அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே. (தொல்காப்பியம் புறத்திணை இயல் 88)
உவகை: மகிழ்ச்சி
எச்சம்: மிச்சம்
புள்: பறவை
நிமித்தம்: சகுனம், குறி பார்த்தல், சாதகம்
கண்ணிய: நினைத்த, அரும்பு, சுருக்கு, பொறி, சிக்கு
ஓம்படை (ஓம்பு+அடை=பாதுகாப்பு+சேர்): பாதுகாப்பான இடம் சேர்த்தல்
விளக்கம்: பயம் விருப்பம் என்பன சிறிதும் இன்றி, நல்ல நாள் கெட்ட நாள், பறவை உள்பட மற்ற சகுனம் பார்ப்பதும், கடுங் காலத்தில் சிக்கியதை நினைத்து பாதுகாப்பான காலம் வருவது பற்றி அறிய விரும்புதல் உள்பட உலகத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பது ஆகியவற்றை அறிய விரும்பினால் முக்காலத்திலும் (இம்மை, பிறப்பு, மறுமை) சிக்கிகொள்வீர்கள்.
இஸ்லாம்
சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும் என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (அபூ தாவூத் : 3411)
கிறிஸ்தவம் / யூதம்
எந்த இறைச்சியையும் அதன் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறி கேட்கவோ, சகுனம் பார்க்கவோ வேண்டாம். (லேவியராகமம் 19:26)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக