ஆதம் ஏவாள் கதை பொய்யா? *

நான்மறை தத்துவத்தின் படி, ஆதாம் ஏவாள் கதை உண்மையாக இருந்தால் உலக வேதங்கள் அனைத்திலும் சொல்லப்பட்டு இருக்கும். ஆதாம் ஏவாள் கதை எவை எவையோடு தொடர்புடையது? ஒரே கடவுள், உலகத்தின் படைப்பு, மனித படைப்பு, மனிதன் சொர்கத்திலிருந்து விரட்டப்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. தேடுவோம் வாருங்கள்! 

1) எத்தனை கடவுள் உண்டு? ஒரே ஒருவன்

தமிழர் சமயம்

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் - 1:4) 


இந்து மதம்

எல்லா மக்களாலும் வணங்கப்பட வேண்டிய ஒரே கடவுள். (அதர்வா வேதம் 2.2.9) 


இஸ்லாம்

நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு இறைவன் இல்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார். - (குர்ஆன் 7:59) 
 
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22) 


யூதம்

நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (பைபிள் நெகேமியா 9:6) 


கிறிஸ்தவம்

அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து , பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25] 


2) கடவுள் உலகை படைதார் என்பது ஆபிரகாமிய மாதங்களில் மட்டும் உள்ள செய்தியா? 
எல்லா மதங்களும் அவ்வாறுதான் சொல்கிறது.

உலகம் முழுமையும் படைத்தவன் தான் கடவுள் ஆவான் என்று எல்லா சமயங்களும் சொல்கிறது.

மந்திரம்

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)
 

குர்ஆன்

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40)  

 

தோரா

துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். (ஆதியாகமம் 1:1) 
 
தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். (சங்கீதம் 136:25) 
 

அழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் நெருங்கிவிட்டது. அது சர்வவல்லவரிடமிருந்து அழிவாக வரும். (ஏசாயா 13:6)  

 

பைபிள்

சகலமும் அவர் மூலமாக உண்டானது, அவர் இல்லாமல் உண்டானது எதுவும் உண்டாகவில்லை. (ஜான் 1:3) 


3) கடவுள் மனிதனை படைத்தானா? அல்லது மனிதன் பரிணமித்தனா? 

மனிதனை கடவுள்தான் படைத்தான், அவன் அமீபாவிலிருந்தோ, குரங்கிலிருந்தோ அல்லது வேறு ஒன்றிலிருந்தோ பரிணமிக்கவில்லை.

இந்து மதம்

sa ikshateme nu loka lokapalannu srija iti .. so.adbhya eva purusha.n
samuddhrityamurchayat.h .. (ஐத்ரேய உபநிடதம் 3) 
 
He bethought Himself: "Here now are the worlds. Let Me now create world guardians." Right from the waters He drew forth the Person in the form of a lump and gave Him a shape. 
 

அவர் தன்னைத்தானே நினைத்துக்கொண்டார்: "இதோ இப்போது உலகங்கள் உள்ளன. நான் இப்போது உலகக் காவலர்களை உருவாக்குவேன்". தண்ணீரிலிருந்து அவர் ஒரு நபரை ஒரு கட்டியின் வடிவத்தில் வெளியே இழுத்து அவருக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தார். (ஐத்ரேய உபநிடதம் 3)  

 

யூதம்/ கிறிஸ்தவம்

கர்த்தராகிய தேவன் தரையிலே புழுதியிலே மனுஷனை உண்டாக்கி, ஜீவபூமியின் மூக்கினால் மூச்சுத்தி, மனுஷன் ஜீவாத்துமாவானான்." (ஆதியாகமம் 2:7)  

 

இஸ்லாம்

மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (திருக்குர்ஆன் 30:20)  

 

4) மனிதன் சொர்க்கத்தில் இருந்து செய்த பாவத்தால் பூமிக்கு விரட்டப்பட்டனா?

சைவம்

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. (திருமந்திரம் 113)  

 

இஸ்லாம்

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம். - (குர்ஆன் 2:36) 


கிறிஸ்தவம் / யூதம்

ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். - (ஆதியாகமம் 3:23)  

 

5) ஒரே ஆண் பெண்ணிலிருந்து மனிதகுலம் பெருகியதா?

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. (இரண்டாம் தந்திரம் - 9.6)

பொருள்: ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்துதான் மனித இனம் தழைத்து ஓங்கியது.

இஸ்லாம்

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். (குர்ஆன்)  

 

கிறிஸ்தவம்

"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்."(அப்போஸ்தலர் 17:26)  

 

முடிவுரை:

  • மொழிக்கு ஏற்றார் போல பெயர் மாறுபடுவது இயற்கை தான். எனவே கடவுளின் பெயர் அல்லது ஒரு நபரின் பெயர் வேறுபடுகிறதே என்று கருதாமல் அவற்றின் இலக்கணத்தை நோக்குவது தான் சரியான வழிமுறை. அந்த வகையில் மனிதனை கடவுள் படைத்ததும், அவன் செய்த பிழையால் அவனை பூமிக்கு அனுப்பியதும், ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து இவ்வுலகம் தழைத்து ஓங்கியதையும் அனைத்து சமயங்களும் வழிமொழிகிறது.
  • ஒரு மதத்தில் உள்ளது போல அனைத்து நிகழ்வுகளின் செய்திகளும் இன்னொரு மதத்தில் அப்படியே இருக்கவேண்டும் என்று கருதுதல் அவசியமற்றது. காரணம் பல ஆயிரம் ஆண்டு நிகழ்வுகளை ஒரு சிறிய நூலில் சுருக்கும் பொழுது அந்த நூல் இறங்கும் காலத்தில் உள்ள அந்த மக்களுக்கு என்ன செய்தி தேவை என்று இறைவன் கருதுகிறானோ அதை மட்டுமே கொடுக்கிறான்.
குறிப்பு*: ஆய்வு முழுமை பெறவில்லை, ஆதாரங்கள் கிடைக்க கிடைக்க மேலும் மேலும் சேர்க்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக