விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

எல்லாம் விதிப்படி மட்டும் நடப்பதில்லை, அப்படி இருந்தால் மனிதர்கள் நற்கருமங்கள் செய்ய வேண்டியதில்லை.

மனித வாழ்வில் நிகழும் காரியங்கள் இந்த மூன்றின் சரியான கலவை.

  1. வினைப்பயன் - கர்மா
  2. ஊழ் - விதி
  3. பிராத்தனை மூலம் கிடைக்கும் இறைவனின் அருள்


விதியை ஏற்படுத்தியவன் அவனே.

பாவங்களை மன்னிக்க கூடியவன் அவனே.

ஆனால் முதல் இரண்டை மிகைக்க கூடியது மூன்றாவது.

எனவே அவனை அவன் விரும்பியபடி வணங்க வேண்டும்.

4 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. விதியை மதியால் வெல்லலாம் என்றால் அது விதி மீறல் இல்லையா?

    எல்லாம் விதிப்படி மட்டும் நடப்பதில்லை, அப்படி இருந்தால் மனிதர்கள் நற்கருமங்கள் செய்ய வேண்டியதில்லை.

    மனித வாழ்வில் நிகழும் நன்மை தீமைகள் இந்த மூன்றின் சரியான கலவை ஆகும்.

    * விதி - ஊழ்
    * வினைப்பயன் - கர்மா
    * பிராத்தனை - இறைவணக்கம், பாவமன்னிப்பு, தியானம், வேதம் ஓதுதல்
    விதியை ஏற்படுத்தியவன் இறைவன் எனவே அதில் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    ஆனால் மற்ற இரண்டும் நமது கைகளில் உள்ளது. நமது மதியை கொண்டு நாம் அறம் பேனுபவர்களாக இருந்தால், இறைவனிடம் பிராத்தனை செய்பவர்களாக இருந்தால் விதியை வெல்லலாம்.

    இவ்வாறு விதியை வெல்வது விதிமீறல் அல்ல, விதி விலக்கு ஆகும்.

    Follow https://ta.quora.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-1/answers/1477743706187475

    பதிலளிநீக்கு
  3. விதி என்று நாம் கருதும் ஒன்றால் மட்டும் எல்லாம் நடப்பதில்லை, அப்படி இருந்தால் மனிதர்கள் நற்கருமங்கள் செய்ய வேண்டியதில்லை.

    மனித வாழ்வில் நிகழும் நன்மை தீமைகள் இந்த மூன்றின் சரியான கலவை ஆகும்.

    விதி - ஊழ்
    வினைப்பயன் - கர்மா
    பிராத்தனை - இறைவணக்கம், பாவமன்னிப்பு, தியானம், வேதம் ஓதுதல்
    விதியை ஏற்படுத்தியவன் இறைவன் எனவே அதில் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    ஆனால் மற்ற இரண்டும் நமது கைகளில் உள்ளது. நமது மதியை கொண்டு இறைவன் கூறும் அறங்களை பேனுபவர்களாக இருந்தால், இறைவனிடம் பிராத்தனை செய்பவர்களாக இருந்தால் நாம் இவைகள் மூலம் விதியை வெல்லலாம்.

    இவ்வாறு விதியை வெல்வது விதி மீறல் அல்ல, விதி விலக்கு ஆகும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதும் விதி தான்.

    விதி என்பதை ஒரு நேர் கோடு போல கற்பனை செய்யாமல், அது ஒரு மென்பொருள் புரோகிராம் போல புரிந்து கொண்டால், விதியை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஒரு புரோகிராம் ஒரே வகையான வெளியீட்டை தராது, அதன் மாறுபட்ட உள்ளீடுகளுக்கு ஏற்ப்ப வெளியீடுகள் மாறுபடும். இங்கே உள்ளீடுகள் என்பது நாம் செய்யும் செயல்கள். அதே சமயத்தில் வேறொரு காரணத்துக்காக செய்யப்பட்ட புரோகிராம் தரும் வெளியீடு நமது புரோகிராம் கொடுத்த வெளியீடு உடன் ஒத்துபோகாது. ஒரு காம்ப்ளக்ஸ் புரோகிராம் என்பது டைனமிக் ஆக இருக்கும் ஆனால் அது அதன் எல்லையை கடக்க முடியாது. எனவேதான் ஒரு நேரத்தில் பிறந்த வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமான வழக்கை நிலையை அடைகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் பிறப்பின் நோக்கம் வேறு வேறு, சூழ்நிலை வேறு வேறு, அவர்கள் செயல்கள் வேறு வேறு, அவர்களின் கல்வி வேறு வேறு, பக்தி வேறு வேறு ஆகும்.

    எனவே புண்ணியத்தை விடுத்து பாவமே செய்பவர்களாக நாம் இருந்தால் அப்பொழுது தீமையான கர்ம வினைகள் நமக்கு ஏற்படும். அதுவும் விதிதான். அதைத்தான் வள்ளுவர்,

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். - 380

    என்று கூறுகிறார்.

    பதிலளிநீக்கு
  4. பாடல் எண் : 41
    விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
    விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
    துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
    பதிவழி காட்டும் பகலவ னாமே.

    பொழிப்புரை : கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.

    https://keyemdharmalingam.blogspot.com/2012/02/29-4256-3.html

    பதிலளிநீக்கு