மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?

பொதுப்படையான கேள்விக்கு பொதுப்படையாக பதில் சுருக்கமாக தருவதென்றால்,

சமயம் சார்ந்த கருத்துக்கள் பொதுவாக உலக நன்மைக்கே வித்திடும். முரண்பாடாகதெரியும் இந்த கருத்து அதை ஆழ்ந்து கற்காததன் விளைவு. மொழி, இட, கால பாகுபாடு அன்றி ஒரே தத்துவத்தை தாங்கி நிற்பதன் மூலம் அதன் நம்பகத்தன்மை உறுதி ஆகிறது. சமயங்கள் ஓவ்வொன்றுக்கும் முரண்கள் பல இருப்பதாக போதிக்கப்படும் நாம், ஒற்றுமைகளை பட்டியலிட்டால், சமயங்களுக்கு இடையேயான வேற்றுமை என்பது மக்களை பிளவு படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று என்னும் அளவுக்கு மிகப் பெரியது. இந்த வளையொலி முழுவதும் ஒற்றுமைகளை பட்டியலிடும் வேலையை தான் செய்கிறது.

அப்படி அனைத்து மதங்களிலும் பொது விடயங்களாவன,

  1. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  2. நிலையில்லா உலகுக்கு மட்டுமே உழைக்காமல் நிலையான வீடு பேரு பெறவும் உழை
  3. குலத்தால், மொழியால், நிறத்தால் சிறப்பில்லை, அவரவர் செய்யும் செயலால்தான் சிறப்பு
  4. அவரவர் செய்த வினைப்பயனும் உண்டு, இறைவன் எழுதிய விதிப்பயனுமுண்டு
  5. பொறாமை, பெருமை, கோபம், நயவஞ்சகம் கொள்ளாதே
  6. கொலை, திருட்டு, கொள்ளை, ஏமாற்று செய்யாதே
  7. அன்பு, கருணை, தருமம், உதவி செய்
  8. பிறன் மனை நோக்காதே, விபச்சாரம் செய்யாதே
  9. வட்டி வாங்காதே, கொடுக்காதே
  10. எடையில் குறைக்காதே
  11. நன்மை தீமையின் அளவு பொறுத்து சொர்கம் நரகம் உண்டு
  12. இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை

இவைகளை ஏற்று பின்பற்றும் ஒருவனால் தனக்கும் தன சமூகத்துக்கும் நன்மையை தவிர வேறு ஏற்படுத்த முடியாது.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமை என்பது சற்று சிக்கலான ஆனால் எல்லோரும் கற்று அறிய வேண்டிய பகுதி ஆகும்.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமையாக சொல்லப்படுவது 

  1. சில கருத்துக்கள் அறிவியலுக்கு எதிராக பேசுகிறது
  2. கடும் போக்கு வாதத்தை போதிக்கிறது
  3. சமயங்களுக்கு இடையேயான இணக்கங்களை உடைக்கிறது
  4. மக்களின் மனித தன்மையை இழக்க செய்கிறது

ஆனால் இந்த தீமைகள் எல்லாம் எதன் மூலம் ஏற்படுகிறதென்றால்,

  1. ஒரே இறைவன் தான் அனைத்து மொழிகளுக்கும் அவனது பிரதிநிதிகளை (சித்தர்/ரிஷி/நபி/தீர்க்கதரிசி/குரு) அனுப்பி மக்களை வழி நடத்துகிறான் என்பதை மறுப்பதன் மூலம் பல இறைவனை கற்பனை செய்கிறான், பல இறைவன் கோட்பாடு மக்களை பிளவுபடுத்தவும் யுத்தங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.
  2. இறைவன் தேவ தூதர்கள் (நந்தி/ஜிபிரியேல்/கேப்ரியேல்) வாயிலாக அவனது பிரதிநிதிகளுக்கு கட்டளைகளை அனுப்புகிறான் என்பதை மறுப்பதன் மூலம் இறைவனின் grand design-ஐ புரிய  மறுக்கிறான், அது அவனை அறியாமையில் ஆழ்த்தும், அறியாமை அழிவின் வாசல் ஆகும்.
  3. அந்த பிரதிநிதிகளை பற்றிய முன்னறிவிப்புமுன் சென்ற வேத ஆகம நூல்களில் கொடுக்கப்படாமல் அவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவதில்லை என்பதை அறியாமையினால், வசீகரமாக பேசும் எவரையும் குரு என்று நம்பி தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகி ஏமாற்றம் அடையும் பொழுது இறைவனை மறுக்கும் சூழலுக்கு செல்கிறான். போலி மருத்துவரால் மருத்துவத்தை விடாத மனிதன், போலி குருவால் ஆன்மீகத்தை விடுகிறான்.
  4. இறைவன் தந்த வேத நூலின் மூலமே மக்களாகிய நாம் வழிநடத்தப் படவேண்டும் என்பதை அறியாமல், அவனுடைய வேதம் என்ன என்று கூட அறியாமல் அறமும் வழிகாட்டுதலும் இல்லாமல் மனிதன் அநியாயங்களை செய்ய துவங்குகிறான்.
  5. உண்மையை, சத்தியத்தை, ஹக்கை அறியாமல் பொய் தெய்வங்களை, பொய் குருக்களை, பொய் வேதங்களை ஏற்று பாவங்களை விதைத்து நரகத்தை அறுவடை செய்யும் துர்பாக்கிய சாலிகளாக மனிதன் மாறிப்போய் நிற்கிறான்.
  6. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்படி அதற்கே உரிய விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறதோ அதேபோல இறைவனை அறியவும், உண்மையான வேதத்தை அறியவும், வேதங்களில் கலக்கப்பட்ட பொய்களை களையவும், வேதங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை திரிபுகளையும் அடையாளம் காணவும் விதிகள் உள்ளன என்பதை அறியாத நிலையில் மனிதன் உள்ளான்.

சமயம் என்பது அறிவியலை போன்று, ஆற்றல் போன்று, வாகனத்தை போன்று - முறையாக கற்று கையாளப்பட வேண்டிய ஒன்று. அறிவியலை புறந்தள்ள முடிவு செய்வது அறிவீனம், அப்படியேதான் சமயமும்.

https://ta.quora.com/மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக