தமிழர் சமயம்
ஆண், ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்தமாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன்கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான்நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். (சிறுபஞ்சமூலம் 27)
இயைந்த - பின்தொடர்
கடிந்தான் - ஒழித்தவன்
பொருள்: ஆசான் என்பவன் விளக்கம் பெற வினை ஆற்றும் தேவை அற்ற ஆண்மகன் ஆவான், அவனை பின் தொடர்பவன் மாணாக்கன் ஆவான். மாணாக்கன் ஆசானை அன்பு செய்வான், கட்டுப்படுவான். மாணவர்கள் காமம், வெகுளி, மயக்கங்கள் ஆகிய மூன்றையும் விட்டுவிடுவான். இல்லையெனில் அவர்கள் ஆசிரியருக்கு நோயாவார்கள்.
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)
குறிப்பு: வேத நூலுக்குஇலக்கணம் வகுத்து தரும் இப்பாடல், வேதம் முனைவனுக்கு அதாவது ஆணுக்கு தான் வழங்கப்படுமே தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று கூறவில்லை. எனவே சித்தர்கள்/ரிஷிகள்/நபிகள்/தூதர்கள் ஆண்களே.
அவ்வையார் சில முக்கிய நூல்களை எழுதிய பெண் ஆசிரியர் என்றும், அவர் இவ்வாறு முனைவி-யாக இருக்க வாய்ப்பு உண்டு என்று சிலர் கூறுவார்.
முதலில், பாடல் பாடுவோரெல்லாம் முனைவரல்ல, தொல்காப்பியம் மரபியல் பாடல் 60-இல் சொன்னபடி நூலை எழுதினால் மட்டுமே முனைவர்.
இரண்டாவது, வரலாற்றில் அவ்வையார் ஒருவரல்ல, இருவர் என்றும், மூவர் என்றும், நால்வர் என்றும், ஆறு பேர் என்றும், எட்டு பேர் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அவ்வையார் பெண் அல்ல என்று கூறுவோரும் உண்டு. மொத்தத்தில் அவ்வை பற்றிய நேரடியான உறுதிபட கூறும் செய்திகள் ஏதுமில்லை. எனவே இவரை விதிவிலக்காக குறிப்பிட முடியாது.
இஸ்லாம்
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (திருக்குர்ஆன் 16:43)
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (திருக்குர்ஆன் 21:07)
உமக்கு முன் (பல்வேறு ஊர்களுக்கு அந்தந்த) ஊர்களைச் சேர்ந்த ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். (குர்ஆன் 12:109)
யூத கிறிஸ்தவ மதங்கள்
கிறிஸ்தவத்திலும் யூதமதத்த்திலும் சில பெண் தூதர்கள் இருந்தததாக வாதிடுவார்கள். அவர்கள் தூதர்கள் என்ற வார்த்தையின் பொருள் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடமிருந்து வரும் தூத்துச் செய்தியை மக்களுக்கு எடுத்து கூறுபவர்களாகவும், அந்த போதனைகள் ஒரு தனி வேதமாகவோ அல்லது ஏற்கனவே உள்ள வேதத்தின் ஒரு பகுதியாகவோ அமைந்து இருக்கும்.
யூத கிறிஸ்தவ மதத்தில்கீழே குறிப்பிடப் படுவோர்கள் பெண் தீர்க்கதரிசிகனாக அறியப்படுகிறார்கள்.
1. சாரா2. மிரியம்3. டெவோரா4. ஹன்னா (ஷ்முவேலின் தாய்)5. அவிகாயில் (அவர் தாவீது மன்னரின் மனைவியானார் )6. ஹல்தா ( எரேமியாவின் காலத்திலிருந்து )7. எஸ்தர்8. மர்யம் - இயேசுவின் தாய்
ஆனால் இவர்கள் எழுதிய அல்லது இவர்கள் மூலம் வழங்கப்பட்ட உபதேசங்கள் அடங்கிய நூல்கள் ஏதும் உண்டா? "இல்லை" என்பதே பதில். இவர்கள் மதிப்பிற்க்குரிய பெண்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும் இவர்கள் தூதர்கள் அல்ல என்பதே நிதர்சனம். மேலும் மோசே செய்த மற்றும் இயேசு தீர்க்கதரிசிகள் பற்றிய முன்னறிவிப்புகள் அனைத்தும் ஆண்களைப் பற்றியே.
கீழுள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றாலும் யூத கிறிஸ்தவர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது.
“ஒரு பெண் கற்பிக்கவோ அல்லது ஆண் மீது அதிகாரம் செலுத்தவோ நான் அனுமதிக்கவில்லை; மாறாக, அவள் அமைதியாக இருக்க வேண்டும்” (1 கொரி. 14:33-35)
ஒரு பெண் தீர்க்கதரிசியாக அனுப்பப்படுவதில்லை என்பது உண்மை என்ற போதிலும் அவர் தான் கற்றதை மக்களுக்கு கற்பிக்க கூடாது என்கிற கருத்தில் யாருக்கும் உடன்பாடு இருக்க முடியாது. இஸ்லாத்தில் அன்னை ஆயிஷா நபிமொழிகளை மக்களுக்கு அறிவிப்பவராகவும், படையை வழி நடத்துபவராகவும் இருந்துள்ளார்.
தீர்க்க தரிசிகள் என்றால் தீர்க்க தரிசனங்களை அறிவித்து இருக்க வேண்டும், ஆசிரியன் என்றால் போதனை செய்துருக்க வேண்டும்,
பதிலளிநீக்குஎண்ணாகமம் 25:2-3
பதிலளிநீக்குமோவாப் பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துப் போய் தங்கள் போலியான தேவர்களுக்குப் பலி கொடுக்கச் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அப்போலியான தெய்வங்களை வணங்கவும் அவர்களிட்ட பலிகளை உண்ணவும் ஆரம்பித்தனர். அந்த இடத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் பாகால் பேயோர் போன்ற போலியான தேவர்களை வணங்கத் துவங்கினார்கள். இதனால் அவர்கள் மீது கர்த்தர் பெருங்கோபம் கொண்டார்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2025%3A2&version=ERV-TA
1 தீமோத்தேயு:11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.
பதிலளிநீக்குhttps://www.biblegateway.com/passage/?search=1%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%202&version=ERV-TA