இறைவனை எப்படி, எத்தனைமுறை வணங்குவது?

தமிழர் சமயம் 

ஞானக்குறள் - 8. அர்ச்சனை

மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு. 71 

மண்டலம் - காலம், இடம், மண் 
மறுவவுட - மருவு + உடல்  
மருவு - கலந்திருத்தல்; தோன்றுதல், தழூவுதல்; புணர்தல்
அண்டம் - உலகம்  
அரன் - சிவன், தெய்வம், இறைவன் 
அர்ச்சனை - வணங்கு
 
விளக்கம்: மூன்று காலங்கள் தோன்றும் பொழுது (சூரிய உதய நேரம், சூரிய உச்சி நேரம், சூரிய, மறையும் நேரம்) உடல் நிறுத்தி (நின்று) உலகத்தின் அரன் சிவனை வணங்க வேண்டும்.

ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து
பூசனைசெய் துள்ளே புணர். 72

ஆசனம் - அமர்ந்து
அரன் - சிவன், தெய்வம், இறைவன் 
புணர் - இணைந்து, கலந்து (கலவி அல்ல)
அர்ச்சனை -வணங்கு 

விளக்கம்: அமர்ந்து சிவனை வணங்கி பூசை செய்து அவனுடன் கலக்கவேண்டும்.

உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கத்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. 73

இலிங்கம் - குறியீடு, அடையாளம்
பீடம் - இருக்கை

விளக்கம்: உள்ளம் அவனது இருக்கை, உணர்வு சிவனின் அடையாளம் என்பதை  உள்ளத் தெளிவுடையோர் அறிந்து அவனை வணங்குவர்.

ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு. 74

ஆதாரம் - உடல், பிரமாணம், அடிப்படை, சான்று,   

விளக்கம்: மனிதனின் ஆதாரமாகிய தலையினுள்ளே இருக்கும் சிவனின் உருவை மனம மாறுபாடு இல்லாமல் அர்ச்சிக்க வேண்டும்.

பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. 75

புணர்ந்து - இணைந்து
பாரி - நல்லாடை

விளக்கம்: மகிழ்ச்சியுடன் (மற்ற சிவ அடியார்களுடன்) இணைந்து சிவனுருவை நல்லாடை உடுத்தி அங்கு அவனை வணங்க வேண்டும். (சிவனின் உருவைக் காண இயலாது.)

விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு. 76

துளக்கு - அசைவு
விளக்குறு - விளக்கு ஒளி பெறுவதை போல

விளக்கம்: விளக்கு ஒளி பெறுவதை போல சிந்தையில் ஒளி பெற்றவன் மெய்ப்பொருளை மனம் அங்குமிங்கும் ஆடாமல் மன ஓர்மையுடன் வணங்குவான். 

பிண்டதினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு. 77 
 
பேராது - இடம் பெயராமல் / மாறாமல் 
பிண்டம் - உடல், கரு, 

விளக்கம்: மனித உடலுக்கு / கருவுக்கு குடிபெயராத  (பிறப்பிலாத) இறைவனைக் உணர்வில் கண்டு வணங்க வேண்டும்.

மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு. 78

மயங்கு - ஈர்க்கப்படுதல் / தடுமாறுதல்  

விளக்கம்: திருமந்திரங்கள் / மறை வரிகள் எல்லாவற்றையும் தடுமாற்றம் இல்லாமல் உள்ளத்தில் ஓதி சிவனை வணங்க வேண்டும்.

பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு. 79

ஆராதனை - பூசனை  

விளக்கம்: மாறாத சிந்தையோடு தன் உடலினுள் இறைவன் இருப்பை நினைத்து வணங்க வேண்டும். 
 
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்,
வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது,
சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று வேண்டுறோம்.

இஸ்லாம் 

இறைவனை வணங்கும் முறை

நீர் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! - (அல்குர்ஆன் 15:98)

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரீ 631  

(குளிப்பு கடமை இல்லாதவர்கள்) ‘உளூ (உடலை சுத்தம் செய்தல்) நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 135, முஸ்லிம் 330)

‘எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) (நூல்: புகாரீ 160)

நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (குர்ஆன் 73:20)

எப்பொழுது எத்தனைமுறை வணங்குவது?  


நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (குர்ஆன் 4:103

ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: (முஸ்லிம் 394)

1) ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1075)

2) ‘லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: (முஸ்லிம் 1075)

3) ‘அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1076)

4) ‘மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1076) 

5) ‘இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1074

கிறிஸ்தவம் & யூத மதம் 

    • நின்று 
      • இயேசு இவற்றைப் பேசினார்; (நின்று கொண்டு) வானத்தை நோக்கித் தன் கண்களை உயர்த்தி, "அப்பா, நேரம் வந்துவிட்டது" என்றார். - (யோவான் 17:1)    
      • அன்னாள் நின்றுகொண்டு தன் விண்ணப்பத்தை கர்த்தரிடம் கொடுத்தாள், கர்த்தர் அவளுக்குப் பதிலளித்தார். (1 சாமு 1:26) 
      • பயந்து நில்லுங்கள், பாவம் செய்யாதீர்கள்; சேலா. (சங்கீதம் 4:4) 

    • அமர்ந்தது 
      • தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான் : அப்போது தாவீது அரசன் உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான். தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்? (2 சாமுவேல் 7:18)  
    • கைகளை உயர்த்தி 
      • புனித ஸ்தலத்திற்கு உங்கள் கைகளை உயர்த்துங்கள்
        மற்றும் கர்த்தரை ஆசீர்வதிப்பாராக (சங்கீதம் 134:2)
      • என் ஜெபம் உமக்கு முன்பாக தூபமாகவும் , என் கைகளை உயர்த்துவது மாலை பலியாகவும் எண்ணப்படும்! (சங்கீதம் 141:2
    • மண்டியிட்டு
      • சாலொமோன் இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் கர்த்தருக்குச் செலுத்தி முடித்தபின், அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக எழுந்தான் , அங்கே வானத்தை நோக்கி கைகளை நீட்டி மண்டியிட்டான். (1 இராஜாக்கள் 8:54) 
      • தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான். (டேனியல் 6:10)  
      • [இயேசு] அவர்களுக்கு அப்பால் ஒரு கல்லெறி தூரம் விலகி, முழங்கால்படியிட்டு , “அப்பா, உமக்குச் சித்தமானால், இந்தக் கோப்பையை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் என் சித்தம் அல்ல, உமது சித்தம் நிறைவேறும்." ( லூக்கா 22:41-42
    • தரையில் தலை வைத்து 
      • "யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினார்..." (யோசுவா 5:14)
         
      • "மோசேயும் ஆரோனும் சபையின் முன்னிலையிலிருந்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்றார்கள், அவர்கள் முகங்குப்புற விழுந்தனர்..." (எண்கள் 20:6)
         
      • "ஆபிரகாம் முகங்குப்புற விழுந்தான்..." (ஆதியாகமம் 17:3)
         
      • "...அவர்கள் சிம்மாசனத்தின் முன் முகங்குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்." (வெளிப்படுத்துதல் 7:11)
         
      • "...பின்னர் அவர்கள் தலை குனிந்து, தங்கள் முகத்தை தரையில் ஊன்றி இறைவனை வணங்கினர்." (நெகேமியா 8:6)
         
      • "...அப்பொழுது தாவீதும் இஸ்ரவேலின் மூப்பர்களும் சாக்கு உடை உடுத்தி முகங்குப்புற விழுந்தனர்." (1 நாளாகமம் 21:16)
          
      • சிறிது தூரம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து, "என் பிதாவே, கூடுமானால் இந்தப் பாத்திரம் என்னிடமிருந்து எடுக்கப்படும். ஆனாலும் என் சித்தத்தின்படி அல்ல, உமது சித்தத்தின்படியே" என்று ஜெபித்தார். - (மத்தேயு 26:39)  

எப்பொழுது எத்தனைமுறை வணங்குவது?  

ஆரம்பகால திருச்சபையின் காலத்திலிருந்தே, இறைவணக்கமானது ஒரு நாளில் ஏழு நேரங்களில் செய்யும்படி கற்பிக்கப்பட்டது.; அப்போஸ்தலிக்க மரபில், ஹிப்போலிடஸ் கிறிஸ்தவர்களுக்கு 
1) சூரியன் உதிக்கும் பொழுது, ​​ 
2) மாலை விளக்கு எரியும் போது, ​​ 
3) படுக்கை நேரத்தில், 
4) நள்ளிரவில் : இயேசு கடவுளிடம் ஜெபிப்பதில் இரவைக் கழித்தார் (லூக்கா 6:12) 
5) பகலின் மூன்றாவது, 
6) ஆறாவது மற்றும் 
7) ஒன்பதாம் மணிநேரம், ஆகிய ஏழு முறைகள் கிறிஸ்துவின் பேரார்வத்துடன் தொடர்புடைய மணிநேரங்கள் என கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார் .

23 கருத்துகள்:

  1. காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

    பதிலளிநீக்கு
  2. அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை - திருமந்திரம் 5
    https://www.tamilvu.org/library/l4100/html/l41A0ind.htm

    பதிலளிநீக்கு
  3. ஆதியாகமம் 17:17
    ஆபிரகாம் தன் முகம் தரையில்படும்படி விழுந்து வணங்கி தேவனுக்கு மரியாதை செலுத்தினான்.

    பதிலளிநீக்கு
  4. ஆதியாகமம் 24:52
    ஆபிரகாமின் வேலையாள் இதனைக் கேட்டு தரையில் விழுந்து கர்த்தரை வணங்கினான்.

    பதிலளிநீக்கு
  5. எண்ணாகமம் 16:4
    இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான்.

    பதிலளிநீக்கு
  6. எண்ணாகமம் 16:22
    ஆனால் மோசேயும், ஆரோனும் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கிக் கதறினார்கள், “தேவனே! நீர் மாம்சமான எல்லாருடைய ஆவிகளுக்கும் தேவன். ஒரே ஒருவன் மட்டும் பாவம் செய்தால் நீர் முழு சபையினர் மீதும் கோபங்கொள்ளலாமா?” என்றனர்.

    பதிலளிநீக்கு
  7. எண்ணாகமம் 20:6
    எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. {என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக!}.[ஸூரது தாஹா 14]

    பதிலளிநீக்கு
  9. இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன்-24:52)

    பதிலளிநீக்கு
  10. 2 நாளாகமம் 20:18
    யோசபாத் குனிந்து வணங்கினான். அவனது முகம் தரையைத் தொட்டது. யூதாவில் வாழும் ஜனங்களும் எருசலேமில் வாழும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தரை தொழுதுகொண்டனர்.

    பதிலளிநீக்கு
  11. யோபு 11:13
    ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும். உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. சங்கீதம் 970 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
    எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.

    பதிலளிநீக்கு
  13. எசேக்கியேல் 8:16
    பிறகு கர்த்தருடைய ஆலயத்திலுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் 25 பேர் குனிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவிலே தவறான திசை நோக்கி இருந்தனர்! அவர்களின் முதுகுகள் பரிசுத்த இடத்தின் பக்கம் திரும்பியிருக்க அவர்கள் சூரியனைப் பார்த்து குனிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள்!

    பதிலளிநீக்கு
  14. தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்(உலக நீதி 76)

    பதிலளிநீக்கு
  15. அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன்

    வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்
    நெஞ்சமும் வஞ்சம் ஒன்றின்றி
    உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை
    உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
    பைத்த பாம்பார்த்தோர் கோவணத்தோடு
    பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
    பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில்
    இவரலாது இல்லையோ பிரானார்.

    1. பொ-ரை: எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும், இத்திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானார்க்கே உரியன ஆக்கினேன்; திருவடித் தொண்டினையும் அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன்; இவற்றை யானே சொல்லின், பொய்போல்வதாகும். இந்நிலையில், அவர் படம் விரித்த பாம்பினைக் கட்டிக்கொண்டு ஒரு கோவணத்தோடு இருந்து, பித்தரோடே ஒத்து, சிறிதும் திருவுளம் இரங்கிலராயினும், எம்மைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!

    https://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=539

    பதிலளிநீக்கு
  16. வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
    காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
    ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
    பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே .

    வேட்டவி உண்ணும் விரிசடை நந்திக்குக்
    காட்டவும் யாம்இலம் காலையும் மாலையும்
    ஊட்டுஅவி ஆவன; உள்ளம் குளிர்விக்கும்
    பாட்டுஅவி காட்டுதும் பால்அவி ஆமே. (திருமந்திரம் 1824)

    வேள்வித் தீயில் இறைவனை வழிபடுகிறவர்களோ, இறைவனுக்கு அளிக்கவேண்டிய உணவை அவிப் பொருளாகத் தீயில் இடுகிறார்கள். உருவத் திருமேனியில் இறைவனை வழிபடுகிறவர்களோ, காலையும் மாலையும் பூசனை நேரங்களில் உணவையும் இறைவன் திருவுருவத்துக்கு முன்பாகப் படைத்துக் காட்டுகிறார்கள். இறைவனை உள்ளுக்குள் வழிபடும் நாம் என்ன செய்ய என்றால், உள்ளம் குளிருமாறு உங்கள் மொழியில் ஒரு பாட்டைக் காட்டுங்கள். அது பால் ஊற்றிப் படைத்ததற்குச் சமானம் என்று எல்லோர்க்கும் எட்டுகிற எளிய பூசனைக்குப் பரிந்துரை செய்கிறார் திருமூலர்.
    https://www.hindutamil.in/news/spirituals/173731-47-7.html

