தமிழர் மதம்
அஞ்சினாய் ஏனும் அடைவது அடையுங்காண்துஞ்சினாய் என்று வினைவிடா - நெஞ்சேஅழுதாய் எனக்கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறையுடையை ஆகு. - (அறநெறிச்சாரம் பாடல் - 78)
விளக்கவுரை தீவினைப் பயனைப் பொறுக்காது இறந்தாய் என்று எண்ணிச் செய்த வினைகளால் அடையவேண்டியதை அடையாமல் போகாய். அந்த வினைப்பயனை அஞ்சி அழுதாய் என வந்த காலனும் போகான். (ஆதலால்) வினைப்பயனை ஆற்ற உன்னை வணங்கினேன்! நிறைந்த தன்மையைக் கொண்டவனாதலால்
இந்துமதம்
ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள்
“நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்குவாயாக. விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ அவற்றையும் நீக்குக இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு- (RV V, 85, 7&8)“எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி. நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – (7-86)எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும் எங்களை மன்னித்து விடுக (2-27-14)எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் (1-157-4)இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி (4-12-4)..நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக - (7-58-5)செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள்! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக (10-63-8)
கிறிஸ்தவம்
1 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன், எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். 2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும். 3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான். 4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள். (சங்கீதம் 130)
இஸ்லாம்
”அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்பு கோறுதலை ஏற்றுக்கொள்கின்றான், அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25)தௌபா: “தௌபா” என்றால் “பாவமன்னிப்பு” என்றாலும். அதற்கு நான்கு நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வினவப் படுகின்றபோதே அது ‘தௌபா’வாக கருதப்படும். அவைகளில் மூன்று நிபந்தனைகள் பொதுவானவையாகவும் , ஒரு நிபந்தனை ”ஹுகூகுல் இபாத்” அதாவது மனிதர்களுக்கு மத்தியிலுள்ள உரிமைகளுடன் தொடர்புபட்டதாகும். அவைகளாவன,
முதலாவது: தான் செய்த பாவத்தை நினைத்து பரிதாபப்படுவது.இரண்டாவது: அப்பாவத்தை விட்டு முழுமையாக நீங்குவது.மூன்றாவது: அப்பாவத்தை நோக்கி மீண்டும் ஒருபோதும் செல்லமாட்டேன் என்ற உறுதிப்பாடு.நான்காவது: ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு தீங்கிழைத்துவிட்டால். பாதிக்கப்பட்ட மனிதனிடம்போய் மன்னிப்புக்கோர வேண்டும். இல்லை என்றால் அதுவரை அல்லாஹுத்தஆலா மன்னிக்க மாட்டான்.
நிபந்தனைஇஸ்திஃபார்: “இஸ்திஃபார்” என்ற சொல்லுக்கும் தமிழில் “பாவமன்னிப்பு” என்றே கூறப்படும். சிலவேலை இஸ்திஃபார் என்பது மேலே கூறப்பட்ட தௌபாவாகவும் இருக்கலாம். சிலவேலை நமது நாவினால் கூறக்கூடிய வார்த்தைகளாகிய “அஸ்தஃபிருல்லாஹ்” (أسْتَغْفِرُ اللهَ) அல்லது ”அல்லாஹும்ம இஃபிர்லீ” (اللَّهُمَّ اغْفِرْ لِي) என்பதாகவும் இருக்கலாம். எனவே, தௌபாவுடைய நிபந்தனைகள் இஸ்திஃபாரிலே ஒன்று சேர்ந்தால் அந்த இஸ்திஃபாரை “தௌபா” என்றும் அழைக்கலாம். அப்படி தௌபாவின் நிபந்தனைகள் இன்றி கேட்கப்படும் பாவமன்னிப்பு “இஸ்திஃபார்” என்று கூறப்படும்.எனவே, தௌபா என்பது பாவத்திலிருந்து முழுமையாக நீங்கி தனது இறைவனிடத்தில் முழுமையாக மீள்வதையும், இஸ்திஃபார் என்பது அல்லாஹ்விடத்தில் தனது பாவத்திற்கான மன்னிப்பு வேண்டுவதை நாடுவதையும் குறிக்கும்.
பிறவியை ஒழிப்பது நல்ஞானம் அறநெறிச்சாரம் பாடல் - 191
பதிலளிநீக்குதறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்கு உறுதி உயிர்ஓம்பி வாழ்தல்
அறிவிற்கு அறிவாவது எண்ணின் மறுபிறப்பு
மற்றுஈண்டு வாரா நெறி.
விளக்கவுரை ஆராய்ந்து பார்த்தால் அஞ்சாமையுள் அஞ்சாமையாவது, தன்னிடம் குறையிருக்குமானால் அதை எண்ணி வருந்துதல்; நல்ல செயல்களுள் நல்ல செயலாவது உயிர்களைப் பாதுகாத்து வாழ்தல்; அறிவிற்கு அறிவாகிய நல்ஞானமாவது, மறுமையில் மீண்டும் துன்பம் வாரா வழியில் செல்ல முடியும்
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html
மற்று - மீண்டும்
ஈண்டு - இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி
மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
ஈண்டு - ஈண்டு-தல் - īṇṭu- 5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).
https://dailyprojectthirukkural.blogspot.com/2014/03/kural356.html#:~:text=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF.,%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20'%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81'%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்
பதிலளிநீக்குகுறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
பொருள்
கற்று - கற்கை - படித்தல்
கற்று - கற்றுக்கொள்ளுதல் - பயிலுதல்
ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்
ஈண்டு - ஈண்டு-தல் - īṇṭu- 5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).
கற்றீண்டு - (மெய்ப்பொருளை) கற்று (அனுபவம் மூலம்) அறிந்தவர்களிடம் கற்று
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டார் - உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்
தலைப்படுதல் - ஒன்றுகூடுதல்; எதிர்ப்படுதல்; மேற்கொள்ளுதல்; பெறுதல்; முன்னேறுதல்; தலைமையாதல்; புகுதல்; வழிப்படுதல்; தொடங்குதல்.
தலைப்படுவர் - செல்லும் வாழ்வின் பாதை; செயல்படுவார்கள்
மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
ஈண்டு - ஈண்டு-தல் - īṇṭu- 5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5). -
மற்றீண்டு - மீண்டும் இந்த உலகில் வந்து வாழ பிறக்க
வாரா - வாராத
நெறி - வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.
முழுப்பொருள்
வாழ்வில் மெய்ப்பொருள், நிலையான பொருள் என்றவற்றை உணர கற்க தக்க அற நூல்களும், ஆன்மீக நூல்களும் இன்றியமையாததாகும். அதைப்போல், அவற்றை கசடற (faultlessly. கசடு - குற்றம்) கற்க, அதனை கற்று, பட்டு உணர்ந்த ஒருவரை குருவாக கொண்டு கற்பது இன்றியமையாததாகும்.
அப்படி ஒரு குருவிடம் மெய்ப்பொருள் யாது என்று கற்று உணர்ந்தவர், பின்பு அதனை மனதில் அவதானித்து தியானித்து கொண்டே இருந்தார் என்றால் அவர் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணும் வழியை தேர்ந்தேடுப்பார். அதில் பயணிப்பார்.
அப்படி மெய்ப்பொருள் வேண்டி / தேடி செல்வார் மீண்டும் மானுட வாழ்வில் பிறவி எடுக்க மாட்டார் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
ஒருவர் நூல்களை படித்தால் மட்டும் போதாது. மெய்ப்பொருள் அறிய, அவனை அறிய, கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) ஆகியவற்றைக் கொள்ள வேண்டும்.
கண்டார் என்று சொன்னது எதற்கு என்றால் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணலாம், இதற்காக மற்ற உலகிற்கு (மடிந்து) செல்ல வேண்டியதில்லை
இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இந்தப் பிறவியிலேயெ மெய்ப்பொருளை காண, அதற்கான வற்றை கற்று, அந்த வழியைத் தேடி செல்வோர் (பெய்ப்பொருளை அடைவார், ஆதலால்) மீண்டும் பிறவி எடுத்து மெய்ப்பொருள் கற்க வேண்டிய அவசியமில்லை என்று.
https://dailyprojectthirukkural.blogspot.com/2014/03/kural356.html#:~:text=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF.,%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20'%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81'%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.
2. மேல்நிலை அடைதல்
பதிலளிநீக்குமணல் மேடுகளிலே விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்து விட்டால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல் நிலையடைதல் என்பது ஒரு போதும் நடவாததாகும். 'அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை யாவேன்' என்பது போல, அது ஒரு போதும் நடக்க முடியாததேயாகும்.
மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல், - எக்கர்
அடும்பு அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்'. - பழமொழி 400
பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. 'அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி. துடும்பல் எறிதல் - நீர் துளம்பி விழக் குதித்து நீராடல்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/pazhamozhinaanooru.html
ரிக் வேதம் , டி.ஆர். ரால்ப் TH கிரிஃபித், [1896], sacred-texts.com இல்
பதிலளிநீக்குகீதம் XXV. வருணா.
1 கடவுளே, ஓ வருணா, உமது விதி எதுவாக இருந்தாலும், நாங்கள் மனிதர்களாக இருப்பதால்,
நாளுக்கு நாள் நாங்கள் மீறுகிறோம். 2 உமது உக்கிரமான கோபத்திற்கு
, கோபத்தில் அழியும்படி எங்களை மரணத்திற்கு இரையாகக் கொடுக்காதேயும் . 3 வருணா, உமது கருணையைப் பெற, தேரோட்டி தனது கட்டப்பட்ட குதிரையைக் கட்டுவது போல், உமது இதயத்தைப் பாடல்களால் பிணைக்கிறோம் .
https://www.sacred-texts.com/hin/rigveda/rv01025.htm
தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரு போதும் நிராசை ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான் என்று (நபியே) நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன் 39:53)
பதிலளிநீக்குஆகவே நீ அவர்களை வேதனை செய்தால் அவர்கள் உன்னுடைய அடிமைகள்; யாரும் கேட்க முடியாது. நீ மன்னித்தால்,அவர்களித்திலே உள்ள தவ்ஹீதை தக்வாவை வைத்து அவர்களை மன்னித்தால் நீயோ மகா மிகைத்தவன். உன்னை யாரும் கேட்க முடியாது. (அல்குர்ஆன் 5 : 118)
{அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். "எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாயாக!'' என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.}.
[ஸூரதுல் கா-ஃபிர் 7]
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். "எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவர்.
(அல்குர்ஆன் 66:8)
7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
குர்ஆன் 39:53 என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக.
பதிலளிநீக்கு9:104 நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை – மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள்புரிபவன்.
3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோாித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக்கிடைக்கக்கூடும்) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர்(மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:
ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு “இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று கூறினார். உடனே இறைவன், “என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்து கொண்டான்’’ என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார்.
அப்போதும் இறைவன், “என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்’’ என்று சொல்கிறான்.
பிறகு அந்த அடியான் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அப்போதும் இறைவன், “என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்து கொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்து விட்டேன்’’ என்று சொல்கிறான்.
நூல்: முஸ்லிம் 5322
https://eagathuvam.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE/
• நாம் எல்லாரும் பாவஞ்செய்து, தேவனிடத்திலிருந்து பிரிந்திருக்கிறோம் (ரோமர் 3:23).
பதிலளிநீக்கு• திருத்தப்படாவிட்டால், பாவத்திற்கான நீதியுள்ள தண்டனையாகிய மரணமும் மரணத்திற்கு பின்னர் தேவனிடமிருந்து நித்தியமான பிரிவினையும் ஆகும் (ரோமர் 6:23).
நெகேமியா 9:3
அவர்கள் மூன்று மணி நேரம் எழுந்து நின்று, ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். பிறகு மேலும் மூன்று மணிநேரம் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர். தங்கள் தேவனாகிய கர்த்தரை குனிந்து தொழுதுகொண்டனர்.
நீதிமொழிகள் 28
13 ஒருவன் தன் பாவங்களை மறைக்க முயன்றால் அவனால் வெற்றிபெற இயலாது. ஆனால் ஒருவன் தன் பாவங்களுக்கு வருந்தி, தன் பாவங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்வதை நிறுத்திவிட்டால், தேவனும், மற்ற எல்லா ஜனங்களும் அவனுக்கு இரக்கம் காண்பிப்பார்கள்.
இயேசு பாவங்களை மன்னிக்கவில்லை, விசுவாசம் பாவத்தை மன்னித்தது.
48 பின் இயேசு அவளை நோக்கி, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
49 மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மனிதர்கள் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் தன்னை யாரென்று நினைத்துக் கொள்கிறான்? அவன் எப்படிப் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று நினைத்துக் கொண்டார்கள்.
50 இயேசு அப்பெண்ணை நோக்கி, “நீ விசுவாசித்ததால் பாவங்களினின்று விடுதலையடைந்தாய். நிம்மதியோடு போ” என்றார்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%207&version=ERV-TA
“அம்ர் என்ற ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து உங்களுடைய வலது கையை கொடுங்கள்! நான் என்னுடைய உறுதி மொழியை தருகிறேன் என்று கூறிய போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வலது கையை நீட்டினார்கள். அப்போது அம்ர் அவர்கள் தன்னுடைய கையை எடுத்துக்கொண்டார்கள். (அப்போது) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்ரிடம் உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டபோது, நான் ஒரு நிபந்தனை இட வேண்டும் என பதிலளித்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்ரிடம் என்ன நிபந்தனையை முன் வைக்க விரும்புகிறாய்? என்று கேட்ட போது ‘இறைவன் என்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறினார்கள். (அதற்கு) முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்குத் திரும்பும் போது அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் அழித்துவிடுகிறான் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
https://islamiyapuram.blogspot.com/2014/11/blog-post_345.html
ஈமான் = விசுவாசம்
சங்கீதம் 32:5-7
பதிலளிநீக்குTamil Bible: Easy-to-Read Version
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+32%3A5-7++&version=ERV-TA
சங்கீதம் 32:5-7
நான் என் பாவத்தை உமக்கு ஒப்புக்கொண்டேன், என் அக்கிரமத்தை நான் மறைக்கவில்லை; நான், "கர்த்தரிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்" என்றேன்; மேலும் என் பாவத்தின் குற்றத்தை நீ மன்னித்தாய். சேலா ஆதலால், தேவபக்தியுள்ள யாவரும் உம்மைக் காணக்கூடிய காலத்தில் உம்மை வேண்டிக்கொள்ளட்டும்; பெருவெள்ளத்தில் நிச்சயமாக அவர்கள் அவரை அடைய மாட்டார்கள். நீ என் மறைவிடம்; நீ என்னை துன்பத்திலிருந்து காப்பாற்றுகிறாய்; விடுதலைப் பாடல்களால் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்கள்
Source: https://bible.knowing-jesus.com/topics/Hiding
யோபு 34:31 “ஒரு மனிதன் தேவனிடம்,
பதிலளிநீக்கு‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன்.
32 தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும்.
நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%2034&version=ERV-TA
யோபு 42:6 கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன்.
பதிலளிநீக்குகர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%2042&version=ERV-TA
ஹதீத் : (நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற கேட்டேன்), ” எல்லாம் வல்ல அல்லாஹ் கூறினான் : 7507. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
பதிலளிநீக்குஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு ‘இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். ‘என் அடியான் என்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்’ என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) ‘என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) ‘என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்’ என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) ‘என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் ‘என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்’ என்று சொன்னான். [அல் புகாரி மற்றும் முஸ்லிம்]. வேண்டுமென்றே தவறு செய்துவிட்டு பிறகு பாவமன்னிப்பு கேட்க கூடாது, நிச்சயமாக அல்லாஹ்வை உங்களால் ஏமாற்ற முடியாது. سبحان الله. அல்லாஹ் மிகவும் அன்பானவன் மற்றும் மன்னிப்பவன்
கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
பதிலளிநீக்குநில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி யேகம்பனே. ,,
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.
-பட்டினத்தார்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஆதாமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தனை செய்து, நீ செய்த பாவங்கள் எதுவாக இருந்தாலும், என் மன்னிப்பை எதிர்பார்க்கும் வரை நான் உன்னை மன்னிக்கிறேன். ஆதாமின் மகனே, உனது பாவங்கள் வானத்தின் உச்சத்தை அடைந்தாலும் எனக்கு கவலையில்லை, நீ என்னிடம் மன்னிப்புக் கேள், நான் உன்னை மன்னிப்பேன். ஆதாமின் மகனே, பாவங்கள் நிறைந்த பூமியைச் சுமந்து கொண்டு என்னிடம் வந்து, எனக்கு ஒன்றும் இணை வைக்காமல் என்னைச் சந்தித்தால், நான் மன்னிப்பு என்ற பூமியைச் சமாளிப்பேன்.'' (திர்மிதி)
பதிலளிநீக்குhttps://hadithoftheday.com/how-to-start-over-after-a-life-of-sins/
220. சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பதிலளிநீக்குபாவ நசிக்கும் பரிந்து.
சீவனைச் சிவத்துடன் ஒன்றித்துச் சிவத்தைச் சிவலிங்கமாகக் காணும் ஒருவனின் பாவ வினைகள் நாசமாகும்.
தேவாரம் 44. பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங்
பதிலளிநீக்குகுண்டர்கள்தஞ்சொல்லே கேட்டு
உருகுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்த
கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி யாட்கொண்டு
பிணிதீர்த்த வாரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
மறம்விலைக்குக் கொண்ட வாறே.
3
3. பொ-ரை: முன்பெல்லாம் உடல்பருத்த சமணத்துறவியரின் சொற்களையே செவிமடுத்து அடியேனுடைய தீவினைகளையே பெருகச் செய்து, உளம் உருகி உள்ளத்தில் தேங்கியிருந்தகள்ள உணர்வை அடியோடு நீக்கி, பிணியை உண்டாக்கித் தம் அருகு வரச்செய்து, அடியவனாகக் கொண்டு அடியேனுடைய பிணியைப் போக்கிய ஆரூர்ப் பெருமானுடைய அருகிலே இருத்தற்குரிய நல்வினையில்லாமல் பல்லாண்டுக் காலம், விலைகொடுத்தாகிலும் பெறத்தக்க அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, விலையின்றிக் கிட்டிலும் வெறுக்கத்தக்க. பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவனாக ஆகிவிட்டேனே.
https://www.tamilvu.org/slet/l4140/l4140uri.jsp?song_no=44&book_id=112&head_id=62&sub_id=1916
43. என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
பதிலளிநீக்குடென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண்
டருள்செய் தவாரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போன வாறே.
என்பு இருத்தி, நரம்பு தோல் புகப் பெய்திட்டு, என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு, என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி, அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி,-முயல் விட்டுக் காக்கைப்பின் போன ஆறே!
