வழிபாடு

வழிபாடு - வழிபடுதல் - வழிப்படுதல் - கட்டுப்படுத்தல்

வழிபாடு எனும் சொல் இறைவணக்கம் எனும் பொருளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் என்று பொருள். இறைவனுக்கு கட்டுப்படும் பொழுது அவனை வணங்குவது ஒரு பகுதி, ஆனால் இறைவணக்கம் மட்டுமே வழிபாடு ஆகாது.  வழிபடுதல் எனது இறைவன் நான்மறைகளில் கொடுக்கப்பட்ட அறத்தை தொடர்ந்து பின்பற்றி பாவத்தை விடுவதன் மூலம் தூய உள்ளத்தை அடைவதுதான் வழிபாடு ஆகும். 

தமிழர் சமயம்

தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்
தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)


கருத்து: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார்.

கிறித்தவம்

ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள். (நீதிமொழிகள் 1:7)

இஸ்லாம்

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (குர்ஆன் 24:52)

“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இறைத்தூதருக்கும் உங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்." (அல்குர்ஆன் 4:59)

முடிவுரை

இறைவனை வணங்குவது மட்டும் இறைவனின் எதிர்பார்ப்பல்ல. அவன் வேதத்தில் வழங்கிய அறத்துக்கும், நீதிக்கும், கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பதுதான் இறைவணக்கத்தை பூர்த்தி செய்யும். அல்லாதவருக்கு அவன் துணை நிற்க மாட்டான், வெற்றியை அளிக்க மாட்டான், சொர்கத்தை வழங்கமாட்டான் என்பதே இறைவனின் வாக்குறுதியாக உள்ளது. 

7 கருத்துகள்:

  1. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ 7280)

    https://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88

    பதிலளிநீக்கு
  2. “பூமியில் உள்ளோரில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்துவிடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116)

    https://www.readislam.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  3. சங்கீதம் 119:105-112 : நூன்

    105 கர்த்தாவே, உமது வார்த்தைகள் என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.

    106 உமது சட்டங்கள் நல்லவை. நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன். நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

    107 கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன். தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.

    108 கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.

    109 என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது. ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.

    110 தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.

    111 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன். அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

    112 உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20119%3A105-112&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  4. 3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்;" ஆனால், அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.

    3:132. அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; நீங்கள் இதனால் கிருபை செய்யப்படுவீர்கள்.

    4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்; இன்னும், (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேரிய) அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள்; ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால் - (மெய்யாகவே) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் திருப்பி விடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகச் சிறந்ததாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.

    5:7. மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையையும், "நாங்கள் செவிமடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியபொழுது - எதனைக்கொண்டு உங்களிடம் வாக்குறுதி வாங்கினானோ அத்தகைய வாக்குறுதியையும் நீங்கள் நினைவுகூருங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

    5:92. இன்னும், அல்லாஹ்வுக்கும் வழிப்படுங்கள்; (அவன்) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; (இதற்கு மாறுசெய்வதைவிட்டு) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எத்திவைப்பதே நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

    8:1. போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களைப்பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்: (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! "போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்: உங்களிடையே (உங்களுடைய) நிலைகளை சீராக்கிக்கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்."

    8:20. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரைப் புறக்கணிக்காதீர்கள்.

    8:46. இன்னும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; நீங்கள் உங்களுக்குள் முரண்படாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக்கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமை உடையவர்களுடன் இருக்கிறான்.

    24:47. "அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; இன்னும், கீழ்ப்படிகிறோம்" என்று சொல்லுகிறார்கள்; ஆனால், அதன் பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவினர் புறக்கணித்துவிடுகின்றனர்; எனவே, இவர்கள் (உண்மையில்) நம்பிக்கையாளர்கள் அல்லர்.

    24:51. நம்பிக்கையாளர்களுடைய சொல்லாக இருப்பதெல்லாம், அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், "நாங்கள் செவியேற்றோம்; (அதற்குக்) கீழ்ப்படிந்தோம்" என்று அவர்கள் கூறுவதுதான்; இ(த்தகைய)வர்கள்தாம் வெற்றியடைந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  5. 24:54. "அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்ப்படியுங்கள்; இன்னும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! ஆனால், நீங்கள் புறக்கணித்தால் அவர்மீதுள்ள கடமையெல்லாம் தம்மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள (கடமையான)து, உங்கள்மீது சுமத்தப்பட்ட (படி வழிப்படுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும், (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர் மீது கடமையில்லை.

    33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.

    47:33. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்; இன்னும், இத்தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்கள் செயல்களைப் பாழாக்கிவிடாதீர்கள்.

    58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தானதர்மங்கள் முற்படுத்தி வைக்கவேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்யமுடியாதபோது, அல்லாஹ் உங்களை மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; அன்றியும், நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.

    64:12. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்; (அவனுடைய இத்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். இதை நீங்கள் புறக்கணித்தால் (உங்களுக்கே இழப்பாகும்); நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.

    64:16. ஆகவே, உங்களால் இயன்றவரை அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; (அவனுக்கு) வழிப்படுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே நன்மையாக இருக்கும்; அன்றியும், எவர்தம் மனதின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுகிறாரோ அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.

    https://www.tamililquran.com/qurantopic.php?topic=77

    பதிலளிநீக்கு
  6. ஏசாயா 66

    கர்த்தர்தாமே இவற்றைக் கூறினார்.
    “எனக்கு சொல், நான் எந்த ஜனங்களைப் பாதுகாக்கவேண்டும்.
    ஏழைகளையும், துயரப்படுபவர்களையும் பாதுகாக்கிறேன்.
    எளியவர்களுக்காகவும், துயரப்படுபவர்களுக்காகவும் பொறுப்பேற்கிறேன்.
    எனது வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிற ஜனங்களை நான் பாதுகாக்கிறேன்.
    3 சில ஜனங்கள் காளைகளைப் பலியிடுகிறார்கள்.
    ஆனால், அவர்கள் ஜனங்களையும் அடிக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் ஆடுகளைப் பலியாகக் கொடுக்கிறார்கள்.
    ஆனால், அவர்கள் நாய்களின் கழுத்துகளையும் உடைக்கிறார்கள்.
    அவர்கள் பன்றியின் இரத்தத்தையும் எனக்கு பலியாகச் செலுத்துகிறார்கள்.
    அந்த ஜனங்கள் நறுமணப் பொருட்களை எரிக்க நினைவுகொள்வார்கள்.
    ஆனால், அவர்கள் தமது பயனற்ற விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.
    அவர்கள் எனது வழியை அல்ல.
    தங்கள் சொந்த வழியையே தேர்ந்து எடுப்பார்கள்.
    அவர்கள் தங்களது பயங்கரமான விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%2066&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  7. பிரசங்கி 12:13-14

    இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.

    பதிலளிநீக்கு