    வேள்வித் தீயில் சிவனை வழிபடுவோர் அவனை நோக்கி அத்தீயில் இடும் உணவை அவன் உண்டு மகிழ்வதாகவே கருதுகின்றனர். ஆயினும் அவர் கருத்தை அவன் உடன் பட்டு நின்றே அவர்கட்கு அருள் புரிகின்றான். இனி இலிங்கத்தில் அவனை வழிபடுவோர் அவ்விலிங்கத்தின் முன் வைத்துக் கையை அசைத்துக் காட்டுகின்ற பொருளை அவன் காணும் அளவிலே மகிழ்வதாகக் கருதுகின்றனர். அவர்கட்கும் அவர் கருத்தை உடன்பட்டே அவன் அருள் புரிகின்றான். அம்முறையில் அவனை உள்ளத்தலே உயிராகிய இலிங்கத்தில் வழிபடுகின்ற நாம் புறத்திலே வழிபடுவாரைப்போலப் பூசாகாலங்கலில் காட்டுதற்கு அங்கு எதனையுடையோம்? ஒன்றையும் உடையேமல்லோம். அதனால் அங்கு அவனுக்குக் காட்டும் உணவாவன அவனது திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற தோத்திரப் பாடல்களே யாகும். அதனால் அந்த உணவையே அங்கு நாம் காட்டுவோம். அஃது உண்மையில் சொல் வடிவாகவே யிருப்பினும் நமது கருத்து வகையால் அவனுக்கு அது பாலடி சிலேயாய் மகிழ்ச்சியைத் தரும்.
    http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10711&padhi=%20&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

    பதிலளிநீக்கு
  17. யோவான் 24 கடவுள் பார்க்க முடியாத உருவத்தில்* இருக்கிறார். அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்” என்று சொன்னார்.

    பதிலளிநீக்கு
  18. லேவியராகமம் 16

    பாவப்பரிகார நாள்
    16 ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2016&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  19. நபியே! உங்களுக்கு மவுத் வருகின்ற வரை அல்லாஹ்வை வணங்கிக் கொண்டே இருங்கள். இபாதத்தில் இருந்து கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 15 : 99)

    பதிலளிநீக்கு
  20. தன்னைத் தொழுமின் தொழுதால்

    25. பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
    இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
    துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
    மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. 25

    * மாய விருகமும்

    அஞ்ஞானம் நீங்கும்! சிவன் பிறவி இல்லாதவன். எல்லாவற்றையும் ஒடுக்குபவன். மிக்க அருள் உடையவன். அழிவு இல்லாதவன். எல்லாருக்கும் இடைவிடாத இன்பத்தை அருளுபவன். இத்தகைய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.

    https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html

    பதிலளிநீக்கு
  21. தொழுமின் தொழுதால்

    26. தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
    படர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்
    கடந்து நின்றான் கமல மலர் மேலே
    உடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே. 26

    கமலத்தில் வீற்றிருப்பவன்! சிவன் ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நிற்பவன். எங்கும் பரவியுள்ளவன். உலகம் முழுவதையும் கடந்தவன். சகஸ்ரதள ஆயிரம் இதழ்த் தாமரைய மீது இருந்தவன். அத்தகைய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் சிவனது திருவடிப்பேறு கிட்டும்.

    பதிலளிநீக்கு
  22. முப்போதும் வணங்கு

    தேவாரம் பாடல் எண் :1120

    முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,
    அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!
    சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,
    கந்தமாமலர் சூடும் கருத்தனே.

    https://www.tamilvu.org/library/l4150/html/l4150inx.htm

    பதிலளிநீக்கு
  23. தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
    அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
    பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
    எழுதும் கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே.

    வீண் பொழுது நிறைய வழிகளில் போகிறது. தொலைக்காட்சி முன்னே, தேவையில்லாத வம்பு பேச்சுகளில் என பல வழிகளில் போகிறது.
    இறைவன் இறைபக்தியில் நிலைத்து இருப்பாரையும், வீண் பொழுது போக்குபவரையும் கீழ் கணக்கு (குறிப்பு) எழுதுகிறார் என்கிறார் அப்பர் பெருமான்.

    https://vidyakrishnamurthy.blogspot.com/2016/04/blog-post_24.html

    பதிலளிநீக்கு