உரிமையுள்ள உறவுகள் *

தமிழர் சமயம் 


கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன்,
வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்! -
யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக்
காப்பர், கருதும் இடத்து. - (சிறுபஞ்சமூலம் 52)

கோதை - மாலை
கருதும் - நினைக்கும் 
 
விளக்கம்: கணவனும், அவள் உடன் பிறந்தவனும், மாமனும், வண்டுகள் மொய்க்கின்ற பூமாலையை அணிந்த மகனும், தந்தையும் ஒரு பெண்ணைக் காக்கத் தக்கவராவார்.

இஸ்லாம் 


ஆண்களுக்கு மஹ்ரமான உறவுகள்:

1) பெற்றெடுத்த தாய் அல்லது தந்தையின் மனைவி (தாய்கள்)
2) பெண் பிள்ளைகள்
3) உடன் பிறந்த சகோதரிகள்
• உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி, தந்தை இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து அந்த மனைவியின் மூலம் பிறந்த பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி!
• தாய் இன்னொரு கணவனைத் திருமணம் முடித்து அவர் மூலமாகப் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி! இவர்கள் மூன்று பேருமே சகோதரிகளாவார்கள்!
4) தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள் (மாமி / அத்தை)
5) தாயின் உடன் பிறந்த சகோதரிகள் (பெரியம்மா / சின்னம்மா)
6) உடன் பிறந்த சகோதரன் & சகோதரியின் பெண் பிள்ளைகள்
7) சிறு வயதில் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்கள்
8) பால்குடிச் சகோதரிகள்
• பால்குடி உறவு என்பது வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் சிறு வயதில் நமது தாயிடம் பால் குடித்து இருந்தால் அல்லது நாம் சிறு வயதில் வேறு பெண்ணிடம் (செவிலி தாய்) பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு தாய் போன்று ஆகி விடுவார்கள் அவர்களின் பிள்ளைகளும் நமக்கு சகோதர சகோதரிகளாக ஆகி விடுவார்கள்! இன்னும் அவர்களிடம் வேறு குழந்தைகள் பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு சகோதர சகோதரிகள் ஆகி விடுவார்கள்! இதை பால் குடி உறவு என்று இஸ்லாம் கூறுகிறது!
• இந்த பால் குடி உறவு என்பது 5 முறை பால் குடித்து இருந்தால் மட்டும் ஏற்படும்! (நூல் : முஸ்லீம் : 2877)
• அதே போன்று பால் குடி உறவுகளை நாம் தெரியாமல் நிக்காஹ் செய்து இருந்தால் அந்த நிக்காஹ் செல்லுபடி ஆகாது! (நூல் : புகாரி : 2640)
 9) மனைவியின் தாய் (மாமியார்)
10) மகன்களின் மனைவியர்கள் (மருமகள்கள்)
11) இரண்டாவதாக திருமணம் செய்த மனைவியின் பெண் பிள்ளைகள்
• இரண்டாவது மனைவியுடன் திருமணம் ஆகியும் உடலுறவு கொள்ளாமல் இருந்து அல்லது உடலுறவு கொள்ளாமல் தலாக் பெற்று விட்டால் இரண்டாவது மனைவியின் பெண் பிள்ளைகளை நிக்காஹ் செய்து கொள்ளலாம்! (அல்குர்ஆன் : 4 : 23)
• மேலே உள்ள அனைவரும் ஒரு ஆணுக்கு மஹரமான உறவுகள் ஆவர்கள்! இவர்களை மற்ற அனைவருமே மஹ்ரம் இல்லாத அந்நிய பெண்களே!

 பெண்களுக்கு மஹ்ரமான உறவுகள்:

1) பெற்றெடுத்த தந்தை அல்லது தாயின் இரண்டாவது கணவன்!
2) ஆண் பிள்ளைகள்
3) உடன் பிறந்த சகோதரர்கள்
• தாய் இன்னொரு ஆணை திருமணம் செய்து அந்த ஆணின் மூலம் பிறந்த ஆண் பிள்ளைகள்! இவர்களும் நமக்கு சகோதரர்கள் ஆவார்கள்!
4) தந்தையின் உடன் பிறந்த சகோதரர்கள் (மாமா / சித்தப்பா)
5) தாய் உடன் பிறந்த சகோதரர்கள் (பெரியப்பா / சிச்சா)
6) உடன் பிறந்த சகோதரன் & சகோதரியின் ஆண் பிள்ளைகள்
7) சிறு வயதில் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களின் பிள்ளைகள் (பால்குடிச் சகோதரர்கள்)
• பால்குடி உறவு என்பது வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் சிறு வயதில் நமது தாயிடம் பால் குடித்து இருந்தால் அல்லது நாம் சிறு வயதில் வேறு பெண்ணிடம் (செவிலி தாய்) பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு தாய் போன்று ஆகி விடுவார்கள் அவர்களின் பிள்ளைகளும் நமக்கு சகோதர சகோதரிகளாக ஆகி விடுவார்கள்! இன்னும் அவர்களிடம் வேறு குழந்தைகள் பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு சகோதர சகோதரிகள் ஆகி விடுவார்கள்! இதை தான் பால் குடி உறவு என்று இஸ்லாம் கூறுகிறது!
• இந்த பால் குடி உறவு என்பது 5 முறை பால் குடித்து இருந்தால் மட்டும் ஏற்படும்! (நூல் : முஸ்லீம் : 2877)
• அதே போன்று பால் குடி உறவுகளை நாம் தெரியாமல் நிக்காஹ் செய்து இருந்தால் அந்த நிக்காஹ் செல்லுபடி ஆகாது! (நூல் : புகாரி : 2640)
8) கணவனின் தந்தை (மாமனார்)
9) மகள்களின் கணவன்மார்கள் (மருமகன்கள்)
10) இரண்டாவதாக திருமணம் செய்த கணவனின் ஆண் பிள்ளைகள்
• இரண்டாவது கணவனுடன் திருமணம் ஆகியும் உடலுறவு கொள்ளாமல் இருந்து அல்லது உடலுறவு கொள்ளுவதற்கு முன் தலாக் பெற்று விட்டால் இரண்டாவது கணவனின் ஆண் பிள்ளைகளை நிக்காஹ் செய்து கொள்ளலாம்! (அல்குர்ஆன் : 4 : 23)
• மேலே உள்ள அனைவரும் ஒரு பெண்ணுக்கு மஹரமான உறவுகள் ஆவர்கள்! இவர்களை மற்ற அனைவருமே மஹ்ரம் இல்லாத அந்நிய ஆண்களே!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக