சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் (அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:98)

பதவுரை: சிறுமையுள்-இழிவினின்று, இழிதகைமையினின்று, சிறுதன்மையுள், அற்பத்தனத்தினின்று; நீங்கிய-தவிர்த்த; இன்சொல்-இனியமொழி கூறுதல்; மறுமையும்-மறுபிறப்பும்; இம்மையும்-இப்பிறப்பும்; இன்பம்-மகிழ்ச்சி; தரும்-அளிக்கும்.

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

குறிப்பு:

பிறவி இருவகை: இம்மை, மறுமை 

  • மறுமைஎழுமைஎழுபிறப்பு எனபவைகள் மறு வாழ்வை குறிக்கும்
  • இம்மைபிறவி, உலகு, வையம் என்பவைகள் பூவுலகை குறிக்கும்.  
  • ஒருமை என்பது தனிமையை குறிக்கும், ஒரு பிறவி என்று பொழிப்புரையில் தவறாக கொடுக்கப் பட்டுளள்து 
மறுமை என்கிற பதிவில் இது விளக்கப் பட்டுள்ளது 
மறுமையில் வாழ்வு இருவகை: மேலுலகம், கீழுலகம் 
  • வான், சொர்கம், வீடுபேறு என்பவைகள் மறுமையில் உள்ள மேலுலக வாழ்வை குறிக்கும்
  • நரகம்அளறுநெருப்பு ஆகையவைகள் மறுமையில் உள்ள கீழுக வாழ்வை குறிக்கும் 

குறளில் சொர்க்க நரகங்கள் தனித்தனியே சில இடங்களில் கையாளப் பட்டுள்ளது..! 

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (ஈகை:222)

பதவுரை: 

நல்-நல்ல;
ஆறு-நெறி;
எனினும்-என்றாலும்;
கொளல்-ஏற்றல்;
தீது-கொடிது;
மேல்உலகம்-உயர்வாகிய உலகம்;
இல்லெனினும்-இல்லை என்றாலும்;
ஈதலே-கொடுத்தலே;
நன்று-நன்மையுடையது.

பொருள்: மேலுகம் (சுவர்க்கம்) கிடைப்பதில்லை என்றாலும் ஈகையே சிறந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை:
ஒருமை-ஒருபிறப்பு; 
செயல்-செய்தல்;
ஆற்றும்-செய்து கொள்ளும்;
பேதை-பேதை;
எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்;
தான்-தான்;
புக்கு-புகுந்து;
அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய;
அளறு-நரகம், நிரயம்

பொருள்: பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்குசான்று இந்த குரல். எழுமையில் அளறு: அதாவது மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம் என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எரிகிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் இந்த குறள் கூறும் விளக்கத்துக்கு எதிரானவர்கள்.  

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (வரைவில்மகளிர்  919)

பதவுரை: வரைவிலா - வரம்பின்றி; மாண் - சிறந்த, மாட்சிமையுடைய; இழையார் - அணி அணிந்தவர்; மென் - மென்மையான; தோள் - தோள்; புரையிலா - உயர்வு இல்லா; பூரியர்கள் - கீழ்மக்கள்; ஆழும்-புக்கு அழுந்தும்; அளறு - நரகம், நிரயம், சேறு.

மணக்குடவர் உரை: முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.

சான்றுகள்:
________________________________________

 



13 கருத்துகள்:


  1. வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற
    செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி
    நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்; - இம் மூன்றும்
    வஞ்சத்தின் தீர்ந்த பொருள். 43


    தீவழிச் செல்லாமலிருப்பதால் செல்வம் உண்டாகும். உடலின் செய்கை அடங்குதலால் மறுபிறப்பில் சொர்கம் கிடைக்கும். பொய் இன்றி மனம் அடங்குதலால் முக்தி கிடைக்கும். இம்மூன்றும் வஞ்சத்தில் நீங்கிய பொருள்களாகும்.

    http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_9.html

    திப்பியம் - சுவர்க்கம்
    https://agarathi.com/word/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு

  2. ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி,
    ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம்
    வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர்
    நிரயத்துச் சென்று வீழ்வார். திரிகடுகம் 45


    திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும், இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும், இறப்பை நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குச் செல்வர். http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_9.html

    பதிலளிநீக்கு
  3. கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற
    பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும்
    மறுமைக்கு அணிகலம் கல்வி; - இம் மூன்றும்
    குறியுடையோர்கண்ணே உள. திரிகடுகம் 52


    கண்களுக்கு அணிகலம் கண்ணாடுதல், பெண்ணுக்கு அணிகலம் நாணம், மறுபிறப்புக்கு அணிகலன் கல்வி அறிவு. இம்மூன்றும் ஆராயும் இயல்புடையாரிடத்தில் உள்ளன. http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_11.html

    பதிலளிநீக்கு

  4. ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
    சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
    அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்
    இருள் உலகம் சேராத ஆறு. திரிகடுகம் 90


    செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைச் செய்தலும், பெருநூலில் உள்ள அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்.

    பதிலளிநீக்கு
  5. வியாத கீதை 6 ஆம் அத்தியாயத்தில் நாம் காண்கிறோம்

    இந்த்ரியான்யேவ தத் ஸர்வம் யத் ஸ்வர்க நரகாவுபௌ | நிக்ரிஹிதா விஸ்ஷ்டானி ஸ்வர்காய நரகாய ச || 18 ||

    சொர்க்கம் மற்றும் நரகம் என்ற கருத்து இரண்டும் நமது புலன்களைச் சார்ந்தது, ஒருவர் தனது புலன்களைக் கட்டுப்படுத்தும் போது ஸ்வர்கம் (சொர்க்கம்) இருப்பதாகக் கூறப்படுகிறது, கட்டுப்பாடு இல்லாதது நரகம் (நரகம்).

    https://www.quora.com/Is-there-mention-of-heaven-and-hell-in-Rigveda

    பதிலளிநீக்கு
  6. 13:42. (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  7. தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
    முருவத்தா லாய பயன். 4 ஞானகுறள்
    -
    இவ்வுடலெனும் உருவம் கொண்டதன் பயனானது அறநெறி,செல்வம், காமம் மற்றும் தன்னைத் தானறிந்து பரவெளியாம் வீடு அடைதல் என்பதாகும்

    பதிலளிநீக்கு
  8. சகரியா 14

    நியாயத்தீர்ப்பு நாள்

    14 பார், கர்த்தருக்கு நியாயந்தீர்க்க சிறப்பான நாள் இருக்கிறது. நீங்கள் அள்ளி வந்த செல்வங்கள் உங்கள் நகரில் பங்கிடப்படும். 2 நான் எல்லா தேசங்களையும் எருசலேமிற்கு எதிராகப் போரிட கூட்டுவேன். அவர்கள் நகரைக் கைப்பற்றி வீடுகளை அழிப்பார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். ஜனங்களின் பாதிபேர் கைதிகளாக கொண்டுப் போகப்படுவார்கள். ஆனால் மீதியுள்ளவர்கள், நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படமாட்டார்கள். 3 பின்னர் கர்த்தர் அந்நாடுகளோடு போரிடச் செய்வார். இது உண்மையான போராக இருக்கும். 4 அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும். 5 அம்மலைப் பள்ளத்தாக்கு உங்களை நெருங்க நெருங்க நீங்கள் தப்பி ஓட முயல்வீர்கள். நீங்கள் யூதாவின் அரசனான உசியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பயந்து ஓடியதுபோன்று ஓடுவீர்கள். ஆனால் எனது தேவனாகிய கர்த்தர் வருவார். அவரோடு அவரது பரிசுத்தமானவர்களும் வருவார்கள்.

    6-7 அது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். அங்கு வெளிச்சமும், குளிரும், மப்பும் இருக்கிறது. கர்த்தர் மட்டுமே அந்த நாளை அறிவார். ஆனால் அங்கே இரவோ, பகலோ இருக்காது. பின்னர், வழக்கமாக இருள் வரும் நேரத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கும். 8 அந்நேரத்தில், எருசலேமிலிருந்து தொடர்ந்து தண்ணீர் பாயும். அந்த தண்ணீரோடை இரண்டாகப் பிரிந்து ஒன்று கிழக்காகவும், இன்னொன்று மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் பாயும். இது ஆண்டு முழுவதும் கோடைக் காலத்திலும், மழைகாலத்திலும் பாய்ந்துகொண்டிருக்கும் 9 அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே அரசராக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே. 10 அந்நேரத்தில், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அரபா பாலைவனமாக காலியாக இருக்கும். நாடானது கேபா தொடங்கி எருசலேமிற்கு தெற்கேயுள்ள ரிம்மோன் வரைக்கும் பாலைவனமாகும். ஆனால் எருசலேம் நகரம் முழுவதும் மீண்டும் கட்டப்படும். பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசல் (மூலை வாசல்) வரைக்கும் அனானெயேல் கோபுரம் தொடங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள் வரை குடியேற்றப்பட்டிருக்கும். 11 ஜனங்கள் அங்கே வாழப்போவார்கள். இனி மேல் அவர்களை எந்தப் பகைவரும் அழிக்க வரமாட்டார்கள். எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.

    12 ஆனால் எருசலேமிற்கு எதிராக போரிட்ட நாடுகளை கர்த்தர் தண்டிப்பார். அவர்களுக்குப் பயங்கரமான நோய் ஏற்பட காரணமாக இருப்பார். அங்கு ஜனங்கள் இன்னும் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களின் தோல் அழுகும். அவர்களின் கண்கள் இமைக்குள்ளும் நாக்குகள் வாய்க்குள்ளும் அழுகிப் போகும். 13-15 அந்தப் பயங்கரமான நோய் எதிரியின் கூடாரத்தில் இருக்கும். அவர்களின் குதிரைகள் கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் எல்லாம் அந்நோயால் பீடிக்கப்படும்.

    அந்நேரத்தில், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு உண்மையில் பயப்படுவார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிடித்து பற்றிக்கொண்டு சண்டையிடுவார்கள். யூதாவின் ஜனங்கள் எருசலேமில் போரிடுவார்கள். ஆனால், அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவார்கள். அவர்கள் மிகுதியாக பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைப் பெறுவார்கள். 16 எருசலேமில் போரிட வந்த ஜனங்களில் சிலர் பிழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அரசனான சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதிட வருவார்கள். அவர்கள் அடைக்கல கூடாரப் பண்டிகையை கொண்டாட வருவார்கள். 17 பூமியிலுள்ள எந்த ஒரு குடும்பத்திலுள்ள ஜனங்களும் அரசனை, சர்வ வல்மையுள்ள கர்த்தரை தொழுதிட எருசலேம் செல்லாமல் இருந்தால், பிறகு கர்த்தர் அவர்கள் மழை பெறாமல் போகும்படிச் செய்வார். 18 எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார். 19 அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை.

    20 அந்நேரத்தில், அனைத்தும் தேவனுக்கு உரியதாகும். குதிரைகளின் மணிகளில் கூட கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று பொறிக்கப்பட்டிருக்கும். கர்த்தருடைய ஆலயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பானைகளும் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கும் பாத்திரங்களைப் போன்று முக்கியமானதாக இருக்கும். 21 உண்மையில், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள ஒவ்வொரு பானைக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு “பரிசுத்தம்” என்ற முத்திரையிருக்கும். கர்த்தருக்கு தகன பலிகளை செலுத்தும் ஒவ்வொருவரும் வந்து அவற்றில் சமைத்து உண்ண முடியும்.

    அந்நேரத்தில், அங்கு வியாபாரிகள் எவரும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் பொருட்களை விற்கவும் வாங்கவும்மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  9. மல்கியா 4
    Tamil Bible: Easy-to-Read Version
    4 “நியாயத்தீர்ப்புக்கான காலம் வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வெப்பமான சூளைபோன்றது. தற்பெருமையுடைய ஜனங்கள் எல்லாம் தண்டிக்கப்படுவார்கள். தீயவர்கள் எல்லோரும் வைக்கோலைப்போல் எரிக்கப்படுவார்கள். அந்தக் காலத்தில், அவர்கள் நெருப்பில் எரிகிற பதரைப் போன்றிருப்பார்கள். அதிலுள்ள கிளையோ, வேரோ விடுபடாமல்போகும்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.

    2 “ஆனால், என்னைப் பின்பற்றுகிறவர்களே, உங்களுக்கு நன்மையானது உதய சூரியனைப் போன்று ஒளி வீசும். இது சூரியக்கதிர்களைப் போன்று குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டு வரும். நீங்கள் தொழுவத்திலிருந்து விடுபட்டகன்று குட்டிகளைப் போன்று சுதந்திரமும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். 3 பின்னர் அத்தீய ஜனங்கள் மேல் நடந்து செல்வீர்கள். அவர்கள் உங்கள் காலடியில் சாம்பலைப்போன்று கிடப்பார்கள். நியாயத்தீர்ப்புக்கான காலத்தில் நான் அவற்றை நிகழும்படிச் செய்வேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்!

    4 “மோசேயின் சட்டங்களை நினைவு கொண்டு கீழ்ப்படியுங்கள். மோசே எனது ஊழியகாரனாக இருந்தான். நான் அவனுக்கு ஒரேப் மலையிலே (சீனாய்) அந்த சட்டங்களை கொடுத்தேன். அந்தச் சட்டங்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்கும் உரியது.”

    5 கர்த்தர், “பாருங்கள், நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவேன். அவன் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய பயங்கரமான நாளுக்கு முன்னால் வருவான். 6 எலியா, தமது பிள்ளைகளுடன் நெருக்கமாயிருக்கிற பெற்றோருக்கும் தமது பெற்றோருடன் நெருக்கமாயிருக்கிற பிள்ளைகளுக்கும் உதவுவான். இது நிகழவேண்டும், அல்லது நான் (தேவன்) வந்து உங்கள் நாடு முழுவதையும் அழிப்பேன்!”

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%2014&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  10. வழி நடப்பார் இன்றி வானோர் உலகம்

    கழி நடப்பார் கடந்தார் கரும்பாரும்

    மழி நடக்கும் வினை மாசற ஓட்டி

    ஒழி நடக்கும் வினை ஓங்கி நின்றாரே (திருமூலர் திருமந்திரம் -264)

    கருத்து: நல்வழியில் நடக்காவிட்டால் உயர்நிலையை அடைய முடியாது. இதை அறிந்தும் பலர் தீயவழியிலேயே நடக்கின்றார்கள். ஞானம் தெளிவு பெற்ற ஒருசிலரே, தீமைகளுக்குக் காரணமான பாவத்தை நீக்கி, நரகத்தைத் தாண்டுகிறார்கள். நல்வழியில் நடக்காதவர்கள் நரகத்தை அடைகிறார்கள். நல்வழியில் நடப்பவர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதே பாடலின் பொருள்.“

    ________________________________________________

    Bg. 14.18

    ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसा: ।

    जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसा: ॥ १८ ॥

    ūrdhvaṁ gacchanti sattva-sthā

    madhye tiṣṭhanti rājasāḥ

    jaghanya-guṇa-vṛtti-sthā

    adho gacchanti tāmasāḥ

    “நன்மையின் முறையில் அமைந்தவர்கள் படிப்படியாக உயர்ந்த கிரகங்களுக்குச் செல்கிறார்கள்; பேரார்வம் உள்ளவர்கள் பூமிக்குரிய கிரகங்களில் வாழ்கின்றனர்; மேலும் அறியாமையின் அருவருப்பான முறையில் இருப்பவர்கள் நரக உலகங்களுக்குச் செல்கிறார்கள்.

    ______________________________________________________

    ஸ்ரீமத் பாகவதம் 11.25.22 கூறுகிறது:

    சத்வே ப்ரலிநாล ஸ்வர் யாந்தி

    nara-lokaṁ rajo-layāḥ

    tamo-layās tu nirayṁ

    யாந்தி மாம் ஏவ நிர்குணாঃ

    நல்வழியில் இவ்வுலகை விட்டுச் செல்பவர்கள் சொர்க்க லோகங்களுக்குச் செல்கிறார்கள், மோகத்தால் மறைந்தவர்கள் மனித லோகத்தில் இருப்பார்கள், அறியாமையால் இறப்பவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் இயற்கையின் அனைத்து முறைகளின் தாக்கத்திலிருந்தும் விடுபட்டவர்கள் என்னிடம் வருகிறார்கள். Did Krishna really mention about hell and heaven and that they are separate? Why does the Bhagavad Gita seem a little different from the ...

    பதிலளிநீக்கு
  11. பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்
    பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்
    பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்
    வித்து; அற, வீடும் பிறப்பு. . . . .[திரிகடுகம் 22]

    பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்
    பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்
    பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்
    வித்து; அற, வீடும் பிறப்பு. . . . .[22]

    விளக்கம்:
    பாசப் பற்றையும், பற்று விடாத விருப்பத்தையும், பொய்மையை என்றும் அறியாமை, ஆகிய இம்மூன்றையும் நீக்கினால் வீடு பேறு அடையலாம்.

    பதிலளிநீக்கு
  12. காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,
    தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர்,
    காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும்
    ஆழ்ச்சிப் படுக்கும், அளறு. . . . .[24]

    காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்
    தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க்
    காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
    ஆழ்ச்சிப் படுக்கும் அளறு. . . . .[24]

    விளக்கம்:
    மென்மையான தோள்களையுடைய கணிகையரின் மென்மையான மொழியும், தூண்டிலில் மீனுக்கு இரையாக வைக்கப்பட்ட தவளையும், பகைவர்களுடைய வணக்கமும், ஆகிய இம்மூன்றும் நரகம் போன்றதாகும்.

    பதிலளிநீக்கு
  13. ''சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது இவ்வுலகம் இவ்வுலுகத்தில் உள்ளதை விட சிறந்ததாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ 2892, திர்மிதீ 1572, இப்னுமாஜா 4321), அஹ்மத் 15012), தாரமீ 2699)

    பதிலளிநீக்கு