மாமி , தாயின் மாமியும் அடங்குவர் .
(5) சாச்சி (பெரியம்மா , சின்னம்மா ) : இவர்கள் தாயின் சகோதரிகள், தந்தையின் தாய்மார்கள் (சாச்சி).
(6) சகோதரனின் மகள் ,
(7) சகோதரியின் மகள் : சகோதரனின் மகள் , சகோதரியின் மகள் என்றாலும் சரி இருவரும் ஹராமாக்கபடுவர் , மேலும் அவர்களின் வழி வரும் சந்ததியும் ஹராமாகபடுவர் .
மேற்கூறப்பட்ட ஏழு நபர்களும் எப்போதும் திருமணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளது .
இதில் நான்கு இமாம்களும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.
மேலும் குறிப்பாக ஒருவிடயம் உறவு முறை விடயத்தில் தெளிவாகிறது .
“நிச்சயமாக (இரத்த) உறவுகளில் ஒரு ஆணிற்கு அனைவருமே ஹராமகின்றனர் .நான்கு பேரை தவிர :
*சாச்சா (பெரிய தந்தை , சிறிய தந்தை மகள் ,
*மாமன் மகள்
*மாமி மகள்
*சாச்சி மகள் (பெரியம்மா , சின்னம்மாவின் மகள்,“
இவர்கள் நான்கு நபர்களும் உறவுகளில் திருமணம் செய்ய அனுமதிக்க பட்டவர்கள்.
இந்த நான்குபேரை நபிகளாருக்கு ஹலாலாக்கி இறங்கிய வசனம் :
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்);
(சூரா அஹ்சாப் 33:50 )
மேலும் மஜ்மூ அல் பதாவா ஷேக்குள் இஸ்லாம் (32/62) நான்கு பேரை அல்லாஹ் நபிகளாருக்கு ஹலாக்கியது குறிப்பிட பட்டுள்ளது .
2 ) திருமணத்தின் மூலம் எப்போதும் ஹராமாக்கபட்டவர்கள் محرمات بالمصاهرات)
(1). தந்தையின் மனைவி :
இப்னு அப்பாஸ் (ரலி அறிவிக்கிறார்கள் : “அறியாமை காலத்தில் (இஸ்லாத்திற்கு முன் ) (யாரெல்லாம் இஸ்லாம் ) ஹராமென்றதோ அதுவெல்லாம் ஹராம் தான் ஆனால் தந்தையின் மனைவி , சகோதரிகள் இருவரையும் ஒன்றாக சேர்த்து மணமுடிப்பது மட்டும் ஆகுமாகி இருந்தது.அல்லாஹ் இவ்விரன்டையும் ஹராமாகி விட்டான் .
” முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும். (சூரத்துன் நிசா :22 )
இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது (சூரத்துன் நிசா :23 )
அல்லாஹ் இந்த வசனத்தில் தந்தை திருமணம் முடித்த பெண்ணை திருமணம் செய்வதை தடுத்துவிட்டான் .அதன் நோக்கம் தன் தந்தையுடன் திருமண ஒப்பத்ததாலோ அல்லது அவரோட சேர்த்ததால் என ஆய்வு செய்ய அவசியம் இல்லை . மேலும் நான்கு இமாம்களும் தந்தை திருமணம் செய்துவிட்டால் அப்பெண் எப்போதும் ஹராமாக்க படுவாள் .
மேலும் தந்தை திருமணம் முடித்த பெண்ணை திருமணம் முடித்தால் அவனை கொலை செய்வதே அதற்க்கு தண்டனை ஆகும் .
(2) மனைவியின் தாய் .
அப்பெண்ணுடைய மகளை திருமணம் முடிப்பதால் ஹராமாக்கபடுவாள் .
“உங்கள் மனைவியரின் தாய்மார்களும் (தடுக்கபட்டவர்) ஆவார்கள்;”
(சூரத்துன் நிசா :23 )
மேலும் இதில் மனைவியின் தாயின் தாய் , மனைவியின் தந்தையின் தாய் ஆகியோரும் அடங்குவர்.
