விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு - சொர்க்கத்திலிருந்து வெளியேறு

தமிழர் சமயம் 


விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கயொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. - (முதல் தந்திரம் 1. உபதேசம்ம்- 157)

பதவுரை 
விண்ணின்று - விண்ணிலிருந்து, சுவர்கத்திலிருந்து 
இழிந்து - இழிவடைந்து
வினைக்கீடாய் - செய்த தீய வினைக்கு ஈடாக
மெய்க்கொண்டு - உடலைப் பெற்று
தண்ணின்ற - குளிர்ந்த, ஈரமுடைய,   
தாளை - திருவடியை 
தலைக்காவல் - உயர்ந்த பாதுகாப்பு கொடுப்பவனை  
முன் வைத்து - முன் வைத்து 
உண்ணின்று - உண்இன்று - உணவின்மையால் (உள்நின்று-நிலைபெற்று);
உருக்கி - உருக்கி  
ஓர் - ஒரு   
ஒப்பிலா - இணையில்லா, உவமையில்லா  
ஆனந்தக் -மகிழ்ச்சியான  
கண் + நின்று - கண்ணோட்டம் - அன்பும் இரக்கமும்  
காட்டிக் - காட்டி 
களிம்பு - மாசு 
அறுத்தானே - நீங்கினான் 

விளக்கவுரை: சுவர்க்கத்தில் செய்த வினைக்கு ஈடாக இழிவடைந்து பூவுலகிற்கு ஏற்ற உடலைப் பெற்று குளிர்ந்த திருவடியை உயர்ந்த பாதுகாப்பாக முன்வைத்து உணவை விடுத்து உடலை உருக்கி ஒரு இணையில்லா மகிழ்ச்சி அடையும்படியான அன்பையும் இரக்கத்தையும் காட்டி பாவத்தால் ஏற்பட்ட மாசை நீங்கினான். 

கருத்து: சுவர்க்கத்தில் செய்தபாவத்தால் உடல்கொண்டு பூவுலகு வந்தவனுக்கு இறக்கமுடைய உயர்ந்த பாதுகாப்பு தரும் இறைவனிடம் உணவை விடுத்து உடலை வருத்தி பாவ மன்னிப்பு கேட்டதால் இணையில்லா மகிழ்ச்சி தரும் அன்பையும் இரக்கத்தையும் காட்டி, செய்த பாவத்தின் மூலம் ஏற்ப்பட்ட மாசை அவன் நீங்கினான்.  

இஸ்லாம் 

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம். - (குர்ஆன் 2:36

கிறிஸ்தவம் 

ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். - (ஆதியாகமம் 3:23)

3 கருத்துகள்:

  1. பகவன், பகவர் - இறை அடியார், மனிதர் (பகவன்-க்கு, இறைவன் என்கிற பொருள் பிழை)


    பதிலளிநீக்கு
  2. வேத வேள்வியை நிந்தனை செய்துஉழல்

    ஆதம் இல்லி அமணொடு தேரரை

    வாதில் வென்றுஅழிக் கத்திரு உள்ளமே

    பாதி மாதுடன் ஆய பரமனே

    ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென்

    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

    (தேவாரம், 3:108:1)

    பதிலளிநீக்கு
  3. தேவாரம்
    6. 089 திருஇன்னம்பர் திருத்தாண்டகம்
    பாடல் எண் : 10

    அலங்கல் சடைதாழ ஐயம் ஏற்று
    அரவம் அரைஆர்க்க வல்லார் போலும்,
    வலங்கை மழுஒன்று உடையார் போலும்,
    வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்,
    விலங்கல் எடுத்துஉகந்த வெற்றி யானை
    விறல்அழித்து மெய்ந் நரம்பால் கீதம் கேட்டு,அன்று
    இலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்,
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

    பொழிப்புரை :இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானார் கொன்றை மாலையணிந்த சடை தாழப் பிச்சை ஏற்க வல்லவரும் , பாம்பினை இடையில் கட்டவல்லவரும் , வலக்கையில் மழுப்படை ஒன்றை உடையவரும் , தருக்கினால் உயர்ந்த தக்கனுடைய வேள்வியைச் சிதைத்தவரும் , கயிலை மலையை எடுத்த அளவில் தனது வெற்றி பற்றி மகிழ்ந்த இராவணனது அவ்வெற்றியை அழித்துப் பின் அவன் தன் உடல் நரம்பால் எழுப்பிய இசையைக் கேட்டு அவற்கு ஒளிவாளைக் கொடுத்தவரும் ஆவார் .

    அரவம்
    வான்தக்கன்

    https://kuganarul.blogspot.com/2018/06/blog-post_159.html

    பதிலளிநீக்கு