அச்சமும் உவகையும் எச்சம் இன்றிநாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்காலங் கண்ணிய ஓம்படை உளப்படஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்காலம் மூன்றொடு கண்ணிய வருமே. (தொல்காப்பியம் புறத்திணை இயல் 88)
உவகை: மகிழ்ச்சி
எச்சம்: மிச்சம்
புள்: பறவை
நிமித்தம்: சகுனம், குறி பார்த்தல், சாதகம்
கண்ணிய: நினைத்த, அரும்பு, சுருக்கு, பொறி, சிக்கு
ஓம்படை (ஓம்பு+அடை=பாதுகாப்பு+சேர்): பாதுகாப்பான இடம் சேர்த்தல்
விளக்கம்: பயம் விருப்பம் என்பன சிறிதும் இன்றி, நல்ல நாள் கெட்ட நாள், பறவை உள்பட மற்ற சகுனம் பார்ப்பதும், கடுங் காலத்தில் சிக்கியதை நினைத்து பாதுகாப்பான காலம் வருவது பற்றி அறிய விரும்புதல் உள்பட உலகத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பது ஆகியவற்றை அறிய விரும்பினால் முக்காலத்திலும் (இம்மை, பிறப்பு, மறுமை) சிக்கிகொள்வீர்கள்.
இஸ்லாம்
இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
பிரசங்கி 7:10
பதிலளிநீக்கு10 “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே.
என்ன நடந்தது?” என்று கேட்காதே.
அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%207%3A10%20&version=ERV-TA