2. பொ-ரை: எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இன்பங்களை நுகர் பொருளாக வைத்து, முன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத்தம் இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்தி, அடியேனை ஆளுதலைக் கடமை (கூழைமை)யாகக் கொண்ட ஆரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழவிட்டு, கைப்பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உணற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!
https://www.tamilvu.org/library/l4140/html/l4140ind.htm
4:17. எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
பதிலளிநீக்குhttps://www.tamililquran.com/qurandisp.php?q=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88&start=4#4:17
:54. நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு16:119. பிறகு, நிச்சயமாக உம் இறைவன் - எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்); நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
பதிலளிநீக்கு200. கொலையே களவுகள், காமம், பொய்கூறல்
பதிலளிநீக்குமலையான பாதக மாம்அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே
பொருள் : கொலை, களவு, காமம், பொய் பேசுதல் ஆகியவை பஞ்ச மா பாதங்களாகும். அப்பாவங்களை நீக்கி, சிரசின் மேல் திருவடி சூடி இன்பம் அடைந்தோர்க்கு இப்பாவங்களும் அவற்றால் வரும் துன்பங்களும் இல்லையாம். இவர்கள் பேரின்பத்தில் திளைத்திருத்தலும் ஆகும்.
https://temple.dinamalar.com/news_detail.php?id=5744
1 ஜான் 1:9 ESV / 12 பயனுள்ள வாக்குகள்
பதிலளிநீக்குநம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்க அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
சங்கீதம் 39:8
பதிலளிநீக்குகர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர!
பதிலளிநீக்குஇவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான் என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திருமறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)
அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 16:119)
திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக்குர்ஆன் 20:82)
இன்னும் எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ், ஒரேயொரு பாவத்தை மட்டும் ‘மன்னிக்கவே மாட்டேன்’ என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.
தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)
தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)
இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?
நல்லறங்கள் அழிந்து போகும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக்குர்ஆன் 6:88)
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66
சொர்க்கம் செல்லவே முடியாது’
இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக்குர்ஆன் 5:72)
நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக்குர்ஆன் 98:6)
பதிலளிநீக்குஇறைமறை குர்ஆனும், இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைகளும், அறிவித்துத் தந்த கொடிய பாவங்களாகிய கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூது, வட்டி, ஆகிய அனைத்துப் பாவங்களையும் விடக் கொடிய பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல்.
எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், தான் நாடியோருக்கு மன்னிப்பு வழங்குவதாகக் கூறும் அல்லாஹ், ஷிர்க் என்னும் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டதிலிருந்தே, இந்த ஷிர்க் என்னும் பாவம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.
அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத-
நல்வறங்கள் அனைத்தையும் பாழ்படுத்தக் கூடிய-
சொர்க்கத்தை விட்டும் தூரப் படுத்துகின்ற-
நிரந்தர நரகில் வீழ்ந்துக் கிடக்கக் காரணமாகிய-
அந்த ஷிர்க் என்னும் மாபெரும் கொடிய பாவம் குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் அல்லவா அந்தப் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்?இவ்வளவு அதி பயங்கரப் பாவமாகிய ‘ஷிர்க்’ என்றால் என்ன?
என்பதைப் புரிந்துக் கொள்வதில் தான் பலரும் தவறிழைக்கின்றனர்.அநியாயமாக ஒரு உயிரைப் பறிப்பது கொலை என்பதிலும்-
அடுத்தவர் பொருளை அபகரிப்பது கொள்ளை என்பதிலும்-போதை தருவது மது என்பதிலும்-
மனைவியைத் தவிர மற்ற பெண்களை நாடுவது விபச்சாரம் என்பதிலும்,
கொடுத்ததை விடக் கூடுதலாகக் கேட்டுப் பெறுவது வட்டி என்பதிலும்,
யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இவை அனைத்தும் பெரும் பாவங்கள் என்பதற்கு விளக்கமும் வியாக்கியானமும் தேவையில்லை.ஆனால் இவை அனைத்தையும் விடக் கொடிய பாவமான ஷிர்க் என்னும் பாவம் குறித்து போதிய தெளிவையும் விளக்கத்தையும் பலரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.பெரும் பாவங்கள் குறித்துப் புரிந்துக் கொண்டவர்கள், அந்தப் பாவங்களை விட்டும் தம்மைக் காத்துக் கொண்டவர்கள், அறியாமையால் செய்து விட்ட பாவங்கள் குறித்து வருந்தி- திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடியவர்கள் கூட-தங்களையும் அறியாமல், தங்களிடம் குடி கொண்டுவிட்ட இந்த ஷிர்க் என்னும் கொடிய பாவத்தை உணராமல் இருப்பது தான் வேதனையிலும் வேதனை.
