தவத்தின் பலன் *

தமிழர் சமயம்

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே. - (மூன்றாம் தந்திரம் - 8. தியானம், பாடல் எண் : 7)


பொழிப்புரை: ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.

இஸ்லாம்

(கடமையானவற்றுடன்) மேலதிகமான தொழுகைகளை கொண்டு எனதடியான் என்பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். நான் அவனை நேசிக்கும் வரை. நான் அவனை நேசித்துவிட்டால், அவன் கேட்கும் கேள்வியாக நான் ஆகிவிடுவேன். அவன் பார்க்கும் பார்வையாக நான் ஆகிவிடுவேன். அவன் பிடிக்கும் கையாக நான் ஆகிவிடுவேன். அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். (ஹதீதுல் குத்ஸி, புஹாரீ 6502) 

முடிவுரை

மனிதன் கடவுளாக முடியும் என்று இவைகள் கூறவில்லை.  மனிதர்களுக்கு இவைகள் கடவுளுடன் அந்த அளவு நெருக்கத்தை கொடுக்கும் என்கிற பொருளில் கூறப்பட்டது.

2 கருத்துகள்:

  1. தவம் = தொழுகை, தியானம் = திக்ர் - இப்பகுதி இன்னும் எழுதப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
    மன்னுமருள் பெற்றக் கால். ஞானக்குறள் 105

    இறையருளே நிலையான அருள். அதனைப் பெற்றுவிட்டால் எண்ணும் காரியங்கள் இலகுவில் கைகூடும்.

    பதிலளிநீக்கு