கடவுளை படைத்தது யார்?

இது மிக ஆழமான ஒரு கேள்வி. இது கடவுளைப்பற்றி என்பதால், வேதங்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

தமிழர் சமயம்


ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து) 

 இந்த திருமந்திர பாடலின் முதல் வரி இறைவன் ஒருவனே அவன் தானே உருவானவன் என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறது. இதன் உள்ளடக்கம் என்னவென்றால்

ஒன்று - அவனை போல வேறு எதுவும் இல்லை, உண்மையில் ஈடு இணை ஏதும் இல்லா ஒரே ஒருவன்
அவன் தானே - அவன் தானே ஆனவன், அவனுக்கு தாயோ தந்தையோ அலல்து இன்னொரு கடவுளோ, வேறொரு படைப்பாளனோ இல்லை

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே (திருமந்திரம் 2684)

பொருள் : விளங்குகின்ற ஒளியே திருமேனியாகவுடைய சிவன் ஒருபோதும் பிறக்காதவன். பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் அவனது கண்கள். வளப்பம் மிக்க ஞானஒளியை வீசுவதாகிய அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். இவ்வாறாக விளக்கமான ஒளியைத் தருகின்ற மூன்றும் ஞானிகளின் உடலில் அமையும். (இலங்கு-இளங்கு-செய்யுள் விகாரம்)

இஸ்லாம் 

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.- (குர்ஆன் 112:3&4)

அல்லாஹ் வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா(குர்ஆன் 35:3)

மக்கள் (இதைப் படைத்தவர் யார்? அதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக்) கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில் ‘அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான், அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, ‘அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்’ (ஆமன்து பில்லாஹ்) என்று சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 212)

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். - (திருக்குர்ஆன் 21:22)

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 23:91) 

கிறிஸ்தவம் 

என்றென்றைக்கும் நீரே கடவுள் - (சங்கீதம் 90:2)

ஏனென்றால், நான் என் கையை வானத்திற்கு உயர்த்தி, நான் என்றென்றும் வாழ்கிறேன் என்று சொல்கிறேன் - (உபாகமம் 32:40)

 மேலும், அவர் எல்லாவற்றுக்கும் முந்தியவர். - (கொலோசெயர் 1:17) 

முடிவுரை

எப்பொழுதும் அழிவில்லா ஆற்றல் பிறந்த பிறப்பிடமாம் கடவுள், யாரும் படைக்கும் ஒன்றாக இருக்க வில்லை. 

9 கருத்துகள்:

  1. “ஆண்டவரே, . . . பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” (சங்கீதம் 90:1, 2) தீர்க்கதரிசியான ஏசாயாவும் இப்படிச் சொன்னார்: ‘உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்.’ (ஏசாயா 40:28, பொது மொழிபெயர்ப்பு) அவரைப் போலவே யூதாவும் தன் கடிதத்தில், கடவுள் ‘என்றென்றைக்கும்’ வாழ்வதாகச் சொன்னார்.—யூதா 25, ஈஸி டு ரீட் வர்ஷன்.

    கடவுளை “நித்திய ராஜா” என்று இயேசுவின் சீடரான பவுலும் சொன்னார். (1 தீமோத்தேயு 1:17) அப்படியென்றால் கடவுள் என்றென்றுமாக இருந்திருக்கிறார். அவருக்கு ஆரம்பமே இல்லை. அதேசமயம் அவருக்கு முடிவும் இல்லை! (வெளிப்படுத்துதல் 1:8) அவர் என்றென்றும் வாழ்வதால் அவரை சர்வ சக்தியுள்ள கடவுள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது.

    இதைப் புரிந்துகொள்வது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது? யெகோவா தேவனோடு ஒப்பிடும்போது, நாம் சொற்ப காலம்தான் உயிர்வாழ்கிறோம். அதனால் நேரத்தையும் காலத்தையும் யெகோவா பார்ப்பதுபோல் நம்மால் பார்க்க முடியாது. அவர் என்றென்றும் வாழ்வதால் ஆயிரம் வருடங்கள் அவருக்கு ஒரேவொரு நாள் போல் இருக்கிறது. (2 பேதுரு 3:8) இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு வெட்டுக்கிளி 50 நாட்களே வாழும். மக்கள் 70 அல்லது 80 வருடங்கள் வாழ்வதை அதனால் கற்பனை செய்ய முடியுமா? நிச்சயம் முடியாது! எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்கு முன் நாம் வெட்டுக்கிளிகளைப் போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. நாம் சிந்திக்கும் விதத்தை கடவுள் சிந்திக்கும் விதத்தோடு ஒப்பிடவே முடியாது. (ஏசாயா 40:22; 55:8, 9) அப்படியென்றால் நம்மால் யெகோவாவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது!

    கடவுள் என்றென்றும் வாழ்வதை நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அதுதான் உண்மை! ஏனென்றால், கடவுளை ஒருவர் படைத்திருந்தால் அவர்தான் படைப்பாளராக இருக்க வேண்டும். ஆனால் யெகோவாதான் ‘எல்லாவற்றையும் படைத்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) அதுமட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததென்று நமக்குத் தெரியும். (ஆதியாகமம் 1:1, 2) அவையெல்லாம் எப்படித் தோன்றியிருக்கும்? நிச்சயம் அவற்றை ஒருவர் படைத்திருக்க வேண்டும்; அவையெல்லாம் தோன்றுவதற்கு முன் அதைப் படைத்த ஒருவர் இருந்திருக்க வேண்டும். முதல் படைப்பான அவருடைய மகனும், தேவதூதர்களும் படைக்கப்படுவதற்கு முன்பே கடவுள் வாழ்ந்திருக்க வேண்டும். (யோபு 38:4, 7; கொலோசெயர் 1:15) அப்படியென்றால், அவர் ஆரம்பத்தில் தனியாக இருந்திருக்கிறார். அவருக்கு முன் யாரும், எதுவும் இருந்ததில்லை; யாரும் அவரைப் படைக்கவும் இல்லை.

    https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/wp20141001/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/

    பதிலளிநீக்கு
  2. சர்வ வல்லமை மிக்க கடவுள் படைக்கப்பட்டாலே அவன் கடவுள் தன்மையை இழந்து விடுவான் .

    ஒரு உதாரணத்திற்கு கடவுள்க்கு ஒரு மகன் என்று வைத்துக்கொண்டால் .. கடவுள் இயலாதவன் ஆகி விடுவான் .

    (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.Al-Quran112:3,4

    உலகில் உள்ள எந்த பொருளை எடுத்தாலும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிடும் பொது ஏற்ற தாழ்வுகள் இருக்கும் .. சிலருக்கு பெரிதாக தெரியும் ஓர் விடயம் சிலருக்கு சிறிதாக தெரியலாம் .
    அனால் கடவுள் என்பவன் அதற்கு அப்பாற்பட்ட சக்தியாக இருக்க வேண்டும் .
    அவனை யாரும் படைத்திருந்தால்??

    படைப்பவன் படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா?
    (16:17)
    அல்லாஹ் வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா? (35:3)

    பகுத்தரிவிற்கமைய சிந்திக்காமல் இயற்கை என்று முடிப்பது நாத்திகர்களின் வழமை .. சான்றுகளை வைத்து கடவுள் என்று முடிப்பது தான் சிறந்தது ..

    பகுத்தறிவுள்ள மனிதன் எப்பொழுதும்சிறந்ததை தேர்ந்த்டுப்பான்.
    உலகை எவாறு தோன்றியது? அணு வெடிப்பின் (BIG BANG)மூலம் .. அந்த அணு எவ்வாறு தோன்றியது ?
    ஒண்டுமே இல்லாத அந்த அணுவை முதலிடத்தில் வைப்பதை விட பகுத்தறிவுள்ளவன் கடவுளை அந்த இடத்தில வைப்பான் .

    நீங்கள் 1400 வருடம் கழித்து இந்த கேள்வி கேட்பீர்கள் என்று முஹம்மதுக்கு எப்படி தெரியும் ?இதோ திருக்குரான் இப்படி கூறுகிறது .

    ``...... அவர்கள் அல்லாஹ் படைத்தது போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார் என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன். அவன் தனித்தவன். அடக்கியாள்பவன். (13:16)

    இன்னும் இதை விரிவாக பார்ப்போமானால்

    கடவுளை கூட சும்மா உயர் நிலையில் வைக்க சொல்லவில்லை .
    நாத்திகர்கள் கூறும் இயற்கை படி -

    பேரண்டத்தின் ஈர்ப்பு விசை அல்லது அதன் பயன்பாடு மற்றும் செயற்பாடு அல்லது அதன் விசையைக் கட்டுப்படுத்தா விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் , இருக்க வேண்டும் .
    ஆகாயம் வீழ்ந்து விடாதவாறு தடுக்க வேண்டிய தேவை உண்டு; அதனால் அது தடுக்கப்பட்டு வருகிறது என திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடியும்?

    எனவே குறைந்த பட்சம் பேரண்டத்திற்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதும் மேலும் அதை சமன் செய்யும் மற்றொரு ஆற்றல் இப்பேரண்டத்தில் வெயல்பட்டு வருகிறது எனும் கருத்தும் இந்த வசனத்தில் (22:65) இருந்து தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது.

    (முஹம்மதே!) பூமியில் உள்ளதையும் அவனது கட்டளைப் படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காக பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா? அவன் கட்டளை யிட்டால் தவிர பூமியின் மேல் வானம் விழாதவாறு தடுத்து வைத் துள்ளான். அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன். (22:65)

    பதிலளிநீக்கு

  3. பெருவெடிப்புக்கு(BIG BANG) முன்னர் ஏது இயற்கை?

    யற்கை(???) என்ற பெயரில் ஏதேனும் ஒன்று செயல்பட வேண்டுமானால் பொருட்கள் இருக்க வேண்டும். எனவே பொருள் இல்லையேல் இயற்கையும் இல்லை. பெரு வெடிப்புக்கு முன்னால் பொருட்கள் ஏதும் இல்லை யென்பதால் அந்த நேரத்தில் இயற்கையும் இல்லை. இயற்கையே இல்லாத போது பெரு வெடிப்பின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்தது யார்? இயற்கையின் இடத்தில் இறைவனையே அன்றி வேறொன்றையும் வேறொருவரையும் காணமுடியாது என்பதையே இது காட்டுகிறது.

    மற்றொரு கோணத்தில் பார்த்தால் பெருவெடிப்புக்கு முன்பே இயற்கை இருந்தது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அந்த இயற்கையால் பேரண்டத்தின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்திருக்க இயலாது. ஏனெனில் இயற்கைக்கு சோதிடம் கிடையாது. புலனறிவுக்கு உட்பட்டதை வைத்தே இயற்கை தீர்மானங்களை எடுக்க முடியும்.

    பூமியின் ஈர்ப்பு விசையை அதன் இயற்கை என்று கூறினால் பூமி இருப்பதால் தாம் அதில் அதன் இயற்கையாம் ஈர்ப்பு விசை தோன்றியது. இல்லாத பூமியில் இயற்கை தோன்றாது. இயற்கையின் இயற்கையே இப்படியென்றால் பெருவெடிப்பிற்கு முன் இல்லாத பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலை இயற்கையால் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?

    பெருவெடிப்பிலிருந்து தோன்றப் போகும் இம்மாபெரும் பேரண்டத்தின் பொருண்மையைக் கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டுமானால் பேரண்டம் தோன்றிய பிறகே அதைச் செய்ய முடியும். பேரண்டம் தோன்ற வேண்டுமானால் பெருவெடிப்பு நிகழ வேண்டும். பெருவெடிப்பு நிகழ வேண்டுமானால் அதனுடைய விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருவெடிப்பின் விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட வேண்டுமானால் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றப் போகும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றல் என்ன என்பது மிகத் துல்லியமாக பெரு வெடிப்புக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும். இயற்கையால் அது சாத்தியமா?

    ``பெருவெடிப்பு நிகழ்ந்து ஒரு வினாடிக்குப் பிறகு விரிவாற்றல் நூறு ஆயிரம் மில்லியன் மில்லியன் பாகங்களில் ஒருபாகம் அளவு சிறியதாக இருந்திருந்தால் கூட பேரண்டம் இன்றைய நிலையை அடையாமல் குலைந்து போயிருக்கும்!
    -STEPHEN HAWKINGS.
    (ஸ்டீபென் ஹவ்கிங்க்ஸ் நாத்திகர் என்பது குறிப்படத்தக்கது )

    ஆகவே இப்பொருட்களின் படைப்பாளன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதும் அப்படைப்பாளன் யார்? என்ற கேள்வியும் அர்த்தமுள்ளதாகும். ஆனால் படைப்பாளனுக்கும் கூட மற்றொரு படைப்பாளனைக் கற்பளை செய்யும் அறியாமையிலிருந்து எழும் படைப்பாளனின் படைப்பாளன் யார்? என்ற கேள்வி மிகவும்அர்த்தமற்ற கேள்வியாகும்.