தங்கள் எண்ணத்தில், செயல்களில், நம்பிக்கையில், இறை வணக்கத்தில், இந்த ஷிர்க் என்னும் பாவம் எள்ளளவும், எள்ளின் முனையளவும், இல்லாமல் பார்த்துக் கொள்வதும், காத்துக் கொள்வதும், இறை விசுவாசியாகிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏவிய அனைத்து நற் காரியங்களையும் செய்து, அனைத்துத் தீய காரியங்களிலிருந்தும் விலகி, எவ்வளவு தான் நல்லவராக ஒருவர் வாழ்ந்தாலும், அவரிடம் ஷிர்க் என்னும் இணை வைத்தல் இருந்தால், அவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. அவரின் நல்லறங்கள் அனைத்தும் பாழாகும். நல்லறங்கள் பாழானால் நரகமே நிரந்தரம் என்பதில் சந்தேகமில்லை.
கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம்
அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது’ என்பது அடிக்கடி ஜும்ஆப் பிரசங்கங்களிலும், மார்க்க மேடைகளிலும், நாம் கேட்ட எச்சரிக்கை தான். இந்த எச்சரிக்கையின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான், முஸ்லிம்களுக்கு மத்தியில் கொள்கையளவில் ஏற்பட்டப் பிரிவுகளுக்கு ஒரு வகையில் முக்கிய காரணம் என்று கூடச் சொல்லலாம். சரியாக விளங்கிக் கொண்டால் சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை.ஒரு சாரார் மற்றொரு சாராரிடம் காணப்படும் செயல்களை, கொள்கைகளை, வணக்கங்களை, ஷிர்க் என வாதிடுகின்றனர். மற்ற சாரார் தமது செயல்களும், வணக்கங்களும், ஷிர்க் அல்ல என்று மறுக்கின்றனர். அப்படி மறுப்பவர்கள் கூட தமது செயல்கள் ஷிர்க்கானவை என்பதை உணராமல் தான் மறுக்கின்றனரே தவிர, ஷிர்க்கை அவர்கள் நியாயப் படுத்தவில்லை என்பது முக்கியம்.
ஒவ்வொருவரும் தமது கொள்கையும், செயல்களும், திரு மறை குர்ஆனின் அடிப்படையிலும், திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகான வழிகாட்டுதல் அடிப்படையிலும், ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிவு கிடைத்து விடும். பிரிவினைகள் நீங்கி விடும்.நமது செயல்களிலும், சிந்தனையிலும், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஊடுருவி, நமது நல்லறங்கள் பாழாகி நரகப் படுகுழிக்கு நாம் சென்று விடக் கூடாதே என்னும் கவலையிலும் நம் மீது கொண்ட கரிசனத்திலும், நம்மை எச்சரித்துக் காப்பாற்ற தெளிவான ஆதாரங்களுடன் களமிறங்கியுள்ள நல்லோர்களின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்டால், நமக்கிடையே இருக்கும் மனக்கசப்பு மறைந்து விடும். மாச்சரியங்கள் மாய்ந்து போகும்.
1 ஜான் 1:9
பதிலளிநீக்குநம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்க அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.