தேவர்களை வணங்கலாமா ?

தமிழர் சமயம்


கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்
உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்
சிலப்பறி யார் சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே
(நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் 45)

பொழிப்புரை இறைவனை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு. - (அருங்கலச்செப்பு தேவ மூடம் 31) 


இஸ்லாம்


மேலும், “தேவர்களையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா? - (குர்ஆன் 3:80)

கிறிஸ்தவம்

 "Let no one disqualify you, insisting on asceticism and worship of angels, going on in detail about visions, puffed up without reason by his sensuous mind" (Colossians 2:18)

சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. (கொலோசெயர் 2:18) 

(குறிப்பு: ஆங்கிலத்திலும் தமிழிலும் வேறு வேறு வார்த்தைகளை கொண்டு இருப்பதால் இரண்டும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது) 

13 கருத்துகள்:

  1. https://www.jw.org/ta/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  2. https://vedathiyanam.blogspot.com/2016/12/blog-post_47.html?m=1 lusifer's sect given in this

    பதிலளிநீக்கு
  3. https://vedathiyanam.blogspot.com/2016/12/blog-post_47.html?m=1 lusifer's sect given in this

    பதிலளிநீக்கு
  4. சங்கீதம் 103: 20
    கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. வேத புத்தகத்தில் பல இடங்களில் தேவர்கள்/ தேவபுத்திரர்கள்/தேவகுமாரர்கள் என்பவர்களை பற்றிய செய்திகள் எழுதப்பட்டுள்ளன.

    I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு;

    சங்கீதம் 82:1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

    இவர்களை பற்றி வேதம் குறிப்பிடும்போது "பேய்கள்" என்றோ "சாத்தன்" என்றோ குறிப்பிடாமல் "அந்நிய தெய்வங்கள்" என்று அல்லது "அந்நிய தேவர்கள்" என்றே குறிப்பிடுகிறது!

    எரேமியா 10:11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

    II நாளாகமம் 25:15 அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.

    ஏசாயா 36:19 ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

    ஆனால் கர்த்தரோ இந்த தேவர்கள் எல்லோரிலும் பெரியவரயிருக்கிறார் என்றே வேதம் சொல்கிறது!

    சங்கீதம் 95:3 கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.

    சங்கீதம் 96:4 கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

    இவ்வாறு "தேவர்கள்" "தேவ புத்திரர்கள்" "தேவ குமாரர்கள்" என வேதம் குறிப்பிடும் ஜீவிகள் யார் என்பதை விளக்க தெரிந்தவர்கள் விளக்கலாம்!

    (தேவ தூதர்களுக்கு "ANGELஸ்" என்ற தனி வார்த்தை இருக்கிறது, இங்கே "தேவ குமாரர்" என்பதற்கு Gen 6: 2 sons of men என்று வசனம் தெளிவாக சொல்கிறது எனவே தேவ தூதர்களையும் தேவர்கள் மற்றும் தேவ
    குமாரர்களையும் ஓன்று என்று எண்ணி குழம்பாமல் சரியான விளக்கம் தரவும்)


    __________________
    நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)

    https://lord.activeboard.com/t45198158/topic-45198158/

    பதிலளிநீக்கு
  6. தேவதூதர்கள் யார்?https://www.jw.org/ta/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  7. தேவ தூதர்கள் என்பவர்கள் யார்❓ https://www.gotquestions.org/Tamil/Tamil-angels-male-female.html

    பதிலளிநீக்கு
  8. மலக்குகள்https://islamicnewspapers.blogspot.com/2012/07/blog-post_7386.html

    பதிலளிநீக்கு
  9. வள்ளுவரும் வானவரும்! https://tamilandvedas.com/2016/10/17/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-post-no-3260/

    பதிலளிநீக்கு
  10. ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர். - Bg 7.20

    பதிலளிநீக்கு
  11. அருங்கலச்செப்பு

    தேவ மூடம்

    வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
    பாழ்பட்ட தெய்வ மயக்கு. 31

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  12. ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர். - (கீதை 7:20)

    பதிலளிநீக்கு
  13. வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
    காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
    ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
    பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

    வேட்டவி உண்ணும் விரிசடை நந்திக்குக்
    காட்டவும் யாம்இலம் காலையும் மாலையும்
    ஊட்டுஅவி ஆவன; உள்ளம் குளிர்விக்கும்
    பாட்டுஅவி காட்டுதும் பால்அவி ஆமே. (திருமந்திரம் 1824)

    வேள்வித் தீயில் நந்தியை வழிபடுகிறவர்களோ, இறைவனுக்கு அளிக்கவேண்டிய உணவை அவிப் பொருளாகத் தீயில் இடுகிறார்கள். உருவத் இறைவனை வழிபடுகிறவர்களோ, காலையும் மாலையும் பூசனை நேரங்களில் உணவையும் இறைவன் திருவுருவத்துக்கு முன்பாகப் படைத்துக் காட்டுகிறார்கள். இறைவனை உள்ளுக்குள் வழிபடும் நாம் என்ன செய்ய என்றால், உள்ளம் குளிருமாறு உங்கள் மொழியில் ஒரு பாட்டைக் காட்டுங்கள். அது பால் ஊற்றிப் படைத்ததற்குச் சமானம் என்று எல்லோர்க்கும் எட்டுகிற எளிய பூசனைக்குப் பரிந்துரை செய்கிறார் திருமூலர்.

    https://www.hindutamil.in/news/spirituals/173731-47-7.html

    பதிலளிநீக்கு