பதிலளிநீக்கு(3) மனைவியின் மகள் (வளர்ப்பு மகள்):
இந்த விடயத்தில் ஒரு நிபத்தனை உள்ளது . அப்பெண்ணின் தாயோடு கூடிவிட்டால் அப்பெண் (வளர்ப்பு பெண் ) ஹராம் ஆகிவிடுவாள் அப்பெண்ணின் தாயோடு சேரவில்லை எனில் அப்பெண்ணை திருமணம் முடிப்பது கூடும் .
இது பற்றிய அல்லாஹ் கூறிய வசனம் :
அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. (சூரத்துன் நிசா :23 )
(4) மகனின் மனைவி
ஒரு ஆண் தன் சொந்த மகனின் மனைவியை திருமணம் முடிப்பது ஹராம் ஆகும்.
” உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. (சூரத்துன் நிசா :23 )
மேலும் இதில் பால் குடி முறையில் மகனானவரின் மனைவியை திருமணம் முடிப்பதும் கூடாது .
3) பால்குடி பந்தம் மூலம் எப்போதும் ஹராமாகபடுபவர்கள் -(محرمات بالرضاع :
இறைவன் அதே வசனம் சூரத்துன் நிசாவில் கூறுகிறான்
“உங்களுக்குப் பாலூட்டிய தாய்மார்களும் (செவிலித் தாய் ), உங்கள் பால்குடி சகோதரிகளும்,“(சூரத்துன் நிசா :23 )
மேலும் நபிகள் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
“பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால் குடியும் நெருங்கியவையாக ஆக்கிவிடும்”
(ஆதாரம் : புகாரி 5099, முஸ்லிம் 1447)
மேலும் பால்குடி உறவு என்பது தாய்மை உறவின் இடத்தில் இருப்பதாகவே கணிக்கப்படுகிறது. இக்காலத்தில் பால்குடி முறை இல்லை என்பதால் அதை பற்றி அலச அவசியம் இல்லை எனவே அதில் யாரெல்லாம் ஹராம் என்பதை சுருக்கமாக காண்போம் :
பதிலளிநீக்கு(1) பால்குடி தாய்
(2) .பால்குடி தாயின் மகள் அவனுக்கு முன் அல்லது பின் பிறந்திருந்தாலும் சரி .
(3) பால்குடி தாயின் சகோதரி
(4) பால்குடி தாயின் மகளின் மகள் (ஏனெனில் சகோதரியின் மகளாகிறாள் )
(5) பால்குடி தாயின் கணவரின் தாய் (ஏனெனில் பாட்டி ஆவாகிறாள் )
(6) பால்குடி தாயின் கணவரின் சகோதரி (ஏனெனில் மாமி ஆகிவிடுவாள் )
(7) பால்குடி தாயின் மகனின் மகள் (ஏனெனில் சகோதரனின் மகள் ஆகிவிடுவாள்)
(😎 பால்குடி தாயின் கணவர் மகள் (பால்குடி தாய் அல்லாமல் வேறு மனைவிக்கு பிறந்த
பெண் )
(9) பால்குடி தாயின் கணவரின் வேறு மனைவிகள்
பதிலளிநீக்கு2 நிகழ் காலத்தில் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤقتا):
1). மனைவியின் சகோதரி (இரு சகோதரிகளை சேர்த்து திருமணம் செய்வது )ஒரு ஆண் தான் மணமுடித்த பெண்ணின் சகோதரியை மணப்பது ஆகுமானதல்ல ஹராம் ஆகும் என்பதில் அனைத்து இமாம்களும் ஒருமித்த கருத்தே கொண்டுள்ளனர்.ஆனால் ஒரு ஆனின் மனைவி இறந்துவிட்டால் அல்லது தலாக் விடபட்டால் அவளின் சகோதரியை மணப்பது ஆகுமானது (ஹலால்) ஆகும் .
அல்லாஹ் கூறிய வசனம்
“ இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது
(சூரத்துன் நிசா :23)
@ இதில் இரண்டு சட்டம் பிறக்கிறது .
# ஒரு ஆண் ஒரு பெண்ணையும் அவளின் சகோதரியையும் சேர்த்து மனமுடித்திருந்தால் ?
முதல் திருமணம் ஆகுமாது. முதல் மனைவியுடன் சேர்ந்தாலும் சரி சேராவிட்டாலும் சரி. இரண்டாம் திருமணம் செல்லாதது. எனவே இரு பெண்களில் இரண்டாவதாக திருமணம்
செய்த பெண்ணை விட்டு பிரிந்து விட வேண்டும் . இருசகோதரிகளை ஒரு நிக்காஹ் மூலம் மணமுடிப்பது ஆகுமானது அல்ல,கேடு ஆகும் .
# ஒருவர் காபிராக இருந்தது முஸ்லிம் ஆகும் போது இருசகோதரிகளை திருமணம்
செய்திருந்தால் ?
அவனுக்கு இருவரில் ஒருவரை தேர்தெடுக்க உரிமை உண்டு . ஒரு பெண்ணை சேர்த்துகொண்டு ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணை தலாக் செய்ய வேண்டும் .
இது பற்றி ஒரு ஹதீஸ் பிர்தவ்ஸ் தைலமி கூறுகிறார் : நபி (ஸல் ) அவர்களிடம் சென்று “யா ரசூலுல்லாஹ் , நான் முஸ்லிம் ஆகிவிட்டேன் மேலும் நான் இரு சகோதரிகள் (திருமணம் செய்துள்ளேன் ) . ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . “இருவரில் உமக்கு விருப்பமானவரை தேர்தெடுத்துகொள்” (ஆதாரம் :திர்மித் –1129, அபூதாவூத் 2243, இப்னு மாஜா -1951, அஹ்மத் -232/4 – அறிவிப்பு தரம் : பலகீனமானது )
2) மனைவியின் சாச்சி (பெரியம்மா , சின்னம்மா ), மாமி 🙁 ஒரு பெண்ணோடு சேர்த்து சாச்சி அல்லது மாமியை மணப்பது )
பதிலளிநீக்குஅபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. ”
(ஆதாரம் : புஹாரி :5109 , முஸ்லிம் :1408)
மற்றொரு அறிவிப்பு ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள் : (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். (ஆதாரம் : புஹாரி 5108, நசாயீ 98/6)
அனைத்து இமாம்களின் ஒருமித்த கருத்து : ஒரு ஆண் ஒரு பெண்ணையும் அவளின் மாமி அல்லது சாச்சியை சேர்த்து மணப்பது ஆகாது அதுபோல் தந்தையின் சகோதரியின் (மாமி) தாய் , அது சொந்த உறவிலும் சரி பால்குடி முறையிலும் சரி. தாயின் சகோதரியின் (சாச்சி) தாய்யையும் சேர்த்து மணப்பதும் ஆகாது .
3) பிறர் மனைவி (போரில் கைது செய்யபட்டவர்கள்) காபிரின் அடிமை (போரில் கைது செய்யபட்டவர்கள்) ,காபிரின் மனைவி முஸ்லிமானால் :
அல்லாஹ் கூறுகிறான் :
“இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. “
(சூரத்துன் நிசா :24)
ஒரு காபிரின் மனைவி முஸ்லிமானால் அவளின் இத்தா காலம் வரை திருமணம் முடிக்க இயலாது .
* முஹ்மீனான பெண்களை திருமணம் செய்து இணைத்து கொள்ளுதல் :
இந்த விடயம் மக்கா காபிர்களின் விடயத்தில் அல்லாஹ்வின் கட்டளை ஆகும் ,
மக்காவிலிருந்து ஹிஜ்ரத் வந்த முஹ்மீனான பெண்களை திருப்பி காபிர்களிடம் அனுப்பாதீர்கள் அவர்கள் காபிர்களை மனப்பது ஆகுமானதல்ல. எனவே அவர்களை திருமணம் முடித்து ஏற்று கொள்ளவேண்டும் என இறைவன் கூறுகிறான்
” ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்;. அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; (சூரத்துல் மும்தஹினா : 10 )
4) மூன்று தலாக் சொன்ன பெண்ணை கணவன் மறுபடியும் மணக்கலாகாது , வேறு ஒருவர் திருமணம் முடித்து தலாக் சொன்னாலே தவிர :
“மீட்ட முடியாதபடி – (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து – அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் – மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. (சூரத்துல் அல்பகரா :230)
இது பற்றி இன்ஷா அல்லாஹ் தலாக் பகுதியில் பாப்போம் .
