சாத்தானை வழிபடலாமா?

கடவுளை வழிபட்டால் கூட ஒன்றும் விளங்கவில்லை. நான் சாத்தானை வழிபடலாமா? - Quora 

உங்களுக்கு ஒரு சின்ன உதாரணம்! உங்களுக்கு கடுமையாக பசிக்கிறது, ஆனால் நீங்களே சமைத்து உண்ணும் நிலை. எனவே மற்றவர்கள் சமைப்பதை பார்த்து நீங்களும் சமைகின்றீர்கள். ஆனால் உங்களுடைய உணவில் ருசியும் பக்குவமும் இல்லை. இப்பொழுது என்ன நினைப்பீர்கள்? சாப்பாடே வேண்டாம் என்று கருதுவீர்களா? சாப்பாட்டுக்கு பதிலாக வேறொன்றை தேர்வு செய்வீர்களா? அல்லது முறையாக சமைக்க கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா?

சமையல் முதல் வேலை வாய்ப்பு வரை அனைத்துக்கும் அதற்கு ஏற்ற அளவு முறையாக கற்க வேண்டி உள்ளது என்கிற அடிப்படை அறிவுடைய நமக்கு கடவுளை வணங்கி வழிபட தேவையான கல்வியை கற்கவேண்டும் என்ற அடிப்படை தெரிவதில்லை.

இப்போ நீங்க கேட்ட கேள்வியில் உங்களுக்கு தெளிவு உண்டா என்று பார்ப்போமா?

வழிபடுதல் என்றால் கோவிலுக்கு சென்று வணங்குவதை நீங்க குறிப்பிடுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் உண்மையில் கடவுளை வழிபடுதல் என்றால் என்ன?

வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் (அ) பின்பற்றுதல் என்று பொருள்! கடவுளுக்கு வழிப்பட உங்களுக்கு கடவுளின் அறிவுரைகள் என்னென்ன, நீங்கள் செய்யும் தினசரி விடயங்களில் சரி பிழைகளை கடவுள் எவ்வாறு வரையறுத்து உள்ளார், என்று நீங்கள் கற்று அறிந்து உள்ளீர்களா? கடவுள் நிமிடம் பேசும் முறை மறைநூல்கள் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக உங்கள் வாழ்நாளில் எத்தனை நிமிடம் இதுவரை செலவு செய்து உள்ளீர்கள்?

கடவுள் கூறியுள்ள விதத்தில் நாம் கடவுளை வணங்கினால், நாம் கடவுளுக்கு வழிப்படுவதாக பொருள். ஆனால் இது கடவுளுக்கு வழிப்படுதலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஆனால் விழிப்பது முதல் உறங்குவது வரை, பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொரு கால சூழ்நிலைக்கும் கடவுள் சில விதிகளையும் அறங்களையும் வகுத்து தந்துள்ளார். அதை கற்பதுதான் கல்வி ஆகும். எனவே நீங்கள் கடவுளை எப்படி வழிப்பவேண்டும் என்று விளங்காமல் வழிப்பட்டு உள்ளதால், உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கருதுகிறேன்.

சாத்தானை வழிபடலாமா? என்று கேட்டால், மேற்சொன்ன விடயங்களில் கல்வி இல்லாததால் நீங்கள் ஏற்கனவே நேரடியாக அல்லது மறைமுகமாக சாத்தானை பின்பற்றி கொண்டுதான் இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் இறைவனை வழிப்படும் பொழுது மன அமைதியும், சாத்தானை பின்பற்றும் பொழுது குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் இருப்பதுதான் இயல்பு.

சுருக்கமாக உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதென்றால் இறைவனை அறிந்து அவனது மறைநூல்களை கற்று அதைக்கொண்டு அவனுக்கு வழிப்பட்டால் உங்களுக்கு மனத் தெளிவும் நிமமதியும் கிடைக்கும்.

மேலும் அறிய வாசிக்க வாய்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக