கடவுள் நம்பிக்கை அல்லாதவர்களை கெட்டவர்களாக பார்ப்பது யார் என்று நோக்கினால் அது நிச்சயம் ஒன்று கடவுளாக அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகதான் இருக்க முடியும். ஏன் என்றால் கடவுள் இல்லை என்று நம்புவது உண்மைக்கு புறம்பானது.
ஒவ்வொரு சமயத்தின் மறைநூல்கள் இறை மறுப்பாளர்களை என்ன சொல்கிறதென்றும், அதை ஏன் சொல்கிறதென்றும் பார்ப்போம்.
தமிழர் சமயம்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள் 0002 - திறன்)
பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் - நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவால் ஆகக்கூடிய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
கருத்து: கடவுள் வணக்க வழிபாடு இல்லாதவர்க்கு கல்வியின் பயன் என்ன?)“மண்டப மாதி கண்டோர் மயனுளன் என்னல் போலும்குண்டல முதல் கண்டோர் பொற்கொல்லனுண் டென்னல் போலும்ஒண்டுகில் கண்டோர் நெய்தோன் ஒருவனுண் டென்னல் போலும்அண்டமற் றகண்டம் செய்தோன் உளனென அறிவாய் நெஞ்சே”“தீட்டுவோன் இன்றி யாமோ சித்திரம் திகழ்பொற் பாவைஆட்டுவோ னின்றித் தாமே ஆடுமோ திவவி யாழின்மீட்டுவோ னின்றிக் கீதம் விளையுமோ சரா சரங்கள்நாட்டுவோ னொருவனின்றி கன்கமைந் தொழுகுங் கொல்லோ” -“மரமுதல் அசைதலால் காலுளதென மதிப்பார் எங்கும்பரவிய புகையால் செந்தீ யுளதெனப் பகர்வார் சுற்றும்விரவிய மணத்தால் பாங்கர் வீயுள தென்று தேர்வார்பரனுளன் எனும் உண்மைக்குப் பாரெலாம் சான்று மன்னோ” -“வானின்றி மழையுமில்லை வயலின்றி-விளைவு மில்லைஆனின்றிக் கன்றுமில்லை அரியின்றி ஒளியுமில்லைகோனின்றிக் காவலில்லை குமரர் தாயின்றி யில்லைமேனின்ற கடவுளின்றி மேதினி யில்லை மாதோ” - (நீதிநூல் 1-4)
எனவே, தர்க்க (Logical) வாதத்தின்படி நுணுகி நோக்குங்கால், யாதோ ஒர் ஆற்றல் இன்றி யாரோ ஒருவர் இன்றி, உலகங்களும் உயிர்களும் தோன்றி யிருக்க முடியாது. யதோ ஒர் ஆற்றல் எனில், அந்த ஆற்றல்தான் கடவுள் ஆகும். எனவே, கடவுள் என ஒரு பொருள் உண்டு என்பது உறுதி-இவ்வாறாக, இன்னும் பலவாறாக, ஆத்திக வாதம் பேசப்பட்டுப் பீடு நடை போடுகிறது நன்னூல்.
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்தஉடலும் உயிரும் உருவம் தொழாமல்இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. (திருமந்திரம் பாடல் எண் : 23)
பொழிப்புரை: விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.
இஸ்லாம்
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (குர்ஆன் 2:28)
யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124)
கிறிஸ்தவம்
தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. - (சங்கீதம் 53: 1)
முடிவுரை
இது போல ஒவ்வொரு வேதமும் இறைவனை நம்பாதவர்களை சாடியே இருக்கிறது.
தர்க்க ரீதியாக யோசித்தால் இறைவன் இல்லை என்பவர்கள், இறைவனை ஏன் இல்லை என்கிறார்கள்? இது பற்றி ஏற்கனவே நாத்திகம் தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில காரணங்களை இங்கே பட்டியலிடலாம்.
- இறைவனை இவ்வுலகில் எங்கும் காண முடிவில்லை,
- கடவுள் பெயரால் நடக்கும் சண்டை சச்சரவுகள், யுத்தங்கள், தீவிரவாத செயல்பாடுகள்
- மறை நூல்களில் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சில பகுதிகள்,
- இறைவனை நம்புபவர்களின் மூட நம்பிக்கையும் அதன் பின் விளைவுகளும்,
- மதங்களில் சொல்லப்பட்ட சில செய்திகள் அறிவியலுக்கு முரண் என்று கருதுவது,
- புராணங்களில் உள்ள ஒழுக்க கேடான யதார்த்தத்திற்கு முரணான கட்டு கதைகள்,
- பெருமை மற்றும் பொறாமை
ஆனால் இந்த கரங்களுக்காக மறை நூல்களையும் இறைவனையும் மறுப்பது அறிவுடைமையா? அல்லது பொய்களை களைந்து உண்மையை கண்டறிவது அறிவுடைமையா?
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதை ஏற்கும் நாம், ஒருவகை ஆற்றல் இனொன்றாக மாறும் பொழுது அது என்னவாக இருக்கும் என்கிற அறிவு நமக்கு முழுமையாக இல்லை என்று நாம் உணர வேண்டும். மனிதனின் அறிவுக்கு எட்டாத விடயத்தை சான்றுகளோடு மறைநூல்கள் சொல்லும் பொழுது அதை ஏற்க மறுப்பது ஏனோ? ஆற்றல் என்பது என்றென்றும் இருப்பதற்கான காரணம் அது என்றென்றும் இருக்ககூடிய இறைவனிடமிருந்து வெளிப்பட்டது.
மக்களுக்கு பாவ புண்ணியத்தை விளக்கி கூற, எல்லோர் மீதும் கருணையும் இரக்கமும் அன்பும் கொண்ட இறைவனின் மறைநூல்கள் இருக்கும் பொழுதே அதில் முரண்படும் சுயநலம் கொண்ட மனிதர்கள், தாமாக தனது அறிவை கொண்டு, தனது அனுபவத்தை கொண்டு, நம்மை தீமையை வரையறுத்து அதில் ஒருவொருக்கொருவர் முரண்படாமல் அதை பின்பற்றி சமநிலை சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்று கற்பனை செய்வது எத்தனை பெரிய அறிவீனம்?
இவ்வாறு மனிதர்களால் உருவான கொள்கைகளில் ஒன்றான பொதுவுடைமை தத்துவம் ஆட்சி செய்த ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தனி மனித மதிப்பையும் மற்றும் சமூக மதிப்புகளையும் அகற்றி மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கவில்லையா? இவ்வாறு ஏற்படும் கொள்கைகளில் சீர் திருத்தம் செய்து அதை ஏற்று நடந்து அதில் உள்ள நிறை குறைகளை அறிந்து, மீண்டும் அதை சீர்திருத்தம் செய்ய தயாராகும் மக்கள், அதே விடயத்தை இறைவனால் வழங்கப்பட்ட சமய நடைமுறைகளில் செய்ய தயங்குவது ஏன்?
இறைவனால் வழங்கப்பட்ட சமயங்களில் உள்ள கலாச்சாரத்திலும் பண்பாடுகளிலும் மொழியிலும் பல வேறுபாடுகள் உள்ளது ஆனால் அவற்றில் உள்ள வேறுபாடுகளை களைந்து மக்கள் அனைவரையும் நேர்க்கோட்டில் இணைக்கும் வழிமுறை இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வேறுபாடுகளையும் அதை களைவதற்கான வழிமுறையையும் பின்னொரு கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.
வேகமாக ஓடும் இயந்திர வாழ்க்கையில் சற்று நின்று நிதானமாய் யோசித்து நாம் எதற்க்காக ஓடுகிறோமோ அந்த கரணம் சரியா? இப்படி நிதானமில்லாமால் நில்லாமல் ஓடுவதால் அந்த இலக்கை நாம் அடைகிறோமா? அந்த இலக்கு பெறுமதியானதா? போன்ற கேள்விகளுக்கு நாம் விடைகாண்பது அவசியம்.
நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட தத்துவங்களும் சட்டங்களும் மகிழ்ச்சியாகவும் ஒழுக்கமாகவும் சுதந்திரமாகவும் வாழ வகைசெய்கிறதா? என்றெல்லாம் நாம் சிந்திக்கும் பொழுது இறைவனின் வழிகாட்டுதலின் அவசியம் புரியும்.
அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் சஸம்ஷயாத்மா வினஷ்யதி நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மன - கீதை 4:40
பதிலளிநீக்குபொருள்: ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை. - பகவத் கீதை 4.40
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் (உலக நீதி 30)
பதிலளிநீக்குதத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—கொலோசெயர் 2:8.
பதிலளிநீக்குஎவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது'».(ஆதாரம் புகாரி முஸ்லிம் நஸாஇ)
பதிலளிநீக்குசெல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை;
பதிலளிநீக்குவல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை;
இல்லை எனினும் பெரிதுஉளன் எம்இறை;
நல்ல அரன்நெறி நாடுமின் நீரே. (திருமந்திரம், 2103)
அறியுங்கள். எவ்வளவு தொலைவுக்கு உங்கள் அறிவு செல்லுமோ செலுத்துங்கள். எட்டிய தொலைவு என்ன, உங்களுக்குக் கிட்டிய பொருள் என்ன என்பதை மெய்யாகவே விளக்குங்கள். மறைபொருள் என்று ஒன்று இல்லை என்னும் முடிவுக்கு நீங்கள் வந்தாலும், மறைபொருள் பெரிதும் உண்டு. அதை அறியமுடியாமல் போவதற்குக் காரணம், அதனுடைய இன்மை அன்று; அறியும் முயற்சியின் போதாமை. அறியும் முயற்சியைப் போதுமானதாக ஆக்கிக் கொள்வதற்குப் பொருத்தமான நெறியை நாடுங்கள்
உண்மை என்பது உளதாகும் தன்மை. உள்ளவற்றை உள்ளவாறு அறிதலே உண்மையை அறிதல். பார்த்தவை மட்டுமே உண்மை; பார்க்காதவை எல்லாம் பொய் என்று போதிய விசாரணையின்றி மட்டையடியாகச் சொல்லிவிட முடியாது; பார்த்தவற்றில் சில பொய்யாகவும் இருக்கலாம்; பார்க்காதவற்றில் சில உண்மையாகவும் இருக்கலாம். திருமூலர் திருமந்திரம் இவ்வாறான உண்மைகளை விளக்கி அறிக்கை இட முயல்கிறது.
பதிலளிநீக்குஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கிஇட் டேனே. (திருமந்திரம், 90)
ஓர் அறிதல் செயல்பாட்டில் மூன்று கூறுகள் தொடர்புடையன: அறியப்படும் பொருள், அறிதல் என்னும் செயலின் விளைவாக வருகிற அறிவு, அறிகிறவன் ஆகியன. வடமொழியில் இவை மூன்றையும் முறையே ஞேயம், ஞானம், ஞாதுரு என்பார்கள். அறியப்படும் பொருளாக அமைவன எவை என்று பார்த்தால், மூலச் சடப்பொருளாகிய மாயை, அந்த மூலச் சடப்பொருளிலிருந்து பல்வேறு சில்லுண்டிப் பொருள்களாக விரிந்து உருவாகி இருக்கிற இந்த உலகம், இந்தப் பொருட்கூட்டத்தை இயக்கும் சதிக்கூட்டம், இவற்றுக்கெல்லாம் மேலாகப் பரம்பொருளாக, அப்பாலைப் பொருளாக நிற்கிற செம்பொருட் சிவம் ஆகியவை. இவை எல்லாவற்றையும் முற்றாக விளக்கி இடவே முயன்றேன்
https://yarl.com/forum3/topic/201535-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
மாணிக்கவாசகரோ ‘நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.
பதிலளிநீக்குஈசனைஇல் என வேண்டா
பதிலளிநீக்கு23. வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே. 23
அவனால் வாழ்வு! சர்வ வல்லமையுடைய இறைவனை இல்லை என்று கூற வேண்டாம். அவன் படைத்தல் முதலியவற்றைச் செய்கின்ற கடவுளர்க்கும் தலைவனாய் இரவும் பகலும் ஆன்மாக் களுக்கு அருள் செய்து கொண்டிருக்கின்றான்.
https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html
ஞானக்குறள் 122.
பதிலளிநீக்குஉண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம்.
அறிவு இருப்பதை அறிந்தவற்குச் சிவத்தை(இறைவனை) உணர்ந்து காணமுடியும். அறிவை அறியாதோருக்கு அது முடியாது.
சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
பதிலளிநீக்குசங்கீதம் 1:5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.