இறந்தவர்களை வணங்குவது பிழை. ஏன்?

மனிதன் குறிக்கப்பட்ட நேரத்த்தில் மரணத்தை தழுவுவான், அவன் மீண்டும் பிறப்பதில்லை, அவன் இறந்தபின்பு அவனால் கேட்கவோ பார்க்கவோ முடியாது எனபதே அனைத்து மத தத்துவமாகும். 

தமிழர் சமயம்


இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை; - ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்! வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும். - நாலடியார்

பொருள்: உனக்கென்று வழங்கியுள்ள நாளின் எல்லையை நீ கடக்க முடியாது. உடலையும் உயிரையும் கூறுபடுத்தும் கூற்றம் குதிக்கும்போது விலக்கிவிட்டுப் பிழைத்து வாழ்ந்தவர் இங்கு யாரும் இல்லை. பயன்படுத்த முடியாத பெரும்பொருள் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு வழங்குங்கள். ஒரு நாள் “தழீம் தழீம்” என்னும் ஓசையுடன் உனக்குச் சாவு மேளம் கொட்டப்படும்.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். (நல்வழி 10)

பொருள்: இறந்தவரை எண்ணி ஆண்டுக்கணக்கில் அழுது புரண்டாலும், மாண்டுபோனவர் திரும்பி வருவது இல்லை. மாநிலத்தில் உள்ளவர்களே! அழவேண்டா. நமக்கும் அவர் போன அதே வழிதான். எனவே, எனக்கு இவை எதற்கு என்று எண்ணி மற்றவர்களுக்கு உணவிட்டுத் தானும் உண்டு வாழ்ந்துகொண்டிருங்கள். நாம் போகும் வரை இட்டும் உண்டும் வாழ்ந்துகொண்டிருங்கள்.

கறந்த பால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே. (சிவவாக்கியம் 48)

இஸ்லாம்

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34)

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. - (குர்ஆன் 39:42)

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. - (திருக்குர்ஆன் 23:99, 100)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். - (குர்ஆன் 16:21)

(நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. - (திருக்குர்ஆன் 27:80)

கிறிஸ்தவம்

கீழ்ப்படியாமல் போன ஆதாமிடம் நேரடியாகக் கேள்வி கேட்ட பிறகு கர்த்தார் சொன்னார்:

‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்கே திரும்புவாய். . . . நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.’ - (ஆதியாகமம் 3:19)

எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு. பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, மரிப்பதற்கு ஒரு காலமுண்டு.. - (பிரசங்கி 3:1-2)

அதுபோலவே, மனுஷன் கண் மூடிவிட்டால் எழுந்திருப்பதில்லை. வானம் ஒழிந்துபோகும்வரை அவன் கண்திறக்கப் போவதில்லை. அவனை யாரும் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பப் போவதில்லை. கடவுளே, நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்துவைத்து, உங்கள் கோபம் தீரும்வரை அங்கேயே மறைத்துவைத்து, நீங்கள் குறித்திருக்கிற காலம் முடிந்ததும் என்னை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?... - (யோபு 14:12-14)

உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும். ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது, அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை. (பிரசங்கி 9:5)

முடிவுரை:

மனிதன் நேரம் நெருங்கினால் அவன் நிச்சயமாக இறந்து போவான், அவனது உடல் மண்ணிலும், அவனது உயிர் இறைவனிடத்திலும் தங்கி இருக்கும், அவன் மீண்டும் பிறக்க வாய்ப்பில்லை என்பதே அனைத்து மதங்களின் சாரம். இறந்தவருக்கு எந்த வித சக்தியும், கேட்கும் திறனும் கிடையாது எனவே அவர்களை வணங்குவது என்பது அறிவீனத்தின் உச்சம் ஆகும்.

மூதாதையருக்கு நன்றி செலுத்த வணங்குவதாக சொன்னால், ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும் ஆணுக்கு அந்த பெண் கற்பை கொடுக்க முடியுமா? முடியாது. அவள் அவளது எல்லையில் நின்று அவள் செலுத்த வேண்டிய நன்றிக்கடனை தீர்க்கலாம். அதுபோல மூதாதையருக்கு நன்றி சொல்ல விரும்புவோர், அவர்களுக்காக பிராத்தனை செய்யலாமே தவிர அவர்களை வணங்க கூடாது. வணங்கப்பட தகுதியானவன் அனைத்து வேதங்களையும் தந்த, அனைத்தையும் படைத்த, ஏக இறைவன் மட்டுமே. 

3 கருத்துகள்:

  1. அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

    திருக்குர்ஆன் 5 : 104

    பதிலளிநீக்கு
  2. “….நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது….” (அல்குர்ஆன்: 27:79-81)

    “….அன்றியும் உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களைச் செவியேற்கும்படிச் செய்கிறான். கப்றுகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்” (அல்குர்ஆன்: 35:22-23)

    “நீங்கள் அவர்களை பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்க மாட்டார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணை வைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள். யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்” (அல்குர்ஆன்: 35:14)

    “அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும், தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன்: 7:197)

    பதிலளிநீக்கு

  3. அப்து-அல்லாஹ் இப்னு மஸ்வூத் (அல்லாஹ் அவரைப் பற்றி மகிழ்ச்சியடையட்டும்) கூறினார்: "மனிதகுலத்தின் மிகவும் தீயவர்களில், அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கும்போது அந்த நேரம் வரும். , மற்றும் கல்லறைகளை வழிபாட்டுத் தலங்களாக எடுத்துக்கொள்பவர்கள்.

    தஹ்கீக் அல்-முஸ்னத்தில் ஷுஐப் அல்-அர்னாவூத் ஹசன் என வகைப்படுத்தினார்.

    https://imamhabeeb.blogspot.com/2021/11/blog-post.html

    பதிலளிநீக்கு