பதிலளிநீக்கு5) இணைவைக்கும் பெண் முஸ்லிம் ஆகும் வரை திருமணம் செய்ய சூடாது .
இறைவன் இது பற்றி கூறுகிறான் : (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை–அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை– நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; (சூரத்துல் பகரா 221)
மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; (சூரத்துல் மும்தஹினா 10 )
இனைவைக்கும் பெண்களின் விடயத்தில் இமாம்களிடம் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது .காரணம் சில நபிதோழர்கள் யூத பெண்களையும் கிருஷ்த்துவ பெண்களையும் திருமணம் செய்திருந்தார்கள் .
இதன் விளக்கமாவது அப்போதிருந்த சில யூத கிருஸ்தவர்கள் சிலைவணக்கம் செயவில்லை மூஸா மற்றும் ஈசா (அலை) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தை அப்படியே பின்பற்றினார்கள் எனவே அவர்களை திருமணம் செய்வது குற்றமாகாது.ஆனால் இப்போதுள்ளவர்களை திருமணம் முடிப்பது ஆகாது . *அதுபோல் காபிரான கணவருக்கு முஸ்லிமான பெண் ஹலாலாக மாட்டாள் .
6)நான்கு பெண்களை திருமணம் செய்து இருக்கும் போது ஐந்தாவதாக திருமணம் :
ஆண் 10 முதல் 15 திருமணம் வரை செய்துகொண்டனர். இதை குறைக்கவே இஸ்லாம் 4 திருமணம் என்ற வரையறையை கொண்டு வந்தது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“கைலான் இப்னு சலமா அஸ்ஸகஃபி அவர்கள் இஸ்லாத்தில் இணையும்போது
10 அறியாமை காலத்தில் மணந்த மனைவிகள் இருந்தார்கள். மேலும் அந்த பெண்களும் அவரோடு இஸ்லாத்தில் இணைந்தனர்எனவே நபிஸல் அவர்கள் அந்த பெண்களில் 4 பேரை தேர்தெடுக்ககட்டளையிட்டார்கள். (ஆதாரம் : திர்மிதி :1128 , இப்னு மாஜா : 1953, அஹ்மத் : 13/2)
ஐந்தாவது திருமணம் செய்தால் அதற்கு இஸ்லாம் கூறும் தண்டணை:
நான்கு திருமணத்திற்கு மேல் ஒருவர் திருமணம் செய்வது இஸ்லாத்திற்கு மாற்றமான குற்றமாகும் . இமாம் மாலிக் (ரஹ்) மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது
ஐந்தாவது திருமணம் செய்தவனுக்கு கசையடி அடிக்க வேண்டும் . இமாம் ஜுஹ்ரி (ரஹ்)
அவர்கள் கூறுவதாவது ஐந்தாவது திருமணம் செய்தவனை
கல்லால் அடிக்க வேண்டும்.
எனவே ஐந்தாவது திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. நான்குமனைவிகள் இருக்கும்பட்சத்தில் .
(குறிப்பு : இப்பாடம் பிக்ஹ் சுன்னா கிதாபிலிருந்து தேவையான சட்டங்களை மட்டும் சுருக்கி
கொடுக்கபட்டுள்ளது )
தமிழாக்கம் : முகமது ஜுபைர் சித்தீகி அல்புகாரி
https://www.facebook.com/1471043076542571/posts/1563422450637966/
யாயு ஞாயும் யாரா கியரோ
பதிலளிநீக்குஎந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே (குறுந்.40)
என்னும் இப்பாடலில் தாய்வழியிலும் முறை இல்லை, தந்தை வழியிலும் முறை இல்லை. நாம் இருவரும் காதலால் மணந்தோம் என்று தலைவன் கூறுகிறான். இக்கூற்றிலிருந்து கணவன் மனைவியாக வாழ்வதற்கு அக்கால வழக்கப்படித் தாய், தந்தை உறவு அடிப்படையானது என்பது உணரப்படுகின்றது.
https://www.vallamai.com/?p=87644