இறைவன் அருளால் தான், இது நடைபெற்றது என்பதான ஏதேனும் ஒரு சம்பவம் சொல்ல இயலுமா?

இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது..! செல்வ வளங்கள் மட்டுமல்ல, அவனது சோதனையும் அவனது அருள்தான் என்று கூறும் மறைநூல்களின் வரிகள் உங்களுக்காக


தமிழர் சமயம்


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே - திருமந்திரம் கடவுள் வாழ்த்து

பொருள்: இரண்டவன் இன்னருள் – இரண்டவன் இன்னருள் என்பதில் அவனது அருள் இருதிறப்படும் என்ற பொருள்பட அறக்கருணை, மறக்கருணையைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதனுக்கு நடக்கும் நல்லவை தீயவை இரண்டையும் இறைவனே அருளாக வழங்குகிறான்.

நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன் - (அதிகாரம்:ஊழ் குறள் எண்:379)

உரை: நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு? இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.

இஸ்லாம்

ஒரு மனிதனை சோதிப்பதற்காக அவனது இறைவன் அருட்கொடைகளை அள்ளிகொடுத்து அவனை கண்ணியப்படுத்தும் போது, எனது இறைவன் என்னை கண்ணியப்படுத்தி விட்டான் என்று அவன் கூறுகிறான். அவனை சோதிப்பதற்காக பாக்கியங்களை சற்று குறைக்கும் போது எனது இறைவன் என்னை கேவலப்படுத்தி விட்டான் என்று அவன் உரைக்கிறான். அவன் அவ்வாறு கூறலாகாது. - (அல்குர்ஆன். 89.15.16)

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 57:22&23)

அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி) மற்றும் அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: ‘களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலம் அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிமுக்குத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவனுடைய தவறுகளுக்குப் பரிகாரமாக்காமல் இருப்பதில்லை’. (புகாரி, முஸ்லிம் (அல் வஸப்: நோய்)  ஹதீஸ் 37

கிறிஸ்தவம்

ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? - (பைபிள்: புலம்பல் 3:37-42)

ஒளியை உருவாக்கி இருளை உருவாக்குபவன், நல்வாழ்வை ஏற்படுத்துபவன், பேரழிவை உருவாக்குபவன்; இவை அனைத்தையும் செய்யும் இறைவன் நானே. - (ஏசாயா 45:7

முடிவுரை

மனிதனுக்கு நிகழும் ஒவ்வொன்றும் இறைவனின் அருள் ஆகும். நடக்கும் நன்மைக்கு நன்றி சொல்லும் பொழுதும் நடக்கும் தீமைக்கு இறைவனுக்காக பொறுமையாக இருக்கும் பொழுதும் அந்த அருளின் முழு சுவையை நாம் அடைய முடியும். 

7 கருத்துகள்:

  1. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார் நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  2. 7 உடனே, சாத்தான் யெகோவாவின் முன்னிலையிலிருந்து புறப்பட்டுப் போய், யோபுவை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை கொடிய கொப்புளங்களால் வாட்டி வதைத்தான்.i 8 யோபு தன் உடம்பிலிருந்த கொப்புளங்களைச் சுரண்டுவதற்காக, உடைந்துபோன ஓடு ஒன்றை எடுத்துக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தார்.j
    9 அப்போது அவருடைய மனைவி, “இன்னுமா கடவுள் கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?* அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போங்கள்!” என்று சொன்னாள். 10 ஆனால் யோபு, “நீ பைத்தியக்காரிபோல் பேசுகிறாய். கடவுள் கொடுக்கிற நல்லதை மட்டும் ஏற்றுக்கொண்டு, கஷ்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாமா?”k என்று கேட்டார். இதெல்லாம் நடந்தும்கூட, அவர் தன் வாயால் பாவம் செய்யவில்லை.l
    https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81/2/#v18002001-v18002006

    பதிலளிநீக்கு
  3. "நான் ஒளியை உருவாக்கி இருளைப் படைக்கிறேன், நான் நல்வாழ்வை உண்டாக்குகிறேன், பேரழிவை உண்டாக்குகிறேன், இவை அனைத்தையும் செய்கிற இறைவன் நானே."
    — ஏசாயா 45:7

    பதிலளிநீக்கு
  4. நீதிமொழிகள் 1633 ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடிவெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.

    பதிலளிநீக்கு
  5. நல்லவை மட்டுமே கடவுளிடமிருந்து வருகின்றன என்று ஒருவர் கூறினார். ஆனால் வேதம் கூறுவது அப்படியல்ல.

    சாத்தான் கடவுளால் வரையறுக்கப்பட்டவன். கடவுள் எல்லாவற்றையும் படைத்தார், பேரழிவு ஏற்பட்டால், கடவுள் அதைச் செய்கிறார்.

    வேலை 1:12

    அப்போது ஆண்டவர் சாத்தானை நோக்கி, “இதோ, அவனிடம் உள்ளதெல்லாம் உன் அதிகாரத்தில் இருக்கிறது, அவன் மேல் மட்டும் உன் கையை நீட்டாதே.

    ஆமோஸ் 3:6

    ஊரில் சங்கு ஊதினால் மக்கள் நடுங்கமாட்டார்களா? ஒரு ஊரில் பேரிடர் ஏற்பட்டால் அதை இறைவன் செய்யவில்லையா?

    ஏசாயா 45:7

    
ஒளியை உருவாக்கி இருளை உருவாக்குபவன், நல்வாழ்வை ஏற்படுத்துபவன், பேரழிவை உருவாக்குபவன்; இவை அனைத்தையும் செய்யும் இறைவன் நானே.

    புலம்பல் 3:38

    
உன்னதமானவருடைய வாயிலிருந்து நல்லவனும் கெட்டவனும் புறப்படுகிறதில்லையா?

    அப்போஸ்தலர் 17:24-25

    உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருப்பதால், கைகளால் செய்யப்பட்ட கோவில்களில் வசிப்பதில்லை; அல்லது அவர் மனிதக் கைகளால் சேவை செய்யப்படவில்லை, அவருக்கு எதுவும் தேவைப்பட்டது போல, அவர் எல்லா மக்களுக்கும் உயிர் மற்றும் சுவாசம் மற்றும் எல்லாவற்றையும் கொடுப்பதால் ;

    1 கொரிந்தியர் 11:12

    ஏனெனில், பெண் ஆணிலிருந்து தோன்றுவது போல, ஆணும் பெண்ணின் மூலமாகப் பிறக்கிறான்; மேலும் அனைத்தும் கடவுளிடமிருந்து உருவாகின்றன.

    எபேசியர் 3:9

    மேலும் அனைத்தையும் படைத்த இறைவனிடம் யுகங்களாக மறைந்திருக்கும் மர்மத்தின் நிர்வாகம் என்ன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர;

    1 தீமோத்தேயு 6:13

    எல்லாவற்றுக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன்னிலையில் நல்ல வாக்குமூலத்தை அளித்த கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

    எபிரெயர் 3:4

    ஏனென்றால், ஒவ்வொரு வீட்டையும் யாரோ ஒருவர் கட்டுகிறார், ஆனால் எல்லாவற்றையும் கட்டியவர் கடவுள்.

    வெளிப்படுத்துதல் 4:11

    “எங்கள் ஆண்டவரும் எங்கள் கடவுளுமாகிய நீங்கள் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெறுவதற்குத் தகுதியானவர்; ஏனென்றால், நீங்கள் எல்லாவற்றையும் படைத்தீர்கள், உமது விருப்பத்தினாலே அவைகள் இருந்தன, படைக்கப்பட்டன.



    கடவுள் எல்லாவற்றையும் படைத்தார். கடவுள் எல்லாவற்றுக்கும் உயிர் கொடுக்கிறார். எல்லாமே இறைவனிடமிருந்தே உருவானவை. நன்மையும் தீமையும் கடவுளிடமிருந்து வருகிறது. பேரிடர் கடவுளிடமிருந்து வருகிறது. சாத்தான் கூட கடவுளால் வரையறுக்கப்பட்டவன்.

    https://wbmoore.wordpress.com/2016/08/19/all-things-good-and-bad-come-from-god/

    பதிலளிநீக்கு
  6. அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

    திருக்குர்ஆன் 10:18

    பதிலளிநீக்கு
  7. அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

    https://islamkalvi.com/?p=844

    பதிலளிநீக்கு