    இங்கு நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு செய்தி நாத்திகத்திற்கு கடவுளைப் பற்றி பேசும் போது மட்டுமே இது போன்ற அபத்தங்கள் ஏற்படுகின்றன என்பதும் மற்றவை களைப் பற்றிப் பேசும் போது இப்படிப்பட்ட அபத்தங்கள் ஏற்படுவதில்லை என்பதுமாகும். சான்றாக நாத்திகர்கள் பேரண்டம் நிலையானது; என்றும் உள்ளது என்ற எண்ணத்தில் இருந்தவர்கள்.
    எனவே பேரண்டம் எப்படித் தோன்றியது? என்று ஆத்திகர்கள் வின வினால் ``பேரண்டம் யாராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை; ஏனெனில் அது என்றும் உள்ளதுஎன பதில்கூறுவார்கள். ஆனால் என்றும் உள்ளவனான கடவுளைப் பற்றி கூறும் போது மட்டும் ``கடவுள் மட்டும் எப்படி தோற்று விக்கப்படாமல் தோன்ற முடியும்? முடியவே முடியாது! என அடம் பிடிப்பார்கள்.

    எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே இழப்பை அடைந்தவர்கள் என்று கூறுவீராக! (29:52)
    https://aththatchi.blogspot.com/2016/02/blog-post_58.html

    பதிலளிநீக்கு
  4. கடவுளை படைத்தது யார்? உலகத்தை படைக்க முன் அவர் எங்கே இருந்தார்?
    ------------------------------------------------

    கடவுளை படைத்தது யார்? அவர் ஆரம்பத்தில் எங்கே இருந்தார் என்பன நாத்திகர்களால் கேட்கப்படும் கேள்விகளில் மிக முக்கியமானவையாக உள்ளன.

    1.கடவுளை படைத்தது யார்?

    உலகத்திலுள்ள எந்த ஒன்றுமே தானாக உண்டாகியிருக்க முடியாது

    பூமி மனிதர்கள் வாழும் விதமாக உண்டாக்கப்பட்டுள்ளது

    ஒவ்வொன்றும் துள்ளியமாக இயங்குகின்றன.

    ஏன், மனித உடலிலுள்ள உறுப்புகள் கூட அதிசயமாக குறிப்பிட்ட விதத்தில் இயங்குகின்றன.. அதே போன்றே மற்ற உயிர்களும் உள்ளன.

    இவை அனைத்தும் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருப்பதை துல்லியமாக உணர முடிகிறது.

    ஆரம்பத்தில், பெருவெடிப்புக்கு முன்னால், ஹிக் போஸோன் துகள் இருந்துள்ளது.

    அதுவே வெடித்து இப்போதுள்ளது போல அண்டம் உண்டானதாக நாத்திகர்கள் நம்புகிறார்கள்.

    இந்த ஹிக் போசோன் தானாக உண்டாகியிருக்க முடியாது.

    இவ்வாறு தான் வெடித்து பின் உயிர்கள் தோன்றவேண்டும் என அத்துகளால் தீர்மானிக்க முடியாது!

    ஏனெனில் , அந்த ஹிக் போசோன் program செய்யப்பட்டுள்ளதே அன்றி, அது programmer அல்ல.

    இதை சரியாக ஒரு உதாரணத்தில் சொல்வதானால்,

    ஒரு ரோபோவை ஹிக் போசோன் துகளுக்கு உவமையாக கூறலாம்.

    ரோபோவை ஒருத்தர் உண்டாக்கி, அதற்கு coding செய்து program பண்ணி அதை இயக்கவோ அல்லது தானாக இயங்கவைக்கவோ செய்யப்படுகிறது.

    அதேபோன்று தான், ஆரம்பத்தில் இருந்த ஹிக் போசோன் துகள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் மிகச்சிறந்த ஞானமிக்க programmer மற்றும் மிக நுண்ணிய படைப்பாளரால் அது உண்டாகியிருக்க வேண்டும் என நாம் கூறுகிறோம்.

    இதை சாதாரண அறிவு உள்ள ஒருவராலும் புரிந்து கொள்ள இயலும்.

    அப்படியானால் , கடவுளை படைத்தது யார்??:

    கடவுளென்பவர் program செய்யப்பட்டவர் அல்ல..

    அவர் தன் விருப்பத்தின்படி நடப்பவர்.

    மிக பயங்கர சக்தி மிக்கவர்.

    அவர் என்றென்றும் நிலையாக இருந்தவர், இருப்பவர்.!

    அப்படிப்பட்ட ஒருவர் படைக்கபட்டார் என்று கூறுவதே அபத்தமாகும்!!

    இந்த கேள்வியே லாஜிக் அற்றது ஆகும்.

    உதாரணமாக,

    *சேவல் முட்டையிட்டால், என்ன நிறமாக இருக்கும்?

    *பூரண ஆணொருவன் பிள்ளை பெற்றால், என்ன பாலில் குழந்தை பிறக்கும்?

    இதுபோன்ற அர்த்தமற்ற லாஜிக் இல்லாத கேள்வியே இது.

    ஏனெனில் கடவுள் என்றாலே படைக்கப்படாமல், என்றென்றும் நித்தியமாக இருப்பவர் , அவரே சகலதையும் படைப்பவராக இருப்பார்.

    அப்படிப்பட்டவரை படைத்தவர் யார் என கேட்பது , கடவுளின் வரைவிலக்கணத்திற்கே முரண் ஆகும்.

    ஆனால் ஹிக் போசோனை இதற்கு ஈடாக கருத முடியாது.. ஏனெனில் அது ப்ரோக்ரமர் அல்ல.. மாறாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட துகள் ஆகும்!!
    ------------------

    2.படைக்க முன்பு கடவுள் எங்கே இருந்தார்?:

    இது பெரிய யோசிக்க வேண்டிய அளவுக்கு உண்டான ஒன்றே இல்லை!

    இவர்கள் புரியும் விதமாகவே கேட்பதானால்,

    பெருவெடிப்புக்கு முன்,

    ஹிக் போசோன் துகள் எங்கே இருந்தது???

    அது வெடித்தி சிதறி பெரு நட்சத்திரங்களெல்லாம் உண்டகிவிட்டன.

    இன்னும் அண்டம் விரிவடைந்துகொண்டே செல்கிறது.

    இத்தனைக்கும் எப்படி இடம் கிடைத்தது??

    இவற்றுக்கு என்ன பதில் சொல்லலாம்??

    இடம் என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தி கூற முன்பு, "எங்கே இருந்தார்? எங்கே உண்டானது?" என்ற கேள்விகள் அபத்தமாகும்.!

    வெற்றிடம் அளவில்லாமல் இருக்கிறது.. அதனால் தான் ஹிக் போசானால் இன்னும் வெடித்ததின் வெளிப்பாட்டால் இன்னும் விரிவடைகிறது.

    ஆனால் அது அண்டத்திற்கு வெளியில் அலுப்பதால், அவ் இடத்திற்கு வரைவிலக்கணம் கொடுக்கவில்லை!

    அப்படியிருக்க இக்கேள்வி அபத்தமானது ஆகும்.

    காரணம் வரைவிலக்கணம் கொடுக்கப்படாத இடம் நிறையவே இருந்துள்ளது.

    *கடவுள் படைக்க முன்பு என்ன பண்ணிட்டிருந்தார.??:

    நேரம் என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தவே இல்லாத காலத்தில், " அதற்கு முன்பு" என்ற ஒன்றை கூறவே இயலாது.

    இறைவன் தான் காலத்தை விதித்தவன். அவன் விதிக்க முன்பு காலம் என்பது இல்லை.

    அது undefined!!

    ஆகவே இதுவும் அர்த்தமற்றது
    https://www.facebook.com/107006104248053/photos/a.112528423695821/112525237029473/?type=3

    பதிலளிநீக்கு
  5. உபாகமம்

    15
    கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.
    16
    ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
    17
    பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
    18
    பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
    19
    உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. பாடல் எண் : 21
    பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
    இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
    துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
    மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

    பொழிப்புரை :சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாதவன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

    பதிலளிநீக்கு
  7. பெருவெடிப்பு முன் காலம் என்கிற கருப்பொருள் இல்லை என்கிறது அறிவியல்

    https://www.google.com/amp/s/scitechdaily.com/time-might-not-exist-according-to-physicists/amp/

    பதிலளிநீக்கு
  8. கடவுளை மனிதர்கள் படைக்க முடியாது. மனிதர்கள் படைக்கும் எதுவும் கடவுளாகாது.

    பதிலளிநீக்கு
  9. இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
    துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
    வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
    விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே (திருமந்திரம் 2684)

    பொருள் : விளங்குகின்ற ஒளியே திருமேனியாகவுடைய சிவன் ஒருபோதும் பிறக்காதவன். பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் அவனது கண்கள். வளப்பம் மிக்க ஞானஒளியை வீசுவதாகிய அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். இவ்வாறாக விளக்கமான ஒளியைத் தருகின்ற மூன்றும் ஞானிகளின் உடலில் அமையும். (இலங்கு-இளங்கு-செய்யுள் விகாரம்)

    பதிலளிநீக்கு