தேவர்களின் எண்ணிக்கை என்ன?

தேவர்கள் என்றதும் பெரும்பாலானோர் சம்ஸ்கிருத வேதங்களில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை தேடி செல்கின்றனர். நாம் நமது மொழியில் வந்த வேதத்திலும், நமது மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேதங்களையும் தேடி பார்ப்போம் வாருங்கள். 

தமிழர் சமயம்

குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

குறிப்பறிந்தேன் உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந்தேன் மிகுதேவர் பிரானை
மறிப்பறியாது வந்துள்ளம் புகுந்தான்
கறிப்பறியா மிகும் கல்வி கற்றேனே.

குறிப்பு: உள்கருத்து
செறிப்பு: செறிவு, நெருக்கம்
மிகு தேவர்: அளவில்லா தேவர்கள்
மறிப்பு: தடை
கறிப்பு: காரம், கடினம் 

விளக்கம்: உடலோடு உயிர் கூடிய உட்கருத்தை தெரிந்து கொண்டேன், எண்ணிலடங்கா தேவர்களின் தலைவனுடைய நெருக்கம் அறிந்தேன். தடையேதும் இல்லாமல் உடனே என் உள்ளத்தில் புகுந்து வீட்டிருப்பதையும் தெரிந்து கொண்டேன். தானாக பெருகும் குணமுடைய கல்வியை கடினம் அறியாமல் கற்றேன்.

இஸ்லாம்

அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (குர்ஆன் 74:30)

கிறிஸ்தவம்

11 Then I looked and heard the voice of many angels, numbering thousands upon thousands, and ten thousand times ten thousand. They encircled the throne and the living creatures and the elders.

11 பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது (வெளி 5) 

முடிவுரை  

தேவர்களின் எண்ணிக்கையை யாரும் அறியார். அதை முப்பத்து முக்கோடி என்று கூற எந்த வேத ஆதாரமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக