சரி பிழை-களை வரையறுப்பது யார்?

தமிழர் மதம்


நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் - நல்வழி 38

விளக்கம்நல்லது இது என்றும், கெட்டது எது என்றும்இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் அதுதான் உண்மை என்றும் எண்ணாதே. கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது. 

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே (திருமந்திரம் - 1647)

விளக்கம்புண்ணியம், பாவம் என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின் பயனாக நன்மையும், பாவத்தின் பலனாகத் தீமை, துயரம் ஆகியவையும் வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள் சிலரே. அவர்கள் ஞானிகள் எனப்படுவார்கள். புண்ணியம், பாவம் எனும் இவை இரண்டும், ஜீவன்களைப் பற்றிட வரும் பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின் ஆணி வேரையே அறுத்து, மனதைத் தீய வழிகளில் செல்லாதபடித் தடுக்கும் மன உறுதி பெற்றால், பரம்பொருள் இருக்குமிடம் அறியலாம். ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்!

இஸ்லாம்


(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? (குர்ஆன்:90:10)

"அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) சிலவற்றை விலக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை ஆகுமாக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே! (நபியே! இவர்களிடம்) கேளுங்கள் ‘இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கிறீர்களா?'” (குர்ஆன் 10:59)

கிறிஸ்தவம் & யூத மதம்


எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது.—ஆதி 2:9, 17

18 கருத்துகள்:

  1. வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

    திருக்குர்ஆன் 39:38

    பதிலளிநீக்கு
  2. #51. வேதம் ஓதி வீடு பெறலாம்

    வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
    ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
    வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
    வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

    வேதம் கூறாமல் விட்டு விட்ட அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.

    https://thirumanthiram1.wordpress.com/1-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/51-to-55/

    பதிலளிநீக்கு
  3. ஏசாயா 5:20

    20 அந்த ஜனங்கள், நல்லதைக் கெட்டதென்றும் கெட்டதை நல்லது என்றும் கூறுகிறார்கள். அவர்கள் இருளை வெளிச்சம் என்றும் வெளிச்சத்தை இருள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் இனிப்பைக் கசப்பு என்றும் கசப்பை இனிப்பு என்றும் எண்ணுகிறார்கள். 21 அந்த ஜனங்கள் தங்களை ஞானிகள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார்கள். 22 அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரமசாலிகள். 23 நீங்கள் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால், அவர்கள் குற்றவாளிகளை விடுவிப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களுக்கு நியாயமாக நீதி வழங்கமாட்டார்கள். 24 அவர்கள் அனைவருக்கும் கேடு ஏற்படும். அவர்களின் சந்ததி முழுமையாக அழிக்கப்படும். அவர்கள் காய்ந்த புல் நெருப்பில் எரிவதுபோன்று அழிவார்கள். அவர்களின் சந்ததி வேர் வாடி, தூசியைப்போல் பறந்துபோகும். அவர்கள் நெருப்பில் எரியும் பூக்களைப்போன்று எரிந்து, காற்றில் சாம்பல் பறப்பது போன்று ஆவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. இறைத்தூதர் உங்களுக்கு எவற்றைக் கொண்டு வந்தாரோ, அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். எவற்றை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்." (59: 07)

    'அல்லாஹ்வும், அவனது தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்க ளுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, அவர் பகிர ங்கமான வழிகேட்டில் திட்டமாக வழிகெட்டு விட்டார்." (33:36)
    http://www.lankarani.com/tam/shi/3.htm

    பதிலளிநீக்கு
  5. உபாகமம் 18:20-22

    ஆனால் நான் கட்டளையிடாத ஒரு வார்த்தையை என் பெயரால் பேசுவதாகக் கருதும் தீர்க்கதரிசியோ, மற்ற தெய்வங்களின் பெயரில் பேசுகிறாரோ, அதே தீர்க்கதரிசி மரணமடைவார். மேலும், ' ஆண்டவர் பேசாத வார்த்தையை நாங்கள் எப்படி அறிவோம்?' என்று நீங்கள் உங்கள் இதயத்தில் சொன்னால், ஒரு தீர்க்கதரிசி கர்த்தருடைய நாமத்தில் பேசும்போது, ​​அந்த வார்த்தை நிறைவேறாமலோ அல்லது நிறைவேறாமலோ இருந்தால், கர்த்தர் சொல்லாத வார்த்தை ; தீர்க்கதரிசி அதை ஆணவத்துடன் பேசியுள்ளார். நீங்கள் அவருக்கு பயப்பட தேவையில்லை

    பதிலளிநீக்கு
  6. ஜேம்ஸ் 4:7 ESV / 27 பயனுள்ள வாக்குகள்
    ஆகவே, கடவுளுக்கு அடிபணியுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உன்னைவிட்டு ஓடிப்போவான்.

    பதிலளிநீக்கு
  7. (1 யோவான் 3:4) 4 பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம்.

    பதிலளிநீக்கு
  8. 4 பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம். 5 நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காகக் கிறிஸ்து வந்தார்h என்றும் உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவமே இல்லை. 6 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை;i பாவம் செய்துகொண்டே இருக்கிற யாரும் அவரைப் பார்த்ததும் இல்லை, அவரைப் பற்றித் தெரிந்துகொண்டதும் இல்லை. 7 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் யாரிடமும் ஏமாந்துவிடாதீர்கள். நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்கிறவன், அவர் நீதியுள்ளவராக இருப்பதைப் போலவே தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான். 8 பாவம் செய்துகொண்டே இருக்கிறவன் பிசாசின் பக்கம் இருக்கிறான்; ஏனென்றால், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்துவந்திருக்கிறான்.j பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார்.k
    9 கடவுளுடைய பிள்ளையாக இருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை.l ஏனென்றால், கடவுளுடைய சக்தி* அப்படிப்பட்டவனில் நிலைத்திருக்கிறது; அவன் கடவுளுடைய பிள்ளையாகm இருப்பதால் அவனால் பாவம் செய்துகொண்டே இருக்க முடியாது. 10 நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்காத யாரும் கடவுளின் பக்கம் இல்லை. அதேபோல், தன் சகோதரன்மேல் அன்பு காட்டாத யாரும் கடவுளின் பக்கம் இல்லை.n கடவுளுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் இந்த உண்மையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/3/#v62003004

    பதிலளிநீக்கு
  9. நியாயத்தீர்ப்புக்கான சிறப்பான காலம்

    மல்கியா 2 : 17

    நீ தவறானவற்றைக் கற்றுத் தந்திருக்கிறாய். அத்தவறான போதனைகள் கர்த்தரை மிகவும் துக்கமடையச் செய்தன. தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் விரும்புகிறார் என்று சொன்னீர்கள். அந்த ஜனங்கள் நல்லவர்கள் என்று தேவன் நினைப்பதாய் சொன்னீர்கள். தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் தண்டிக்கமாட்டார் என்று சொன்னீர்கள்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%202&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  10. நீதிமொழிகள் 424 உண்மையை வளைக்காதே. சரியில்லாதவற்றைச் சரியென்று சொல்லாதே. பொய்களைச் சொல்லாதே

    பதிலளிநீக்கு
  11. நீதிமொழிகள் 4
    24 உண்மையை வளைக்காதே. சரியில்லாதவற்றைச் சரியென்று சொல்லாதே. பொய்களைச் சொல்லாதே.
    25 நல்ல மற்றும் ஞானமுள்ள உன் குறிக்கோள்களிலிருந்து விலகிவிடாதே.
    26 நீ செய்கின்றவற்றில் எச்சரிக்கையாக இரு. நல்ல வாழ்க்கையை நடத்து.
    27 நேரான பாதையில் இருந்து விலகாதே. அப்பாதையே நல்லதும் சரியானதும் ஆகும். ஆனால் எப்பொழுதும் தீமையில் இருந்து விலகியிரு.

    பதிலளிநீக்கு
  12. தேவனின் பிரமாணங்களும் மனிதர் விதிமுறைகளும்
    15 அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம், 2 ,“நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.

    3 இயேசு அவர்களுக்கு,, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? 4 ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ [a] என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ [b] என்றும் தேவன் சொல்லியுள்ளார். 5 ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள். 6 தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். 7 நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:

    8 ,“இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள்.
    ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை.
    9 என்னை வணங்குவதில் பொருளில்லை.
    அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!”

    10 இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து,, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.

    12 பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து,, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

    13 அதற்கு இயேசு,, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். 14 பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.

    15 அப்பொழுது பேதுரு,, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.

    16 அதற்கு இயேசு,, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? 17 ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. 18 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார். https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%2015&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  13. நீதிமொழிகள் 3:5 கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. 6 நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். 7 உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. 8 நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%203&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  14. பாவம் புண்ணியம் இரண்டு உள https://kvnthirumoolar.com/song-1647/

    பதிலளிநீக்கு
  15. 5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  16. 3:23. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்க அல்லாஹ்வின் வேதத்தின்பால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் (இதனைப் புறக்கணித்தவர்களாக திரும்பிச்செல்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  17. “தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது” எனக் கூறுவீராக! அறிகிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம். - அல்குர்ஆன் 7:32

    “அல்லாஹ் உங்களுக்கு உணவை இறக்கினான். அதில் விலக்கப்பட்டதையும், அனுமதிக்கப்பட்டதையும் நீங்களாக ஏற்படுத்திக் கொண்டீர்கள்!” என்று (முஹம்மதே!) கூறுவீராக! “அல்லாஹ்வே உங்களுக்கு அனுமதியளித்தானா? அல்லது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகிறீர்களா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று கேட்பீராக - அல்குர்ஆன் 10:59

    நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை விலக்கப்பட்டவைகளாக்கி விடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். - அல்குர்ஆன் 5:87

    அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். - அல்குர்ஆன் 6:119

    “இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது” என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். - அல்குர்ஆன் 16:116

    நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்.அல்குர்ஆன் 66:1

    https://onlinetntj.com/articles/egathuvam/islam-and-economy-16

    பதிலளிநீக்கு
  18. ஏசாயா 5:20
    வசன கருத்துக்கள்
    தீமையை நல்லது என்றும், நல்லதைத் தீமை என்றும் சொல்பவர்களுக்கு ஐயோ;
    இருளை ஒளியையும், ஒளியை இருளையும் மாற்றியவர்;
    இனிப்புக்கு கசப்பும், கசப்பிற்கு இனிப்பும் யார்!

    Source: https://bible.knowing-jesus.com/topics/Having-A-Good-Day

    பதிலளிநீக்கு