கடவுள் நாம் செய்யும் தவறுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா?

 ஆம்.

தவறுகளை மட்டுமல்ல நற்செயல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவரவர் செயலுக்கான கூலி அவருக்கு தவறாமல் வழங்கப்படும் என்று அனைத்து வேதங்களும் கூறுவதின் சாரம் நம் செயல்கள் கண்காணிக்கப் படுகிறது என்பதாம். சொர்கம் நரகம் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல வழங்கப் பிஸ்ட்டும் என்பதும் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் கணக்கெடுக்கப் படுகிறது எனபதற்கான சான்று.

தமிழர் நெறி

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே. (7ம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம் - பாடல் 1)

பொழிப்புரை: அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர். 

இஸ்லாமிய நெறி

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். - (அன்-ஆனாம் 6:103)

கிறிஸ்தவ நெறி

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். - (யோபு 34:21)

முடிவுரை

எல்லாமும் கணக்கெடுக்கப் பட்டு அவைகளுக்கான கூலி சிலவற்றுக்கு இம்மையிலும் சிலவற்றுக்கு மறுமையிலும் வழங்கப்படும். வாசிக்க 

10 கருத்துகள்:

  1. நீதிமொழிகள் 5
    21நீ செய்கிற அனைத்தையும் கர்த்தர் தெளிவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீ எங்கே போகிறாய் என்று கவனிக்கிறார். 22 கெட்டவர்களின் பாவங்கள் அவர்களைச் சிக்கவைக்கும், அப்பாவங்கள் அவர்களைக் கயிறுகளைப்போன்று கட்டிக்கொள்ளும். 23 அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.
    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%205&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  2. நீதிமொழிகள் 15:3
    வசன கருத்துக்கள்
    கர்த்தருடைய கண்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறது,
    தீயவர்களையும் நல்லவர்களையும் பார்க்கிறது.

    Source: https://bible.knowing-jesus.com/topics/Good-And-Evil

    பதிலளிநீக்கு
  3. திருமந்திரம் 812

    தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
    பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
    பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
    மாவினை யாளர் மதியிலுள் ளானே.

    தீவினையாளர் தம் சென்னியில் உள்ளவன்
    பூவினையாளர் தம் பொற்பதி ஆனவன்
    பாவினையாளர் தம் பாவகத்து உள்ளவன்
    மாவினையாளர் மதியில் உள்ளானே.

    பொழிப்புரை : எல்லாத்தயும் அவனறியாமல் நடப்பதில்லை

    பதிலளிநீக்கு
  4. "இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி

    இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி

    இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்

    கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்டபே." (திருமந்திரம் - 126)

    பதிலளிநீக்கு
  5. 34:3. எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.

    பதிலளிநீக்கு
  6. 2034. கண்காணி யாகவே கையகத் தேயெழுங்
    கண்காணி யாகக் கருத்து ளிருந்திடுங்
    கண்காணி யாகக் கலந்து வழிசெய்யுங்
    கண்காணி யாகிய காதலன் தானே.

    (ப. இ.) ஆருயிர்களின் உணர்வுக்கருத்தாம் கண்ணைச் சிறந்த இருப்பிடமாகக்கொண்டு வீற்றிருந்தருளும் மெய்க்காதலனாம் சிவபெருமான் நேரே காணும்படியாக நானெறியொழுக்கத்தில் கையகத்தே வந்து தோன்றியருள்வன். அதுபோன்றே கருத்தினுள்ளும் இருந்திடுவன். அதுபோன்றே உடன்கலந்து செந்நெறிச் செலுத்தித் திருவடிப்பெரும் பேற்றினுக்கு ஒருவர் வழிகாட்டியுமருள்வன்.

    (அ. சி.) கண்காணியாக - நேருக்கு நேராக. காதலன் - சிவன்.

    பதிலளிநீக்கு
  7. 8:47. பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
  8. 11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
    பகல் இரவாக மாறிப்போயிற்று.
    “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
    12 ஆனால் கர்த்தாவே,
    இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
    இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
    13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
    என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20139%2CPsalm%20139&version=ERV-TA;NIV

    பதிலளிநீக்கு
  9. மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 6 : 73)

    பதிலளிநீக்கு
  10. 17:36. (நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.

    பதிலளிநீக்கு